பீட் எனவும் அறியப்படும் பீட்ரூட், அமரந்தசியயி என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். நீங்கள் பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடும் போதோ அல்லது ஒரு காய்கறி கூட்டுடன் சேர்த்துக் கொள்ளும் பொழுதோ அல்லது சூப்புகள் மற்றும் பானங்களுடன் கலந்து கொள்ளும் பொழுதோ, அதன் ஆழமான சிவப்பு நிறத்தைக் கவனிக்காமல் இருக்க முடியாது. பீட்ரூட், அதன் கவர்ந்து இழுக்கும் தோற்றம் மற்றும் கிளர்ச்சியூட்டும் வண்ணத்தினால் மட்டும் நம்மை ஈர்க்கவில்லை, கூடவே, அதன் குணமளிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளின் காரணமாக, ஒரு மேன்மையான உணவு என  மகத்தான பிரபலத்தையும் அது அடைந்து கொண்டிருக்கிறது. பழச்சாறு முதல் பழக்கூட்டுகள் வரை பீட்ரூட், நிறத்தை அதிகரிக்க, மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் சுவைக்காக, அதற்கான இடத்தைக் கிட்டத்தட்ட அனைத்துப் பதார்த்தங்களிலும் பிடித்து விடுகிறது.

பீட்ரூட் முதலில் ரோமானியர்களால் பயிரிடப்பட்டது. ஆனாலும், அது விலங்குகளுக்கான உணவாக மட்டுமே அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பீட்ரூட் மனிதர்கள் உண்ணத்தக்கதாக 6 ஆம் நூற்றாண்டு வரை பிரபலம் அடையவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பீட்ரூட் சாறு, ஒயின்களுக்கு நிறமேற்றும் ஒரு காரணியாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது. 

அறுவடை செய்யப்படும் பொழுது, இந்தத் தாவரம் தளிர் முதல் வேர் வரை முழுமையாக உண்ணத்தக்கதாக இருக்கிறது. இந்த மகத்தான காய்கறியை உங்கள் உணவுத் தட்டில் சேர்த்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன என்பதும், இதன் பிரபலத்துக்கான காரணங்களில் ஒன்று ஆகும். அதனை வேக வைத்து, வறுத்து, ஊறுகாய் தயாரித்து, குக்கரில் சமைத்து, பொறித்து, அவித்து, சாறு எடுத்து அல்லது அப்படியே பச்சையாக ஒரு பழக்கூட்டாக என அனைத்து விதத்திலும் சாப்பிட முடியும்.

பீட்ரூட்டுகள், அவற்றை உடலுக்கு அதிக நன்மை அளிப்பவையாக மாற்றக்கூடிய, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை, அதிக அளவில் கொண்டவை ஆகும். பீட்ரூட்டுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலும், மலச்சிக்கல், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் மற்றும் கல்லீரலைக் கூட பாதுகாக்க முடியும். பீட்ரூட்டுகள், நமது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்கி, நமது உடலில் இருந்து சிறுநீர் பாதை வழியாக அவற்றை வெளியேற்றுவதன் மூலம், நச்சுத்தன்மை நீக்க செயல்பாட்டில் நமது உடலுக்கு உதவுகிறது.

பீட்ரூட் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: பீட்டா வல்கேரிஸ்
  • குடும்பம்: அமரந்தசியயி.
  • பொதுவான பெயர்: பீட்
  • சமஸ்கிருதப் பெயர்: பலங்க்ஷக்
  • பயன்படும் பாகங்கள்: வேர்கள் மற்றும் இலைகள்
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: பீட்ரூட், ஜெர்மனி அல்லது இத்தாலியில் தோன்றி, பின்னர் வடகிழக்கு ஐரோப்பாவுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் அது, முக்கியமாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
  • வேடிக்கையான உண்மை: அப்போல்லோ- சோயுஸ் சோதனைத் திட்டத்தின் பொழுது, விண்வெளியில் 18 விண்வெளி வீரர்களுக்கு, ஒரு வரவேற்பு பானமாக பீட்ரூட் சூப் (போர்ஸ்சட்டின் பான்குயுட்) பரிமாறப்பட்டது
  1. பீட்ரூட் ஊட்டச்சத்து விவரங்கள் - Beetroot nutrition facts in Tamil
  2. பீட்ரூட்டின் ஆரோக்கியமளிக்கும் நன்மைகள் - Beetroot health benefits in Tamil
  3. பீட்ரூட்டின் பக்க விளைவுகள் - Beetroot side effects in Tamil
  4. முக்கியக் குறிப்புகள் - Takeaway in Tamil
பீட்ரூட் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

