பல வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை நீங்கள் ஏற்று கொண்டால் உப்புசத்தை குறைத்து ஆரோக்யமான தட்டையான வயிற்றை பெறலாம். பின் வரும் பட்டியலில் உள்ளவை உங்களுக்கு தொப்பை வளராமல் பாதுகாக்க உதவும்:
புகை பிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடித்தனால் ஏற்படும் இரைப்பைக் கோளாறுகள் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வு செய்த பொது உப்புசம், வயிற்று வலி மட்டும் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் புகை பிடிப்பதன் தொடர்புடைவை என தெரிய வந்துள்ளது. எனவே, நீங்கள் அந்த சிகரெட்டை கீழே வைத்துவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆனத்தமான வயிற்றை எடுத்துக் கொள்ளவேண்டும்.
மது அருந்தும் அளவை கட்டுபடுத்துங்கள்
"மதுபானம் மற்றும் மது அருந்துதலின் தேசிய நிறுவனம்" வெளியிட்ட ஒரு கட்டுரையில் மது அருந்துவதனால் கல்லீரல் மற்றும் கணையம் உள்ளிட்ட உடலின் செரிமான, வளர்சிதை மாற்றம் தடை படுகிறது, இதன் விளைவாக, உணவு ஒழுங்காக ஜீரணமாகாமல் இருக்கும். இதனால் கல்லீரலுக்குள்ளேயும் வெளியேயும் கொழுப்பு சேரும் ஆபத்து ஏற்படுத்தும், அது உப்புசத்தை உருவாக்கி தீவிர மருத்துவ நிலைமைக்கு கொண்டு போ வதை விட பாதுகாப்பாக இருப்பதே மேல் ,எனவே, எந்தவொரு உடல் ரீதியற்ற கோளாறுகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவதற்கு அளவாக மது அருந்துங்கள்.
சத்தற்ற உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்கவும்
சத்தற்ற உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு, கிருமிகள், செயற்கை சேர்மானங்கள், சர்க்கரை போன்ற பல ஆரோக்கியமற்ற பொருட்கள் இருப்பதால் அதில் அதிகமான கலோரிகள் உள்ளன. அவை முழுமையாக ஜீரணமாகுவதற்க்கு நீண்ட நேரம் எடுக்கும், உடலிலிருந்து வெளியேற்றபடுவதற்கு அதிக நேரம் எடுக்கலாம். எனவே, உப்புசத்தை தடுப்பதற்கு முடிந்தவரை வெளியில் கிடைக்கும் சத்தற்ற உணவுகளிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது .
கொழுப்பு நிறைந்த உணவு வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்வதற்கு காரனம் ஆகிறது, குறிப்பாக வனஸ்பதி எண்ணெயில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு எனவே, ஊபுசத்தை தவிர்க்க தடுக்க முடிந்தவரை கொழுப்புச் சத்து நிறைந்த உணவை விட்டு ஒதுங்கி நிற்பது நல்லது
உணவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்
உணவின் இடையில் சிறிதளவு தண்ணீர் குடிப்பது ஒரு பெரிய பிரச்சனை ஆகாது ஆனால் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால் அது ஜீரண செயல்பாட்டில் தடங்கல் உண்டாக்கி வயிறு உப்புசம் உண்டாக்கும். அதனால் உங்களின் ஜீரண திரவியத்தை நீர்ததாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பால் பதார்த்தங்களை தவிருங்கள்
அதிகம் பெருக்கு இது தெரியாது ஆனால் அவர்களுக்கு பால்தரசம் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கலாம். அதாவது பால் மற்றும் பாலினால் உருவாக்கப்பட்ட பொருட்களை ஜீரணம் செய்வது கடினமாக இருக்கலாம், அதனால் உப்புசம் ஏற்படலாம். ஆகவே பால் பொருட்கள் ஏதேனும் எடுத்த பின்பு உங்கள் வயிறு எவ்வாறு உணர்கிறது என்று கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் வித்யாசம் தோன்றினால் சில வாரங்களுக்கு உங்கள் உணவிலிருந்து அதை ஒதுக்கி வைக்கலாம்
