வெந்தயம் (மேத்தி) என்றால் என்ன?

வெந்தயம் என்பது ஒரு மூலிகை, இது உணவு தயாரிப்பில் பொதுவான ஒரு மூல பொருள் ஆகும். இதன் பூர்விகம் மத்திய தரைக்கடல் பகுதி, மத்திய ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பகுதிகள் ஆகும். இது விதைகள் மற்றும் இலைகளை கொண்டிருக்கும். இவை சுவையற்ற பொருள் ஆனால் இதற்க்கு ஒரு மூலிகை வாசனை  உண்டு, அதனால் இதை சமைக்க பயன்படுத்தப்படுகின்றன; மற்றும் மருத்துவத்தில், குறிப்பாக ஆயுர்வேதத்தில், அதன் தனித்துவமான பயன்கள் மற்றும் பண்புகள் காரணமாக அதிகம் பயன் படுதிகின்றன. வெந்தயம் பயிரிட படுவதற்கு போதுமான சூரியவெளிச்சம் மற்றும் வளமான மண் தேவை, அதனால் இது பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இதன் காரணமாக வெந்தயம் எனும் மூலிகை உற்பத்தியாளர்களில் முதல் இடத்தில் இந்தியா ஒருவராக உள்ளது. பொதுவாக இங்கு, வெந்தயம் இலைகள் (மெத்தி) காய்கறிகளாக சமைக்கப்படுகின்றன, மேலும் விதைகளை மசாலா மற்றும் மருந்துகளின் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகளில், மற்ற மூல பொருட்களின் சுவையை இது தனது சுவையற்ற பன்பைகொண்டு மறைத்துவிடுகிறது , அதனால் இதை ஒரு ​​ கூடுதல் சேர்க்கை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தவிர, இது  ஒரு பொதுவான வீட்டு மருத்துவ சிகிச்சை பொருளாக பல்வகை சீர்குலைவுகள் மற்றும் வியாதிகளுக்கு தீர்வகிறது. இது இந்திய வீடுகள் மற்றும் சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். செரிமான அமைப்பில் ஏதேனும் செரிமான கோளறு நேர்ந்தால் இந்த மறுத்து தனது மருத்துவ குனநலன்களால் அதை எளிதில் சரி செய்து விடுகிறது, அதனால் இது ஒரு பொதுவான வீடு மருந்தாகி உள்ளது. பின்பு வரும் பிரிவுகளில் இதனை பற்றி விவாதிக்கப்படும்.

வரலாற்றில் மனித இனம் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த வெந்தயத்தின் உபயோகம் இருந்துள்ளது, பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் பின சீரம்மைப்பு செய்வதில் இதனை பயன்படுத்தி என்பதற்கு ஆதாரம் கல்லறைகளின் சிதிலங்களில் காணபடுகின்றன. அதன் காட்டமான சுவை மற்றும் வாசனையால், இது காபிக்கு மாற்றாக காபியட்ட்ற வீட்டில் தயாரிக்கப்படும் பாணங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அற்புதமான மூலிகையின்  சில அடிப்படை தகவல்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகளை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்

வெந்தயத்தை பற்றின சில அடிப்படை தகவல்கள்

  • தாவரவியல் பெயர்      : டிரிகோனெல்லா ஃபோனியம்-கிரேக்கம்
  • தாவரவியல் குடும்பம்    : ஃபேபஸே (பட்டாணி குடும்பம்)
  • பொதுவான பெயர்கள்    : மெதி, மெதி டேனா, கிரீக் ஹே, கிரேக்க க்ளோவர்
  • சமஸ்கிருத பெயர்        : பஹுபர்னி
  • பயன்படுத்தப்படும் பகுதிகள்: விதை மற்றும் இலைகள்
  • ஆற்றல்: வெப்பம் 
  1. வெந்தயத்தின் ஊட்டச்சத்து தகவல்கள் - Fenugreek Nutrition Facts in Tamil
  2. வெந்தயத்தின் பயன்கள் - Benefits of Fenugreek in Tamil
  3. வெந்தய விதைகளை எப்படி பயன் படுத்துவத்து (வெந்தயம்) - How to use fenugreek seeds (methi dana) in Tamil
  4. வெந்தயம் எடுத்து கொள்ளவேண்டிய அளவு - Fenugreek Dosage in Tamil
  5. வெந்தயத்தின் பக்க விளைவுகள் - Side effects of fenugreek in Tamil

