புரதங்கள் என்பவை, மனித உடலின் முறையான செயல்பாட்டுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். அவை, ஆற்றலின் முக்கிய ஆதாரங்களாக செயல்பட்டு, மனித வாழ்வின் கட்டுமானத்துக்கு அடிக்கற்களை அமைக்கின்றன. கட்டமைப்புரீதியாக, புரதங்கள் பெரிய, கரிம கலவை மூலக்கூறுகள் ஆகும். இந்த மூலக்கூறுகள், திசுக்களின் வளர்ச்சி மற்றும் சரிசெய்தலுக்குத் தேவையானவையாக இருக்கின்றன.

இயற்கையாகக் கிடைக்கின்ற உட்கொள்வதற்கான புரதச்சத்தின் செறிவான ஆதாரங்களில், இறைச்சி, கோழி, முட்டைகள், கடல் உணவுகள், பருப்புகள், விதைகள், சோயா பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள், பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் ஆகியவை அடங்கும்.

மற்றொரு புறம், புரதச்சத்து மாவுகள் என்பவை, மனித உடலின் புரதச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய பிற்சேர்க்கை பொருட்களின் ஒரு வடிவமாக இருக்கின்றன. அவை, போதுமான அளவுக்கு சோயா, பட்டாணிகள் மற்றும் பாலாடை போன்ற புரதச்சத்து ஆதாரங்களை, அரைத்து ஒரு மாவு வடிவத்தில் கொண்டிருக்கின்றன.

உணவுப்பழக்கங்களைப் பொறுத்து, புரதச்சத்தினை மிகவும் அபரிமிதமாகக் கொண்ட ஆதாரங்களான இறைச்சி, அல்லது கடல் உணவுகளை அனைவரும் உண்பது கிடையாது. அது போன்ற நிலைகளில் உள்ளவர்களுக்கு, புரதச்சத்துக்களை சரியான அளவில் எடுத்துக் கொள்வது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு புரதச்சத்து மாவானது ஒரு பேருதவியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இவற்றைப் பற்றியும், மற்றும் புரதச்சத்து மாவினை உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகளை பற்றியும், மற்றும் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

(மேலும் படிக்க: புரதச்சத்து நன்மைகள்)

  1. புரதச்சத்து மாவின் ஆதாரங்கள் - Sources of protein powder in Tamil
  2. புரதச்சத்து மாவின் நன்மைகள் - Protein powder benefits in Tamil
  3. எடைக்குறைப்புக்காக புரதச்சத்து மாவு - Protein powder for weight loss in Tamil
  4. தசைகளைப் பெரிதாக்குவதற்காக புரதச்சத்து மாவு - Protein powder for muscle building in Tamil
  5. எடை அதிகரிப்புக்காக புரதச்சத்து மாவு - Protein powder for weight gain in Tamil
  6. இரத்த அழுத்துக்காக புரதச்சத்து மாவு - Protein powder for blood pressure in Tamil
  7. ஆண்களுக்கு புரதச்சத்து மாவு - Protein powder for men in Tamil
  8. பெண்களுக்கு புரதச்சத்து மாவு - Protein powder for women in Tamil
  9. வீட்டில் தயாரிக்கப்படும் புரதச்சத்து மாவு - Homemade protein powder in Tamil
  10. புரதச்சத்து மாவு எடுத்துக் கொள்ளும் அளவு - Protein powder dosage in Tamil
  11. புரதச்சத்து மாவின் பக்க விளைவுகள் - Side effects of protein powder in Tamil
  12. முக்கிய குறிப்புக்கள் - Takeaway in Tamil
ஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

புரதச்சத்து மாவுகள், பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பல வகைகளில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த மாவுகள் தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருந்துகின்றவாறு மாற்றி அமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. தற்போதைய கால கட்டத்தில் புரதச்சத்து மாவுகளின் முக்கியமான ஆதாரங்களாக மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை, கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

1. லாக்டோஸ்களைக் கொண்டிருக்கும் புரதச்சத்து மாவுகள்:

இந்த வகை புரதச்சத்து மாவுகள், பால் அல்லது பால்பொருட்களில் இருந்து பெறப்படுகின்றன. இவை கார்போஹைட்ரேட் லாக்டோஸைக் கொண்டிருக்கின்றன.

