நிலக்கடலை என அழைக்கப்படும் வேர்கடலை ஃபேபேசீஸ் குடும்பத்திற்கு சொந்தமானது, மேலும் வேர்க்கடலை அதன் சாப்பிடக் கூடிய விதைகளுக்காக முக்கியமாக பயிரிடப்படுகிறது. மற்ற பயிர் தாவரங்களை போலல்லாமல், வேர்கடலை தரையில் இல்லாமல் நிலத்திற்கு அடியில் வளரும் ஒரு தாவரம் ஆகும்.

பிரேசில் அல்லது பெரு நகரில் வேர்க்கடலை உருவானது எனவும், அங்கு சடங்கு விழாக்களில் முதலில் சாகுபடியான காட்டு வேர்கடலைகள் சூரிய கடவுளுக்கு படைக்கப்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.

பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளன. வேர்க்கடலைகள், ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரோல்கள் போன்ற கலவைகளின் ஒரு பெரிய ஆதாரமாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது, இது நம் உணவில் இருந்து கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

எண்ணெய் உற்பத்தியைத் தவிர, அவை வேர்க்கடலை வெண்ணெய், இனிப்பு தின்பண்டம், வறுத்த வேர்க்கடலை, சிற்றுண்டி பொருட்கள், சூப்கள் மற்றும் சாலட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வேர்கடலை  பற்றி சில அடிப்படை தகவல்கள்:

  • அறிவியல் பெயர்: அராசிஸ் ஹைபோகாகியா
  • பொதுவான பெயர் (கள்): வேர்க்கடலை,அராசிஸ் ஹைபோகாகியா, முங்ஃபலி
  • குடும்பம்: ஃபேபசீஸ் / லெகுமினினோசே - பீ குடும்பம் 
  • பொதுவான இந்தி பெயர்: मूँगफली (முங்ஃபலி)
  • வேர்கடலையின் பிராந்தியம் மற்றும் புவியியல் பரப்பு: வேர்க்கடலை தாவரங்கள் பிரேசில் அல்லது பெருவில் தோன்றியதாக நம்பப்படுகின்றன, இருப்பினும் இதை நிரூபிக்க எந்த தொல்பொருள் பதிவுகளும் இல்லை. ஆனால் தென் அமெரிக்காவில் உள்ள மக்கள் (3,500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பு) வேர்க்கடலை வடிவில் மட்பாண்டம் செய்து வந்தனர். சீனா உலகிலேயே வேர்க்கடலை உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இந்தியாவில், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இடங்களை தொடர்ந்து குஜராத் மிகப்பெரிய அளவில் நிலக்கடலையை உற்பத்தி செய்கிறது.
  • வேடிக்கையான உண்மை: ஒரு ஜாடி வேர்க்கடலை வெண்ணெய் செய்ய கிட்டத்தட்ட 540 வேர்கடலைகள் வேண்டும். ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் "வேர்க்கடலை மனிதன்" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் வேர்க்கடலிலிருந்து தயாரிக்கப்படும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை அவர் உருவாக்கியுள்ளார்.
  1. வேர்க்கடலையின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Peanuts nutrition facts in Tamil
  2. வேர்க்கடலையின் சுகாதார நலன்கள் - Peanuts health benefits in Tamil
  3. வேர்க்கடலையின் பக்க விளைவுகள் - Peanuts side effects in Tamil
  4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

வேர்க்கடலைகள் புரத மற்றும் நார் சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன. 100 கிராம் வேர்க்கடலையில் ஒரு 49.24 கிராம் கொழுப்பு இருப்பினும், இந்த கொழுப்புகள் உண்மையில் இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்பு அல்லது நிறைவுறா கொழுப்புகளாக உள்ளன. வேர்கடலை ரெஸ்வெராட்ரால் என்று அழைக்கப்படும் ஒரு ஆக்ஸிஜனேற்றியை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது சிவப்பு ஒயின்லில் காணப்படும் அதே ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும் இது புற்றுநோய், இருதய மற்றும் அல்சைமர் நோய்களின் ஆபத்தை குறைப்பதாக அறியப்படுகிறது.  

