இந்தியாவில் சங்கபுஷ்பி என்ற காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் அளவில் பயன்படும் ஒரு மூலிகை ஆகும். ஆயுர்வேதத்தில், ‘ரசாயனா’ என்று குறிப்பிடப்படும் இந்த மூலிகை மன நலத்துக்கும் ரிஜுவனெட்டிங் தெரபிக்களை மேம்படுத்த  பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. மருத்துவ ரீதியாக, இந்த மூலிகை முழுவதையும் பால் மற்றும் சீரகத்துடன் ஒரு கலவை போல கலந்து நரம்பியல் கோளாறுகள் மற்றும் ஞாபக மறதிக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்கிறது.  ஞாபக சக்தியை கூட்ட இந்த மூலிகையை வைத்து தயாரிக்கப்படும் டானிக்கே இதன் மிகவும் பிரபலமான பயன்பாடு ஆகும். 

இந்த தாவரம் இந்தியாவிற்கு உருவானது மற்றும் இது ஒரு அந்தமில்லாத மூலிகை. அப்படி என்றால், இது இரண்டு வருடத்திற்கு மேல் உயிர் வாழும் திறன் கொண்டது. தாவரத்தின் கிளை தரையில் படர்ந்து இருக்கும் மற்றும் கிட்டத்தட்ட 30 சிஎம் வரை நீளம் இருக்கும். தாவரத்தின் முட்டை வடிவ பூ நீல நிறத்தில் இருக்கும். மூலிகையின் பல்வேறு பாகங்கள் பல நோய் நீக்கும் நன்மைகளை கொண்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல், இந்த மூலிகை மட்டுமே கற்றல், ஞாபகம் மற்றும் நினைவுபடுத்தும் திறன் போன்ற மூளையின் வேலை தொடர்புள்ள அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சங்கபுஷ்பி பற்றி சில அடிப்படை தகவல்கள்

  • தாவரவியல் பெயர்காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ்
  • குடும்பம்: ஜென்டியானாகே
  • பொதுப்பெயர்: சங்குபுஷ்பி, ஷங்கினி, கம்பு மாலினி, சங்கபுஷ்பி, சாடா புலி
  • சமஸ்கிருத பெயர்லகுவிஷ்ணுகிறந்தாநிலாசங்கபுஷ்பிவைஷ்ணவவிஷ்ணுக்ராந்தி , விஷ்ணுக்ராந்திவிஷ்னுகாந்தாவிஷ்ணுகாந்திசங்கபுஷ்பி
  • பயன்படும் பாகங்கள்: இலைகள், கிளைகள், பூக்கள், பழங்கள்
  • சொந்த இடம் மற்றும் புவியியல் பரவல்: இந்தியாவுக்கு சொந்தமானது, குறிப்பாக பீகார் மாநிலத்துக்கு சொந்தமானது.
  1. சங்குபுஷ்பியின் உடல்நல நன்மைகள் - Health benefits of shankhpushpi in Tamil
  2. சங்க புஷ்பியின் மருத்துவ நன்மைகள் - Medicinal benefits of shankhpushpi in Tamil
  3. சங்கபுஷ்பியின் மருந்து அளவு - Shankhpushpi dosage in Tamil
  4. சங்கபுஷ்பி சிரப் - Shankhpushpi syrup in Tamil
  5. சங்க புஷ்பி பவுடர் - Shankhpushpi powder in Tamil
  6. சங்கபுஷ்பியின் பக்க விளைவுகளை - Side effects of shankhpushpi in Tamil

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தர சங்கபுஷ்பி பரவலாக பயன்படுகிறது. இந்த மூலிகை மன அமைதி மற்றும் நிம்மதி  உணர்வை தூண்டுவதாக கண்டறியப்பட்டு உள்ளது மற்றும் பதட்டம், மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றில் இருந்து  நிவாரணம் அளிப்பது, அதன் மற்ற பயன்கள் போன்றவை கீழே விவாதிக்கப்படும்..