  • மோர் புரதச்சத்து மாவு: புரதச்சத்துகளின் மிகவும் பொதுவான ஆதாரமாக மோர் புரதச்சத்து மாவு இருக்கிறது. பால் உறைந்து பின்னர் கடையப்பட்ட பின்னர், மீதமிருக்கின்ற பாலின் நீர்மப் பகுதியானது மோர் என அழைக்கப்படுகிறது. அது, இந்த பிற்சேர்க்கைப் பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது, மோர் புரதச்சத்து மாவினை பாலில் நன்கு கரையக் கூடியதாக, மற்றும் மனித உடலினால் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடியதாக ஆக்குகிறது. இது, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்பவர்களால் மிகவும் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு புரதச்சத்து மாவு வகையாக இருக்கிறது.
  • கேசின் புரதச்சத்து மாவு: கேசின் என்பது பாலில் காணப்படும் ஒரு புரதச்சத்து ஆகும். அது மனித உடலினால் மிகவும் மெதுவாக கிரகிக்கப்பட்டு செரிமானம் செய்யப்படுகிறது. அடிக்கடி இது ஒரு 'மிக உயர்ந்த' புரதச்சத்து ஆதாரமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், இதன் விளைவுகள் மோர் புரதச்சத்து மாவின் விளைவுகளைப் போன்றதாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

2. லாக்டோஸ் இல்லாத புரதச்சத்து மாவு: இந்த வகை புரதச்சத்து மாவுகள் பெரும்பாலும் தாவர-அடிப்படையிலான பொருட்களாக இருக்கின்றன. இவை பால் பொருட்களைக் கொண்டிருக்காதவை ஆகும். அதனால் லாக்டோஸ் இல்லாமல் இருக்கின்றன. இந்த வகை புரதச்சத்து மாவுகள், அவ்வப்போது தீவிர சைவ புரதச்சத்து மாவுகள் எனவும் கூட குறிப்பிடப்படுகின்றன.

  • சோயா புரதச்சத்து மாவு: இது சோயாபீன்ஸ் தாவரத்தில் இருந்து பெறப்படுகின்ற ஒரு வகை புரதச்சத்து மாவு ஆகும். சோயாபீன்ஸ்கள் போதுமான அளவில் புரதச்சத்தினைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த தாவர-அடிப்படையிலான புரதச்சத்து மாவு, புரதச்சத்தின் ஒரு நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • பட்டாணி புரதச்சத்து மாவு: புரதச்சத்தின் மற்றொரு பிரபலமான தாவர-அடிப்படையிலான ஆதாரமாக, பட்டாணி புரதச்சத்து மாவு இருக்கிறது. இது பால், மற்றும் கோதுமைப்புரத தொகுதிகளைக் கொண்டிருக்காத காரணத்தால், மிகவும் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்டுகிறது.
  • பழுப்பு அரிசி புரதச்சத்து மாவு: பழுப்பு அரிசி, புரதச்சத்தின் ஒரு நல்ல ஆதாரம் ஆகும். அதனால், பழுப்பு அரிசி புரதச்சத்து மாவானது, தீவிர சைவ, மற்றும் சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. உடலின் மீதான பழுப்பு அரிசி புரதச்சத்து மாவின் விளைவுகள், கேசின் அல்லது மோர் புரதச்சத்து மாவுகளின் விளைவுகளைப் போன்றே இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

3. முட்டை புரதச்சத்து மாவு: இந்த வகை புரதச்சத்து மாவு, முட்டையின் வெள்ளைக் கருவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள நீர்ச்சத்து நீக்கப்பட்டு, ஒரு மாவு வடிவில் அரைக்கப்படுகிறது. முட்டை புரதச்சத்து மாவானது, அதன் புரதச்சத்து உட்பொருளுடன் கூடவே, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டிருக்கிறது.