வெந்தயம் ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த மூலிகை ஆகும், இதில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது இடை குறைப்பதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதில் அதிக அளவில் கலாக்டோமன்னன் உள்ளது. கலாக்டோமன்னன் தண்ணீரில் கரைய கூடிய ஹெடேரோபொலிசக்கரைத் கொண்டுள்ளதால் எடை குறைப்பதற்க்கு உதவும். இதன் மற்ற அங்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவு மதிப்புகள் பின்வரும் அட்டவணையில் காணப்படும் .

விவரங்கள் ஒரு 100 கிராமுக்கு அளவுகள்

தண்ணீர

8. 84 கி

புரதம்

23. 00 கி

மொத்த கொழுப்பு சத்து

6. 41 கி

மாவுச்சத்து

58. 35 கி

நார்ச்சத்து

24. 6 கி

இரும்பு சத்து

33. 53 கி

மொத்த ஆற்றல்: 100 கிராமுக்கு 323 கிலோ கலோரி

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

வெந்தயம் பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு வியாதிகளையும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உடல்நலம் பேணி காப்பதற்க்கும், முறையான உடல் செயல்பாடுகளை பராமரிப்பதற்காகவும் உதவி உள்ளது  வெந்தய விதைகள், வெந்தய பொடி மற்றும் துணை பதார்த்தம்  ஆகியவற்றின் நன்மைகள் இந்த பிரிவில் காணலாம்

  • இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது: வெந்தய பொடியை 5 முதல் 50 கிராம் அளவில் மருந்தாக எடுத்துக்கொள்வதனால் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் மேம்படுத்த படுகிறது மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைகிறது.
  • எடை குறைப்பு ஊக்குவித்தல் :  இது எடை குறைப்பு ஊக்குவிக்கிறது. வெந்தய விதைகளின் நீரில் கலக்டோமன்னன் உள்ளது, இது பசியை குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. இது மட்டுமல்ல, உடல் பருமனின் ஒரு பொதுவான சிக்கலான இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, .
  • பெண்களுக்கு அளிக்கும் நன்மைகள்: மாதவிடாயின் முதல் மூன்று நாட்களில் 1800-2700 மி. கி. மற்றும் பின் வரும் நாட்களில் 900 மில்லி அளவில் வெந்தயத்தை எடுத்து கொண்டால் மாதவிடாய காலத்தை  வலியை போன்ற மாதவிடாயின்  பல பக்க விளைவுகள் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கமைக்கவும் உதவுகிறது.
  • உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துதல்: . வெந்தயத்தை துணை பதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் பொது தசை வலிமை ஆகிறது, மற்றும் உடலில் கொழுப்பு சத்து குறையும் பொழுது அதை தாங்கி கொள்ளும் அளவுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது. இதுபோல் உடற்பயிற்சி செயல்திறன் மேம்படுகிறது  
  • வயிற்றுக்கான நன்மைகள்: வயிறு வீக்கம் மற்றும் அஜீரணம் போல் வயிற்று பிரச்சனைகளின் ஒரு பாரம்பரிய தீர்வாக வெந்தயம் அமைந்துள்ளது. இதனுள் நார்ச்சத்து நிறைந்த இருப்பதனால் இது  மலச்சிக்கலைத் தடுக்கின்றது.
  • பக்கவாததின்  அறிகுறிகளில் இருந்து விடுவிக்கிறது: வெந்தய விதைகள் பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது. பல ஆய்வுகளின் நிறைவாக மூட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் கொண்டு பக்க வாதத்தினால் பத்திக்க பட்டவர்கள் வெந்தய போடி பருகினால் வலி குறையும் என்று காணப்படுகிறது    