பச்சையான பீட்ரூட், 88% நீரினால் ஆனது ஆகும். அது, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்களையும், மற்றும் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி9 மற்றும் சி போன்ற பல்வேறு வைட்டமின்களையும் அளிக்கும், நல்ல ஒரு ஆதாரமாக இருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ தேசிய ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 100கி பீட்ரூட் பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 87.58 கி
ஆற்றல் 43 கி.கலோரி
புரதம் 1.61 கி
கொழுப்பு 0.17 கி
கார்போஹைட்ரேட்டுகள் 9.56 கி
நார்ச்சத்து 2.8 கி
சர்க்கரைகள் 6.76 கி
தாதுக்கள் 100 கிராமில் உள்ள அளவு
சுண்ணாம்புச்சத்து 16 மி.கி
இரும்பு 0.8 மி.கி
மெக்னீஷியம் 23 மி.கி
பாஸ்பரஸ் 40 மி.கி
பொட்டாசியம் 325 மி.கி
சோடியம் 78 மி.கி
துத்தநாகம் 0.35 மி.கி
வைட்டமின்கள் 100 கிராமில் உள்ள அளவு
வைட்டமின் ஏ 2 மி.கி
வைட்டமின் பி1 0.031 மி.கி
வைட்டமின் பி2 0.04 மி.கி
வைட்டமின் பி3 0.334 மி.கி
வைட்டமின் பி6 0.067 மி.கி
வைட்டமின் பி9 109 மி.கி
வைட்டமின் சி 4.9 மி.கி
வைட்டமின் இ 0.04 மி.கி
வைட்டமின் கே 0.2 மி.கி
கொழுப்புகள்/ கொழுப்பு அமிலங்கள் 100 கிராமில் உள்ள அளவு
செறிவுற்றவை 0.027 கி
ஒற்றை செறிவற்றவை 0.032 கி
பன்மை செறிவற்றவை 0.06 கி
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW
  • உடல் எடைக் குறைப்புக்காக: பீட்ரூட் 88% அளவுக்கு தண்ணீரைக் கொண்டிருக்கிறது மற்றும் மிகவும் குறைந்த அளவு கொழுப்புகளைக் கொண்டிருக்கிறது. அதனால், அது நல்ல ஒரு உடல் எடைக் குறைப்பு உணவாக இருக்கிறது. கூடவே அது நார்ச்சத்துக்கான நல்ல ஒரு ஆதாரமாகவும் இருக்கிறது. அதனால் அது, செரிமான செயல்பாட்டில் உதவி செய்து, உங்களை நீண்ட நேரத்துக்கு, வயிறு நிரம்பி இருப்பது போன்று உணருமாறு செய்கிறது. அதனால் நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள்.
  • உடற்பயிற்சி செயல்பாடுகளுக்காக: பீட்ரூட், உடற்பயிற்சி செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது என்பதால், விளையாட்டு வீரர்களுக்காக மிகச் சிறந்த ஊட்டச்சத்து பானங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • நீரிழிவுக்காக: பீட்ரூட், இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து சரியான அளவில் வைத்திருக்க உதவுவதனால், நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு நல்ல உணவாக இருக்கிறது.
  • இதயத்துக்காக: பீட், ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் ஒரு அழற்சி எதிர்ப்பி ஆகும். அதனால் அது உங்கள் இதயத்துக்கான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அது, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதயநாள கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • புற்றுநோயைத் தடுப்பதற்காக: பீட்ரூட்டில் உள்ள செறிவான ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் அதனை, அபோப்டோசிஸ் செயல்முறை அல்லது திட்டமிடப்பட்ட செல் இறப்பின் மூலமாக ஏற்படுகிற, புற்றுநோய் தடுப்பில் மிகவும் திறன்வாய்ந்ததாக மாற்றுகின்றன.
  • கல்லீரலுக்காக: பீட்ரூட் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் செறிவான ஒரு ஆதாரமாக, ஆகிசிஜனேற்ற சேதாரத்தைக் குறைப்பதில் உதவுகிற காரணத்தால், ஈரல் பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருக்கிறது.