புரதச்சத்து மாவின் நன்மைகள் மிகவும் அழுத்தமானவையாக, மற்றும் அதை அனைத்து வயதுப் பிரிவில் உள்ளவர்களுக்கும் ஒரு பிடித்தமான பிற்சேர்க்கை பொருளாகவும் ஆக்குகின்றவையாக இருக்கின்றன. புரதச்சத்து மாவினை உட்கொள்வதால் ஏற்படும் முக்கியமான நன்மையாக, இந்த பிற்சேர்க்கை பொருட்களினால் அளிக்கப்படுகின்ற உடல் நிறையில் ஏற்படும் அதிகரிப்பானது அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, புரதச்சத்து மாவினை எடுத்துக் கொள்வதால் கிடைக்கின்ற மிகவும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஆகும்.

  • எடையை அதிகரிக்க உதவுகிறது: புரதச்சத்து மாவு, உடல் எடை அதிகரிப்பில், குறிப்பாக குறைவான BMI -யைக் கொண்டவர்களுக்கு, அளிக்கின்ற அதன் நன்மைகளுக்காக நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருக்கிறது. உங்கள் கொழுப்பு சேமிப்புகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, அது உங்களுக்கு ஒரு ஆரோக்கியான எடை அதிகரிப்பை உறுதி செய்யும் விதமாக, தசைகளின் நிறையை திரட்சி அடைய வைக்கிறது.
  • எடைக்குறைப்பை ஊக்குவிக்கிறது: ஒரு வல்லுனரின் வழிகாட்டுதலின் படி எடுத்துக் கொள்ளப்படும் பொழுது புரதச்சத்து மாவானது, உங்கள் எடைக்குறைப்பு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய வகையில், ஒரு மிகச்சிறந்த பிற்சேர்க்கைப் பொருளாக இருக்கிறது. அது வயிறு முழுமையாக நிரம்பிய உணர்வை அளித்து, உங்கள் பசிக்கு கடிவாளமிட்டு, நீங்கள் குறைவாக சாப்பிடுவதற்கு உதவுகிறது.
  • தசைகளைப் பெரிதாக்க: சமீபத்திய ஆய்வுகள், கடுமையான உடற்பயிற்சியுடன் கூடவே புரதச்சத்து மாவு எடுத்துக் கொள்வது, உங்களுக்கு கட்டுமஸ்தான தசைகளை வழங்கும் அதே நேரத்தில், தசைகளின் நிறையை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
  • பெண்களுக்கான நன்மைகள்: புரதச்சத்து மாவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதில், எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதில், மற்றும் உடல் வலிமை மற்றும் தசை கட்டுமஸ்தைப் பராமரிப்பதில், மிகவும் திறன் வாய்ந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்களால் நிரம்பி இருக்கிறது.  மோர் புரதச்சத்தினை எடுத்துக் கொள்வதும், எலும்புகளை வலிமையாக்குகின்ற கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகியவற்றை வழங்குகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: மோர் புரதச்சத்து, அதில் உள்ள லாக்டோகினின்கள் காரணமாக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட ஒருவர் என்றால், புரதச்சத்து மாவினை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

எடைக்குறைப்பு வல்லுநர்கள், ஒரு சிறந்த பலனுக்காக புரதச்சத்து மாவினைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கின்றனர். போதுமான அளவு புரதச்சத்து மாவு எடுத்துக் கொள்வது, வயிறு நிரம்பியது போன்ற ஒரு உணர்வை அடைய உதவுகிறது. இது ஒரு நபரை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, மற்றும் அடிக்கடி நொறுக்குத்தீனி உண்பது போன்றவற்றில் இருந்து தடை செய்கிறது. அதனால் இது, விரும்பிய எடைக்குறைப்பு இலக்கை அடைய, மற்றும் ஒரு ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவிகரமாக இருக்கிறது.