நீரிழிவு நோய்க்கு வேந்தய தேநீர் - Fenugreek tea for diabetes in Tamil

டைப் 2 நீரிழிவு குறிப்பாக செல்களின் இன்சுலின் எதிர்ப்பு பண்பு  காரணமாக ஏற்படுகிறது. வெந்தய தீநீரை வைத்து நடத்திய ஒரு பிரெஞ்சு ஆய்வின் படி வெந்தய தேநீர்  உடலின் கார்போஹைட்ரேட் வளர்சிதைமாற்றத்தை மேம்படுத்தி இரத்த குளுக்கோஸின் அளவை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உணவில் இதை கலந்தால் ​​ இரத்த குளூக்கோஸ் அளவைக் குறைத்து குறிப்பாக வகை 2 நீரிழிவு நோய்யை கட்டுபடுத்த உதவுகிறது.  இந்த விதையை 5 முதல் 50 கிராம் வரை ஒன்று அல்லது இரண்டு முறை தினசரி உணவோடு கலந்து எடுத்துகொண்டால் , டைப் 2 கட்டுப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், டைப் 1 நீரிழுவு நோய் கட்டுப்பாட்டிற்கு அதிக அளவு தேவை, அதாவது உணவில் சேர்ப்பதை தவிர  50 கிராம் தூளாக எடுத்துகொள்ள வேண்டும். வெந்தய தூள் வெந்தயத்தை போடி செய்தால் . இதனை இருமுறை தினசரி எடுத்துகொண்டால் இரத்திதில் குளுக்கோஸின் அளவு குறைந்து, சிறுநீரில் குளுக்கோஸை வெளியேற்றப்படும் .

வெந்தய மாத்திரைகள் உடற்பயிர்ச்சியை மேம்படுத்துவதற்க்கு - Fenugreek tablets improve exercise in Tamil

வெவ்வேறு ஆய்வுகளில், உடற்பயிற்சி செயல்திறன் மீது வெந்தய விதைகளின் பாதிப்பை கண்டறிந்த பொது  ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது. இருந்தும், இந்த ஆய்வுகளில் பெரும்பான்மையானது 300 மில்லி வெந்தயம் துணை பதார்த்தமாக (இண்டஸ் பயொடேக் போன்றவை) ; 8 வாரங்களுக்கு தினசரி எடுத்துகொள்ளும் போது உடலில் கொழுப்பு சதவீதத்தை குறைத்து, தசைகளை வலிமை படுத்துகிறது. இது ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டபடி, கால் மற்றும் பெஞ்ச் அழுத்த செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது . இது ஒருவர் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்க செய்தாலும் நீண்ட நேரம் உடற்பயிற்சிக்கோ அல்லது அதிக எடையை கொண்ட உடல்பயிற்சிக்கு உதவாது.

வெந்தய தண்ணீரின் பயன்கள் - Benefits of methi dana water in Tamil

வெந்தயம் ஒரு  இயற்கை எடை இழப்பு பொருளாக பண்டைய காலங்களில் இருந்து உபயோகிக்க படுகிறது, குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வெந்தய தண்ணீராக பருகுகினார்கள். பக்க விளைவுகள் உண்டாக்கும் மற்ற எடை இழப்பு பொருட்கள் மற்றும் மாத்திரைகள் போல் இதன் எடை இழப்பு பண்புகள் இல்லை. இது எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல்,  உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம் (ஹைபெர்ட்டேன்ஷன் ) , இன்சுலின் எதிர்ப்பு, அஜீரண கோளாறு மற்றும்  பிற பிரிவுகளில் கீழே கொடுத்துள்ள பல சிக்கல்களுக்கும் இது தீர்வாக உள்ளது. கிலாக்டோமன்னன் உதவியுடன், இது நீரில் கரையக்கூடிய ஹீட்டோபோலிசசரைடுனால் செயல்படுகிறது. பசியின்மையை உண்டாக்கி நாம் குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல ஒரு உணர்வை குடுத்து எடை குறைப்பதற்க்கு உதவுகிறது. எந்த அளவில் வெந்தயத்தை எடுத்து கொண்டால் எடை குறையும் என்பதை பின் வரும் பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது

 (அதிகம் படிக்க : எடை குறைப்பதற்கான உணவு அட்டவணை

உயர் இரத்த அழுத்ததிர்க்கு வெந்தய போடி - Methi powder for hypertension in Tamil

ஒருவரின்  எடை இழப்பு மட்டும் அல்லாமல், வெந்தய விதைகள் நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும் அதை சரி செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) அதிகமாக அடர்த்தியாக சேர்ந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இது 'கெட்ட கொலஸ்ட்ரால்' என்றும் அழைக்கப்படுகிறது. எல்டிஎல் அதிக செறிவு மற்றும் HDL குறைந்த செறிவு இவை இரண்டும் உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணிகள் ஆகும். வேந்தயத்தினால் எல்டிஎல் மீதுள்ள விளைவுகள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டாலும், HDL இல் வெந்தய விதைகளின் விளைவுகள் தொடர்பான தகவல்கள் இன்னும் முரண்பட்டிருக்கின்றன.

 (அதிகம் படிக்க : உயர் கொலஸ்ட்ரால் காரணங்கள் மற்றும் அதன் சிகிச்சை )

மலச்சிக்கலுக்கு வெந்தய போடி - Fenugreek powder for constipation in Tamil

பல விதமான அஜீரண கோளாறுகளுக்கு வெந்தய விதைகள் தீர்வாகின்றன, ஆயுர்வேதத்தில் இதனை பல காலங்களாக பிரயோகித்து வருகின்றன. இதன் வெப்பமூட்டும் மற்றும் இதமான பண்புகளால், இது மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற அஜீரண கோளாறுகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது . மேலும், ஒருவரின் உடல் நல செயல்பாடுகளை சமநிலை படுத்திகிறது. அரைத்த வெந்தய விதைகளை தினசரி இரு முறை எடுத்துகொண்டால் ஜீரணத்தை ஊக்குவித்து, மலச்சிக்களை தவிர்க்கும். வெந்தயத்தில் உள்ள நார்சத்து இதனை சாத்தியமாக்கும்

வெந்தய போடி வீக்கத்தை குறைக்கும் - Fenugreek powder reduces inflammation in Tamil

வெந்தய விதையில் லிநோலேனிக் மற்றும் லிநோலேனிக் அமிலம் உள்ளது, அதற்க்கு வீக்கத்தை கட்டுபடுத்தும் பண்பு உள்ளதால் உடலில் உள்ள வீக்கத்தை மற்றும் அதன் பாதிப்புகளை கட்டுபடுத்தும். வெந்தய விதை பொடியின் சாரில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கவாத வீக்கத்தை இது குறைக்கும் என நிரூபிக்க பட்டுள்ளது. இதற்க்கு வீக்கத்தை தடுக்கும் பண்பு மட்டும் அல்ல பக்கவாதத்தை எதிர்க்கும் குணாதிசயங்களும் உள்ளன.

பக்கவாதத்திர்க்கு வெந்தய சாறு - Fenugreek extract for arthritis in Tamil

வெந்தய விதையில் லிநோலேனிக் மற்றும் லிநோலேனிக் அமிலம் உள்ளது , அதற்க்கு வீக்கத்தை கட்டுபடுத்தும் பண்பு உள்ளதால் உடலில் உள்ள வீக்கத்தை மற்றும் அதன் பாதிப்புகளை கட்டுபடுத்தும். வெந்தய விதை பொடியின் சாரில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கவாத வீக்கத்தை இது குறைக்கும் என நிரூபிக்க பட்டுள்ளது. இதற்க்கு வீக்கத்தை தடுக்கும் பண்பு மட்டும் அல்ல பக்கவாதத்தை எதிர்க்கும் குணாதிசயங்களும் உள்ளன.

மாதவிடாய் வலிக்கு வெந்தய விதைகள் - Methi dana for menstrual pain in Tamil

வெந்தய விதைகள் பெண்களில் பலவிதமான உடல் கோளாறுகளை  குணப்படுத்தப் பயன்படுகின்றன, குறிப்பாக கூற வேண்டும் என்றால் டிஸ்மெனோரியாவின் சிகிச்சையில் இது அதிக பயனளிக்கிறது. ஆய்வுகளின் படி ஒரு நாளைக்கு மூன்று முறை இதன் விதைகளை 1830 - 2700 மி. கி. எடுத்து கொண்டாலே டிஸ்மெனோரியாவை கட்டுப்படுத்த முடியும். மாதவிடாயின் முதல் மூன்று நாட்களுக்கு இவ்வாறு எடுத்துகொண்டு; பின் தொடரும் நாட்களில் 900 மி. கி. உட்கொண்டால், மாதவிடாய் வலிக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பிட்ட இந்த அளவு எடுத்துகொண்டால் மாதவிடாய் சுழற்சியின் போது வலியினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இது ஒரு மாற்று வலி-நிவாரணியாக (வலியைக் கட்டுப்படுத்துவது) அமையும் என கருதபடுகிறது