  • மூளைக்கான நன்மைகள்: ஞாபகம்  மற்றும் அறிவாற்றல் மீது பாதுகாப்பு தருவதில் சங்கபுஷ்பி ஒரு சிறந்த மூளை டானிக்காக இருந்து கொண்டு இருக்கிறது. அது ஞாபக மறதி மற்றும் வயது-தொடர்பான நரம்பு சிதைவை தடுக்க செய்கிறது மற்றும் பதட்டம் மற்றும் மனசோர்வை குறைப்பதில் பயன் தருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
  • சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: சங்கபுஷ்பி சருமத்தில் ஊடுருவி சென்று அதற்கு ஊட்டச் சத்து மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதனால் உங்களது சருமம் ஆரோக்கியமான இயற்கை பிரகாசத்துடன் பளபளக்கிறது. ஒரு ஆன்டி ஆக்சிடெண்ட்டாக இருப்பதால், அது விஷத் தன்மை அழுத்தத்தை குறைத்து சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் போன்ற ஸ்கின் ஏஜிங்கின் முதல் அறிகுறிகளை தாமதிக்க செய்கிறது.
  • வயிற்றுக்கான நன்மைகள்: சங்கபுஷ்பி காலங்காலமாக செரிமான செயல்முறையை மேம்படுத்தி வயிற்று உளைச்சலை தடுக்க செய்கிறது. வயிற்றுப்புண்ணின் போது வயிற்று புரணியை பாதுகாக்க பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஹைப்பர்திராய்டிசத்துக்கு: சமீபத்திய ஆய்வுகள் சங்கபுஷ்பியின் தைராய்டு எதிர்ப்பு குணங்கள் இருப்பதை குறிக்கின்றது. அது மன அழுத்தத்தின் போது திராய்டு இயக்குநீரின் அளவை குறைத்து, ஹைப்பர்திராய்டிசத்தை சமாளிக்க உதவி செய்கிறது.
  • இதயத்துக்கான நன்மைகள்: மாரடைப்புடன் தொடர்புடைய ஆரோக்கியம் அற்ற  தன்மைக்கு முக்கிய காரணமான, நான்-எஸ்டரிபைட் கொழுப்பு அமிலங்களின் அளவை குறைக்க சங்குபுஷ்பத்தின்  எத்தனால் சாறு பயன் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மூலிகை இதய நோய்களுக்கு இரு முக்கிய ஆபத்து காரணிகளான கொழுப்பை குறைக்கவும் இரத்த அழுத்தத்தை சமாளிக்கவும் உதவி செய்கிறது.

செரிமானத்துக்கு சங்க புஷ்பி - Shankhpushpi for digestion in Tamil

சங்கபுஷ்பி உடலின் செரிமான செய்முறைக்கு தொன்று தொட்டு உதவி செய்து வருகிறது.  தாவரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து பெறப்பட்ட சாறு உடலில் நீர் சேருவதை தவிர்த்து செரிமானத்துக்கு உறு துணையாக இருக்கிறது. குறிப்பாக பேதி போன்ற குடல் கோளாறுகளுக்கு மிகவும் முக்கியமான தீர்வாகவும் கருதப்படுகிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Anti-Hairfall Shampoo by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic shampoo has been recommended by our doctors to over 1 lakh people for hair fall, gray hair, baldness, itchy scalp, and dandruff with great results.
Anti-Hairfall Shampoo
₹329  ₹549  40% OFF
BUY NOW

நுண்ணுயிர் எதிர்ப்பியாக சங்க புஷ்பி - Shankhpushpi as an antibacterial in Tamil

சங்கபுஷ்பி சமீபத்திய ஆய்வின் படி பாக்டீரியாவை எதிர்க்கும்  குணங்களை கொண்டதாக இருக்கிறது. இந்த மூலிகையின் எத்தனால் சாறு சூடோமோனாஸ் ஏருகினோசா, பேசிலஸ் சப்லிலிஸ், மற்றும் எஷ்செச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்களை எதிர்த்து தீவிர பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூலிகையை உரிய மருந்து அளவில் எடுத்துக் கொண்டால், இந்த பாக்டீரியாவால் உருவாகும் பேதி போன்ற நோய்களை தடுக்க உதவி செய்யும். 

இந்த செடியில் உள்ள டானின்கள், சோபோனின்ஸ், குமாரின், ஃபிளவனாய்டுகள், பீனோல், மற்றும் ட்ரைட்டர்பென்யிட்டுகள் போன்ற பல வேறு உயிரியக்க சேர்மங்கள் நோய் உருவாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்பட காரணமாக விளங்குகிறது. இந்த மூலிகையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, புண்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆன்டி ஆக்சிடெண்ட்டாக சங்க புஷ்பி - Shankhpushpi as an antioxidant in Tamil

சமீபத்தில் 2017-யில் நடத்தப்பட ஒரு ஆய்வில், சங்கபுஷ்பிக்கு ஆன்டி-ஆக்சிடைசிங் பண்புகள் இருப்பதாக கண்டுப்பிடுக்கப்பட்டு உள்ளது. இந்த மூலிகையில் இருந்து பெறப்பட்ட சாறு பிரீ ராடிக்கல்ஸை (உடல் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் தன்மை கொண்டது) நடுநிலை படுத்தும் திறன் கொண்டது.

ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உயிரணுக்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கவோ தாமதப்படுத்தவோ உதவுகிறது மற்றும் உடலின் முறையான வளர்சிதைக்கு தேவைப்படுகிறது. திடமான ஆன்டி ஆக்சிடன்ட் பண்பு மற்றும் அதனோடு இணைந்த உடல்நலனுக்கு  மூலிகையில் உள்ள ஃபிளாவொனாய்ட் போன்ற உயிரியக்க சேர்மங்கள் காரணமாகும். 

(மேலும் படிக்க: ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகள்)

இதயத்துக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for the heart in Tamil

சங்கபுஷ்பியை பயன்படுத்துவது இதயத்துக்கு நன்மை தருவதாக கண்டுபிடிக்கபட்டு உள்ளது. மாரடைப்பால் மரணம் ஏற்பட முக்கிய காரணமான நான்-எஸ்டரிபைட் கொழுப்பு அமிலங்களின் (NEFA) அளவை குறைக்க சங்குபுஷ்பத்தின்  எத்தனால் சாறு பயன்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. NEFA அளவுகளை குறிப்பாக செடியில் உள்ள ஒரு ஃபிளாவொனாய்டான கெம்ப்பெரோல் என்ற உயிரியக்க சேர்மங்களின் நடவடிக்கையை குறைப்பது, இதய ஆரோக்கியத்தில் அதன் பங்கினை பறைசாற்றுகிறது .

சருமத்துக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for the skin in Tamil

இந்த மூலிகையின் முக்கியமான பயன் என்னவென்றால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகும். இந்த மூலிகை சருமத்துக்கு மாற்றாகவோ அல்லது டானிக்காகவோ பயன்படுத்தலாம். அது சருமத்தின் உள்ளே சென்று அதன் அனைத்து அடுக்குகளுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சரும வியாதியான  முகப்பருவையும் இந்த மூலிகையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். சங்கபுஷ்பி  மூலம் அதன் சரும நன்மைகளை பெற அதை  சீரகம் மற்றும் பாலுடன் கலந்து கலவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஞாபகசக்திக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for memory in Tamil

மூளையின் ஆற்றலை மேம்படுத்துவதே சங்கபுஷ்பியின் மிகவும் முக்கிய பயன் ஆக இருக்கிறது. அது முக்கியமாக ஒரு மூளை டானிக் மற்றும் ஸ்டிமுலேட்டராக பயன்படுகிறது. அந்த மூலிகையில் உள்ள பல உயிரியக்க சேர்மங்கள் ஞாபக மறதியை தடுக்க உதவி செய்கிறது. இந்த தாவரத்திடம் நியூரோப்ரொடக்டிவ் குணங்கள் (மூளையை பாதுகாப்பது) இருப்பதாக கண்டறியப் பட்டு உள்ளது. அது ஞாபகசக்தியை மேம்படுத்த உதவும் முக்கிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது.

இந்தியாவில், பழங்காலம் முதலே, அனைத்து வயது மக்களும் இந்த மூலிகையை பயன்படுத்தி வந்து உள்ளனர். அது மூளைக்கு ஊக்கியாக செயல்பட்டு அதன் திறனை மேம்படுத்த உதவி செய்கிறது. இந்த மூலிகையின் இயற்கை இரசாயன அமைப்பு மூளையில் இருந்து பதற்றத்தை நீக்கி அதை அமைதி அடைய உதவி செய்கிறது. ஆகவே காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ், தூக்கம் இன்மையால் அவதிப்படுபவர்களுக்கு அமைதி ஊக்கியாகவும் பயன் அளிக்கிறது.

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவது மட்டும் இல்லாமல், சங்கபுஷ்பி மருத்துவ குணாகளுக்காகவும் பரவலாக பயன்படுபட்டு வருகிறது. இந்த மூலிகை பல வேறு நோய்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. சங்கபுஷ்பி மருந்தாக பயன்படும் பல வேறு நோய்கள் கீழே விவரிக்கப்பட்டு உள்ளன.