ஆய்வுகளில், மோர் புரதச்சத்து பிற்சேர்க்கை பொருட்கள், அதீத எடையைக் கொண்ட நபர்களுக்கு கொழுப்பு நிறையைக் குறைக்க உதவுவதன் மூலம், எடைக்குறைப்பில் உதவுவதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என வரும் போது, புரதச்சத்து மாவு அத்தியாவசியமானவைகளில் ஒன்றாக இருக்கிறது. அது தசைகளைப் பெரிதாக்குவதற்கான முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. வலிமையை அதிகரிக்க உடற்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள், அவர்களின் தசைகளை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள உதவுவதில், புரதச்சத்து பானங்கள் மிகவும் திறன்வாய்ந்தவையாக இருப்பதைக் காண்கிறார்கள்.

ஒரு சமீபத்திய ஆய்வின் படி, புரதச்சத்து மாவு பிற்சேர்க்கைப் பொருட்களை எடுத்துக் கொள்வது, பளுதூக்குதல் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் ஆரோக்கியமான நபர்களுக்கு தசைகளின் வலிமை, மற்றும் அளவைக் கணிசமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது

புரதச்சத்து மாவுகள், சராசரிக்கும் குறைவான எடையைக் கொண்டவர்களுக்கு, அல்லது ஒரு குறைவான BMI (அவர்களின் உடல்வாகு மற்றும் உயரத்துக்கு தக்கவாறு இருக்க வேண்டிய நிறை குறைவாக இருத்தல்) -யைக் கொண்டிருப்பவர்களுக்கு, உடல் எடையை அதிகரிப்பதில் திறன்மிக்கவையாக உள்ளன.  வெறுமனே உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் உடல் எடையை அதிகரிப்பது கண்டிப்பாக நடக்காது. அது கொழுப்புகளை அதிகரிப்பதற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட தசைகளின் நிறையை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே நடக்கிறது. புரதச்சத்து மாவு பானங்கள், உடல் எடையை அதிகரிக்கும் செயல்முறையை மேம்படுத்துவதில் ஒரு திறன்வாய்ந்த அர்த்தமுள்ள நடவடிக்கை ஆகும்.

கலோரிகளை மற்ற ஆதாரங்களில் இருந்து பெறுவதற்கு மாறாக, அதிகப்படியான கலோரிகள் புரதச்சத்து மாவில் இருந்து கிடைப்பதை உறுதி செய்வது சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். பொதுவாக, திறன்மிக்க எடை அதிகரிப்புக்காக, சோயா மற்றும் பட்டாணி புரதச்சத்து மாவுகள் போன்ற தாவர-அடிப்படையிலான புரதச்சத்து மாவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

புரதச்சத்து மாவு, குறிப்பாக மோர் புரதச்சத்து மாவினைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதும் அடங்கும். மோரில் காணப்படும் லாக்டோகினின்கள் எனப்படும் உயிரிவேதியியல் மூலக்கூறுகள் அழுத்தக்குறைப்பு (இரத்த அழுத்தக் குறைப்பு) காரணிகளாக செயல்புரிகின்றன. அதனால் இது, உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதயநாள நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

மோர் புரதச்சத்து மாவைப் பயன்படுத்துவது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அது எவ்வாறாயினும், உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட நோயாளிகள் புரதச்சத்து மாவினை உட்கொள்ளும் சரியான அளவினைப் பற்றி அறிந்து கொள்ள, ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

புரதச்சத்து, சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்வதில் உதவிகரமாக இருக்கிறது. மேலும் அது தசைகளை அதிகரிக்கவும் உதவுகிறது. புரதச்சத்து மாவு பானங்கள், கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை வழியில் இருந்து விடுபட பயன்படுத்தக் கூடியவை ஆகும். வலிமை மற்றும் தசைகளை அதிகரிப்பதற்காக உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்கள், ஒரு தீவிரமான உடற்பயிற்சிக்குப் பிறகு புரதச்சத்து மாவு பானங்களை அருந்துவதை விரும்புகின்றனர்.