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தரவுத்தளத்தின் படி, 100 கிராம் வேர்கடலை பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

ஊட்டக்கூறு 100 கிராமுக்கான மதிப்பு
நீர் 6.5 கிராம்
ஆற்றல் 567 கி.கே.
புரதம் 25.8 கிராம்
கொழுப்பு 49.24 கிராம்
கார்போஹைட்ரேட் 16.13 கிராம்
நார்ச்சத்து 8.5 கிராம்
சர்க்கரைகள் 4.72 கிராம்
கனிமங்கள்  
கால்சியம் 92 மிகி
இரும்பு 4.58 மிகி
மக்னீசியம் 168 மிகி
பாஸ்பரஸ் 376 மிகி
பொட்டாசியம் 705 மிகி
சோடியம் 18 மி.கி.
துத்தநாகம் 3.27 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் பி1 64 மிகி
வைட்டமின் பி1 0.135 கிராம்
வைட்டமின் பி3 12.066 கிராம்
வைட்டமின் பி6 0.348 மி.கி.
ஃபோலேட் 240 μg
வைட்டமின் ஈ 8.33 மி.கி.
கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள்  
சாசுரேட்டேட் 6.279 கிராம்
மோனோஅன்சாசுரேட்டேட் 24.426 கிராம்
பாலிஅன்சாசுரேட்டேட் 15.558 கிராம்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

உங்கள் சாலடுகள் மற்றும் ஞாயிறு ஐஸ் கிரீம்கள் மீது கூடுதல் மொறு மொறுப்புக்காக சேர்க்கப்படும் வேர்க்கடலை எவ்வளவு ஆரோக்கியமானது தெரியுமா? ஒரு நாளைக்கு ஒருசில வேர்க்கடலையை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்காக அதிசயங்களை செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். என்ன நல்லது? அதை நிரூபிக்க அறிவியல் உண்மைகள் உள்ளன. வேர்க்கடலையை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக அதன் பல குணப்படுத்தும் பண்புகளை நாம் இப்போது பார்ப்போம்:

  • எடை இழப்புக்கு: வேர்க்கடலைகளில் நார் சத்து நிறைந்திருக்கின்றன, அவை ஒரு ஆரோக்கியமான நொறுக்கு சிற்றுண்டியாக வேர்க்கடலையை மாற்றுகின்றன. எனவே, வேர்கடலை நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைத்து வைத்திருக்க உதவுவதோடு, நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது. வேர்கடலை உணவு புரதங்கள் நிறைந்தவை மற்றும் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன. நம் உடலின் தசையை அதிகமாக்குவதில் புரோட்டீன்கள் உதவுகின்றன.
  • தோலுக்கு: வேர்கடலை நம் தோலை மென்மையான வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயல்முறையிலும் உதவுகிறது.
  • கொழுப்புக்காக: வேர்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும் போது எல்.டி.எல் ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையை சேர்ந்தது. ஒரு உணவூண்டு முடித்த பின்பு உடனே கொழுப்பு அளவுகளை பராமரிக்கவும் வேர்கடலைகள் உதவுகின்றன.
  • இதயத்திற்கு: கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், வைட்டமின் ஈ இருப்பதன் காரணமாகவும், வேர்க்கடலை அதிரோஸ்கிளிரோஸ், இதயத் தாக்குதல் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற அபாயத்தை குறைக்க உதவுகிறது.
  • மன ஆரோக்கியத்திற்கு: வேர்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற மற்றும் வைட்டமின்கள் கலவைகளில் காரணமாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் அல்சைமர் நோய் ஆகியவற்றின் குறைப்புக்கு இது தொடர்புடையதாக உள்ளது.
  • பித்தப்பை கற்களுக்கு: வேர்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும்.
  • புற்றுநோய்க்கு எதிராக: வேர்கடலை சப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தை மாற்றியமைக்க முடியும், குறிப்பாக வயிற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோயை தடுக்கிறது.