கருப்பை நீர்க்கட்டிகளின் நோய்க்குறிக்கு வெந்தய சாறு (PCOS) - Fenugreek extract for polycystic ovarian syndrome (PCOS) in Tamil

பெண்கள் ஆரோக்கியத்தில் வெந்தய  விதைகள் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதகமான விளைவு ஏற்படுத்துகிறது , குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியினால் வரும் பாலிசிஸ்டிக் கருப்பை நோய் அல்லது நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. பி. சி. ஓ. ஸுடன் உள்ள நபர்களிடத்தில் பொதுவாக காணப்படும் பாதிப்பு, சீரற்ற மாதவிடாய் இடைவெளி. ஒரு வகை வெந்தய விதைகளை குறிப்பிட்ட அளவு உட்கொள்வதனால் அவர்களின்  மாதவிடாய் சுழற்சியின் நீளத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர்கள், வெந்தய விதை சாரின் பல வடிவங்களான  ஃபெரோசிஸ்ட், செஃப்ஹாம் இன்க், பிஸ்கட்வே, என். ஜே. 1000 எ. கா. வகைகள் போன்றவற்றின் பயன்பாட்டை பரிந்துரைக்கின்றனர். இது தவிர, இந்த வகை வெந்தய  விதைகளின் நீண்டகால நுகர்வு, கருப்பை நீர்க்கட்டிகளின் அளவை  குறைக்கவும் உதவுகிறது

சுவாச குழாய் கோளாறுகளுக்கு வெந்தய இலைகள் - Methi leaves for respiratory tract disorders in Tamil

வெந்தயத்தின்  குணப்படுத்தும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால், சுவாச குழாய் கோளாறுகளின் அறிகுறிகளை மற்றும் தீவிரத்தை குறைக்கவும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல், நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இதனுள் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சுவாசக் குழாய் கோளாறுக்கு காரணமாக இருக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க உதவுகிறது. அதன் ஒவ்வாம்மை நீக்கும் பண்பு சளி சவ்வுகளை இதமாக்குவத்தில் உதவுகின்றன, கூடுதலாக மூச்சு குழாயிலிருந்து சளி வெளியேருவதர்க்கும் உதவுகின்றன. மேலும், இது உடலின் வெப்ப அளவை கட்டுபடுத்தும். அதனால் பல்வேறு சுவாசக் கோளாறுகளான  மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நோய் தொற்றினால் ஏற்படும் குளிர் காய்ச்சல், இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதில் இது உதவி செய்யும் 

ஒவ்வொரு குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட வேண்டிய அதற்கேற்ற வெந்தய அளவு ஏற்கனவே மேலே உள்ள பிரிவுகளில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், தினசரி உணவு பழக்க வழக்கங்களில் இதை ஒரு அங்கமாக்கி, ஒரு வீட்டு மருந்தாகவும் தவிர்க்க முடியாத சமையல் மூல பொருளாகவும் இதை பயன்படுத்த சில சமையல் செயல்முறைகள் பின் வரும் பகுதியில் பகிரப்பட்டுள்ளன  

வெந்தய தண்ணீர்

வெந்தய தண்ணீர் எடை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . வெந்தய தண்ணீரை எளிதில் கீழ்வரும் முறையில் செய்து விடலாம்

  • தண்ணீரில் ஒரு மெல்லிய துணியை ஊற வைத்து அதில் வெந்தய விதைகள் வைக்கவும், அதன் மேல் ஒரு கனத்த பாத்திரம் அல்லது பாரமான பொருளை வைக்கவும்
  • அதே போல் மூன்று இரவுகள் விட்டுவிட்டு பின்னர் அந்த பாரத்தை அகற்றவும்
  • வெந்தயம் முளை கணிசமான அளவிற்கு வளர்ந்த பிறகு, அந்த நீரை  ஒரு நல்ல எடை இழப்பு பானமாக பயன் படுத்திக் கொள்ளலாம்                   

மாற்றாக, எடை இழப்புகளுக்கு வெந்தய  விதைகளை  சூடான நீருடன் நேரடியாக எடுத்து கொண்டாலும் அதே பலன் அளிக்கும் .

