வைட்டமின் பி3 குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் பி3, பொதுவாக நியாசின் அல்லது நியாசினமைட் என அறியப்படுகிறது, இது வைட்டமின் பி தொகுதிகளில் ஒன்றாகும்.இது தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது உடலால் அதனை சேமித்து வைக்க முடியாது என்பதால் உணவில் தினசரி அதனை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.மனித உடல் வைட்டமின் பி3-ஐ உற்பத்தி செய்யாததால், அது வெளிப்புற மூலங்களான உணவு அல்லது பிற்சேர்க்கைகள் மூலமாக பெறப்படுகிறது. உயிரணு வளர்சிதை மாற்றத்தை ஆதரவளிக்கும் சில முக்கிய நொதிகளின் தொகுப்பிற்கு இது ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும்வைட்டமின் பி3 தோல், செரிமான மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- மிதமான வைட்டமின் பி3 குறைபாடு சிறிய அளவிலான அறிகுறிகளுடன் தோன்றுகிறது, அதாவது. அஜீரணம், வாந்தி, மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
- கடுமையான குறைபாடு மனிதர்களில் பெல்லாக்ரா என்னும் நோயாக தோன்றுகிறது, இது பின்வருவன்வற்றால் பண்பிடப்படுகிறது.
- தோல் அழற்சி: தோலின் நமைச்சல் மற்றும் அழற்சி. இது சூரிய ஒளி வெளிப்பாடு மற்றும் டி.என்.ஏ சேதத்தின் காரணமாக ஏற்படுகிறது.
- மறதிநோய்: அறிவாற்றல் மற்றும் ஆளுமை மாற்றங்கள்.
- வயிற்றுப்போக்கு: கடுமையான மற்றும் தொடர்ச்சியான தளர்வான மலம் கழித்தல்.
- சில ஆய்வுகளின் படி, வைட்டமின் பி3 குறைபாடு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சரியான அளவிலான வைட்டமின் பி3 இல்லாத உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுதல் நியாசின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.இரும்புச்சத்து, வைட்டமின் பி2 மற்றும் பி6 குறைபாடுகளும் நியாசின் குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும்.நாட்பட்ட குடிப்பழக்கம் பெல்லாக்ரா ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.நியாசின் குறைபாடு காரணமாக, உடல் டிரிப்டோபான் என்று அழைக்கப்படும் அமினோ அமிலத்தை சேர்த்து இணைக்க முடியாது, மேலும் அதனோடு தொடர்புடைய அறிகுறிகளுக்கு இது வழிவகுக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதன் நோய் கண்டறிதல் முறை நேரடியானதாகும்.தோல் மற்றும் வாய் புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் மறதிநோய் போன்ற தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் சுருக்கமான வரலாறு இதன் கண்டறிதலுக்கு தேவைப்படுகிறது. மேலும், நாட்பட்ட குடிப்பழக்கம் போன்ற சமூக பழக்கவழக்கங்களின் வரலாற்றை பெற்றுக்கொள்வதன் மூலம் அகத்துறிஞ்சாமை காரணமாக ஏற்படும் வைட்டமின் பி3 குறைபாடு கண்டறியப்படுகிறது.என்-மீத்தைல்நிக்கோட்டினமைடின் அளவுகளில் ஏற்படும் குறைவை மதிப்பீடு செய்ய சிறுநீர் சோதனையை உள்ளடக்கிய ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான சிகிச்சை வைட்டமின் பி3 நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதுடன், பி தொகுதி வைட்டமின்கள் குறைநிரப்புகள் வாய் மூலம் கூடுதலாக கொடுத்தல் போன்றவற்றை உள்ளடக்குகிறது. ஏனெனில், பல வைட்டமின் குறைபாடுகள் நிகழ்வது பொதுவானதாகும். வைட்டமின் பி2 மற்றும் பி6 குறைநிரப்புகள் பொதுவாக இதன் சிகிச்சைக்கு வைட்டமின் பி3 உடன் சேர்த்து பரிந்துரைக்கப்படுகிறது.வைட்டமின் பி3, உணவு உட்கொள்ளளில் ஆண்களுக்கு 16 மி.கி / நாள் மற்றும் பெண்களுக்கு 14 மி.கி / நாள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.மீன், இறைச்சி, தானியங்கள் (சோளம் தவிர), பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் அவரை போன்ற காய்கறிகள் ஆகியவை வைட்டமின் பி3 நிறைந்த உணவுப் பொருட்களாகும்.