வேர்கடலை கொழுப்பை குறைக்கிறது - Peanuts reduce cholesterol in Tamil

வேர்கடலை பெரும்பாலும் நிறைவுறா கொழுப்புகளால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதால், வேர்கடலையின் ஹைபோலிபிடிமிக் (கொழுப்பு குறைதல்) பண்புகளை பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. விவோ (விலங்கு அடிப்படையிலான) ஆய்வுகள் வேர்கடலை உடலில் எல்.டி.எல் கொழுப்பை பராமரிக்க உதவுகிறது, அதே சமயத்தில் ஹெச்.டி.எல் கொலஸ்டிரால் அளவுகளை குறைக்கின்றன என்பதையும் காட்டுகிறது.

கானாவில் செய்யப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், வழக்கமான வேர்க்கடலை நுகர்வு 4 வாரங்களுக்குள் கொழுப்பு அளவுகளை சமநிலைப்படுத்துவதாக  கண்டுபிடிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து இதழில் வெளியான ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வு படி, அதிக கொழுப்பு கொண்ட உணவை சாப்பிட்ட பிறகு 85 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால், இரத்த கொழுப்பு அமிலங்களின் உச்ச பட்ச அளவு எட்டுதலை குறிக்கும் உணவுக்குப் பின்பான ஹைபர்லிபிடிஸ்மியாவை மேம்படுத்த உதவுகிறது. 

(மேலும் வாசிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)

எடை இழப்புக்கான வேர்க்கடலை - Peanuts for weight loss in Tamil

நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது கொட்டைகளை சாப்பிடுவது உங்கள் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான தவறான கருத்து ஆகும். இந்த தவறான கருத்துக்கு காரணம் கொட்டைகள் உள்ள உயர் கொழுப்பு உள்ளடக்கம் ஆகும். பல ஆய்வுகள் இது உண்மை இல்லை என்றும் சில நேரங்களில், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் உட்பட கொட்டைகள் உண்மையில் நீங்கள் ஒரு ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க உதவும் என்று காட்டியது. இது ஏனெனில், கொட்டைகளில் உள்ள கொழுப்பு தற்போது பெரும்பாலும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகும். இது பெரும்பாலும் உயர் கொழுப்பு அளவுகளை தடுக்க உதவுகிறது மற்றும் உடலில் ஒரு ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவும்.  உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். 

வேர்கடலை  உணவு நார் சத்துப் பொருளின் ஒரு வளமான ஆதாரமாக இருக்கிறது, எனவே, வேர்கடலை நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைத்து வைத்திருக்க உதவுவதோடு, நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது.

அமெரிக்கன் கல்லூரி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, உங்கள் உணவு பட்டியலில் வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை சார்ந்த பொருட்களை சேர்த்து கொள்வது உங்கள் BMI (உடல் நிறை குறியீட்டெண்) அதிகரிப்புக்கு வழிவகுக்காது. BMI என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவாகும். ஒரு சமச்சீர் பிஎம்ஐ ஆரோக்கியமான உடல் எடையைக் குறிக்கிறது.

(மேலும் வாசிக்க: எடை இழப்பு உணவு விளக்கப்படம்)

இதயத்திற்கான வேர்கடலையின் நன்மைகள் - Peanuts benefits for heart in Tamil

உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் செயலில் சேர்மங்களால் வேர்க்கடலை நிறைந்து காணப்படுகிறது. இதய நோயாளிகளுக்கு இதில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மட்டுமே ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதற்கு போதுமானது. வழக்கமான வேர்க்கடலை நுகர்வு உங்கள் இதயத்திற்கு எவ்வாறு பல வழிகளில் நன்மை செய்கிறது என்று இப்போது பார்ப்போம்.

உங்கள் கொழுப்பு அளவுகளை சரியாக வைத்து கொள்ள வேர்க்கடலையை வழக்கமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்கடலை இரத்தக் குழாய்களில் பிளேக் வளர்ச்சியின் அபாயத்தை குறைப்பதில் கொழுப்புத் திசுக்கள் மற்றும் உதவி ஆகியவற்றை மேம்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இல்லாவிட்டால் அந்த பிளேக்கள்  இதயத் தமனிகளைத் அடைத்துக் கொண்டு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

வேர்கடலையில் ஒரு நல்ல அளவு வைட்டமின் ஈ உள்ளது, இது  இதய நோய் ஆபத்தை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேர்க்கடலைகளில் இருக்கும் அமினோ அமிலம் அர்ஜினைன் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது மீண்டும் ஒரு ஆரோக்கியமான இதய அமைப்பிற்கான அறிகுறியாகும்.

