கடந்த 5000 ஆண்டுகளாக, ஆயுர்வேத முறைமை மருந்துகள் மருத்துவ மற்றும் உடல் ஆரொக்கியத்திற்கு தேவையான-வசதிகளுக்கு பல மூலிகைகளை பயன்படுத்தி வருகின்றன. ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ அமைப்புகள் மிகவும் புனிதமான அணுகுமுறையைச் சார்ந்துள்ளன. இந்த கட்டுரையில், திரிபலா என்ற மதிப்புள்ள மூலிகையின் நன்மைகள் மற்றும் பயன்ககள் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளது. நீங்கள் மூலிகை அல்லது ஆயுர்வேத மருத்துவத்தை தவறாமல் எடுத்துக் கொள்பவராக இருந்தால், திரிபலா உங்கள் கவனத்திலிருந்து தப்பித்து இருக்க வாய்ப்பு இல்லை. பழங்கால ஆயுர்வேத நூல்களில் ஒன்றான "ஷங்கந்த்ஹார் சாஹிதா"-வில், பிரபலமான பாலிஹர்பல் (ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகைகளால் செய்யப்பட்டது) சூத்திரங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக திரிபலாவின் ஆரோக்கிய நலன்களை பற்றி "சரகா சமிதா" என்ற நூலில் காணலாம். திரிபலா மூலிகையைப் பற்றி எல்லா தகவல்களையும் தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது ஒரு பழங்கால ஆயுர்வேத மூலக்கூறு ஆகும், இது மூன்று பழங்கள், அதாவது பெரு நெல்லிக்காய் (எம்பிளிகா ஓபிசினிலிஸ்), பிபிடாகி அல்லது பேஹேடா (டெர்மினாலியா பெல்லிரிகா) மற்றும் ஹரிடாக்கி அல்லது ஹராட் (டெர்மினாலியா சேபுலா) ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. உண்மையில், திரிபலா என்ற பெயரின் அர்த்தம் "மூன்று பழங்கள்" (திரி = three மற்றும் பலா = fruit) என்பது ஆகும். ஆயுர்வேதத்தில், திரிபலா முக்கியமாக அதன் "ரசாயன" பண்புகளுக்கு முயல்கிறது, இதன் அர்த்தம் இந்த திரிபலா கலவை, உடலின் ஆயுள் மற்றும் உடலின் வலிமை மற்றும் நோய்கள் உண்டாவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரிபலா பின்வரும் மூலிகைகளின் கலவை ஆகும்.

  • பெரு நெல்லிக்காய் (காட்டு நெல்லி- எம்பிளிகா ஓபிசினிலிஸ்): இது நாடு முழுவதும் கிடைக்கும் பொதுவான பழங்களில் ஒன்று. இது பொதுவாக இந்திய நெல்லிக்காய் என அறியப்படுகிறது. காட்டு நெல்லிக்காய் பழம் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கனிமங்கள் போன்றவை நிறைந்தது. மேலும் இந்த உலகத்தில் கிடைக்கும் எந்த ஒரு வைட்டமின் சி மூலங்களையும் விடவும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இது பொதுவாக நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக, தொற்றுநோய்களுக்கு எதிராகவும், எதிர்ப்பு வயதான பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
     
  • பேஹேடா (டெர்மினாலியா பெல்லரிகா): இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் இந்த தாவரம் காணப்படுகிறது. இது மருத்துவ முறையிலும், ஆயுர்வேதத்திலும், நுரையீரல் அழற்சி, ஆக்ஸிஜனேற்றம், ஹெபடோபுரோட்டிடிக் (கல்லீரலுக்கு நல்லது) ஆகியவற்றிற்கும், சுவாச பிரச்சனைகளின் சிகிச்சையிலும் மற்றும் ஒரு நீரிழிவு நோய் எதிர்பானாகவும் பயன்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, பேஹேடா பழம் குளுக்கோஸைடு, டானின்ஸ், கேலிக் அமிலம், எதில் கல்லேட் போன்ற பல உயிரியல் சேர்மங்களால் நிறைந்துள்ளது. இந்த உயிரியல் சேர்மங்களின் ஒன்று சேர்ந்த, இந்த பேஹேடா கலவை உடல் நலனை பேணிக் காப்பதில் துணை புரிகிறது.
     
