கார்போஹைட்ரேட்டுகள் கிட்ட தட்ட நாம் தினமும் சாப்பிடும் அனைத்து உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் முதல் பொரித்த உணவுகள் அல்லது சிப்ஸ் பாக்கெட்கள் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு துண்டு பீஸ்ஸாவிலும் அடங்கி இருக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலின் சக்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன, மேலும் அதன் 'கெட்ட பெயருக்கு' மாறாக நம் உணவு முறை மற்றும் ஆற்றல் தேவைகளுக்கு கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம் ஆகும்.
கார்போஹைட்ரேட்டுகள் 45 முதல் 65% வரை சீரான உணவு முறையில் அடங்கி இருக்கிறது. மேலும் அந்த கார்போஹைட்ரேட்டுகள் உடலின் செயற்பாட்டிற்கு உகந்த தினசரி செயல்பாட்டிற்கு சமமான கலோரிகளை வழங்குகின்றன. எனினும், இந்த அளவு உங்கள் உடல் எடை மற்றும் குறிப்பிட்ட தேவைகள் படி மாறுபடுகிறது. அதாவது, ஒரு உடல் உழைப்பு அற்ற ஒரு தனிப்பட்ட நபருடன் ஒப்பிடுகையில் நீங்கள் தீவிர உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சிகளையும் செய்தால், உங்களுக்கு இன்னும் அதிக அளவு கார்போஹைட்ரேட் தேவைப்படும். ஆனால், அதன் உடல் நலனுக்கான நன்மைகளை அடைவதற்கு கார்போஹைட்ரேட்டின் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது, அதை உட்கொள்ளும் அளவைவிட மிகவும் முக்கியமா ஒன்று ஆகும்.
கார்போஹைட்ரேட்டின் உணவு ஆதாரங்கள் மற்றும் அதன் நன்மைகள் சிலவற்றை இப்பொழுது காணலாம். இதில் இருந்து தினசரி உணவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவைபடுபவை எவை என்று புரிந்து கொள்ள முடியும்.