வேர்க்கடலைகளில், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல இதர கலவைகள் ஆகியவை நிறைந்து உள்ளன. இதய நோய்களுக்கு முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் இந்த கலவைகள் உதவுகிறது. 

மேலும், வேர்கடலை ரெஸ்வெராட்ரால் என்று அழைக்கப்படும் ஆக்ஸிஜனேற்றியைக் கொண்டிருக்கிறது, சிவப்பு ஒயின்னில் அதே ஆக்ஸிஜனேற்றி உள்ளது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க இதய செயல்பாட்டை சீர்படுத்த இது உதவுகிறது.

புரத சத்தின் ஆதாரமாக வேர்க்கடலை - Peanuts as a protein source in Tamil

நீங்கள் உடல்நல ஆர்வலராக இருந்தால், புரோட்டீன்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான வேர்கடலை பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த கொட்டையை எது இந்த வகையில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நல்லது, வேர்கடலைகளில் 20 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன மற்றும் அவை அர்ஜினின் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன. உடலில் பல முக்கியமான புரதங்களின் உயிரியல் பினப்புக்கு பயன்படுத்தப்படும் அமினோ அமிலம் அர்ஜினின் ஆகும். பிற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது வேர்கடலையில் அதிகபட்ச புரதம் இருக்கிறது என்று அறியப்படுகிறது. உண்மையில், வேர்கடலை உள்ள புரத உள்ளடக்கம் இறைச்சி அல்லது முட்டைகளின் புரத உள்ளடக்கத்திற்கு சமமாக உள்ளது.

இந்த புரோட்டீன்கள் பெரும் குழாய்வழிதல் செயல்பாடுகள் (சிறு துளிகளாக கொழுப்பை உடைத்தல்) கூட்டிணைப்பு நிலைத்தன்மை (உடலால் எளிதாகப் பயன்படுத்த கூடிய வகையில், சிறு துளிகளாக கொழுப்புகளை பராமரிக்கின்றன) மற்றும் பெரிய நீர் சேமிப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. மற்ற விலங்கு புரதங்களைப் போலவே வேர்க்கடலை புரதத்தின் செரிமானம் எளிதானது.

எனவே, நீங்கள் ஒரு சைவ அல்லது வீகன் உணவாளராக இருந்தால், வேர்க்கடலைகள் உங்களுக்காக புரதங்களின் சரியான தேர்வாக இருக்கும்.

பித்தப்பை கற்களுக்கான வேர்க்கடை - Peanuts for gallstones in Tamil

பித்தப்பை கற்கள் என்பவை செரிமான திரவங்கள் திடப்பட்டு போவதாலும் மற்றும் கொலஸ்டிரால் அதிகரிப்பதன் காரணமாகவும் உங்கள் பித்தப்பைகளில் உருவாகும் சிறிய கற்களைக் குறிக்கிறது. பித்தப்பை கற்கள் பெரிய அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். இதற்கான ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சை மூலம் பித்த பையை அகற்றுவது மட்டுமே ஆகும். எனினும், கொட்டைகள், குறிப்பாக வேர்கடலை இந்த மோசமான நிலையில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும். வேர்க்கடலையில் உள்ள நிறைவுறா கொழுப்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் (எல்டிஎல்) அளவைக் குறைப்பதன் மூலம், பித்தப்பை கற்களின் அபாயத்தை நீக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மருத்துவ ஊட்டச்சத்து அமெரிக்கன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு படி, வழக்கமான வேர்க்கடலை நுகர்வு கோலீஸ்சீஸ்டெக்டெமிமின்(பித்தப்பை வெட்டு) ஆபத்தை குறைக்கிறது.