  • ஹராட் (டெர்மினாலியா செபுலா): ஹராட் ஆயுர்வேதத்திற்கு மிகவும் முக்கியமான மூலிகை. அதன் உடல் ஆரோக்கிய நன்மைகள்: ஒரு ஆக்ஸிஜனேற்றி,  அழற்சி எதிர்ப்பான் மற்றும் வயது எதிர்ப்பானாக இருந்து காயத்திற்கான ஒரு சிறந்த சிகிச்சைமுறை முகவராக இருக்கிறது. கல்லீரல், வயிறு, இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் பராமரிப்பதற்கும்  அதன் நன்மைகள் ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்டவை. உண்மையில் அது "மருந்துகளின் அரசன்" என்று அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

ஆயுர்வேதத்தில், மூன்று  தோஷங்களையும்  (வாதம், பித்தம் மற்றும் கபம்) சமநிலைப்படுத்துவதற்கு திரிபலா அறியப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தால் விளக்கப்பட்ட ஐந்து வகை ரசங்களை அல்லது சுவைகளை திரிபலா கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. அவை  இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகியன. உப்பு என்னும் ஒரே ஒரு ரசம் மட்டும் திரிபலாவில் இல்லை.

  1. திரிபலாவின் உடல் நலன் பயன்கள் - Health benefits of triphala in Tamil
  2. திரிபலாவின் பக்க விளைவுகள் - Side effects of triphala in Tamil
  3. திரிபலாவை எவ்வாறு பயன்படுத்துவது - How to use triphala in Tamil
  4. திரிபலாவின் மருந்தளவு - Triphala dosage in Tamil
திரிபலாவின் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்கள்

எல்லாவற்றிற்கும் முதலாக திரிபலா ஆயுர்வேதத்தில் உள்ள அனைத்து புத்துணர்ச்சியூட்டும் மூலிகைகளிலும் சிறந்த ஒன்று ஆகும், ஆனாலும் இது பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் பயன்படுகிறது. உண்மையில், ஆயுர்வேதத்தில், உங்களுடைய தாயார் உங்களை கவனித்துக்கொள்வதைப் போலவே, திரிபலா உங்கள் உடம்பைப் பராமரிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த உருவாக்கத்தில் எது மிகவும் சிறந்தது? என்று ஒருவர் கேட்கலாம். எனவே, திரிபலாவின் சுகாதார நன்மைகள் சிலவற்றை ஆராய்வோம்:

