சீந்தில் கொடி அல்லது டினோஸ்போரா என்பது ஒரு இலையுதிர் புதர் ஆகும், இது இந்தியாவின் பல பகுதிகளிலும் காடாக வளர்ந்து உள்ளது. இந்த மூலிகை பல வகை சிகிச்சைகள் மற்றும் பலன் அளிக்கும் காரணத்தினால் ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருந்தியல் அமைப்பு இதை மிக உயர்ந்த நிலையில் கருதிகிறது. உடலின் மொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதனால், ஆயுர்வேதத்தில் இதனை "ரசயன" என்று அழைக்கப்படுகிறது. சீந்தில் கொடி யை சமஸ்கிரதத்தில் “அம்ரிதா” என்று அழைப்பார்கள்; அதன் பொருள் “மரணத்தை வெல்லும் அமுதம்” என்றாகும். இந்த அற்புதமான விளைவுகளை எல்லாம் பார்த்தால், பூரானத்தில் ‘தேவர்கள்’ கடைந்து எடுத்த- என்றும் இளமை மாறா ஆரோக்யத்தை தரும் “அம்ருதம்” இந்த சீந்தில் கொடி தானோ என்று கூட தோன்றுகிறது.
சீந்தில் கொடி செடி பொதுவாக வலுவற்ற சதைப்பற்றுள்ள தண்டுகளுடன் இருக்கும் ஒரு படர் கோடி ஆகும். இதன் தண்டு 1-5 cm அகலம் கொண்டு, வெள்ளை நிறத்திலிருந்து சாம்பல் நிறம் வரை தோன்றும். சீந்தில் கொடியின் இலைகள் இதய வடிவில் மென்மையானதாக(மெல்லிய) இருக்கும். கோடை மாதங்களில் இதில் பச்சை-மஞ்சள் கலந்த நிறத்தில் மலர்களைக் பூக்கும், குளிர்காலத்தில் சீந்தில் கொடி செடியில் பழங்கள் காய்க்கும். சீந்தில் கொடி பழம் பச்சை நிற உள்ளொட்டுத் தசைக் கொண்ட கனியாக இருக்கும், இது பழுதப் பின் சிவப்பாக மாறும். சீந்தில் கொடியின் மருத்துவ தன்மை அதன் தண்டுகளில் காணப்பட்டாலும், இலை, பழம், வேர் ஆகியவை சிறிய அளவில் பயன்படுகின்றன.
சீந்தில் கொடி பற்றி சில அடிப்படை உண்மைகள்
- தாவரவியல் பெயர்: டினோஸ்போரா கார்டிஃபோலியா
- குடும்ப பெயர் : மெனிஸ்பெர்மேசி
- பொது பெயர்: கிலோய், குடுச்சி, குல்பெல், ஹார்ட்-லெவிட் மூன்சீட், டினோஸ்போரா
- சமஸ்கிருதம் பெயர்: அம்ரிதா, தந்த்ரிக்கா, குண்டலினி, சக்ரக்ஷினி
- பயன்படும் பகுதிகள்: தண்டு, இலைகள்
- பிராந்திய மற்றும் புவியியல் பரவல்: சீந்தில் கொடியின் பூர்வீகம் இந்திய என்றாலும் இது சீனாவிலும் காணபடுகிறது
- ஆற்றல்: வெப்பம்