வெந்தய தேநீர்

இதுவரை படித்ததில் 2 வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் திறனுள்ளது என நீங்கள் அறிந்து இருப்பீர்கள், நீங்கள் நீரிழுவு நோயால்  பாதிக்க பட்டவர் என்றால் இந்த செய்முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை எளிதாக வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்து வெந்தயத்துடன் சேர்த்து செய்துவிடலாம். கீழே குடுக்கபட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்

  • கொஞ்சம் வெந்தயத்துடன் சிறிது தண்ணீரை எடுத்துகொண்டு நல்ல மையாக மாவு போல் அரைத்து எடுக்கவும் .
  • சூடான தண்ணீருடன் கலந்து ஒரு பத்திரத்தில் தேநீர் செய்யவும்
  • மேலும் சுவையை மெருகேற்ற பிடித்த மூல பொருட்களை சேர்த்துகொள்ளலாம், உதாரணமாக இலவங்கப்பட்டை, இஞ்சி, மிளகு ஆகியவை
  • மூடி இட்டு ஒரு 5 நிமிடங்களுக்கு அடக்கி வைத்து சமைத்த பின் பருகவும்

தினசரி வெற்று வயிற்றில் இந்த தேநீர் உட்கொள்வது கண்டிப்பாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும், இது இன்சுலின் மற்றும் பிற கட்டுப்பாட்டு மருந்துகளில் ஒருவருடைய சார்புகளை குறைக்க உதவுகிறது.

வெந்தய விதை மற்றும் தென்

உங்களுக்கு வெந்தயத்தின் மிகையான ருசியோ அல்லது அதன் காட்டமான மனம் பிடிக்கவில்லை என்றால், அதை குறைக்க தேனுடன் எடுத்து கொள்ளலாம். இப்படி செய்வதனால் அதன் ஊட்டசத்து மற்றும் ருசி அதிகரிக்கும். கீழே குடுக்கபட்டுள்ள முறயை பின்பற்றி இந்த தேநீர் செய்யலாம்  

  • தேநீர் செய்வது போலவே தண்ணீரை கொதிக்க விடவும், பின்னர் அதில் அரைத்த வெந்தயத்தை  சேர்த்து அந்த கலவையை மூன்று மணி நேரம் அடைத்த பாத்திரத்தில் வைக்கவும்
  • இப்பொழுது தண்ணீரை வடிகட்டி அதில் தேன்  மற்றும் எலும்பிச்சை சாரை சேர்க்கவும்
  • நல்ல விளைவுக்கு தினசரி காலையில் அருந்தவும்
  • வெந்தயத்தை உட்கொள்ளு அளவு குறிப்பிட்ட வயது, எடை, உயரம், பாலினம் மற்றும் பிற காரணிகளை பொருத்து நிர்ணயம் செய்ய படுகிறது. தினசரி இரண்டு அல்லது மூன்று முறை 5 முதல் 30 கிராம் வெந்தய விதைகளின் தூள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அளவை, உணவுப் சாப்பிடுவதற்கு முன்னதாகவே பயன்படுத்துவது சிறந்தது. உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையாக இதன் விதைகளை எடுத்து கொண்டால்; எதிர்ப்பு அழற்சிக்கு 25 முதல் 50 கிராம் என்ற அளவில் பருகவும். ஆனால் அது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செயல்படுத்தப்பட கூடாது.
  •  நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், இரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போவதை தவிர்ர்க்க, மருத்துவர் அல்லது ஆயுர்வேத மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் வெந்தயத்தை எடுத்துகூள்ளகூடாது
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