ஆண்களுக்கு மிகவும் அடிக்கடி பரிந்துரைக்கப்படும் புரதச்சத்து மாவு, மோர் புரதச்சத்து மாவு ஆகும். ஏனென்றால் அது தசைகளை அதிகரிப்பதில் திறன்வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், மோர் புரதச்சத்தானது, தசைகளின் கட்டுறுதியை அதிகரிக்கின்ற செயல்முறையை விரைவுபடுத்துகின்ற கார்போஹைட்ரேட் உட்பொருளை சிறிது அதிகமாகக் கொண்டிருக்கிறது.

சோயா புரதச்சத்து மாவும் கூட, வளர்ச்சி ஹார்மோனை சுரப்பதை அதிகரிப்பதன் மூலம் தசைகளை அதிகரிக்கும் செயல்முறையை ஊக்குவிக்கின்ற, அதன் செறிவான நைட்ரிக் அமிலங்களுக்காக ஆண்களால் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

(மேலும் படிக்க: தசைப் பிடிப்புகளைக் கையாளுதல்)

நவீன காலத்தில் பெண்களால் சந்திக்கப்படும் மிகப் பெரிய சவாலாக, உடலைக் கட்டுக்கோப்பாக ஆக்குவதும், அதைப் பராமரிப்பதும் இருக்கிறது. புரதச்சத்து மாவுகள், அதிகப்படியான எடையைக் குறைத்தல், வலிமையை அதிகரித்தல், மற்றும் தேவைப்படும் தசை இறுக்கத்தை அடைதல் போன்றவற்றால் பெண்களுக்கு பயன்மிக்கதாக அறியப்படுகிறது. புரதச்சத்து மாவுகள் மற்ற நொறுக்குத் தீனிகளுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக இருக்கிறது. பெண்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைத் தவிர்ப்பதற்காக, தேவையான அளவுகளில் ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது. எனவே, புரதச்சத்து மாவுகள், அனைத்து வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் மற்றும்   பெண்களுக்கு பொதுவாகத் தேவைப்படும் பிற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காகவே இருக்கிறது.

பெண்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடிய புரதச்சத்து மாவாக, கால்சியம் மற்றும் வைட்டமின் D -யைக் கொண்டிருக்கும் மோர் புரதசத்து மாவு இருக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகியவை ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியமானவையாக இருக்கின்ற அதே வேளையில், மோர் புரதச்சத்து தசை திசுக்களை சரி செய்ய உதவுகிறது. மோர் புரதச்சத்தானது, திறன்மிக்க உடல் எடைக்குறைப்பு, மற்றும் ஒல்லியான தசைநிறையை அடைய உதவுகின்ற வகையில் குறைவான கொழுப்புப் பொருளைக் கொண்டிருக்கிறது.

மோர் புரதச்சத்து மாவு அத்தியாவசியமான வைட்டமின்களுடன் உள்ளதால், பெண்களுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் புரதச்சத்து மாவாக இருக்கிறது.

புரதச்சத்து மாவுகளை சரியான அளவு உட்பொருட்களுடன் வீட்டிலேயே தயாரிப்பது, ஒப்பீட்டளவில் எளிதான ஒன்று ஆகும். வீட்டில் தயாரிக்கப்படும் புரதச்சத்து மாவுகள், அவற்றின் பக்க விளைவுகளைக் குறைக்கின்ற வகையில், எந்த ஒரு செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது பதப்படுத்திகளைக் கொண்டிருக்காது. வீட்டில் தயாரிக்கப்படும் புரதச்சத்து மாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நன்மையாக, ஒருவரின் விருப்பத்துக்கு ஏற்ப அதன் சுவையை மாற்றி அமைக்க, மற்றும் கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை அதனுடன் சேர்த்துக் கொள்ள முடியும் என்பதைக் குறிப்பிடலாம்.