வேர்கடலை பல்வேறு வகையான ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகின்றது, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கிறது. இதற்கு பித்தப்பை கற்கள் உருவாக்கத்தின் மீதான வைட்டமின் ஈ இன் விளைவு சாட்சியமாக உள்ளது.

வேர்கடலை  ஒரு நல்ல அளவு நார் சத்தை கொண்டிருக்கிறது. இந்த நார் சத்து பித்தப்பை கற்கள் உருவாக காரணமான இரண்டாம் பைல் அமிலங்களின் உற்பத்தியை குறைப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் மற்றும் கோலீஸ்சீஸ்டெக்டெமிமின்(பித்தப்பை வெட்டு) ஏற்படுவதற்கான ஆபத்துக்களை குறைக்கிறது என்று ஆராய்ச்சி சான்றுகள் கூறுகிறது. 

அல்சைமர்ஸ் க்கான வேர்க்கடலை - Peanuts for Alzheimer's in Tamil

அல்சைமர்ஸ் ஒரு நரம்பியல் நோயாகும், இது மெதுவாக மூளை செயல்பாடு மற்றும் மோட்டார் திறன்களை மோசமடையச் செய்கிறது. NIH படி, இது வயது தொடர்பான டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் இழப்புக்கு முக்கிய காரணம் ஆகும். இந்த நோய்க்கு உறுதியான தீர்வு கிடையாது, அறிவாற்றல் சிகிச்சைகள் மற்றும் நடத்தை மேலாண்மை ஆகிய வழக்கமாக சிகிச்சைகள் மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ உதவும். உறிஞ்சும் வேர்கடலை நீங்கள் பாதுகாக்க உதவும் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை வேர்கடலையில் நிறைந்துள்ளன. இதனால் வேர்கடலை சாப்பிடுவது  அல்சைமர்  நோயில் இருந்து பாதுகாக்க உதவும். எனினும், அதே விளைவு மற்ற ஆக்ஸிஜனேற்றிகளுடன் தொடர்புடையதாக இல்லை. 

மேலும், ரெஸ்வெராட்ரால் பற்றிய ஆய்வுகள், சில செல் சமிக்ஞை வழித்தடங்களில் குறுக்கிடுவதன் மூலம் மூளையில் உயிரணு சேதத்தை தடுக்கிறது என்பதை நிரூபிக்கின்றன. வேர்கடலை ரெஸ்வெராட்ரால் லின் ஒரு நல்ல ஆதாரமாக இருப்பதால், அதனால் அல்சைமர் நோய்க்கு எதிராக சில சிகிச்சையளிக்க உதவ முடியும்.

தோலுக்கான வேர்கடலையின் நன்மைகள் - Peanuts benefits for skin in Tamil

வேர்க்கடலையில் நம் தோலுக்கு மிகவும் உகந்ததான வைட்டமின் ஈ மற்றும்  வைட்டமின் பி நிறைந்துள்ளது. வைட்டமின் பி ஃபைப்ரோபிளாஸ்ட் வளர்ச்சி மற்றும் காயம் குணப்படுத்தும் செயல்முறை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகளாக இந்த வைட்டமின்கள், சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் போன்ற முதிர்ந்த வயதான அறிகுறிகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதி செய்கின்றன.

மேலும், வேர்க்கடலை உள்ள கொழுப்பு உள்ளடக்கம் உங்கள் தோல் மேற்பரப்பில் இருந்து ஈரப்பதம் இழப்பதை தவிர்க்கவும், தோல் தடுப்புகளை பராமரிக்கவும் உதவும். இதற்கு அர்த்தம் நாம் உலர்ந்த தோல் நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை என்பது ஆகும்.

கடலை எண்ணெயைப் பயன்படுத்துவது  UV கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த எண்ணெயை ஒரு சில துளிகள் உங்கள் மசாஜ் எண்ணெயுடன்  கலந்து நீங்கள் பயன்படுத்துவது நல்லது. 