மன அழுத்தத்தை விடிவியுங்கள்
முன்பு கூறியது போல மன அழுத்தம், உப்புசம் உட்பட பல வயிறு உபாதைகளிற்க்கு தொரட்புடயதாக உள்ளது. அதனால் உங்கள் அவசர வாழ்கையிலிருந்து சிறிது சமயம் உங்களுக்காக ஒதுக்கி மனதை அமைதி படுத்தவும். ஒரு ஆரோக்யமான மனது ஒரு ஆரோக்யமான உடல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் சந்தோஷமாக இருந்து உப்புசத்தை தோற்கடியுங்கள்
தொடர்து உடற்பயிற்சி செயுங்கள்
தொடர்ந்து உடற்பயிச்சி செய்து வந்தால் உடல் பருமனை பராமரிக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும் என்பது அனைவரும் அறிந்தது. உப்புசத்திலிருந்து ஒதுங்கி நிற்க உடலை சுறுசுற்பாக வைத்து கொண்டு, தசைகள் மற்றும் வயிற்று பகுத்திய நீட்டி வைத்துக் கொள்ளவேண்டும்
.தாராளமாக தண்ணீர் குடிக்கவும்
முன்பு கூறியது போல தண்ணீர், உடலில் உள்ள நச்சுத்தன்மை, , அதிகபடியான சர்க்கரை, அதிகபடியான உப்பு அகற்றுகிறது வயிற்றில் கொழுப்பு தேக்கத்தையும் குறைக்கிறது.அதனால் தண்ணீருடன் தொழனாகுங்கள், தவறாமல் தாராளமாக தண்ணீர் குடித்து வந்தால் ஆரோக்யமான வயிறு மற்றும் பளபளப்பான சருமம் பெறலாம்.. .
உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்கவும்
உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுபடுதுவதனால் தண்ணீர் தேக்கம் தடுக்கபடுவதுடன் உப்புசமும் தடுக்கபடுகிறது. நாளடைவில் முழுமையான ஆரோக்யத்தை மேம்படுத்த இது ஒரு நல்ல முடிவாக இருக்கும்
கார்போனடேத் பானங்களை தவிருங்கள்
சுவையுட்டிய சோடா மற்றும் பீர் போன்ற கார்போனடேத் பானைகளில் உள்ள கார்பன்டையாக்சயிட் உங்கள் வயிற்றிளும் பெருங்குடலிலும் சேருகின்றன, இவை வயிறு உப்புசம் உண்டாக்குகின்றன. அதில் சர்க்கரை மற்றும் மது (பீர் இல்) உள்ளன. இவை இரண்டும் உப்பசத்தை தடுப்பதற்கு குறைவாகவே எடுக்கொள்ள பரிந்துரைக்கபடுகிறது .
சத்தான உணவை சாப்பிடுங்கள்
சத்தான உணவு, வயிற்றை ஆரோக்யமாக மற்றும் சந்தோஷமாக வைத்துகொள்ளும். உங்கள் ஆரோக்கியம் முழுமையாக மேம்பட நார் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள், சத்தற்ற உணவை தவிருங்கள், பழம் மற்றும் காய்கறிகளின் சாற்றை குடியுங்கள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள் எடுத்துகொள்ளுங்கள், பாலிற்கு பதிலாக பாலினால் செய்யப்படும் பொருட்களை பருகுங்கள் ஏனென்றால் அதில் ஆரோக்யமான பாக்டீரியாக்கள் உள்ளன; குறிப்பாக தயிரில்.
அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்
பல முறை நாம் மனம் நிறைய சாப்பிடுவோம் அது, நாம் வயிறு நிறைய சாப்பிடுவதற்கு அதிகமாக இருக்கும். இதை நாங்கள் அதிக உண்ணுதல் என அழைப்போம். அதிகமாக சாப்பிட்டால் கண்டிப்பாக அசௌகரியம் ஏற்படும், அது சிறுது நேரத்திற்கு தொடரும். இதனால் வயிறு உப்புசமாகலாம். அதனால் உங்கள் உணவை சிறிய அளவில் அதிக தவணையில் எடுத்துகொள்ளவும்