புரதச்சத்து மாவை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

வீட்டில் தயாரிக்கப்படும் புரதச்சத்து மாவின் தயாரிப்பு முறை ஒப்பீட்டளவில் மிகவும் எளிதானது ஆகும். கீழே கொடுக்கப்பட்டு இருப்பது, வீட்டில் புரதச்சத்து மாவு தயாரிக்க பின்பற்றக் கூடிய ஒரு விரிவான நடைமுறை ஆகும்.

வீட்டில் தயாரிக்கப்படும் புரதச்சத்து மாவிற்கான உட்பொருட்கள்

  • 3 கோப்பைகள் அளவு (240 கிராம்கள்) கொழுப்பு இல்லாத உடனடி உலர்ந்த பால்
  • 1 கோப்பை (80 கிராம்கள்) அளவு உலர்ந்த ஓட்ஸ்
  • 1 கோப்பை அளவு பாதாம் பருப்புகள்
  • உங்கள் விருப்பத்துக்கேற்ப ஏதேனும் சுவையூட்டும் பொருள்

வீட்டில் புரத தூள் தயார் செய்ய படிகள்

  1. 1 கோப்பை உலர் பால், 1 கோப்பை ஓட்ஸ், மற்றும் ஒரு கோப்பை பாதாம் பருப்புகளை ஒரு கலக்கும் கருவியில் போடவும். அவை மென்மையாகும் வரை அரைக்கவும்.
  2. கலவை கருவியில் மீதமிருக்கும் உடனடி உலர் பாலை சேர்த்து, முழுமையாக அரையும் வரை ஒரு சில முறைகள் அவற்றை அரைக்கவும்.
  3. இந்தக் கலவையை ஒரு காற்றுப் புக முடியாத பாத்திரத்தில் போட்டு மூடி விடவும்.
  4. இந்த புரதச்சத்து மாவினை 2 வாரங்களுக்குள் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதை ஒரு குளிர்ச்சியான அறை வெப்ப நிலையில் வைத்திருக்கவும்.
  5. ஒருவேளை நீங்கள் இதை நீண்ட காலத்துக்கு சேமித்து வைத்திருக்க விரும்பினால், பருப்புகள் நச்சுத்தன்மை உடையவையாக மாறுவதைத் தடுக்க இந்தக் கலவையை வைத்திருக்கவும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட புரதச்சத்து மாவை எவ்வாறு பயன்படுத்துவது

  • 1/2 கோப்பை அளவுக்கு புரதச்சத்து மாவை எடுத்து, அதை 1/2-1 கோப்பை திரவத்தில் (பால்/ வெதுவெதுப்பான தண்ணீர்/ பழ சாறு) ஒரு கலவை கருவியில் போட்டு கலக்கவும்.
  • ஓட்ஸ் கரைவதற்காக அந்தக் கலவையை 5-10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
  • உட்கொள்வதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட புரதச்சத்து மாவு தயார்.

புரதச்சத்து மாவினை எடுத்துக் கொள்ளும் அளவானது, எடுத்துக் கொள்ளப்படும் புரதச்சத்து மாவின் வகை, மற்றும் விரும்புகின்றவரின் உடல் நிறையின் வகை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். எடுத்துக் கொள்ளும் அளவு ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். எனவே, புரதச்சத்து மாவை எடுத்துக் கொள்ளும் சரியான  அளவு குறித்து, ஒரு உணவுமுறை நிபுணர், அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அத்தியாவசியமானது ஆகும். 

