அமுக்கரா கிழங்கு என்றால் என்ன?

நீங்கள் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துகொள்கிறீர்கள் அல்லது மாற்று மருந்துகளை நம்புகிறீர்கள் என்றால், அமுக்கரா கிழங்கு என்ற பெயரை நீங்கள் பல முறை கேட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏன் இல்லை? அமுக்கரா கிழங்கு மிகவும் முக்கியமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும். அதர்வன வேதத்தின் படி அமுக்கரா கிழங்கின் இருப்பு மற்றும் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் பண்டைய மரபு சார்ந்த மருத்துவ முறை பெரும்பாலும் அமுக்கரா கிழங்கை "மாயாஜால மூலிகை" அல்லது அடாப்டோகான் (மன அழுத்த எதிர்ப்பு முகவர்) என்று குறிப்பிடுகிறது. ஏனெனில் அமுக்கரா கிழங்கு மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் மற்றும் பதற்றம் போன்ற குறைபாடுகளில் இருந்து விடுபட மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும்.

அமுக்கரா கிழங்கிற்கு அஸ்வகந்தா என்ற பெயர் உண்டு. அஸ்வ என்ற சொல் குதிரையையும், கந்தா என்ற வாசனையையும் குறிக்கிறது. கூடுதலாக உண்மையில், அஸ்வகந்தாவின் வேர்களிலிருந்து குதிரையின் சிறுநீர் அல்லது வியர்வையின் தனித்துவமான மணம் வரும். இவ்வாறாக இந்த அமுக்கரா கிழங்கு, அஷ்வகந்தா என்று பெயர் பெற்றது. மேலும், அமுக்கரா கிழங்கு, மனிதனின் உடலில் சேரும் போது, மனிதனுக்கு குதிரை போன்ற வீரியத்தை (வலிமை மற்றும் பாலியல் சக்தியை) அளிக்கிறது என்று ஆயுர்வேத ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

அமுக்கரா கிழங்கு பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

  • தாவரவியல் பெயர்: வித்தானியா சோம்னிஃபெரா 
  • குடும்பம்: சோலனேசே (நைட்ஷேட் குடும்பம்)
  • சமஸ்கிருதப் பெயர்கள்: அஷ்வகந்தா, வராஹகர்ணி (பன்றி காதுகளை போன்ற இலைகள்), காமரூபினி.
  • பொதுவான பெயர்கள்: குளிர்கால செர்ரி, இந்திய ஜின்ஸெங், விஷ நெல்லிக்காய்.
  • பயன்படுத்தப்படும் பகுதிகள்: பெரும்பாலும் இதன் வேர்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்படுகிறது ஆனால் மலர்கள் மற்றும் விதைகள் கூட பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
  • பூர்வீக பிராந்தியம் மற்றும் விநியோகம் செய்யப்படும் புவியியல் பரப்பு: அமுக்கரா கிழங்கு இந்தியாவின் பெரும்பாலான பல வறண்ட பகுதிகள் (முக்கியமாக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்), நேபாளம், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளை பூர்வீக இடங்களாக கொண்டுள்ளது, ஆனால் இது அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  1. அமுக்கரா கிழங்கு எவ்வாறு வேலை செய்கிறது - How does Ashwagandha work in Tamil
  2. உடல்நல நன்மைகள் மற்றும் அமுக்கரா கிழங்கின் பயன்கள் - Health Benefits and Uses of Ashwagandha in Tamil
  3. அமுக்கரா கிழங்கு மற்றும் அமுக்கரா கிழங்கு தூளை எப்படி பயன்படுத்த வேண்டும் - How to use Ashwagandha and Ashwagandha Powder in Tamil
  4. அமுக்கரா கிழங்கின் மருந்து அளவை - Ashwagandha Dosage in Tamil
  5. அமுக்கரா கிழங்கின் பக்க விளைவுகள் - Side effects of Ashwagandha in Tamil
அமுக்கரா கிழங்கின் நன்மைகள், பக்க விளைவுகள், பயன்கள் மற்றும் மருந்தின் அளவு டாக்டர்கள்

