இலவங்கப்பட்டை, கிட்டத்தட்ட அனைத்து சமயலறைகளிலும் ஒரு வாசனை மசாலாவாக காணப்படுகிறது. இலவங்கப்பட்டையின் பலமான வாசனை மற்றும் சுவை, அதனை இனிப்பு மற்றும் காரம் இரண்டு விதமான பதார்த்தங்களுக்கும், ஒரு பொருத்தமான சுவையூட்டும் பொருளாக ஆக்குகிறது. ஆனால், இந்த மசாலா சமையலறை அலமாரிகளோடு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல. ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் (டி.சி.எம்), இலவங்கப்பட்டை, அதன் குணமளிக்கும் நன்மைகளுக்காக நீண்ட காலமாக புகழப்படுகிறது. பாரம்பரிய மேற்கத்திய மருத்துவ அமைப்பும் கூட இந்த மசாலாவினை உயர்ந்த மதிப்புடன் வைத்திருக்கிறது. சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளின் படி, கிராம்புக்கு அடுத்தபடியாக இலவங்கப்பட்டை தான் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். இந்த மசாலா, ஒரு நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது என அறிந்தால், அது உங்கள் ஆர்வத்தைத் தூண்டும். இலவங்கப்பட்டை முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட காலம், ஏறத்தாழ கி.மு. 2000-2500 ஆகும். இலவங்கப்பட்டை ஒரு பூசுகின்ற காரணி என ஜெவிஸ் பைபிளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது, மேலும் அது, எகிப்தியர்களால், அவர்களின் பிணங்களை மம்மியாக்கும் நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ரோமில், இறந்த உடல்களில் இருந்து தோன்றும் வாடையை விரட்ட, இலவங்கப்பட்டை இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது. சொல்லப் போனால் இந்த மசாலா, பணக்காரர்களின் பொருளாக இருக்கும் அளவுக்கு, ரோமில் அதன் விலை மிக அதிகமாக இருந்தது.
உங்களுக்குத் தெரியுமா?
சில வரலாற்றியலாளர்கள், உண்மையில் வாஸ்கோடகாமா மற்றும் கொலம்பஸ் இருவரும், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை, குறிப்பாக இலவங்கப்பட்டையைத் தேடியே தங்கள் கடற்பயணத்தைத் தொடங்கினர் எனக் கூறுகின்றனர். அது உண்மை தான், இலவங்கப்பட்டை இலங்கையைச் சார்ந்தது, உண்மையில் அது போர்த்துகீசியர்களால் கண்டறியப்பட்டது. மேலும், இன்றைய தேதி வரை மிக விலை உயர்ந்ததாக நீடிக்கிறது. ஆயினும் அது, உலகம் முழுவதும் உள்ள சமையல்கலை நிபுணர்கள் மற்றும், ரொட்டி மற்றும் இனிப்புப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான மசாலாக்களில் ஒன்றாக இருக்கிறது. இலவங்கப்பட்டை, இலவங்க மரத்தின் உள் பட்டையில் இருந்து பெறப்படுகிறது. இது, உலகத்தின் வெப்ப மண்டலப் பிரதேங்களில் காணப்படும், ஒரு என்றும் பசுமையான (நீண்ட காலத்துக்கு இருக்கக் கூடிய) மரம் ஆகும். இந்த இலவங்க மரம் 18 மீட்டர்கள் வரை வளரக் கூடியவை. ஆனால் வேறு ஏதேனும் இடத்திற்கு கொண்டு சென்று பயிரிடப்படும் வகைகள் 2-3 மீட்டர் வரை வளரக் கூடும். இது, இரண்டு முனைகளிலும் இணையுமாறு இருக்கின்ற இணையான நரம்புகளோடு கூடிய, தனித்துவமான தோல் போன்ற இலைகளைக் கொண்டிருக்கிறது (நறுமண இலைகள் அல்லது தேஜ் பட்டாவில் இருப்பது போன்று). இலவங்க மரத்தின் மலர்கள், அழகான மஞ்சள் வண்ண கொத்துக்களாக தோன்றுகின்றன மற்றும் இலவங்க மர பழம், பழுக்கும்போது கருப்பு வண்ணத்தில் மாறுகின்ற ஒரு காயாகும்.
இலவங்கப்பட்டை பற்றிய சில அடிப்படைத் தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: சின்னமோமும் வெரும், சின்னமோமும் சைலாணிகம்
- குடும்பம்: லவுரசியயி
- பொதுவான பெயர்கள்: இலவங்கப்பட்டை, இலவங்கப் பட்டை
- சமஸ்கிருத பெயர்: தருசிதா
- பயன்படும் பாகங்கள்: பட்டை
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: இலவங்கப்பட்டை தெற்கு ஆசியாவைச் சார்ந்தது, ஆனால் அது, உலகத்தின் பெரும்பாலான வெப்ப மண்டல பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. உண்மையான இலவங்கப்பட்டை, பெரும்பாலும் இலங்கை, மடகாஸ்கர் குடியரசு மற்றும் செஷல்ஸ் தீவுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்தியாவில், கேரளாவில் உண்மையான இலவங்கப்பட்டை பயிரிடப்படுகிறது.
- ஆற்றலியல்: வெப்பமடைதல். வாதம் மற்றும் கபத்தை சமன் செய்கிற அதே வேளையில், பித்தத்தை அதிகரிக்கிறது.