'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது க்ரோகஸ் சட்டிவஸ் என்று அழைக்கப்படும் மலரிலிருந்து வருகிறது.நமக்கு தெரிந்த இந்த குங்குமப்பூ, க்ரோகிஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு-சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடியானது மத்தியதரைக் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. உலகின் 94% க்கும் மேற்பட்ட குங்குமப்பூவின் உற்பத்தியை ஈரான் செய்கிறது. இந்தியாவில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது, இதில் ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது
மலரில் இருந்து குங்குமப்பூவை எடுப்பது ஒரு கடினமான பணி. ஒரு சில வருடங்கள், ஒருமுறை மட்டுமே குங்குமப்பூ அறுவடை செய்யப்படுகிறது. 1 கிலோ குங்குமப்பூவில் சுமார் 1,60,000 முதல் 1,70,000 சிறு மலர்கள் கொண்டது. குங்குமப்பூ உற்பத்திக்கு தேவையான அதிகப்படியான ஆற்றல் மிகுந்த உழைப்பு உலகின் இதனை உலகத்தில் மிக விலையுயர்ந்த வாசனை பொருட்களில் ஒன்றாக அக்கி உள்ளது. சிறந்த குங்குமப்பூ அதன் நீண்ட நூல் போன்ற அமைப்பில் மற்றும் ஒரு சிவப்பு நிறம் ஆகியவற்றால் அடையாளம் காணபடுகிறது . குங்குமப்பூவை தண்ணீருடன் அல்லது எந்தவொரு திரவமாகவும் கலந்தாலும் , அது தங்க மஞ்சள் நிறமாகிறது, இது கவர்சிகரமாக தோற்றமளிக்கும்
குங்குமப்பூவின் பிரகாசமான நிறம் மற்றும் அதன் அருமையான நறுமணம் பல்வேறு மொகலாய் சமையல் வகைகளில் காணப்படும். பொதுவாக குங்குமப்பூ இந்திய இனிப்பு தயாரிப்பில் குறிப்பாக பாயசத்தில் அதிக சுவயுட்ட பயன்படுத்தப்படுகிறது. இது பிரியாணி, கேக்குகள் மற்றும் ரொட்டி போன்ற உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூஒரு நறுமணத் தாவரமாக இருப்பதால், வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ சீனாவிலும், இந்தியாவிலும் ஒரு துணி சாயமாகவும், பெரும்பாலும் ஒரு புனிதப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது,
பல காலங்களாக குங்குமப்பூ மரபுவழி, மாற்று மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அண்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் தாவரத்தின் வேதிய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நாலா அறிஞத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதனை நச்சுகொல்லியாக, செரிமான தூண்டுகோலாக, மனசோர்வு நீக்கியகவும் மற்றும் வலிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தலாம். பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் போன்ற கனிமங்களில் இதில் உள்ளது.
குங்குமபூவின் சில அடிப்படை தகவல்கள்
- தாவரவியல் பெயர்: க்ரோகஸ் சட்டிவஸ்
- குடும்பம்: இரிடேசே
- பொதுவான பெயர்கள்: குங்குமப்பூ, கேஸார், ஜாப்ரான்
- சமஸ்கிருதம் பெயர்: केशरः (கேசாரா), कुङ्कुमति (குங்குமத்தி)
- பயன்படுத்திய பாகங்கள்: நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ குச்சிகள், கையில் அறுவடை செய்யப்பட்ட பூவின் சூலகமுடி இருந்து வருகின்றன, இவைகளை எதிர்கால பயன்பட்டிற்காக உலரவைத்து சேமிக்கப்படுகின்றன.
- பூர்வீக பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: குங்குமப்பூ தென்மேற்கு ஆசியாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. கிரீஸ் இத்தை முதலில் பயிரிட்டது. பின்னர் அது யூரேசியா, இலத்தீன் அமெரிக்கா, மற்றும் வட ஆபிரிக்காவிற்கு பரவியது.
- சுவாரஸ்யமான தகவல்கள் : முதல் இந்திய கொடியின் நிறம் குங்குமபூவின் வண்ணத்தால் ஈர்க்கப்பட்டது.