அமுக்கரா கிழங்கில் பல "செயல்கள்" உள்ளன. செயல் என்பது மூலிகையியலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு மூலிகையின் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் சரியான முறையில் ஒரு மூலிகை ஒரு உடலின் ஒட்டுமொத்த நலனுக்காக செயல்படும் முறை ஆகியவற்றை வரையறுக்க பல்வேறு சொற்கள் உள்ளன. அமுக்கரா கிழங்கை ஒரு மூலிகையாக பயன்படுத்தி பார்க்கப்பட்ட பிறகு தெரியவந்த பயன்களின் ஒரு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • அமுக்கரா கிழங்கு அறியப்பட்ட அடாப்டோஜனாக இருப்பதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைத் தடுக்க இது பயன்படுகிறது.
  • இது உடல் புத்துயிர் பெற உதவுகிறது மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சில சமீபத்திய ஆய்வாளர்களின் கூற்றுபடி, அமுக்கரா கிழங்கு சில புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் இந்த மூலிகையின் சாத்தியமான பயன்பாடுகளைத் தீர்மானிப்பதில் ஆராய்ச்சி தொடர்கிறது.
  • இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது: அமுக்கரா கிழங்கு மூட்டு வலியை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக முடக்கு வாதம் கொண்டவர்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • அமுக்கரா கிழங்கின் பயன்பாடு பாலியல் வீரியம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஒரு சிறுநீர்த்தூண்டியாக, இது உடலில் இருந்து அதிகப்படியான திரவம் மற்றும் உப்புகள் நீக்க உதவுகிறது.
  • அமுக்கரா கிழங்கு தோல் சுத்திகரிப்பு மற்றும் வயதான தோற்றத்திற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை தவிர்க்க உதவுகிறது.
  • ஒரு ஆய்வில், இது ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சக்தி ரீதியாக, அமுக்கரா கிழங்கு உடல் மீது வெப்பமயமாக்கல் விளைவைக் கொண்டிருக்கிறது. ஆயுர்வேதத்தில், பிட்டா-வை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது.

அதனால் பிட்டா என்றால் என்ன?

ஆயுர்வேதம், நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு மூன்று "டோஷஸ்" அல்லது ஆற்றல் வாய்ந்த கட்டுப்பாட்டாளர்கள் சமநிலையில் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவை:

  • உடலில் இயக்கம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கொண்ட வடா-டீல்ஸ்.
  • உடலில் வளர்சிதை மாற்றத்தை கொண்ட பிட்டா-டீல்ஸ்.
  • உடலின் திரவ சமநிலையை கொண்ட கபா -டீல்ஸ்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

மன அழுத்த நிபுணர் என பிரபலமாக இருப்பினும், அமுக்கரா கிழங்கு பல்வேறு வகையான பயன்களைக் கொண்டுள்ளது. இந்த மூலிகை பொதுவாக நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என அறிவுறுத்த சில வழிகளை ஆராயலாம்.

