சோய்பீன் அல்லது சோயாபீன் என்பது, பட்டாணி குடும்பத்தை சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த விதை ஆகும். அவை, இந்த விதைகளைக் கொண்டிருக்கும் சிறிய காய்களை உடைய சோயாபீன் செடியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த விதைகள் வடிவத்தில், கோள வடிவத்திலும், மற்றும் நிறத்தில், அவை புதிதாக இருக்கும் பொழுது பச்சை நிறத்திலும், மற்றும் உலரும் பொழுது மஞ்சளில் இருந்து பழுப்பு நிறம் எனவும் வேறுபடுகிறது.
சோயாபீன்கள், முதலில் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. பிறகு அது, மெதுவாக ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியது. தற்போது, சோயாபீன் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், உலகில் சோயாபீன் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலாவதாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில், சோயாபீனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சோயாபீன்கள், சோயா பால் மற்றும் டோஃபு போன்ற, பல்வேறு சோயா-அடிப்படையிலான உணவுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அது, பல்வேறு இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களுக்கு, ஒரு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகளில், சோயா குழம்பு, சோயா மொச்சை, புளிக்க வைக்கப்பட்ட சோயா கூழ், மற்றும் மிஸோ போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளின் முக்கிய அங்கமாக சோயா பயன்படுத்தப்படுகிறது. சோயாபீன்களை, சோயாபின் எண்ணெய் எடுப்பதற்கும் கூடப் பயன்படுத்த இயலும். ஒருமுறை சோயாபீன் எண்ணெய் எடுக்கப்பட்ட பிறகு, மீதமுள்ளவை, சோயாபீன் மாவு என்று அழைக்கப்படுகின்றன. அவை, அதிக அளவு புரதச்சத்து நிறைந்தவை மற்றும் சோயா புரதம் தயாரிக்கவோ அல்லது ஒரு கால்நடை உணவாகவோ பயன்படுத்தப்படுகின்றன.
சோயாபீன்கள், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை, அதிக அளவில் கொண்டிருக்கின்றன. அவை, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடல் எடையைக் குறைக்க, மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவக் கூடியவை ஆகும். கூடவே சோயாபீன்கள், உறக்க குறைபாடுகளைத் தடுக்க, மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சோயாபீன்களை பச்சையாக உண்பது நச்சுத்தன்மை அளிக்கக் கூடியதாகும். எனவே சாப்பிடும் முன்பாக, அவை முறையாக சமைக்கப்பட வேண்டும்.
சோயாபீன்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்
- தாவரவியல் பெயர்: கிளைசின் மேக்ஸ்
- குடும்பம்: பஃபாசியயி
- பொதுவான பெயர்கள்: சோயாபீன், சோயா
- சமஸ்கிருதப் பெயர்: (சோயாமாஷா)
- பயன்படும் பாகங்கள்: சோயாபீன்களின் மேல் தோல் உண்ணத்தகுந்தது அல்ல, எனவே, உள்ளே இருக்கும் பீன்களை எடுப்பதற்காக, அவை உரிக்கப்பட்டு விடுகின்றன
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: சோயாபீன், இந்தியாவில் விரைவாக வளர்கின்ற பயிர்களில் ஒன்று ஆகும். அது ஒரு கரிஃப் பயிர் போன்று வளர்க்கப்படுகிறது. போபால், இந்தியாவின் மிகப் பெரிய சோயாபீன் உற்பத்தியாளராக இருக்கிறது
- சுவராசியமான தகவல்: உள்நாட்டுப் போரின் போது, காஃபி கொட்டைகள் கிடைப்பது அரிதாக இருந்ததால், அவற்றுக்குப் பதிலாக மக்கள் சோயாபீன்களைப் பயன்படுத்தினர்