  • எடை குறைப்பு: பல மருத்துவ ஆய்வுகளின் படி எடை குறைப்பு செயல்பாட்டில் திரிபலா உதவுகிறது . கட்டுப்பாட்டுடன் ஒப்பிடும்போது, திரிபலா கொடுக்கப்பட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோருக்கு, அதிக அளவில் எடை குறைந்தது,மேலும் குறைந்த இடுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு ஏற்பட்டது.
  • கண்கள்: கண்புரை மற்றும் கிளௌகோமாவின் மேலாண்மைக்கான பயன்படுத்தப்படும் ஆயுர்வேத சூத்திரங்களில் திரிபலா ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த மூலிகையின் கண்புரை எதிப்பு தன்மை மற்றும் கண் பார்வைக்கான-மேம்பாட்டு நன்மைகளை மருத்துவ ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
  • முடி: திரிபலா உங்கள் முடிக்கான பாதுகாப்பு நன்மைகளைக் கொண்டிருக்கிறது மற்றும் பொதுவாக இளநரையை தடுக்கும் ஒரு தீர்வாக இது பயன்படுத்தப்படுகிறது. இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது மற்றும் மேற்பூச்சாக பயன்படுத்தப்படும் போது அனைத்து தேவையான ஊட்டச்சத்துகளையும் உங்கள் உச்சந்தலைக்கு வழங்குகிறது.
  • வயிற்று பிரச்சினைகள்: வாய்வு தொல்லை, மலச்சிக்கல், வயிற்று பொருமல் மற்றும் ஒழுங்கற்று மலம் கழித்தல் போன்றவை பெரும்பான்மை வயிற்று பிரச்சினைகளை உருவாக்குகின்றன. உணவில் திரிபலாவை சேர்த்துக்கொள்வது, இந்த பொதுவான செரிமான புகார்களை நிர்வகிக்க உதவுகிறது, இதனால் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான நச்சுகளை இது அகற்ற உதவுகிறது.
  • பெரியோடொன்டிடிஸ்: திரிபாலாவின் ஆண்டிமைக்ரோபியல் நடவடிக்கைகள், அதன் வாய்வழி கோளாறுகள் மற்றும் பெரியோடொன்டிடிஸ் போன்ற பொதுவான வாய்வழி பிரச்சனைகளின் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. குளோரேஹெக்சிடை-னுடன் சேர்த்து ஒரு வாய்கழுவி திரவியம் பயன்படுத்தப்படும்போது, இது பிளேக் உருவாக்கத்தை குறைக்கவும் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.  
  • ஆண்டிமைக்ரோபியல்: திரிபலா பல தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியான முகவராக பயன்படுத்தப்படுகிறது, மருத்துவ ஆராய்சிகளும் திரிபலாவின் இந்த பயன்பாட்டை ஆதரிக்கின்றன. திரிபலா  எஷ்சரிச்சியா கோலி, சால்மோனெல்லா டைஃபி, சூடோமோனாஸ் ஏருஜினோசா, ஸ்டாஃபிலோகோகஸ் ஆரியஸ், விப்ரியோ கோலெரா ஆகியவற்றிற்கு எதிராக வினை புரிகிறது என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன.
  • ஆண்டிஆக்ஸிடண்ட்: திரிபலாவில் உள்ள அதன் அதிகப்படியான வைட்டமின் சி சத்தின் காரணமாக, இது ஒரு ஆக்ஸிஜனேற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திரிபலா உங்கள் உடலை தீங்கு விளைவிக்கும் மற்றும் சேதப்படுத்தும் இலவச ரடிகல் விளைவுகளுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.
  • நீரிழிவு: திரிபலா இன்சுலின் ஹார்மோனின் மீது ஒரு செயல்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நீரிழிவு நோய்த்தாக்குதலை ஏற்படுத்துகிறது என்பதற்கு சாட்சியங்களை கொண்டிருக்கிறது. இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் குவிப்பு மற்றும் குளுக்கோஸின் வெளியீட்டை குறைப்பதன் மூலம் திரிபலா நீரிழிவிற்கு எதிராக செயல்படுகிறது.

எடை குறைப்புக்கான திரிபலா - Triphala for Weight Loss in Tamil

குறிப்பாக பருமனான மக்களுக்கு; திரிபலாவின் வழக்கமான நுகர்வு எடை இழக்க சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய மனித அடிப்படையிலான ஆராய்ச்சியில், 16 முதல் 60 வயதிற்குட்பட்டிருந்த பருமனான  நபர்களை இரண்டு குழுவாக திரிபலாவின் எடை குறைப்பு விளைவின் பலன் பற்றிய ஆராய்சிகளில் சோதித்துப் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவில் ஒன்றிற்கு மட்டும் 5 கிராம் திரிபலாவை ஒரு நாளைக்கு இரண்டு முறை, வாய்வழியாக 12 வார காலத்திற்கு வழங்கப்பட்டது, அதே சமயத்தில் மற்ற குழுவிற்கு ஒரு போலி மருந்து கொடுக்கப்பட்டது. இதில் திரிபலா கொடுக்கபட்ட குழுவின் உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவில் கணிசமான குறைவு ஏற்பட்டது. மேலும், திரிபலா பவுடரின் நுகர்வு மலம் கழிக்கும் குடல் இயக்கங்களின் மீது கட்டுப்பாட்டு விளைவுகளை ஏற்படுத்தி சீரான மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கி, எளிதில் எடை இழக்க உதவுகிறது என்பதையும் கண்டறிய முடிந்தது. எனவே, திரிபலா எடை இழப்புக்கு ஒரு பாதுகாப்பாக பயனுள்ள தீர்வு என்று கூறலாம்.