  • மனநலத்தை மேம்படுத்துகிறது: அமுக்கரா கிழங்கு ஒரு நன்கு அறியப்பட்ட அடாப்டோகான். மன அழுத்தம், மன சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது மேலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற அழுத்தம் தொடர்பான நிலைமைகளை இது தடுக்க்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
  • நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது: அஷ்வகந்தா அமுக்கரா கிழங்கு ஆய்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சிறந்த நீரிழிவு எதிர்ப்பு முகவர் ஆகும். ஆரோக்கியமான மக்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இருவருக்கும் இது இன்சுலின் அளவுகளை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது அஸ்வகுந்தா பயனுள்ளதாக இருக்கும்.
  • கீல்வாத அறிகுறிகளை குறைக்கிறது: ஒரு வலிமையான அழற்சி எதிர்ப்பானாக இருப்பதால், மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை குறைக்க இது பயன்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் கீல்வாதம் ஏற்பட காரணமாக கருதப்படும் பிட்டுவை சமப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டுகிறது: ஆராய்ச்சியின் ஆதாரங்கள் அமுக்கரா கிழங்கு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் ஊக்கமூட்டி என்பதைக் குறிக்கிறது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு திறனை அதிகரிக்கிறது.
  • காயம் ஆறுவதை ஊக்குவிக்கிறது: அமுக்கரா கிழங்கினை மருத்துவமனைசார் சிகிச்சைக்கு முன்பு, வாய்வழி எடுத்துக்கொள்வதால் காயங்கள் ஆறும் செயல்முறை வேகப்படுத்தபடுகிறது என பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நன்மையை உறுதிப்படுத்த மனித அடிப்படையிலான ஆய்வுகள் இன்னும் தேவை.
  • ஒரு நிம்மதியான தூக்கத்தை அளிக்கிறது: மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை அமைதிப்படுத்துவதன் மூலம், அமுக்கரா கிழங்கு நீங்கள் நன்கு தூங்குவதற்கு தேவையான அளவு உங்கள் மூளையை சாந்தப்படுத்துகிறது.
  • பாலியல் உடல்நலத்தை அதிகரிக்கிறது: அமுக்கரா கிழங்கு ஆண்கள் மற்றும் பெண்களில் கலவியல் வீரியத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. ஆண்குறி விறைப்புத் தன்மை மற்றும் விந்து எண்ணிக்கை ஆகியவற்றை ஆண்களில் மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்கிறது: அமுக்கரா கிழங்கு உடலில் உள்ள T4 அளவை அதிகரிப்பதாகவும், தைராய்டு சுரப்புக் குறைப்பைத் தடுப்பதாவும் கண்டறியப்பட்டுள்ளது. மனிதப் பயன்பாட்டிற்கான அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
  • இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: அமுக்கரா கிழங்கு இதய தசைகளை வலுப்படுத்துதல், அடைப்பு உருவாவதை தடுத்தல் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை குறைத்தல் ஆகியவற்றை செய்வதால் மனிதனின் இதயத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. இதய நோயை ஏற்படுத்தும் ஒரு பெரிய ஆபத்து காரணியான கொழுப்பையும் குறைகிறது.
  • மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது: பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோயால் ஏற்படும் நரம்பியல் சேதத்தை அமுக்கரா கிழங்கு குறைபதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், எவ்வாறு அது நடக்கிறது என்ற செயல்முறை தற்போதைக்கு அறியப்படவில்லை.
  • அட்ரீனல் சோர்வை எதிர்த்து போராடுகிறது: அடாப்டோஜெனிக் மூலிகையாக, அமுக்கரா கிழங்கு உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது, இதையொட்டி உங்கள் உடலில் உள்ள கார்டிசோல் (மன அழுத்தம் ஹார்மோன்) அளவுகள் குறைக்கிறது. இதனால் சிறுநீரகங்கள் மீது குறைந்த அழுத்தமே ஏற்படுகிறது, எனவே குறைந்த அளவிலேயே அட்ரீனல் சோர்வு உண்டாகிறது.
  • பாம்பு கடித்தலுக்கான ஒரு விஷ முறிப்பானாக செயல்படுகிறது: அமுக்கரா கிழங்கின் மேற்பூச்சுப் பயன்பாடு பாம்பு விஷத்தை நடுநிலைப்படுத்தி அது மேலும் உடலில் பரவுவதை தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பாரம்பரியமான விஷ முறிவு மூலிகை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
  • சருமத்திற்கு நன்மை: எதிர் ஆக்சிகரணியின் ஒரு வளமான ஆதாரமாக, அமுக்கரா கிழங்கு சரியான ஒரு வயது முதிர்வை தடுக்கும் மூலிகை ஆகும். இது வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் முதல் அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது, மேலும் உலர் தோல் மற்றும் கெரடோசிஸிற்கு எதிராக பாதுகாக்கிறது.
  • முடிக்கான சிறந்த ஊட்டமருந்து: அமுக்கரா கிழங்கு முடி உதிர்தலை தடுக்க மற்றும் நீண்ட மற்றும் தடிமனான முடி வளர்வதை ஊக்குவிக்க உதவ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. ஒரு எதிர் ஆக்சிகரணியாக, இது முன்கூட்டியே முடி சாம்பல் நிறமாகி மாறுவதையும் மற்றும் முடி இழப்பு ஏற்படுவதையும் தாமதமாக்குகிறது.
  • மாதவிடாய் நிற்கும் காலத்திலான அறிகுறிகளைக் குறைக்கிறது: அமுக்கரா கிழங்கின் ஊட்டமருந்து மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் நிற்கும் காலத்திலான பெண்களுக்கு உதவும் ஒரு சிறந்த வழிமுறையாக அமையும். இது மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை குறைத்து மற்றும் ஹார்மோன் சுரப்பை சீராக்கி, மாதவிடாய் நிற்கும் காலத்திலான அறிகுறிகளில் இருந்து பெண்களுக்கு ஓய்வு அளிக்கிறது.
  • ஆண்களில் கரு உருவாக்கும் தன்மையை அதிகரிக்கிறது: அமுக்கரா கிழங்கின் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும் தன்மையை ஆராய்ச்சி ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இது விந்து எண்ணிக்கை மற்றும் விந்து இயக்குநீர் அளவுகளை மட்டும் அதிகரிப்பது இல்லை, மேலும் பாலியல் வீரியம் மற்றும் பாலியல் செயல்திறனை அதிகரிக்கிறது.