மன அழுத்தத்திற்கான வேர்க்கடலை - Peanuts for depression in Tamil

மன அழுத்தம் என்பது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் நரம்பியல் மாற்றங்களின் விளைவாக மூளையில் ஏற்படும் இரசாயனங்களின் மாற்றம் ஆகும். மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தடுப்பிற்கு தேவையான குறைந்தது 2 முக்கியமான சேர்மங்கள் வேர்கடலையில் உள்ளன. முதலாவதாக, இது வைட்டமின் பி யின் ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது, வைட்டமின் பி குறைந்த அளவுகளில் இருக்கும் போது மனச்சோர்வு மற்றும் மனநிலை தோய்வுடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஆய்வு கட்டுரை மற்றும் ஒரு வழக்கு ஆய்வில், வைட்டமின் பி3 யின் நுகர்வு மன அழுத்த அறிகுறிகளை ஒழித்து மற்றும் மனநிலையை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.

கூடுதலாக, செரோடோனின் தொகுப்புக்கு அத்தியாவசிய அமினோ அமிலம் டிரிப்டோபான் வேர்க்கடலையில் உள்ளது. செரோடோனின் மன அமைதியை அதிகரிக்கிறது, மேலும் இது  மனச்சோர்வை குறைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும். டிரிப்டோபனின் நேரடி விளைவு இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், முன்னர் பார்த்த நபர்களில் அறிகுறிகளின் படி டிரிப்டோபனின் குறைபாடு மன அழுத்த நிலைகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டது.

வேர்கடலையின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - Peanuts anti cancer properties in Tamil

புற்றுநோய் தடுப்புகளில் வேர்க்கடலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேர்கடலைகள் ஒரு ஆக்ஸிஜனேற்றியான பாலிபெனால்களை, கொண்டிருக்கின்றன. இவை வயிற்றில் நச்சு நைட்ரஜன் கலவைகள் உருவாவதைத் தடுக்கிறது. இதையொட்டி, வேர்கடலை  வயிற்று புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும், பல்வேறு வகையான புற்றுநோய்களை வேர்க்கடலையை சாப்பிடுவதால் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சி நிரூபிக்கிறது:

  • வேர்கடலை ஒவ்வாமை மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமை வகைகளில் ஒன்றாகும். பொதுவாக  வயிற்று வலி, பிடிப்புகள், குமட்டல், மற்றும் மூச்சு திணறல் போன்ற தீவிரமான நிலைகளுடன் இந்த ஒவ்வாமை தொடர்புடையது.
  •  ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளவாஸ்  எனப்படும் ஒரு பூஞ்சையினால் உருவாகும் அஃப்ளாடாக்சின் மாசுபாடு வேர்க்கடலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. அஃப்ளாடாக்சின்கள் உடல்நலத்திற்கு ஆபத்தானவை, அவை உங்கள் தோலில் வீரியமான அஃப்ளாடாக்சின்களின் வளர்ச்சியை உண்டாக்க கூடியவை. வேர்க்கடலை மஞ்சள் நிறமாகிவிட்டால், அது ஆபத்தானது மற்றும் சாப்பிடபடக் கூடாதவை.
  • வேர்கடலை எடை இழப்புக்கு உதவுவதாக அறியப்படுகிறது. இருப்பினும்,  அவை நிறைய கலோரிகளை வழங்குகின்றன, இதனால் அதிக அளவு வேர்கடலை  உட்கொண்டால் எடை மேலாண்மைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.
  • வேர்கடலையில் பொட்டாசியம் நல்ல அளவில் உள்ளது என்றாலும், அது சோடியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த சோடியம்  கனிமத்தை அதிகம் எடுத்துக்கொள்வது உங்கள் இதயத்திலும் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • வறுத்த மற்றும் உப்பு வேர்கடலையை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியம் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டிருக்கும் என்பதால் நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

உங்கள் உடலுக்குத் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வேர்க்கடலைகள் கொண்டிருக்கின்றன. புரதங்கள், நிறைவுறா கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு கனிமங்கள் மற்றும் பலவிதமான வைட்டமின்கள் ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது வேர்கடலை. வேர்கடலை பொதுவாக ஒரு ஏழை மனிதனின் புரதமாக குறிப்பிடப்படுகிறது. ஒவ்வாமை இல்லாத மக்கள் வேர்கடலையை மிதமான அளவு சாப்பிடுவதால் உடல் மற்றும் மனதில் அதிசயங்கள் செய்ய முடியும்.