(மேலும் வாசிக்க: உடல் பருமனுக்கான காரணங்கள்)

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

கண்களுக்கு திரிபலா பவுடர் - Triphala Powder for Eyes in Tamil

 கண்புரை மற்றும் பசும்படலம் போன்ற கண் நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து விளைவுகளை  தவிர்க திரிபலா பயனுள்ளதாக இருக்கிறது என ஆயுர்வேதம் விவரிக்கிறது. மருத்துவ ஆய்வுகள் டிரிபலாவின் கண்புரை எதிர்ப்பு விளைவைக் கூட விளக்குகிறது. பலவீனமான கண்பார்வையை மேம்படுத்துவதற்காக, ஆயுர்வேத டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையில்,  திரிபலா ஒரு முக்கிய அங்கமாக அடங்கி உள்ளது. இது குறைக்கவும் அறியப்படுகிறது.  திரிபலா க்ஹ்ரிடா என அழைக்கப்படும் ஆயுர்வேத மருந்து, கண் பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வினை வழங்கும் மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், உடலின் மிக முக்கியமான பகுதியாக கண்கள் இருப்பதால், உங்கள் கண்களுக்காக திரிபலாவைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளை அறிய ஆயுர்வேத மருத்துவரிடம் பரிந்துரை பெருவது சிறந்தது.

முடிக்கு டிரிபலா - Triphala for hair in Tamil

திரிபலா ஆக்ஸிஜனேற்ற மருந்துகளின் ஒரு வளமான ஆதாரமாக உள்ளது, இது மாசுபடுத்தலின் காரணமாக ஏற்படும் முடியின் சேதத்தை குறைக்க உதவுகிறது. திரிபாலாவில் உள்ள நெல்லிக்காயின் உள்ளடக்கம் முன்கூட்டியே முடி வெட்டுவதை நிறுத்துவதில் மிகவும் பயன் தருகிறது, அதே நேரத்தில் திரிபலாவில் உள்ள பாஹேடா முடி உதிர்தலைக் குறைப்பதற்கும் முடிகளின் வேர்களை வலுப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. திரிபலா உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் அதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை இன்னும் திறம்பட உறிஞ்சவும் உதவுகிறது. திரிபலா எண்ணெய் அல்லது டிரிபலா பசை நேரடியாக தலையில் பயன்படுத்தலாம், அதனால் ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு நன்மைகளை முடிகள் மீது பெறலாம்.

மலச்சிக்கலுக்கு திரிபலா - Triphala for Constipation in Tamil

ஆரோக்கியமான மற்றும் சுத்தமான செரிமான அமைப்பு, உடலின் நலனுக்காக மிகவும் முக்கியம். செரிமான கழிவுகளை குவிப்பது மட்டுமே குடல் பாதைகளைத் அடைத்துகொள்வது மட்டுமல்லாமல், நிலையான மற்றும் நீண்டகால மலச்சிக்கல் உடலில் உள்ள நச்சுகள் சேர்வதற்க்கும் வழிவகுக்கும். உடலில் உள்ள இந்த நச்சுகள் அதிக அளவில் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆயுர்வேத டாக்டர்கள் கருத்துப்படி திரிபலா, இயல்பான மலமிளக்கியாக, குடல் இயக்கங்கள் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் உடலின் குடல் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது வயிற்றிற்கு கடுமையானது அல்ல, எனவே நீண்ட காலத்திற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாமல் இதை பயன்படுத்தலாம். இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, திரிபலாவின் வழக்கமான நுகர்வு  மலச்சிக்கல் , ஒழுங்கற்ற மல கழிப்பு, வாய்வு பிரச்சனை மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கூறுகிறது.

பற்களுக்கு திரிபலா - Triphala for Teeth in Tamil

திரிபலாவின் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளினால் இது பொதுவான பல் பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும் நல்ல பல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த முகவராக இருக்கிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, திரிபாலா மற்றும் க்ளோரெக்சைடின் வாய் கழுவி ஆகியவை பற்களில் தகடு (ப்லக்) உருவாக்கத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளவையாகும், ஈறுகளிள் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்துகின்றன மற்றும்  வாய்வழி குழாயில் உள்ள நுண்ணுயிர் பெருக்கத்தை குறைக்கிறது என தெரிவிக்கிறது. மேலும் ஒரு ஆய்வில், திரிபலா மற்றும் 0.2%  க்ளோரெக்சைடின் மூலம் தயாரிக்கப்படும் வாய் கழுவி, மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ள பீரியோடொன்டல் நோய் கொண்ட நோயாளிகளுக்கு, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்திற்கும் மற்றும் பற்களின் தகடு உருவாக்கத்திற்கும் சிகிச்சை அளிக்கவும் சம அளவில் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒரு ஆண்டிமைக்ரோபியலாக திரிபலா - Triphala as an antimicrobial in Tamil