நிம்மதியான தூக்கத்திற்கு அமுக்கரா கிழங்கு - Ashwagandha for a restful sleep in Tamil

ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு வலுவான மயக்கமருந்து அல்ல, ஆனால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அமைதி படுத்தி நல்ல தூக்கத்தை தூண்டுவதில் உதவுகிறது என குறிப்பிடுகின்றனர்.

அமுக்கரா கிழங்கினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் - Ashwagandha benefits for men in Tamil

அமுக்கரா கிழங்கு ஆண்களின் கருவுற செய்யும் வளத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான முதன்மை மூலிகைகளில் ஒன்றாகும். அமுக்கரா கிழங்கின் வழக்கமான பயன்பாடு ஆண்களில் பாலின உந்துதலை மட்டும் அதிகரிப்பது மட்டுமல்லாது மொத்த விந்து எண்ணிக்கை மற்றும் விந்து இயக்குநீரின் (டெஸ்டோஸ்டிரோன்) அளவை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமுக்கரா கிழங்கின் புத்துணர்ச்சியூட்டும் நன்மைகள் மனிதனின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் போது, அது அதிக வலிமை மற்றும் வீரியமான ஆண்மை தன்மையை தருவதால் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அமுக்கரா கிழங்கினால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் - Ashwagandha benefits for women in Tamil

ஹார்மோன்களை சமன் செய்து பெண்களுக்கு ஏற்படும் கவலை, எரிச்சல் மற்றும் மன அழுத்தம் போன்ற மாதவிடாய் நிற்கும் காலத்திலான அறிகுறிகளைக் குறைபதில் அமுக்கரா கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஊட்டமருந்தாக, அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்வது பல உணவு தொடர்பான குறைபாடுகளை குறைப்பதில் உங்களுக்கு உதவுகிறது, அதே நேரத்தில் உடலில் உள்ள நச்சுகள் ஒரு சிறுநீரின் மூலம் வடிகட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறது. உடலில் உள்ள நச்சுகள் குறைவாக இருக்கும் போது, உங்கள் உடலின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு பாலியல் உந்துதல் அதிகரிப்பதில் அமுக்கரா கிழங்கு சக்தி வாய்ந்த நேர்மறை விளைவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இது உடலில் உள்ள அழுத்தத்தை குறைத்து பெண்களுக்கு ஏற்படும் பாலியல் உந்துதலை அதிகரிக்கிறது.

முடிக்கு அமுக்கரா கிழங்கு - Ashwagandha for hair in Tamil

அமுக்கரா கிழங்கின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஊட்டச்சத்துசார் விளைவுகள் முடிக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்தை உருவாக்குகின்றன. அமுக்கரா கிழங்கு மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து மற்றும் முடியை வலுப்படுத்தி வளர்க்கிறது. அமுக்கரா கிழங்கை வழக்கமாக எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள மன அழுத்தத்தை குறைத்து முடி உதிர்வை குறைப்பதாக அறியப்படுகிறது. கூடுதலாக, அமுக்கரா கிழங்கில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், ஒற்றை மின்னணு உருபுகளுக்கு எதிராக போராடி முடியின் வேர் கால்களில் ஏற்படும் ஊட்டச்சத்து சேதத்தை எதிர்த்து நிற்கின்றன, இதனால் முடி தனது இயற்கை நிறத்தை இழப்பதிலிருந்து தடுக்க முடிகிறது.