மேற்கோள்கள்

  1. Shalini S. Arya, Akshata R. Salve, and S. Chauhan. Peanuts as functional food: a review. J Food Sci Technol. 2016 Jan; 53(1): 31–41. PMID: 26787930
  2. Sales JM, Resurreccion AV. Resveratrol in peanuts. Crit Rev Food Sci Nutr. 2014;54(6):734-70. PMID: 24345046
  3. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 16087, Peanuts, all types, raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  4. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Ask the doctor: Why is peanut butter "healthy" if it has saturated fat?. Harvard University, Cambridge, Massachusetts.
  5. Griel AE et al. Improved diet quality with peanut consumption. J Am Coll Nutr. 2004 Dec;23(6):660-8. PMID: 15637214
  6. Tricia Y. Li et al. Regular Consumption of Nuts Is Associated with a Lower Risk of Cardiovascular Disease in Women with Type 2 Diabetes1,2. J Nutr. 2009 Jul; 139(7): 1333–1338. PMID: 19420347
  7. Petrovski G, Gurusamy N, Das DK. Resveratrol in cardiovascular health and disease.. Ann N Y Acad Sci. 2011 Jan;1215:22-33. PMID: 21261638
  8. Shalini S. Arya, Akshata R. Salve, and S. Chauhan. Peanuts as functional food: a review. J Food Sci Technol. 2016 Jan; 53(1): 31–41. PMID: 26787930
  9. Griel AE et al. Improved diet quality with peanut consumption. J Am Coll Nutr. 2004 Dec;23(6):660-8. PMID: 15637214
  10. Hashemian M, Murphy G, Etemadi A, Dawsey SM, Liao LM, Abnet C. Nut and peanut butter consumption and the risk of esophageal and gastric cancer subtypes. Am J Clin Nutr. 2017 Sep;106(3):858-864. PMID: 28768652
  11. Lang Wu et al. Nut consumption and risk of cancer and type 2 diabetes: a systematic review and meta-analysis. Nutr Rev. 2015 Jul; 73(7): 409–425. PMID: 26081452
  12. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Tree Nut Allergy
  13. Lokko P, Lartey A, Armar-Klemesu M, Mattes RD. Regular peanut consumption improves plasma lipid levels in healthy Ghanaians. Int J Food Sci Nutr. 2007 May;58(3):190-200. PMID: 17514537
  14. Ghadimi Nouran M, Kimiagar M, Abadi A, Mirzazadeh M, Harrison G. Peanut consumption and cardiovascular risk.. Public Health Nutr. 2010 Oct;13(10):1581-6. PMID: 20025830
  15. Gabriel E Njeze. Gallstones. Niger J Surg. 2013 Jul-Dec; 19(2): 49–55. PMID: 24497751
  16. Tsai CJ et al. Frequent nut consumption and decreased risk of cholecystectomy in women. Am J Clin Nutr. 2004 Jul;80(1):76-81. PMID: 15213031
  17. Morris MC. Dietary niacin and the risk of incident Alzheimer's disease and of cognitive decline. J Neurol Neurosurg Psychiatry. 2004 Aug;75(8):1093-9. PMID: 15258207
  18. Rembe JD, Fromm-Dornieden C, Stuermer EK. Effects of Vitamin B Complex and Vitamin C on Human Skin Cells: Is the Perceived Effect Measurable?. Adv Skin Wound Care. 2018 May;31(5):225-233. PMID: 29672394
  19. Trisha A. Jenkins et al. Influence of Tryptophan and Serotonin on Mood and Cognition with a Possible Role of the Gut-Brain Axis. Nutrients. 2016 Jan; 8(1): 56. PMID: 26805875
  20. Mikkelsen K, Stojanovska L, Apostolopoulos V. The Effects of Vitamin B in Depression. Curr Med Chem. 2016;23(38):4317-4337. PMID: 27655070
Read on app