ஆயுர்வேதத்தில், திரிபாலா பாரம்பரியமாக ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக பயன்பாட்டில் உள்ளது. சமீபத்தில், ஆய்வக ஆய்வுகள் கூட திரிபலாவின் ஆண்டிமைக்ரோபையல் மற்றும் பாக்டீரியா எதிர்பின் சாத்தியக்கூறுகளைக் காட்டியுள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியானது, திரிபலாவின் எத்தனால் சாறு எச் ஐ வி நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்களுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு எதிராக மிகவும் வெற்றிகரமாக செயல்படுவதை கண்டறியப்பட்டுள்ளது.  ஈஷ்சரிச்சியா கோலி, சால்மோனெல்லா டைஃபி, சூடோமோனாஸ் ஏருஜினோசா, ஸ்டாஃபிலோகோகஸ் ஆரியஸ், விப்ரியோ கோலெரா முதலிய தொற்றுக்களுக்கு எதிராக திரிபலா போராடுவதை கண்டறிந்தது. எவ்வாறாயினும், இதுபோன்ற எவ்வித விளைவுகளும் இதுவரை மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை.

ஒரு ஆக்ஸிஜனேற்றியாக திரிபலா - Triphala as an antioxidant in Tamil

திரிபலாவில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவற்றால் நிறைந்துள்ளது, இதனால் உடலில் உள்ள இலவச ரடிகல் சேதத்தை எதிர்ப்பதற்கு இது ஒரு சரியான முகவர் என்று கூறப்படுகிறது. இலவச ரடிகல் என்பது இயல்பான உடல் செயல்பாடுகளின் விளைவாக உடலில் உருவாகின்ற எதிர்மறையாக செயல்பட கூடிய மற்றும் வயது ஆக ஆக உடலில் குவிந்து கொண்டிருக்கும் ஒரு வகையான எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள். ஆனால் குறிப்பிட்ட வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான துரித உணவு வகைகள் உட்கொள்ளும் உணவு பழக்கம், புகைபிடித்தல் அல்லது மாசுபாடு போன்ற காரணங்களால் உடலில் இந்த இலவச ரடிகல்களின் மிக அதிகமான குவிப்புக்கு வழிவகுக்கும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடலில் உள்ள இந்த இலவச ரடிகள்களின் கூடுதல் அளவு, நிறைய உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கான முக்கிய காரணமாகும். உடலில் உள்ள இந்த இலவச ரடிகள்களின் கூடுதல் அளவு, இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்பின் சரியான செயல்பாடு மற்றும் உடல்நலத்தை பாதிக்கிறது. இது மனிதர்களில் வயதான அறிகுறிகளின் ஆரம்ப கட்ட தொடக்கத்தின் முக்கிய காரணியாகும். ஆகையால், ஆக்சிஜனேற்றிகள் எவ்வாறு அதிகப்படியான ரடிகல்களோடு போராடுகிறது? ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றி அளிப்பான் இலவச ரடிகல்களை கண்டறிந்து அதை நடுநிலைப்படுத்தி (உடலுக்கு தீங்கிழைப்பதிலிருந்து தடுத்து), ஆரம்ப கட்டதிலேயே உடலை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

நீரிழிவு நோய்க்கான திரிபலா - Triphala for diabetes in Tamil

திரிபலா ஒரு சக்திவாய்ந்த இரத்தச் சர்க்கரை குறைப்பான். இன்சுலினில் இருந்து, ஆல்ஃபா-அமிலேசஸ் மற்றும் ஆல்ஃபா-குளுக்கோசிடிஸ் ஆகிய இரண்டு முக்கிய நொதிககளின் சுரப்பை தடுப்பதன் மூலம் திரிபலா வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய நீரிழிவு தடுப்பு மருந்துகளைப் போலவே செயல்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நொதிகளே பெரிய சர்க்கரை கலவைகளை குளுக்கோஸாக உடைக்கப்படுவதற்கு காரணம். இந்த நொதிகளை தடுப்பதன் மூலம் குளுக்கோஸ் உருவாக்கம் மற்றும் இரத்தத்தில் குளுக்கோஸ் கலப்பது ஆகியவை நிறுத்தப்படும். இதனால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். இன்சுலின் எடுத்துகொள்ளாத 45 நீரிழிவு நோயாளிகளின் மீது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, திரிபலாவின் வழக்கமான நுகர்வு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டிருப்பதாக காட்டியது.

