ஆல மரம்:
ஆல மரம் அல்லது ‘பர்கட் கா பேட்’ என்றும் ஹிந்தியில் கூறப்படும் ஆல மரமானது இந்து புராணங்களில் ஒரு புனித மரமாகவே போற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆல மரத்திற்கு கீழே பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பழங்காலம் முதல் ஆல மரத்தின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் அக்கால கட்டத்தில் ஏற்பட்ட பல நோய்களுக்கும், பல தொற்றுகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆல மரத்தின் பகுதிகளை உபயோகித்து வந்ததாக ஆயுர்வேதம் கூறுகிறது. 'வாத தோஷா' என்று ஆயுர்வேதத்தில் கூறக் கூடிய உடலில் வாயு மற்றும் உடல் இயக்கத்தின் சமநிலையற்ற தன்மையை குணப்படுத்துவதில் ஆல மரம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத நூல்கள் கூறுகிறது.
ஆல மரம் ஒரு ஒட்டுயிரி இனம் ஆகும் (ஒரு செடி வேறு ஒரு செடியின் மீது வளரும் தன்மை - அதாவது புரவலன் மரத்தின் இடுக்குகளில் விழும் விதைகள் அங்கேயே செடியாக மரமாக வளரும் தன்மை). ஆல மரம் 'ஃபைக்கஸ்’ எனும் பேரினத்தை சேர்ந்தது. இந்தியாவில் காணப்படும் 'ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ்' எனும் ஆல மரமானது நம் நாட்டின் தேசிய மரமாக விளங்குகிறது. உலகின் வெப்ப மண்டல மற்றும் சூடான பகுதிகளை தன் தாயகமாக கொண்டுள்ளது ஆல மரம்.
ஆல மரத்தின் இலை பெரிதாகவும், நீள் வடிவத்திலும், தோலை போன்ற அமைப்பை கொண்டும், பளபளப்பான பச்சை நிறத்திலும் காட்சி அளிக்கும். ஆல மரத்தின் தனித்துவமான பண்பு என்னவென்றால் நிலத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஆலம் விழுதுகள் ஆகும்.
மிகவும் பெரிதாக வளரும் விழுதுகள் நிலத்தை தொட்டு தானும் ஒரு தனி மரமாக காட்சி அளிக்கும். கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் காணப்படும் இருநூற்று ஐம்பது வயதான 'பெரிய ஆல மரம்' மிகவும் பழமை வாய்ந்ததாகவும், அதிகமான வேர்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. இம்மரத்தில் உள்ள ஆலம் விழுதுகள் நூற்றுக் கணக்கில் உள்ளதாலும் அவை அனைத்தும் நிலத்தைத் தொட்டு தானும் தனித் தனி மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. இன்று வரையில் இந்தியாவில் இந்த மரமே மிகவும் பெரிய மரமாகவும் பழமையான மரமாகவும் உள்ளது.
ஆல மரம் பற்றிய சில முக்கிய தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ்
- குடும்பம்: மோரேசியே
- பொதுவான பெயர்கள்: ஆல மரம், பரகத், பாரா கச்சா, பாடா, கவிரூல்
- சமஸ்க்ருத பெயர்: ந்யாயகுரோத், வாத விருக்ஷம்
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: இலைகள், கிளைகள், பழங்கள்
- பரவலாக காணப்படும் இடங்கள்: வெப்பமண்டல மற்றும் சூடான பகுதிகள்