உங்கள் தினசரி உணவுப் பழக்கத்தில், கொஞ்சம் கூடுதல் மொறுமொறுப்பு மற்றும் சுவையை சேர்ப்பதற்காக இருக்கின்ற சிறந்த வழிகளில் பருப்புகளும் ஒன்றாகும். அவை, ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டும் அல்லாமல், நோய்களில் இருந்து குணமளிப்பதிலும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவக் கூடிய உயிரி செயல்பாட்டு மூலக்கூறுகளையும், ஏராளமான அளவில் கொண்டிருக்கின்றன. அக்ரூட்டும் அவற்றில் இருந்து வேறுபட்டது அல்ல. நம்மில் பெரும்பாலானோர், நமது மூளை மற்றும் இதயம் இரண்டுக்கும், அக்ரூட் அளிக்கின்ற நன்மைகளைப் பற்றி நன்கு அறிந்து இருப்போம். ஆனால் இந்தப் பருப்புகள், உங்கள் ஆரோக்கியத்துக்காக அளிக்கக் கூடிய நன்மைகள் மேலும் ஏராளமாக உள்ளன.
அவை, உங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் ஆரோக்கியமான கூடுதல் உணவுகளில் ஒன்றாக அவற்றை ஆக்கக் கூடிய வகையில், நார்ச்சத்து, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் செறிவற்ற கொழுப்புகள் ஆகியவற்றின் நல்ல ஒரு ஆதாரமாக இருக்கின்றன. அதன் பயன்களில், உணவு, மருந்து, சாயம் மற்றும் விளக்கு எண்ணெய் ஆகியவை அடங்கும். அக்ரூட்டை, அது இருக்கிற மாதிரியே அல்லது வறுத்து, ஊறுகாயாக செய்து அல்லது அக்ரூட் வெண்ணை வடிவில் எனப் பல விதத்தில் உண்ணலாம். அக்ரூட்கள், பிரவுனி உணவு செய்முறைகள், கேக்குகள், இனிப்பு பண்டங்கள், ஐஸ் க்ரீம்கள் ஆகியவற்றில், மற்றும் சில குறிப்பிட்ட உணவுகளில் அவற்றை அலங்கரிக்கும் ஒரு பொருளாகக் கூட, மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உணவு மிருதுவாக்கிகளில் பயன்படுத்தப்படும், பாலாடை நிறைந்த அக்ரூட் பால் தயாரித்து உட்கொள்வது, அக்ரூட் உட்கொள்வதற்கு மற்றும் ஒரு வழி ஆகும்.
அக்ரூட் பருப்புகள் கி.மு 700 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில் பண்டைய ரோமானியர்கள், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அக்ரூட்டை அறிமுகம் செய்தனர். அப்போது இருந்து அது அந்த நாடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இன்றைய நாட்களில் வணிக ரீதியாக விற்பனைக்குக் கிடைக்கின்ற, நாம் பயன்படுத்துகின்ற அக்ரூட், இந்தியா மற்றும் காஸ்பியன் கடலை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்தது ஆகும். ஆங்கிலேய வணிகர்கள் வியாபாரத்துக்காக அதை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பிறகு, அது ஆங்கிலேய அக்ரூட் என்று அழைக்கப்பட்டது. கருப்பு அக்ரூட் என்பது, வட அமெரிக்காவை மட்டுமே சார்ந்த மற்றொரு வகை ஆகும். தற்சமயத்தில் அக்ரூட், சீனா, ஈரான், மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் கலிபோர்னியா மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
மற்ற பருப்புகளைப் போல் அல்லாமல் அக்ரூட், உண்மையில் பருப்பு அல்ல, அது அக்ரூட் மரத்தில் இருந்து பெறப்படும் ஒற்றை விதையைக் கொண்ட கனி ஆகும். அக்ரூட் என்று நமக்குத் தெரிந்த அது, உண்மையில் அக்ரூட் பழத்தில் உள்ள விதைகளை இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து பெறப்படுவது ஆகும்.
அக்ரூட் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: ஜூக்லன்ஸ் ரெஜியா (ஆங்கில அக்ரூட்)
- குடும்பம்: ஜூக்லாண்டாசியயி.
- பொதுவான பெயர்கள்: வால்நட், அக்ரூட்
- பயன்படும் பாகங்கள்: அக்ரூட் கொட்டைக்குள் இருக்கும் பருப்பு பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் மேல் தோல் மற்றும் இலைகளும் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைக் கொண்டிருப்பதாகப் கூறப்படுகிறது.
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஒரு காலத்தில் அக்ரூட்கள், இந்தியா மற்றும் வட அமெரிக்காவின் பகுதிகளை சார்ந்தவையாக இருந்தாலும் கூட, தற்போது அவை வணிக ரீதியிலான விற்பனைக்காக, சீனா, ஈரான், துருக்கி, மெக்ஸிகோ, உக்ரைன், சிலி, மாற்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. சீனா, உலக அளவில் மிகப் பெரிய அக்ரூட் உற்பத்தியாளராக இருக்கிறது. 2016-17 வருடத்தில், உலகத்தின் மொத்த அக்ரூட் உற்பத்தியில், சீனா 50% பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்தியாவில், அக்ரூட்டுகள், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய அளவில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம், மிகப் பெரிய அக்ரூட் உற்பத்தியாளராக விளங்குகிறது.
- சுவாரசியமான தகவல்: முந்தைய ரோமானிய காலத்தில், அக்ரூட்டுகள் கடவுள்களின் ஒரு உணவாகக் கருதப்பட்டன, மேலும் ஜுபிடர் கடவுளின் பெயர் சூட்டப்பட்டதால், அவற்றின் அறிவியல் பெயர் ஜூக்லான்ஸ் ரெஜியா ஆகும்.