தோலின் மீதான அமுக்கரா கிழங்கின் நன்மை - Ashwagandha benefits for skin in Tamil

தோலை சுத்தமாகவும் மிருதுவானதாகவும் வைத்துக்கொள்ள விரும்பாத எவரும் இருக்கிறாரா? அமுக்கரா கிழங்கு தோல் முதிர்ச்சியடைவதை தடுப்பதற்கு மிகவு உதவுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வயதான தோற்றத்திற்கு மிகவும் பொதுவான காரணம் நமது உடலினால் தினசரி மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளின் விளைவாக நமது உடலில் உருவாகும் ஒற்றை மின்னணு உருபு ஆகும். அமுக்கரா கிழங்கின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், இந்த ஒற்றை மின்னணு உருபுகளுக்கு எதிராக போராடுவதோடு, உங்கள் தோலை ஒளிரவும் மற்றும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல், அமுக்கரா கிழங்கு உடலில் உள்ள ஒற்றை மின்னணு உருபுகளின் உருவாக்கத்தை தடுத்து, தோல் சுருக்கங்கள், இருண்ட புள்ளிகள் மற்றும் முதிர்வடைந்த வயதான தோற்றம் போன்ற பிற அறிகுறிகளை அகற்ற உதவுகிறது. கூடுதலாக, இதை தோல் வறண்டு மற்றும் கடினமானதாக மாற காரணமாக இருக்கும் கெரடோசிஸ்-க்கு (ஒரு வகை தோல் பிரச்சனை) எதிராகவும் பயன்படுத்தப்படலாம். அமுக்கரா கிழங்கின் தேநீர் தினசரி ஒரு கப் குடிப்பதை, கெரடோசின் அறிகுறிகளைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பாம்பு கடிக்கு அமுக்கரா கிழங்கு - Ashwagandha in snake bites in Tamil

அமுக்கரா கிழங்கு, பல ஆய்வுகளில், உடலில் பாம்பு விஷத்தை இயல்பாகவே முறிக்க உதவும் நஞ்சு வினைத்தடுப்பி என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு கிளைகோப்ரோட்டீன் (ஒரு வகை புரதம்) என கூறப்பிடப்படுகிறது. இது உடலில் ஹையலூரோனிடேஸ் பரவுவதை தடுக்கிறது. ஹையலூரோனிடேஸ் என்பது பாம்பு கடித்த இடத்தின் அருகிலுள்ள திசுக்களுக்கு விஷம் பரவ உதவுகிற, பாம்பு விஷத்தின் ஒரு பகுதியாகும். அஷ்வகந்தாவின் மேற்பூச்சு தயாரிப்பு பாரம்பரியமாக இந்தியாவில் பாம்பு கடித்ததற்கு எதிராக போராட ஒரு பொதுவான முறையாக பயன்படுத்தப்படுகிறது.