மூட்டுவலிக்கு எதிரான திரிபலா - Triphala as an anti-arthritic in Tamil

திரிபலா ஒரு சிறந்த அழற்சி எதிபான் மற்றும் ஆக்ஸிஜனேற்றி ஆகும். இந்த இரண்டு குணங்களும் இதை மூட்டுவலி மற்றும் கீல்வாதம் தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்ய ஒரு சரியான மருந்தாக செய்கின்றன.  முடக்கு கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குருத்தெலும்பு மற்றும் எலும்பு சேதங்களை திரிபலா சரி செய்கின்றது என்று விலங்குகளின் மீது செய்யபட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், மனிதர்களின் கீல்வாத சிகிச்சையில் திரிபலாவின் செயல்திறனை ஆய்வு செய்ய இதுவரை மனித ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

திரிபாலாவின் புற்றுநோய் எதிப்பு பண்புகள் - Triphala anticancer properties in Tamil

திரிபலாவின் புற்றுநோய்களின் எதிர்ப்பு திறனை பற்றி ஆராய்ச்சி செய்ய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அந்த அனைத்து ஆய்வுகளும், திரிபலா ஒரு சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு சமீபத்திய ஆய்வில், உடலில் உள்ள பெருங்குடல் புற்றுநோய்களில்,  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்துகிற (அன்டி-ப்ரொலயிஃப்ரடிவ்) மற்றும் புற்றுநோய் செல்களைக் கொள்கின்ற (அப்போப்டொடிக்) பண்புகளை அதிகரிக்கின்ற ஆற்றலை திரிபலா கொண்டுள்ளது என பரிந்துரைக்கின்றது. மேலும்  புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஒரு ஆய்வு, திரிபலாவில் உள்ள கேலிக் அமிலம் (ஒரு ரசாயன கலவை) அதன் புற்றுநோய் எதிர்பு நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறுகிறார். இது மட்டுமல்லாமல், திரிபலாவின் அபோப்டோட்டிக் (செல்களை அழிக்கும் செயல்) நடவடிக்கையில் சாதாரண செல்கள் மீதும் மற்றும் புற்றுநோய் செல்கள் மீதும் செயல்படும் விதத்தில் வேறுபாடு உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது. இது உடலின் சாதாரண செல்களை பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டும் கொல்கிறது. இருப்பினும், திரிபலாவின் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை சோதிக்க இதுவரை மனிதர்கள் மீது எந்த ஆய்வுகளும் செய்யப்படவில்லை. எனவே, திரிபலாவின் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள உங்கள் ஆயுர்வேத வைத்தியரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.

திரிபலா பொதுவாக நீண்ட கால நுகர்வுக்கு மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு ஆரோக்கியமான நபராக இருந்தாலும் கூட, அதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக திரிபலாவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் உணவு பழக்கத்தில் திரிபலாவை சேர்த்துகொள்வதற்கு முன், அதனால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  1. திரிபாலா ஒரு இயற்கை மலமிளக்கியாகும். மிதமாக எடுத்துக்கொள்ளும் போது இது நன்மை பயக்கும். ஆனால், திரிபலாவின் அதிகப்படியான பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுகடுப்பை ஏற்படுத்தலாம்.
  2. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நீங்கள் சப்பிட்டு கொண்டிருந்தால், ஏற்கனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நடவடிக்கைகளில் திரிபலா தலையிடலாம் என்பதால், உங்கள் உணவில் திரிபலாவை சேர்த்துக் கொள்ளும் முன், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
  3. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு திரிபலா பாதுகாப்பானது என்பதற்கு எந்த விஞ்ஞான சான்றுகளும் இல்லை, அதனால் கர்ப்பிணிப் பெண்கள் எந்த வடிவத்திலும் டிரிபலாவை எடுத்துக்கொள்ள வேண்டாம் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
  4. குழந்தைகளுக்கு திரிபலா கொடுக்கப்பட கூடாது.
  5. சிலர் திரிபலாவை எடுத்துக் கொண்ட பிறகு தூக்கமின்மை ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர், ஆனால் அது எடுத்துக்கொள்ளப்படும் திரிபலாவின் அளவை சார்ந்தது.