பீட்ரூட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது - Beetroot lowers blood pressure in Tamil

உயர் இரத்த அழுத்தம் என்பது, வழக்கமாக உடனடியாக எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாத, ஒரு நீண்ட-காலப் பிரச்சினை ஆகும். ஆனால், கட்டுப்படுத்தப்படாத இரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்க வாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பீட்ரூட்டுகள், பொட்டாசியத்தை அதிக அளவிலும், மிகவும் குறைவான அளவில் சோடியத்தையும் கொண்டிருக்கின்றன. இந்த சமநிலையானது, இரத்த அழுத்தத்தை ஒதுங்குபடுத்துவதில், ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது.

மற்றொரு ஆய்வு, பீட்ரூட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்ற, உணவுசார் நைட்ரேட்டுகளை அதிக அளவில் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. ஒரு முன் மருத்துவ ஆய்வின் படி, 500 மி.லி பீட்ரூட் சாறு, அருந்திய சில மணி நேரங்களில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடியது ஆகும்.

(மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்த சிகிச்சை)

நீரிழிவுக்காக பீட்ரூட் - Beetroot for diabetes in Tamil

நீரிழிவு என்பது, உடலினால் சர்க்கரைகளை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாமல் போகும் காரணத்தினால், இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிக்கரிக்கிற, ஒரு நீடித்த பிரச்சினை ஆகும். இந்தப் பிரச்சினை சரி செய்ய முடியாததாக இருந்தாலும், இதை, மருந்துகள் எடுத்துக் கொள்வது மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலும். 30 நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, தினசரி பீட்ரூட் சாறு அருந்துவது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

பீட்ரூட் சாறு, பாலிஃபெனோல்கள், ஃபுளோவோனாய்டுகள் மற்றும் அந்தோசியனின் ஆகியவற்றை செறிவாகக் கொண்டிருக்கிறது. இந்த உட்பொருட்கள் அனைத்தும், பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவக் கூடியவை ஆகும்.

பீட்ரூட் செறிவான நார்ச்சத்தினைக் கொண்டது - Beetroot is rich in fibre in Tamil

உணவுசார் நார்ச்சத்துக்கள் என்பவை, உடலில் உள்ள நொதிகளால் செயல்முறைக்கு உள்ளாக்க முடியாத, ஒரு வகை கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். அதனால் இந்த நார்ச்சத்துக்கள் பெருங்குடலின் வழியாக சென்று, அங்கே செயல்முறைக்கு உள்ளாக்கப்பட்டு நொதிக்க வைக்கப்படுகின்றன. பீட்ரூட்டுக்கள்,கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டையும் செறிவாகக் கொண்டிருக்கின்றன. ஆராய்ச்சி, நார்ச்சத்து செறிந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைப்பதன் மூலம், இதயநாள நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக் கூடியது என்று சுட்டிக் காட்டுகின்றது.

போதுமான அளவு நார்ச்சத்து- நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளப்படும் சர்க்கரையின் விகிதத்தைத் குறைப்பதன் மூலம், 2 ஆம் வகை நீரிழிவு ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவக் கூடியது ஆகும்.