அட்ரீனல் சோர்வுக்காக அமுக்கரா கிழங்கு - Ashwagandha for adrenal fatigue in Tamil

நீங்கள் எல்லா நேரத்திலும் மன அழுத்தம் மற்றும் சோர்வாக உணர்கிறீர்களா? அதற்கு அட்ரீனல் சோர்வு ஒரு காரணமாக இருக்கலாம். இதைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லையா? பெரும்பாலான மக்கள் இதைப்பற்றி அறிவது இல்லை. ஆனால் இது பிஸினஸ் மற்றும் வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது ஆனால் இதற்கு காரணம் மன அழுத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை. வேலை பழு அல்லது வேறு ஏதாவது காரணங்களால் மன அழுத்தம் இருந்தாலும், உடலில் நிலையான தொடர் அழுத்தம் ஏற்படலாம் இதனால் அட்ரீனல் சுரப்பிகள் (சிறுநீரகங்களுக்கு மேலே உள்ள சுரப்பிகள்) கார்டிசோல் என்றழைக்கப்படும் ஹார்மோனை வெளியிடுகிறது. கார்டிசோல் உடலின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு "மன அழுத்த ஹார்மோன்" ஆகும். இது சோர்வு, செரிமான பிரச்சினைகள், தூக்கத்தில் தொந்தரவு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. அமுக்கரா கிழங்கு, நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதை போல, ஒரு மன அழுத்த எதிர்ப்பு மூலிகை ஆகும். இது நம்மை அமைதியாக்கி, உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைப்பதால், அட்ரீனல் சோர்வை எதிர்த்து நிற்கிறது.

நரம்பியல் நோய்களுக்காக அமுக்கரா கிழங்கு - Ashwagandha for neurological diseases in Tamil

பார்கின்சன் மற்றும் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) போன்ற நோய்களின் தாக்கங்களைக் குறைப்பதில் அமுக்கரா கிழங்கு உதவியாக இருக்கும். இருப்பினும் எவ்வாறு இது நடக்கிறது என்று தெரியவில்லை.

ஆரோக்கியமான இதயத்திற்காக அமுக்கரா கிழங்கு - Ashwagandha for a healthy heart in Tamil

அமுக்கரா கிழங்கு உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்புக்களின் அளவை குறைகிறது. இவையே இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இன்றைய தலைமுறையிலுள்ள தமனி அடைப்புகள் போன்ற இதயப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணிகள் ஆகும்.

எனவே அமுக்கரா கிழங்கின் அடாப்டோஜெனிக் பண்பு மன அழுத்தத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மற்றும் இந்த மூலிகை ஒரு தசை தளர்தியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு, அமுக்கரா கிழங்கு உங்கள் இதய தசையில் இறுக்கத்தை குறைக்க ஒரு சக்தி வாய்ந்த முகவராக உள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்த மூலிகையின் ஊட்டச்சத்துசார் விளைவுகள் இதய தசைகளை உறுதிப்படுத்துகிறது என்று கூறுகின்றனர். இந்தியாவில் உயரடுக்கு சைக்கிள் குழுவின் ஒரு குழுவினரின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு அறிவியல் ஆராய்ச்சி, அமுக்கரா கிழங்கின் கார்டியோஸ்ரெஸ்பைரேட்டரி பொறையுடைமை திறனை வெளிப்படுத்தியது. கார்டியோஸ்ரெஸ்பைரேட்டரி பொறையுடைமை என்பது உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் அதிக ஆக்ஸிஜனை வழங்கும் இதயம் மற்றும் நுரையீரலின் திறன் ஆகும். அதிக அளவு இரத்த ஆக்சிஜன் அளவு இருப்பது நாம் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பலருக்கு, அமுக்கரா கிழங்கு தமனிகளில் இரத்தக் குழாய் அடைப்புகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. எனவே, இந்த மூலிகை இதயத்தின் பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளடக்கியது. இது ஒரு சிறந்த முறையில் இதயத்தை நோய் தாக்குதலில் (முழு இதய அமைப்பையும் பாதுகாக்கிறது) இருந்து பாதுகாக்கிறது.

(மேலும் படிக்க: இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள்)

தைராய்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் அமுக்கரா கிழங்கு - Ashwagandha increases thyroid functions in Tamil

உடலில் உள்ள T4 ஹார்மோனின் அளவுகளை அமுக்கரா கிழங்கு அதிகரிக்கிறது என்பதைத் தெளிவாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஹைப்போ தைராய்டிச-த்திற்கான (ஒரு நபருக்கு உடலில் குறைந்த தைராய்டு ஹார்மோன் இருக்கும் ஒரு நிலை) சாத்தியமான சிகிச்சையில் இந்த மூலிகைகளின் வலிமையைக் கண்டறிய ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டு இருக்கின்றன.