புரதச்சத்து மாவு தகுந்த அளவுகளில் ஒரு பிற்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படும் போது, பல்வேறு ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், கட்டுப்பாடற்ற, மற்றும் அதிகப்படியான பயன்பாடு, கடுமையான பக்க விளைவுகள் ஏற்படக் காரணமாகக் கூடும். புரதச்சத்து மாவினை முறையின்றி எடுத்துக் கொள்வதன் காரணமாக மிகவும் வழக்கமாக ஏற்படுகின்ற பக்க விளைவுகள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளன.

  • செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது:
    மோர் புரதச்சத்து மாவு மற்றும் கேசின் புரதச்சத்து மாவு ஆகியவை, பாலில் இருந்து பெறப்படும், மிகவும் பிரபலமான பிற்சேர்க்கைப் பொருட்களாக உள்ளன. இந்த புரதச்சத்து மாவுகள், பாலில் இயற்கையாகக் காணப்படும் ஒரு கார்போஹைட்ரேட்டான லாக்டோஸை செறிவாகக் கொண்டிருக்கின்றன. அதனால், லாக்டோஸ் ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள், இந்த புரதச்சத்து மாவுகள் அவர்களுக்கு பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடும் என்பதால், இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த புரதச்சத்துக்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, அதிகரித்த மலம் கழித்தல், வயிறு வீங்குதல்குமட்டல், மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படவும் கூட காரணமாகக் கூடும்.
     
  • ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிப்பு:
    புரதச்சத்து பிற்சேர்க்கைப் பொருட்கள், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, கொழுப்பு வடிவத்தில் ஒரு விரும்பத்தகாத உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக் கூடும். புரதச்சத்து எடுத்துக் கொள்ளப்படும் அளவினை ஈடு செய்யுமாறு உடற்பயிற்சி முறை இருக்க வேண்டும், இல்லையெனில் பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பாக மாறி விடுகின்றன. கொழுப்புக்களின் இந்த சேர்க்கை ஒரு குறுகிய காலத்திலேயே அதிகப்படியான உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
     
  • சிறுநீரக சேதம்:
    அம்மோனியா என்பது, புரதச்சத்துக்களின் வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைவாக உற்பத்தியாகின்ற ஒரு உப-பொருள் ஆகும். அம்மோனியா, உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் யூரியாவாக மாற்றப்படுகிறது. அதிக அளவில் புரதச்சத்தினை எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் அதிக அளவிலான யூரியாவை வெளியேற்றுகிறார். இது, இரத்தத்தில் இருந்து அதிகமான அளவில் யூரியாவை சுத்திக்கரிக்கும் அதிகப்படியான அழுத்தத்தை சிறுநீரகங்களுக்கு அளிக்கிறது. நீண்ட காலத்துக்கு அதிகமான அளவுகளில் புரதச்சத்து எடுத்துக் கொள்வது, சிறுநீரக கோளாறுகள் (சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள்) ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
     
  • இரத்த அழுத்தத்தை மிக அதிகமாகக் குறைத்தல்:
    உயர் இரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த பிற்சேர்க்கை பொருட்களைப் பயன்படுத்துவதால் அவர்களின் இரத்த அழுத்தம் மிக அதிக அளவில் குறைந்து விடக் கூடும் என்பதால், புரதச்சத்து மாவு பிற்சேர்கைப் பொருட்களை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் முன்னர், அவர்களின் மருத்துவரைக் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும். (மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்)
     
  • கல்லீரலைப் பாதிக்கிறது:
    கார்போஹைட்ரேட்கள் இல்லாத புரதச்சத்து பிற்சேர்க்கை பொருட்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு உணவானது, ஆற்றலின் முக்கிய ஆதாரமாக உடல் கொழுப்புகளைப் பயன்படுத்தி வளர்சிதை மாற்ற நடைமுறையை மேற்கொள்ளும் ஒரு நிலையான கேட்டோஸிஸ் ஏற்படக் காரணமாகக் கூடும். இது, இரத்தத்தில் அமிலங்களின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.  நிலையாக அதிக அளவில் அமிலத்தன்மையைக் கொண்டிருக்கும் இரத்தமானது, கல்லீரலின் செயல்பாட்டினைப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. அது, பல்வேறு கல்லீரல் கோளாறுகளை ஏற்படுத்துகின்றவாறு கல்லீரல் அழற்சிக்கு காரணமாகக் கூடும். 
     