திரிபலா பொதுவாக ஒரு தூள் அல்லது திரிபலா "சூரண" வடிவத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஆனால் இது மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் ட்ரிபலா ஜூஸ் அல்லது ரஸம் போன்ற வடிவங்களில் வணிக ரீதியாகவும் கிடைக்கின்றது. மேற்பூச்சுப் பயன்பாட்டிற்காக டிரிபலா ஒரு எண்ணெய் வடிவில் பயன்படுத்தப்படலாம்.

திரிபலா பவுடர் தயாரிக்க மூன்று மூலிகங்களின் அளவு விகிதம் அதை எடுத்துக்கொள்பவரின் தனிப்பட்ட உடல் வகைகளை பொருத்து வேறுபடுகிறது, ஆனால் பொதுவாக மூன்று மூலிகைகளும் 1 (ஹராட்) 2 (பேஹேடா) 4 (நெல்லிக்காய்) என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகின்றன. காலையிலோ அல்லது இரவு உணவிலோ உங்கள் உணவுக்குப் பிறகு 1/2 ஸ்பூன் தூளை நீரில் கலந்து (ஒரு தேநீர் வடிவில்) எளிமையாக எடுத்துக்கொள்ளளாம். ஆயுர்வேத டாக்டர்கள் திரிபலாவை 1: 2: 4 என்ற விகிதத்தில் மூன்று சூரணங்களாக தனித்தனியாக எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றனர். சாப்பிடுவதற்கு சற்று முன்பு பேஹேடா சூரணமும், உணவு சாப்பிட்ட பிறகு உடனே நெல்லிக்காய் சூரணமும் மற்றும்  சாப்பிட்ட பிறகு இறுதியாக, 2-3 மணி நேரம் கழித்து ஹராட் சூரணத்தை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி இந்த அனைத்து பொடிகளும் நெய் மற்றும் தேன் கலந்து எடுத்துக்கொள்ளபடும் போது சிறந்த பலன்களை தருகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்தவும், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்கவும் திரிபலாவின் வழக்கமான நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயினும், நீங்கள் இந்த உடல்நலத்தை உயர்த்தும் ஆயுர்வேத சூத்திரத்தை வீட்டிலேயே செய்ய விரும்பினால், உங்கள் ஆயுர்வேத வைத்தியரிடம் திரிபலா சூரணம் தயாரிக்க தேவையான அளவையும் வழிமுறைகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

திரிபலா குங்குலு-வை அடிக்கடி திரிபலா என்று குழம்பிவிடுவர் மக்கள். ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கிறது, நீண்ட பைபர் மற்றும் குங்குலு (மிர்ஹ் ரெசின்) ஆகியவை திரிபலா பழங்களுக்கு சேர்க்கப்பட்டு திரிபலா குங்குலு தயாரிக்கப்படுகிறது. மேலும், ஆயுர்வேதத்தில் திரிபலா குங்குலு அழற்சி எதிர்ப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

வைத்தியரின் சிபாரிசின் படி வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட பிறகோ திரிபலாவை எடுத்துக்கொள்ளலாம். ½ தேக்கரண்டி திரிபலா தூளை ஒரு பொது மருந்தளவாக ஒரு நாளைக்கு ஒரு முறை டீ வடிவில் எடுத்துக்கொள்ளலாம். திரிபலா தூளை நெய் அல்லது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இந்த முறையில் பொடியை நீரில் கலந்து எடுத்து கொள்வதிலிருந்து, ஒவ்வொரு மருந்தளவிலும் தூளின் அளவு, வேறுபட்டது. திரிபாலாவின் மருந்தளவு உடல் வகை, வயது, பாலினம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வேறுபடுகிறது ஆனால் ஆயுர்வேத டாக்டர்கள் வயது வந்தவர்களுக்கு திரிபலாவின் தினசரி மருந்தளவு 2 தேக்கரண்டிக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கின்றனர்.

திரிபலா வடிவத்தின் ஆற்றல் மற்றும் தனிப்பட்ட உடல் வகை மற்றும் உடலியல் ஆகியவற்றின் படி திரிபலா காப்ஸ்யூல்கள், சிரப் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றின் மருந்தளவும் மாறுபடும். எனவே, இந்த ஆயுர்வேத சூரணத்தின் குறிப்பிட்ட மருத்துவ நலன்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், ஆயுர்வேத டாக்டரை சந்தித்து நீங்கள் பரிசோதனை செய்து கொண்ட பின் உங்கள் உடலமைப்பிற்கு சரியான மருந்தளவினை தெரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Dr. Harshaprabha Katole

