அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சையே ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) சிகிச்சை தேர்வாக இருக்கிறது. அது, ஹெர்னியாவின் (குடலிறக்கம்) உட்கூறுகளை வயிற்றுக்குள் திரும்பத் தள்ளுவது அல்லது அவற்றை மொத்தமாக நீக்கி விட்டு இடைவெளியை தையல்கள் மூலம் மூடிவிடுவதோடு தொடர்புடையது. ஒரு வலை (செயற்கை இழை அல்லது விலங்குகளிடம் எடுக்கப்படுவது) உட்கூறுகளை வெளியே புடைத்துக் கொண்டிருக்க விட்டிருக்கும் பலவீனமான திசுக்களையும் தசைகளையும் தாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு வழிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும்: திறந்த அல்லது வழக்கமான அறுவை சிகிச்சை மற்றும் குறைவாக ஊடுருவும் அல்லது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை. ஒரு திறந்த அறுவை சிகிச்சையில், ஹெர்னியா (குடலிறக்கம்) இருக்கும் இடத்தில் ஒரு நீளமான, பெரிய வெட்டு உருவாக்கப்பட்டு, பலவீனமான தசைகள் சரிசெய்யப்படுகின்றன. லேப்ராஸ்கோபிக் அல்லது நுண்துளை அறுவை சிகிச்சையில், பல சிறிய துளைகளும் வெட்டுக்களும் உருவாக்கப்பட்டு, நேர்த்தியான குழாய் போன்ற உபகரணங்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை அளிப்பவர் ஒரு திரையில் விரிவாக பார்த்து தேவையான நடைமுறையை மேற்கொள்வதற்கு அதில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும்.
அடிவயிற்றுப் பகுதி ஹெர்னியாக்களில் (குடலிறக்கம்), ஹெரினோட்டமி, ஹெரினோர்ரஃபி, ஹெரினோபிளாஸ்டி ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடைமுறைகளாகும். தேவைப்படும் பழுது நீக்குதலின் வகையைப் பொறுத்து குண்ட்ஸ் அறுவை சிகிச்சை, ஆண்ரூவின் அடுக்குதல்கள் அல்லது மெக்வே அல்லது நைஹஸ் பழுதுநீக்கல் போன்ற மற்ற வகை அடிவயிற்றுப் பகுதி ஹெர்னியாக்களுக்கான (குடலிறக்கம்) அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம், அது மருத்துவரால் தீர்மானிக்கப்படும். வேறுபட்ட ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) பல்வேறு வகை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
எல்லா நேரத்திலும் அறுவை சிகிச்சை ஒன்றே ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) சிகிச்சை அல்ல மற்றும் உங்கள் ஹெர்னியா (குடலிறக்கம்) எந்த வகையாக இருந்தாலும், பெரிய உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கா விட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம். அது மட்டுமின்றி, முதியவர்களுக்கும், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட வேண்டியது.
மருந்துகள்
எப்போதாவது, ஹியாட்டல் ஹெர்னியாவில் (குடலிறக்கம்), வயிற்று அமிலத்தை குறைக்க உதவும் மருந்துக் கடைகளின் மருந்துகள் அல்லது வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம், ஏனென்றால் அவை உங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் மற்ற அறிகுறிகளைக் குறைக்க உதவும். இந்த மருந்துகளில் சில வலி நிவாரணிகள், ஹிஸ்டாமைனை எதிர்த்து செயல்படும் எச்-2 வாங்கி தடுப்பான்கள், அமில முறிவு மருந்துகள், புரோட்டான் அழுத்த தடுப்பான்கள் (வயிற்று அமில உற்பத்தியைக் குறைக்கும் மருந்து) ஆகியனவாகும்.
நிர்வாகம்
உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது, ஹியாட்டல் ஹெர்னியாவின் (குடலிறக்கம்) அறிகுறிகளுக்கு அவ்வப்போது சிகிச்சையாகலாம், ஆனால் அதை முழுமையாக குணப்படுத்த இயலாது. தரம் மற்றும் அளவிலும் மிக அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். உணவுக்குப் பிறகு ஒரு நபர் படுத்துக் கொள்வதோ அல்லது விறுவிறுப்பான உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது. ஹியாட்டல் ஹெர்னியா (குடலிறக்கம்) நோயாளிகள், அமிலம் பின்னோக்கி வருவதைத் தூண்டும் காரமான அல்லது புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் , அமிலம் பின்னோக்கி வருவதைக் குறைக்க முடியும். மேலும், அறிகுறிகள் குறையும் வரை, புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். அந்த நபரின் உயரத்திற்கு ஏற்ற இயல்பான அளவில் வைத்திருக்க, உடல் எடை பரிசோதிக்கப்பட்டு, எடை அளவுகள் குறிக்கப்பட வேண்டும்.
சில அறிகுறிகளைக் குறைக்கக் கூடிய,ஹெர்னியா (குடலிறக்கம்) பகுதியின் தசைகளை வலுவாக்குவதற்கு சில உடற்பயிற்சிகள் உதவலாம். ஆயினும், அதிக அளவில் செய்யும் உடற்பயிற்சி அல்லது ஒரு தகுதிபெற்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் செய்வது அறிகுறிகளை அதிகரித்து, உடல்நிலையை இன்னும் மோசமடையக் கூட வைக்கலாம். அதனால், ஒரு ஃபிசியோதெரபிஸ்டை ஆலோசித்து, மேற்பார்வையின் கீழ் உடற்பயிற்சி செய்வது நல்லது.
தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்த பிறகும், ஒருவேளை அறிகுறிகள் நீங்கவில்லை என்றால் ஹெர்னியாவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.