மேலும், நார்ச்சத்துக்கள் நல்ல மலமிளக்கிகள் ஆகும் மற்றும் அவை மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன. இது ஏனென்றால் நார்ச்சத்துக்கள் மலத்துக்கு திரட்சியை வழங்கும் ஒரு தன்மையைக் கொண்டிருக்கின்றன, அதனால் மலம் கழித்தல் நடவடிக்கையை இலகுவாக்குகின்றன என்ற காரணத்தால் ஆகும்.

புற்றுநோயைத் தடுப்பதற்காக பீட்ரூட் - Beetroot for cancer prevention in Tamil

புற்றுநோய் என்பது, செல்களில் ஏற்படும் ஒரு அசாதாரணமான வளர்ச்சியைக் கொண்டு குறிப்பிடப்படுகிற நோய் ஆகும். பீட்ரூட்டுகள், அவற்றை ஒரு சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு காரணியாக ஆக்கக் கூடிய, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை ஏராளமான அளவு கொண்டிருக்கின்றன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

ஒரு முன் மருத்துவ ஆய்வு, பீட்ரூட் சாற்றின், கட்டிகளின் வளர்ச்சியைத்  தடுக்கும் விளைவுகளை வெளிப்படுத்தியது. விலங்கு மாதிரிகளின் உணவுக் குழாய் புற்றுநோய் செல்களின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சிவப்பு பீட்ரூட், அழற்சியை மற்றும் செல்களின் இறப்பைக் குறைக்க உதவுகிறது என்று தெரிவித்தது.

ஆய்வாளர்களின் கருத்துப் படி, பீட்ரூட்டின் கீமோ தடுப்பு பண்புகள், பெட்டாசியானின்கள், பெட்டைன் மற்றும் பெட்டாலைன்கள் ஆகியவற்றின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டின் காரணமாக அமைந்துள்ளன.

மற்றொரு ஆய்வு, பீட்ரூட்டில் இருக்கின்ற ஒரு உணவு நிறமியான பெட்டானின், மார்பக புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றுக்கு எதிரான, கீமோ தடுப்பு திறனைக் கொண்டிருக்கிறது என சுட்டிக் காட்டியது.

அடுத்தகட்ட ஆய்வுகள், பீட்ரூட்டை புற்றுநோய்-எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்த இயலுமா என்பதை வெளிப்படுத்தக் கூடும்.

உடல் எடைக் குறைப்புக்காக பீட்ரூட் - Beetroot for weight loss in Tamil

உடல் பருமன் என்பது, உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேருவதைக் கொண்டு வகைப்படுத்தப்படும், ஒரு உடல்நலப் பிரச்சினை ஆகும். சீரான உடலியல் செயல்பாடுகள் மற்றும் உணவுப் பழக்கத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்தல் ஆகியவை, உடல் எடையைக் குறைக்க மிகவும் சிறந்த வழிகள் ஆகும்.

உடல் பருமன் உள்ள 97 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின் படி, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது, எடைக் குறைப்புக்கு உதவக் கூடியதாகும். இது பீட்ரூட்டை ஒரு பொருத்தமான காய்கறித் தேர்வாக ஆக்குகிறது. ஏனென்றால் பீட்ரூட், 88% தண்ணீரினால் ஆனது மற்றும் பொருட்படுத்தத் தேவை இல்லாத அளவில் மட்டுமே, கொழுப்புக்களைக் கொண்டிருக்கிறது.

