நீண்ட காலமாக, வெப்ப மண்டலப் பகுதிகளின் காயகல்பமாகிய தேங்காய் தண்ணீர், ஒரு விருப்பமான இயற்கை பானம் ஆகும். அது, கோஸ்டாரிகா, டொமினிக் குடியரசு, இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பிரேசில், கரீபியன் தீவுகள், மெக்சிகோ மற்றும் இந்தியாவிலும் கூட, ஒரு பிரபலமான பானமாக இருக்கிறது.
தேங்காய்கள், 400 இனங்களுக்கும் மேல் கொண்ட அரிகசியயி என்ற குடும்பத்தை சேர்ந்தது ஆகும். தேங்காய் தண்ணீரின் சுவை, அது பயிரிடப்படும் மண்ணைப் பொறுத்தது ஆகும். ஒருவேளை அந்தத் தென்னை மரம் கடல் நீருக்கு அல்லது ஒரு கடற்கரைக்கு அருகில் இருந்தால், அதன் சுவையில் சிறிதளவு உப்புத்தன்மையும் இருக்கக் கூடும்.
இந்தோனேசியா, உலகத்தில் தேங்காய்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை தேங்காய்களை அதிகம் உற்பத்தி செய்பவற்றில் முதல் மாநிலங்களாக உள்ளன.
95% அளவுக்கு தண்ணீரைக் கொண்டிருக்கும் இது, ஒரு குறைந்த கலோரிகளைக் கொண்ட மற்றும் கொழுப்பை அதிகரிக்காத பானம் ஆகும். மேலும் தேங்காய் தண்ணீர், உடலுக்கு நன்மை அளிக்கின்ற பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளைக் கொண்ட ஆற்றல் மையமாக இருக்கிறது.
தேங்காய் தண்ணீரைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: தேங்காய் தண்ணீர், கோகோஸ் நுசிஃபெரா எனப்படும் தென்னை மரத்தில் இருந்து பெறப்படுகிறது
- குடும்பம்: அரிகசியயி
- பொதுவான பெயர்: இந்தியில் நரியல் பானி
- சமஸ்கிருதப் பெயர்: நரிகேளஜலம்
- பயன்படும் பாகங்கள்: தேங்காய்க்குள் காணப்படும் திரவம்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: உலகம் முழுவது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையும் தேங்காய், பெரும்பாலும் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் தென்னை விவசாயத்தில், தோராயமாக 78% வரை இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பாக இருக்கிறது.
- சுவாரஸ்யமான தகவல்: ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 20 பில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன