பப்பாளி உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பழம் ஆகும். இது கேரிகாசிஸ்-ன் குடும்பத்தை சேர்ந்தது. பப்பாளிப் பழம் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? பப்பாளி பழம் வெப்பமண்டல அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் இது முதன்முதலாக மெக்ஸிகோவில் வளர்ந்தது. போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு பாப்ளியைவை அறிமுகப்படுத்தினர். இது கிறிஸ்டோபர் கொலம்பஸால் "தேவதூதர்களின் பழம்" என்று அழைக்கப்பட்டது. பப்பாளி "பவ்பா" என்றும் அழைக்கப்படுகிறது.
பப்பாளியின் சுவை பெரும்பாலும் முலாம்பழங்களுடன் ஒப்பிடப்படுகிறது, ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது இது குறைவான இனிப்பு கொண்டது. பப்பாளியின் உண்மையான சுவை அது முழுமையாக பழுத்த பிறகு மட்டுமே உணர முடியும். பப்பாளி பழுக்காமல் பச்சையாக இருக்கும் போது பச்சை நிறமாக இருக்கும். பப்பாளி அரை கனியாக இருக்கும் போது, அது பாதி பச்சை மற்றும் பாதி மஞ்சள் நிறமாக இருக்கும். அது முழுமையாக பழுத்த பிறகு, பப்பாளியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறம் வரை மாறுபடும். இந்த பழம் பல்வேறு வகையான சுகாதார நலன்களைக் கொண்டது. பப்பாளி அதன் பரந்த ஆரோக்கிய நலன்கள் மற்றும் சுவையின் காரணமாக மிகவும் பிரபலமானதாகவும், புத்துணர்ச்சியூட்டும் ஒரு பழமாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் இது கிடைக்கும். மக்கள் வழக்கமாக இந்த பழத்தை தங்கள் காலை உணவு மற்றும் பழ சாலட்டில் சேர்த்து கொள்கிறார்கள்.
பப்பாளி என்பது நம் சமயல் தோட்டங்களில் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் எளிதாக வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த பழமாகும். இது நடவு செய்யப்பட்ட 8 முதல் 10 மாதங்களுக்குள்ளேயே விரைவாக வளர்ந்து பழங்களை தாங்கி நிற்க ஆரம்பித்துவிடும். இது புத்துணர்ச்சி தரும் ஒரு சுவையான பழம் ஆகும். இதில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இது உப்பு மற்றும் மிளகு சேர்த்து இல்லாவிட்டால் சர்க்கரை அல்லது எலுமிச்சை கொண்டு சாப்பிடக்கூடிய ஒரு பழம். பழுக்காத பழத்தை ஒரு காய்கறி போல சாப்பிடலாம். நாம் அதை கொண்டு ஊறுகாய் செய்ய முடியும்.
பப்பாளி பழம் பாப்பன் எனப்படும் ஒரு நொதியைக் கொண்டிருக்கிறது, மேலும் அது ஒப்பனை பொருட்கள், சுவிங் கம்கள், மருந்து தொழிற்துறை உற்பத்தி, பசைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 40 வகையான பப்பாளிகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இவை 20 அங்குல நீளம் வரை வளரக்கூடிய பேரிக்காய் வடிவமான பழங்கள். ஒரு பப்பாளியில் நூற்றுக்கணக்கான மென்மையான, கருப்பு நிற வழவழப்பான விதைகள் இருக்கும். பப்பாளியின் ஒவ்வொரு பழமும் 0.49 கிலோ முதல் 1 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். சந்தையில் காணப்படும் பழங்கள் பொதுவாக 7 அங்குல நீளமும் சுமார் 1 கிலோ எடையும் கொண்டவை. இதை அப்படியே ஒரு பழமாக சாப்பிடலாம், ஸ்மூத்தீ செய்து சாப்பிடலாம் இல்லையெனில் மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். இதில் இயற்கையான நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய கனிம வகைகள் உள்ளன. வேர், பட்டை, தோல், விதைகள் மற்றும் கூழ் உள்ளிட்ட முழு பப்பாளி தாவரமும் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில், பப்பாளி நாட்டின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. தெற்கில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கில் மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒரிசா. மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய பப்பாளி உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் பப்பாளி சுமார் 3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பப்பாளியின் மொத்த உலக உற்பத்தியில் பாதி இருக்கும். பெஹரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார் மற்றும் நெதர்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியா பப்பாளியை ஏற்றுமதி செய்கிறது.
பப்பாளி பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: காரிகா பப்பாயா.
- குடும்பம்: கேரிகாசீஸ்
- பொது பெயர்: பப்பாளி பிரபலமாக பாப்பா அல்லது பாபாவ் என அழைக்கப்படுகிறது. இது சில நேரங்களில் "முலாம்பழம் மரம் " என்று அழைக்கப்படுகிறது.
- சமஸ்கிருத பெயர்: எரண்ட் கர்காதி
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: பழம், இலைகள், மலர்கள், தண்டுகள், வேர்கள் மற்றும் விதைகள் என அனைத்தும் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
- தோற்றிய இடம்: இது மெக்ஸிக்கோ மற்றும் வடக்கு தென் அமெரிக்காவிற்கு சொந்தமானது. ஆனால் இப்போது பப்பாளி உலகின் அனைத்து வெப்ப மண்டல பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது.
- சுவாரஸ்யமான உண்மைகள்: ஜூன் மாதம் தேசிய பப்பாளி மாதமாக கருதப்படுகிறது.