பீட்ரூட்டுகள், உணவுசார் நார்ச்சத்துக்களையும் செறிவாகக் கொண்டுள்ளன. அதிக அளவில் நார்ச்சத்து எடுத்துக் கொள்வது, கொழுப்பு அளவுகளைக் குறைக்க உதவி செய்து, அதன் மூலம்  உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதற்கும் மேலாக, நார்ச்சத்துக்கள் செறிந்த உணவானது, உணவை மெல்லும் நேரத்தினை அதிகரிக்க, நீரினைக் கிரகித்துக் கொள்ள, வயிறு நிரம்பி இருப்பது போன்ற ஒரு உணர்வை உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு அளிக்க ஆகியவற்றுக்கு உதவக் கூடியதாகும். மேலும் அது, உணவுக்குப் பிறகு சேர்கின்ற உணவுசார் சர்க்கரைகளைக் கிரகிப்பதையும் தாமதப்படுத்துகிறது.

(மேலும் படிக்க: உடல் எடைக் குறைப்புக்கான உணவுப்பழக்க அட்டவணை)

விளையாட்டு செயல்பாடுகளுக்காக பீட்ரூட் - Beetroot for athletic performance in Tamil

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், அதிலும் குறிப்பாக ஆரம்பகட்ட நிலையில் இருப்பவர்கள், உடலின் கடினமான உழைப்பு மற்றும் நீர் வற்றிப்போதலின் காரணமாக, அடிக்கடி எளிதில் சோர்வடைந்து விடுவர். இது செயல்பாட்டில், அடிக்கடி இடையூறை ஏற்படுத்துகிறது. பீட்ரூட் சாறு, உடற்பயிற்சிகளின் போது ஆக்கத்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவக் கூடியது என ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

பீட்ரூட், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் மற்றும் பொட்டாசியம், சோடியம், பெட்டைன், பெட்டலைன்கள் மற்றும் உணவுசார் நைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் மிகச் சிறந்த ஒரு ஆதாரமாகும். இந்த தொகுதிகள் அனைத்தும், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தக் கூடியவை ஆகும்.

உணவுசார் நைட்ரேட்டுகள், உமிழ்நீரின் மூலம் நைட்ரேட்டுகளாக மாற்றப்படக் கூடியவை ஆகும். இந்த நைட்ரேட்டுகள், இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, அதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி புரியக் கூடியவை ஆகும். அதிகரித்த இரத்த ஓட்டமானது, தசைகளுக்குக் கிடைக்கும் சிறந்த ஆக்சிஜன் அளிப்பின் காரணமாக, ஒரு மேம்பட்ட தாக்குப் பிடிக்கும் திறனுக்கு வழிவகுக்கிறது.

ஒரு அழற்சி -எதிர்ப்பு காரணியாக பீட்ரூட் - Beetroot as an anti-inflammatory agent in Tamil

அழற்சி என்பது, ஒரு காயம் அல்லது ஒரு நோய்த்தொற்றுக்கு எதிரான, உடலின் இயற்கையான மறுவிளைவு ஆகும். பெரும்பாலும் அது, சிவந்து போதல், வீக்கம் அல்லது காயத்தின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில் பீட்ரூட், ஒரு சக்தி வாய்ந்த அழற்சி-எதிர்ப்பு காரணி ஆகும். ஒரு முன் மருத்துவ ஆய்வு, பீட்ரூட்டைஉட்கொள்வதை வாய்வழியாக எடுத்துக் கொள்வது அழற்சியைக் குறைக்க உதவுவதை வெளிப்படுத்தியது.

இந்த விளைவு, பெட்டலைன் இருப்பதன் காரணமாக ஏற்பட்டது. மேலும் அந்த ஆய்வு, பீட்ரூட் தொடர்ச்சியாக உட்கொள்வது, மனிதர்களுக்கு ஏற்படும் நீடித்த அழற்சியைத் தடுக்க உதவக் கூடியது என்றும் தெரிவித்தது.