Dr. Harshaprabha Katole

Ayurveda
7 Years of Experience

Dr. Dhruviben C.Patel

Dr. Dhruviben C.Patel

Ayurveda
4 Years of Experience

Dr Prashant Kumar

Dr Prashant Kumar

Ayurveda
2 Years of Experience

Dr Rudra Gosai

Dr Rudra Gosai

Ayurveda
1 Years of Experience


Medicines / Products that contain Triphala

மேற்கோள்கள்

  1. Subramani Parasuraman, Gan Siaw Thing, and Sokkalingam Arumugam Dhanaraj. Polyherbal formulation: Concept of ayurveda. Pharmacogn Rev. 2014 Jul-Dec; 8(16): 73–80. PMID: 25125878
  2. Ganesh Muguli et al. A contemporary approach on design, development, and evaluation of Ayurvedic formulation - Triphala Guggulu. Ayu. 2015 Jul-Sep; 36(3): 318–322. PMID: 27313420
  3. Kalaiselvan S1, Rasool M. Triphala exhibits anti-arthritic effect by ameliorating bone and cartilage degradation in adjuvant-induced arthritic rats.. Immunol Invest. 2015;44(4):411-26. PMID: 25942351
  4. Kalaiselvan S1, Rasool MK. The anti-inflammatory effect of triphala in arthritic-induced rats.. Pharm Biol. 2015 Jan;53(1):51-60. PMID: 25289531
  5. V. Lobo, A. Patil, A. Phatak, N. Chandra. Free radicals, antioxidants and functional foods: Impact on human health. Pharmacogn Rev. 2010 Jul-Dec; 4(8): 118–126. PMID: 22228951
  6. Rajan SS1, Antony S. Hypoglycemic effect of triphala on selected non insulin dependent Diabetes mellitus subjects. Anc Sci Life. 2008 Jan;27(3):45-9. PMID: 22557278
  7. Christine Tara Peterson, Kate Denniston, BS, Deepak Chopra. Therapeutic Uses of Triphala in Ayurvedic Medicine. J Altern Complement Med. 2017 Aug 1; 23(8): 607–614. PMID: 28696777
  8. Srikumar R. Evaluation of the growth inhibitory activities of Triphala against common bacterial isolates from HIV infected patients.. Phytother Res. 2007 May;21(5):476-80. PMID: 17273983
  9. Neeti Bajaj, Shobha Tandon1. The effect of Triphala and Chlorhexidine mouthwash on dental plaque, gingival inflammation, and microbial growth. Int J Ayurveda Res. 2011 Jan-Mar; 2(1): 29–36. PMID: 21897640
  10. Ritam S. Naiktari, Pratima Gaonkar, Abhijit N. Gurav, Sujeet V. Khiste. A randomized clinical trial to evaluate and compare the efficacy of triphala mouthwash with 0.2% chlorhexidine in hospitalized patients with periodontal diseases. J Periodontal Implant Sci. 2014 Jun; 44(3): 134–140. PMID: 24921057
  11. Sandhya T1, Lathika KM, Pandey BN, Mishra KP. Potential of traditional ayurvedic formulation, Triphala, as a novel anticancer drug.. Cancer Lett. 2006 Jan 18;231(2):206-14. PMID: 15899544
  12. Ramakrishna Vadde, Sridhar Radhakrishnan, Lavanya Reddivari, Jairam K. P. Vanamala. Triphala Extract Suppresses Proliferation and Induces Apoptosis in Human Colon Cancer Stem Cells via Suppressing c-Myc/Cyclin D1 and Elevation of Bax/Bcl-2 Ratio. Biomed Res Int. 2015; 2015: 649263. PMID: 26167492
  13. Russell LH Jr et al. Differential cytotoxicity of triphala and its phenolic constituent gallic acid on human prostate cancer LNCap and normal cells. Anticancer Res. 2011 Nov;31(11):3739-45. PMID: 22110195
  14. Suresh Kumar Gupta. Evaluation of anticataract potential of Triphala in selenite-induced cataract: In vitro and in vivo studies. J Ayurveda Integr Med. 2010 Oct-Dec; 1(4): 280–286. PMID: 21731375
  15. Viroj Wiwanitkit. Anticataract potential of Triphala. J Ayurveda Integr Med. 2011 Apr-Jun; 2(2): 51. PMID: 21760687
Read on app