இந்த அதிசய விதைகளின் பலன்கள் எண்ணற்றவை. என்றாலும், இதனை ஒரு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதிகபடியாக எடுத்து கொள்ள கூடாது, குறிப்பாக நீரிழிவு நோயினால் பாதிக்க பட்டவராக இருந்தால், இது நீரிழிவு இரத்த குளுக்கோஸ் அளவை மாற்றும் என்பதால், உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். வெந்தயம்  ஒரு பாதுகாப்பான தீங்கு விளைவிக்காத மூலிகை ஆகும். உணவில் சேர்க்கப்படும் அளவுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை. ஆனால் இதை மருத்துவ நோக்கங்களுக்காக பயன் படுத்தும்போது கவனமாக செய்யப்பட வேண்டும் பின்வரும் பக்க விளைவுகளில் ஏதாவது அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  1. வயிற்றுப்போக்கு
  2. வயிறு பிரச்சன்னை
  3. வயிறு வீக்கம் அல்லது வயிற்றில் காற்று  
  4. தலைவலி
  5. தலைச்சுற்று

இதன் அதிகபடியான பக்க விளைவுகள் கீழ் வருபவை :

  1. இருமல்
  2. மூச்சுத்திணறல்
  3. மூக்கடைப்பு
  4. முகவீக்கம்.

இந்த மூலிகையினால்  ஏற்படும் அதிகப்படி உணர்வுகளின் எதிர்விளைவாக கீழ் வருபவை காணப்படுகின்றன

எச்சரிக்கை

  1. கர்ப்பம் தரித்திருக்கும் பொழுது வெந்தயத்தின் பயன்பாடு உகந்தது அல்ல, ஏன் என்றால் அது கருவை பாதிக்கலாம் அல்லது வடிவக்கேடு உண்டாக்கலாம்  
  2.  நீரிழிவு நோயாளிகளில், இரத்தச் சர்க்கரைக் குறைபாடு ஹ்ய்போக்ல்ய்செமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள்) அபாயத்தை தவிர்க்க, குறிப்பிட்ட அளவுகளில் கவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும், இல்லே எனில்  இது அவசர மருத்துவ நிலைக்கு கொண்டு பொய் விடும்
  3. உணவாக அல்லாமல் மருந்தாக வெந்தயத்தை பயன் படுத்தினால், அதிக காலம் பயன் படுத்துவது நல்லதல்ல. ஆறு மாதத்திற்கு அதிமாக இதனை பயன் படுத்த கூடாது
  4. குழந்தைகளுக்கு இதை நேரடியாக குடுப்பது உகந்தது அல்ல , குறிப்பாக வாயால் உட்கொள்ளும் வெந்தய விதைகளை தவிர்க்க வேண்டும்  

Medicines / Products that contain Fenugreek

மேற்கோள்கள்

  1. Bahmani M et al. Obesity Phytotherapy: Review of Native Herbs Used in Traditional Medicine for Obesity. J Evid Based Complementary Altern Med. 2016 Jul;21(3):228-34. PMID: 26269377
  2. Kilambi Pundarikakshudu, Deepak H. Shah, Aashish H. Panchal, Gordhanbhai C. Bhavsar. Anti-inflammatory activity of fenugreek (Trigonella foenum-graecum Linn) seed petroleum ether extract. Indian J Pharmacol. 2016 Jul-Aug; 48(4): 441–444. PMID: 27756958
  3. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 02019, Spices, fenugreek seed. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  4. Nagulapalli Venkata KC, Swaroop A, Bagchi D, Bishayee A. A small plant with big benefits: Fenugreek (Trigonella foenum-graecum Linn.) for disease prevention and health promotion.. Mol Nutr Food Res. 2017 Jun;61(6). PMID: 28266134
  5. Arpana Gaddam et al. Role of Fenugreek in the prevention of type 2 diabetes mellitus in prediabetes. J Diabetes Metab Disord. 2015; 14: 74. PMID: 26436069
  6. Chris Poole et al. The effects of a commercially available botanical supplement on strength, body composition, power output, and hormonal profiles in resistance-trained males. J Int Soc Sports Nutr. 2010; 7: 34. PMID: 20979623
Read on app