(மேலும் படிக்க: அழற்சி நோய்களின் வகைகள்)

கல்லீரலுக்கான பீட்ரூட்டின் நன்மைகள் - Beetroot benefits for liver in Tamil

கல்லீரல் உடலின் இரண்டாவது  பெரிய உறுப்பு மற்றும் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உட்பட, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பொறுப்பானதாக இருக்கிறது. ஆயினும், கல்லீரலின் முதன்மையான பொறுப்பானது, செரிமானப் பாதையில் இருந்து வரும் இரத்தத்தினை, அது உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் முன்னர், அதை சுத்தப்படுத்துவதாகும். கல்லீரல், மருந்துகள் மற்றும் உணவுகள் மூலமாக, நமது உடலுக்குள் நுழையும், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைப் போக்கவும் செய்கிறது . கல்லீரலுக்கு ஏற்படும் எந்த ஒரு சேதமும், இந்த அனைத்து நச்சுப்பொருட்களும் உடலில் குவிந்து, உடலின் செயல்பாடுகளில் ஒரு சீரழிவை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளும் கல்லீரல் நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றாலும், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மை, கல்லீரலுக்கு ஏற்படும் சேதத்தை அதிகரிக்கக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக பீட்ரூட், ஒரு மிகச் சிறந்த  ஈரல் பாதுகாப்பு காரணியாக இருக்கக் கூடும.

ஆய்வுகளின் அடிப்படையில், பீட்ரூட்டில் இருக்கின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி பெட்டலைன்கள், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மைக்கு எதிராகப் பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடும். ஒரு முன் மருத்துவ ஆய்வில், 28 நாட்கள் கால அளவுக்கு பீட்ரூட் சாறு பிற்சேர்க்கையை அளிப்பது, என்-நைட்ரோசோடியதைலமின் என அழைக்கப்படும் ஒரு மூலக்கூறினால் ஏற்படுகின்ற டி.என்.ஏ. சேதம், மற்றும் கல்லீரல் பழுதினைக் குறைக்கிறது என அறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வு பீட்ரூட் சாறுகள், கல்லீரல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைக் குறைப்பதைக் காட்டியது.

(மேலும் படிக்க: கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை)

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி பீட்ரூட்டுக்கும் பொருந்தும். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி, மிதமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது நமது உடலுக்கு பல்வேறு அற்புதங்களைப் புரிகிறது. ஆயினும், பீட்ரூட்டுக்கள் சில பக்க விளைவுகளைக்  கொண்டிருக்கின்றன. அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டு உள்ளன:

  • பீட்ரூட்டை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, உங்கள் உடல், சிறுநீர் மற்றும் மலத்தை இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேற்றும் பீட்டுரியா  எனப்படும் ஒரு நிகழ்வுக்கு வழிவகுக்கிறது. இந்தப் பிரச்சினை ஒரு எச்சரிக்கை அளிக்கக் கூடியதாகத் தோன்றினாலும், பொதுவாக இது எந்தத் தீங்கும் அற்றது, மேலும் 48 மணி நேரங்களில் இயல்பாகி விடுவதாக இருக்கிறது.
  • இந்தக் காய்கறி அதிக அளவிலான ஆக்ஸலேட்டுகளைக் கொண்டிருக்கும் காரணத்தால், பீட்ரூட்டை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகக் கூடும். அந்த ஆக்ஸலேட் உட்பொருளை, பீட்ரூட்டை வேக வைப்பது அல்லது சமைப்பதன் மூலம் குறைக்க முடியும்.
  • இரைப்பை பிரச்சினைகளைக் கொண்டவர்கள் அல்லது உணர்திறன் மிக்க வயிற்றைக் கொண்டவர்களுக்கு பீட்ரூட், அதிலும் குறிப்பாக பச்சையாக பீட்ரூட் எடுத்து கொள்வது, பிரச்சினையின் தீவிரத்தை அதிகரிக்கக் கூடும்.
  • பீட்ரூட், இரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகின்ற அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, குறை இரத்த அழுத்தம் அல்லது தாழ் இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கலாம்.
  • அடர்த்தியான பீட்ரூட் சாறு அல்லது பீட்ரூட் சாற்றினை நீர் சேர்க்காமல் நேரடியாக உட்கொள்வது, தொண்டையில் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தி, பேசுவதில் சிரமம் ஏற்படக் காரணமாகலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