  • நீர் வற்றிப்போதல்:
    அதிக அளவிலான புரதச்சத்து நீர்வற்றிப்போதல் ஏற்படக் காரணமாகக் கூடும். புரதச்சத்து அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமானது ஆகும்.
     
  • முகப்பரு:
    மோர் புரதமானது, IGF என அழைக்கப்படும் ஒரு ஹார்மோன், அல்லது இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணியின் உற்பத்தியை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. இந்த ஹார்மோன் செபம் உற்பத்தியை தூண்டி விட்டு, அதன் விளைவாக முகப்பருவை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
     
  • கன உலோக நச்சுத்தன்மை:
    ஈயம் மற்றும் பாஷாணம் போன்ற கனமான உலகங்கள், புரதச்சத்து பிற்சேர்க்கைப் பொருட்களில் சேர்க்கப்படுவதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த உலகங்கள் உடலில் சேர்ந்து குவிந்து கன உலோக நச்சுத்தன்மை ஏற்படக் காரணமாகக் கூடும். இந்த மாதிரி ஆபத்துக்களைத் தவிர்க்க, பிற்சேர்க்கைப் பொருட்களாக வீட்டில் தயாரிக்கப்பட்ட புரதச்சத்து மாவுகளைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது ஆகும். 

புரதச்சத்து, உணவின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி ஆகும். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது அறிவுறுத்தத்தக்கது அல்ல. எனவே, ஒருவர் தனது ஆரோக்கியத் தேவைகளுக்காக மிதமிஞ்சிய அளவில் இல்லாமல், போதுமான அளவில் புரதச்சத்துக்களை எடுத்துக் கொள்வதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். புரதச்சத்து பிற்சேர்க்கைப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

Virgo Healthcare Protivir Protein Powder Cardamom Flavor (200 Gm)
₹325  ₹325  0% OFF
BUY NOW
Dr. Dhanamjaya D

Dr. Dhanamjaya D

Nutritionist
16 Years of Experience

Dt. Surbhi Upadhyay

Dt. Surbhi Upadhyay

Nutritionist
3 Years of Experience

Dt. Manjari Purwar

Dt. Manjari Purwar

Nutritionist
11 Years of Experience

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 Years of Experience

மேற்கோள்கள்

  1. Jooyoung Kim, Chulhyun Lee, Joohyung Lee. Effect of timing of whey protein supplement on muscle damage markers after eccentric exercise. J Exerc Rehabil. 2017 Aug; 13(4): 436–440. PMID: 29114510
  2. Pasiakos SM, Lieberman HR, McLellan TM. Effects of protein supplements on muscle damage, soreness and recovery of muscle function and physical performance: a systematic review. Sports Med. 2014 May;44(5):655-70. PMID: 24435468
  3. Office of Disease Prevention and Health Promotion. Nutritional Goals for Age-Sex Groups Based on Dietary Reference Intakes and Dietary Guidelines Recommendations. [Internet]
  4. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. The hidden dangers of protein powders. Harvard University, Cambridge, Massachusetts.
  5. Kimball SR, Jefferson LS. Signaling pathways and molecular mechanisms through which branched-chain amino acids mediate translational control of protein synthesis. J Nutr. 2006 Jan;136(1 Suppl):227S-31S. PMID: 16365087
  6. Sheikholeslami Vatani D, Ahmadi Kani Golzar F. Changes in antioxidant status and cardiovascular risk factors of overweight young men after six weeks supplementation of whey protein isolate and resistance training. Appetite. 2012 Dec;59(3):673-8. PMID: 22889987

தொடர்பான கட்டுரைகள்

Read on app