பதட்டத்துக்கு சங்க புஷ்பி - Shankhpushpi for anxiety in Tamil

காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ்  பதட்டம் மற்றும் மன சோர்வு போன்ற கோளாறுகளுக்கு எதிரே பயனுள்ளதாக இருப்பதாக கண்டுபிடிக்கபட்டு உள்ளது. மன நிம்மதியை தூண்ட இந்த மூலிகை பயன்படுவதாக பல்வேறு ஆய்வுகளின் சான்றுகள் தெரிவித்து உள்ளன. அது நல்ல உறக்கத்தை ஊக்குவிப்பதோடு பதட்டம் மற்றும் மன சோர்வில் நிவாரணம் அளிக்க உதவி செய்கிறது. பதட்டத்தினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இந்த மூலிகை நன்மை தருவதாக மருத்துவ பரிசோதனைகள் கண்டறிந்து உள்ளன.

வயிற்று புண்களுக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for peptic ulcers in Tamil

கிளைகோப்ரோட்டின் சுரப்பிகள் காரணமாக உடலில் உருவாகும் புண்களுக்கு எதிராகவும் காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ் மூலிகை நன்மை தருகிறது. வயிற்று புண்களுக்கு எதிராக முழு தாவரத்தின் சாறு சிறந்த செயல்பாட்டை காண்பிக்கிறது. முஸின் சுரப்பு போன்ற சில முகாசல் தற்காப்பு காரணிகள் தூண்டப்படுவதால், இந்த மூலிகை அல்சர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

(மேலும் படிக்க: வயிற்று புண்கள்)

ஹைப்பர்தைராய்டிசத்துக்கு சங்க புஷ்பி - Shankhpushpi for hyperthyroidism in Tamil

2017-யில் நடத்தப்பட ஆய்வின் படி, காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ் தைராய்டு-எதிர்ப்பு பண்பினை கொண்டு இருப்பதாக கண்டறியப் பட்டு உள்ளது. இந்த மூலிகையின் வேர்களின் சாறு குறிப்பாக ஹைப்பர்தைராய்டிடசத்துக்கு எதிராக பயன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மன அழுத்தம் இருக்கின்ற நேரத்தில் இந்த மூலிகை தைராய்டு இயக்குநீரின் அளவினை குறைத்து தைராய்டு ஆக்ட்டிவிட்டியை தடுக்கிறது. இந்த மூலிகை கல்லீரல் தயாரிக்கும் சில நொதிகள் மீதும் தீவிரமாக செயல்படுகிறது. அதனால் ஹைப்பர்தைராய்டிசம் அறிகுறிகளை மேம்படுத்த உதவுகிறது.

கொழும்புக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for cholesterol in Tamil

சமீபத்திய ஆய்வின் படி இந்த மூலிகையின் சாறு கொழுப்பு அளவை குறைப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த செடியின் எத்தனால் சாறுகள் உடலில் இருந்து சில கொழுப்பு அமிலங்களை நீக்கி ட்ரைகிளிசரைடுகள், பாஸ்போலிபிட்கள் மற்றும் லிப்போபுரோட்டீன் கொழுப்பை (எல்டிஎல்) குறைக்க பயன்படுவதாக நிரூபணம் செய்ய பட்டு உள்ளது.

(மேலும் படிக்க: அதிக கொழுப்புசத்தின் அறிகுறிகள்)

நியுரோடிஜெனரேட்டிவ் நோய்களுக்கு சங்கபுஷ்பி - Shankhpushpi for neurodegenerative diseases in Tamil

காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ் நியுரோடிஜெனரேட்டிவ் நோய்கள், அதாவது, நரம்பியல் அமைப்பில் உள்ள உயிரணுக்களுக்கு சேதத்தை விளைவிக்கக் கூடிய நோய்களில் இருந்து குணம் அளிக்க பரவலாக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். இந்த நியூரான்களின் சீர் அழிவை உண்டாக்கும் அல்சைமர்கால்-கை வலிப்பு மற்றும்  டிமென்ஷியா  நோய்களுக்கு சங்கபுஷ்பி பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

செடி முழுவதின் சாறு நியூரான்களின் தன்னிச்சையான நடவடிக்கையை கட்டுப்படுத்தி, வலிப்புத்தாக்கத்தின் நிகழ்வுகளை குறைக்க உதவி செய்கிறது.

ஹைப்பர்டென்ஷனுக்கு சங்க புஷ்பி - Shankhpushpi for hypertension in Tamil

காண்வொல்வுலஸ் ப்ளூரிகாலிஸ் பயன்படுத்தி மிகவும் பரவலாக சிகிச்சை அளிக்கப்படும் நோய்  ஹைப்பர்டென்ஷன் ஆகும். இரத்தக் கொதிப்பை உயர்த்தும்  அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்சின் உற்பத்தியை இந்த மூலிகை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவி வருகிறது. அதனால் தான் இந்த மூலிகை, புத்துணர்ச்சி தெரபிக்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது (நீண்ட ஆயுள் பெற ஊக்குவிக்கிறது).

(மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்)

பல வேறு நோய்கள் மற்றும் உடல்நிலையை பொறுத்து சங்கபுஷ்பியின் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவு மாறும். தேவைப்படும் உடல்நிலைக்கு ஏற்றார் போல் மருத்துவர்கள் வேறுபட்ட மருந்து அளவை பரிந்துரைப்பார்கள்.  ஒருவரின் உடல் மற்றும் உடல் நிலையைப் பொறுத்து சரியான மருந்து அளவை பெற ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் முக்கியம் விஷயம் ஆகும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

சங்கபுஷ்பி மிகவும் அதிகமாக சிரப் வடிவில் கிடைக்கிறது. இந்த சிரப் ஞாபக சக்தியை பெருக்கிட மற்றும் தலைவலிக்கு சிகிச்சை அளித்திட உதவி செய்கிறது. மார்க்கெட்டில் சங்கபுஷ்பியின் சிரப் பல பிராண்டுகளில் கிடைக்கிறது. சங்கபுஷ்பி சிரப்பின் விலை 70 முதல் 150 ரூபாய் இடையே இருக்கிறது.

சங்குபுஷ்பி பவுடராகவும் இருக்கிறது. உட் கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அளவை பொறுத்து பவுடர் பொதுவாக வெதுவெதுப்பான தண்ணீரில் கரைக்க வேண்டும். சங்குபுஷ்ப பவுடரின் விலை 60 முதல் 200 ரூபாயாக இருக்கும்.

Biotin Tablets
₹599  ₹999  40% OFF
BUY NOW

பொதுவாக சங்கபுஷ்பி எந்த பக்க விளைவையும் தருவதாக  கண்டறியப்படவில்லை. அதை எந்த வயதினரும் எந்த பாலாறும் இதனை பயன்படுத்துகின்றனர். பரிந்துரைக்கப் பட்ட மருந்தளவின் படி அதை தொடர்ந்து எடுத்து வரலாம். ஆனால் சிலரிடத்தில், கீழ்காணும் சில பக்க விளைவுகளை வரலாம்:

  • சங்கபுஷ்பி ஹைப்போடென்சிவ்வாக அறியப்படுகிறது (இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை). அதனால், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதை உபயோகிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
  • மற்ற மருத்துவ நிலைமைகளுக்கு மருந்து எடுக்கும் நபர்கள் சங்கபுஷ்பியை எடுக்கும் முன்னர் அவர்களது மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் மீது சங்குபுஷ்பத்தின் தாக்கத்தை கண்டறிய குறிப்பிடும் படியான ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட வில்லை. அதனால் எச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்கள் சங்கபுஷ்பியை  எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Medicines / Products that contain Shankhpushpi

மேற்கோள்கள்

  1. Asma'a Al-Rifai et al. Antibacterial, Antioxidant Activity of Ethanolic Plant Extracts of Some Convolvulus Species and Their DART-ToF-MS Profiling. Evid Based Complement Alternat Med. 2017; 2017: 5694305. PMID: 29317894
  2. Parul Agarwa, Bhawna Sharma, Amreen Fatima, Sanjay Kumar Jain. An update on Ayurvedic herb Convolvulus pluricaulis Choisy. Asian Pac J Trop Biomed. 2014 Mar; 4(3): 245–252. PMID: 25182446
  3. Verma S et al. Study of Convolvulus pluricaulis for antioxidant and anticonvulsant activity. Cent Nerv Syst Agents Med Chem. 2012 Mar;12(1):55-9. PMID: 22280406
  4. Nasir A Siddiqui et al. Neuropharmacological Profile of Extracts of Aerial Parts of Convolvulus pluricaulis Choisy in Mice Model. Open Neurol J. 2014; 8: 11–14. PMID: 25110532
  5. Dhingra D, Valecha R. Evaluation of the antidepressant-like activity of Convolvulus pluricaulis choisy in the mouse forced swim and tail suspension tests. Med Sci Monit. 2007 Jul;13(7):BR155-61. PMID: 17599020
  6. Debjit Bhowmik. Traditional Indian Herbs Convolvulus pluricaulis and Its Medicinal Importance . Journal of Pharmacognosy and Phytochemistry
Read on app