பீட்ரூட் பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருப்பதாலும்,  அதனை ஒருவர் உண்பதற்குப் பல்வேறு வழிகள் இருப்பதாலும், அதனை, உண்பதற்குரிய ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக, எளிதாக வகைக்கப்படுத்த முடியும். பீட்ரூட்டின் ஆரோக்கியம் அளிக்கும் சில நன்மைகளில் அதன், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் நீரிழிவினைக் கட்டுப்படுத்தும் திறனும் அடங்கும். பீட்ரூட்டின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவக் கூடியவை ஆகும். பீட்ரூட், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதில் உதவுகின்ற, நார்ச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. பீட்ரூட்டுக்கள் அதிக பக்க விளைவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அளவுக்கு அதிகமாக அல்லது தவறான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது அது, மருத்துவப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

Dr. Dhanamjaya D

Dr. Dhanamjaya D

Nutritionist
16 Years of Experience

Dt. Surbhi Upadhyay

Dt. Surbhi Upadhyay

Nutritionist
3 Years of Experience

Dt. Manjari Purwar

Dt. Manjari Purwar

Nutritionist
11 Years of Experience

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 Years of Experience

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 11080, Beets, raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Health Harvard Publishing, Updated: April 3, 2019. Harvard Medical School [Internet]. Potassium and sodium out of balance. Harvard University, Cambridge, Massachusetts.
  3. Leah T, Peter M Clifton. Nutr J. 2012; 11: 106. PMID: 23231777
  4. Kapadia GJ, Tokuda H, Konoshima T, Nishino H. Chemoprevention of lung and skin cancer by Beta vulgaris (beet) root extract. Cancer Lett. 1996 Feb 27;100(1-2):211-4. PMID: 8620443
  5. John F. Lechner et al. Drinking Water with Red Beetroot Food Color Antagonizes Esophageal Carcinogenesis in N-Nitrosomethylbenzylamine-Treated Rats J Med Food. 2010 Jun; 13(3): 733–739. PMID: 20438319
  6. Kapadia GJ, Azuine MA, Rao GS, Arai T, Iida A, Tokuda H. Cytotoxic effect of the red beetroot (Beta vulgaris L.) extract compared to doxorubicin (Adriamycin) in the human prostate (PC-3) and breast (MCF-7) cancer cell lines. Anticancer Agents Med Chem. 2011 Mar;11(3):280-4. PMID: 21434853
  7. Ello-Martin JA, Roe LS, Ledikwe JH, Beach AM, Rolls BJ. Dietary energy density in the treatment of obesity: a year-long trial comparing 2 weight-loss diets. Am J Clin Nutr. 2007 Jun;85(6):1465-77. PMID: 17556681
  8. Joanne Slavin. Fiber and Prebiotics: Mechanisms and Health Benefits. Nutrients. 2013 Apr; 5(4): 1417–1435. PMID: 23609775
  9. Sha Li et al. The Role of Oxidative Stress and Antioxidants in Liver Diseases. Int J Mol Sci. 2015 Nov; 16(11): 26087–26124. PMID: 26540040
  10. ajka-Kuźniak V, Szaefer H, Ignatowicz E, Adamska T, Baer-Dubowska W. Beetroot juice protects against N-nitrosodiethylamine-induced liver injury in rats. Food Chem Toxicol. 2012 Jun;50(6):2027-33. PMID: 22465004
  11. Kapadia GJ et al. Chemoprevention of DMBA-induced UV-B promoted, NOR-1-induced TPA promoted skin carcinogenesis, and DEN-induced phenobarbital promoted liver tumors in mice by extract of beetroot. Pharmacol Res. 2003 Feb;47(2):141-8. PMID: 12543062
  12. Watts AR, Lennard MS, Mason SL, Tucker GT, Woods HF. Beeturia and the biological fate of beetroot pigments. Pharmacogenetics. 1993 Dec;3(6):302-11. PMID: 8148871
Read on app