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அமுக்கரா கிழங்கு - Ashwagandha for improving sexual health in Tamil

அமுக்கரா கிழங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலுணர்ச்சியை மற்றும் ஆண்களின் மனச்சோர்வு காரணமாக ஏற்படும் விறைப்பு செயலிழப்பிற்கான (முக்கியமாக உளவியல் காரணிகள் காரணமாக ஆண்கள் விறைப்பு தன்மை பெற இயலாமை) சிகிச்சையின் பலனை மேம்படுத்துவதில் கணிசமான விளைவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமுக்கரா கிழங்கை வழக்கமாக எடுத்துக்கொள்வதால் ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமுக்கரா கிழங்கு காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது - Ashwagandha helps heal wounds in Tamil

ஆயுர்வேதத்தின் படி, அமுக்கரா கிழங்கு ஒரு இயற்கையான காயங்களை குணப்படுத்தும் ஆச்சரியமான மருந்து. பாரம்பரியமாக, பாதிக்கப்பட்ட தோல் மீது அமுக்கரா கிழங்கின் பசை பயன்படுத்தப்படுகிறது. அமுக்கரா கிழங்கு எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்க நீரிழிவு கொண்ட விலங்குகளின் மீது விரிவான ஆய்வு இந்தியாவில் நடத்தப்பட்டது. அதில் அமுக்கரா கிழங்கு மேற்பூச்சாக பயன்படுத்தப்படுவதை விட வாய்வழியாகப் பயன்படுத்தும்போது வேகமாக காயங்களைக் குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று ஆராய்ச்சி தெரிவித்தது. இருப்பினும், மனிதர்கள் மீது இதுவரை ஆய்வுகள் இல்லாத நிலையில், எந்தவித காயங்களையும் குணப்படுத்துவதற்கு அமுக்கரா கிழங்கை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதே சிறந்தது.

வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்காக அமுக்கரா கிழங்கு - Ashwagandha for a strong immune system in Tamil

அமுக்கரா கிழங்கு "மைடேக் காளான் சாறு" (ஒரு சமையல் காளான், பொதுவாக ஆசியாவில் உட்கொள்ளப்படுகிறது) உடன் சேர்த்து பயன்படுத்தப்படுவதால் பாகோசைடிக் நடவடிக்கைகளை (புற  நோய்க்கிருமிகளை அழிக்கும் நமது உடலின் திறன்) அதிகரிப்பதில் திறம்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே இது தொற்றுநோய்களை எதிர்க்கும் உடலின் திறனை அதிகரிக்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டால் சில அமுக்கரா கிழங்கு தேயிலைகளை நீரில் காய வைத்து வடிகட்டி குடித்து, ஜலதோஷ கிருமிகளுடன் சண்டையிடுங்கள்.

(மேலும் படிக்கவும்: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்)

மூட்டு பிரச்சனைகளுக்கான அமுக்கரா கிழங்கு - Ashwagandha as an anti-arthritic in Tamil

நீங்கள் வீங்கிய மற்றும் வலிமிகுந்த மூட்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அமுக்கரா கிழங்கு அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறிப்பாக இந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள், கீல்வாத அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்க பயனுள்ளதாக இருக்கிறது. ஆயுர்வேதத்தில் கீல்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பு அல்லது பிட்டா-வின் ஏற்றத்தாழ்வு தொடர்பானது என கூறப்படுகிறது. அமுக்கரா கிழங்கு பிட்டா-வை அதிகரிக்கிறது மற்றும் வடா மற்றும் கபாவை குறைக்கிறது. இதனால் அமுக்கரா கிழங்கு மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவுகிறது. இது தவிர, படைநோய், தோல் அழற்சி மற்றும் தலை பொடுகு போன்ற தோல் பிரச்சினைகளை தவிர்க்க இந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகள் உதவுகின்றன.

நீரிழிவு நோய்க்கு அமுக்கரா கிழங்கு - Ashwagandha for diabetes in Tamil

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை அமுக்கரா கிழங்கு குறைக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயாளர்களுக்கு மட்டும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மக்களில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் சமமான திறனையும் கொண்டுள்ளது என கண்டயப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் அன்றாட வாழ்வில் அமுக்கரா கிழங்கை சேர்த்து கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

மனநலத்திற்காக அமுக்கரா கிழங்கு - Ashwagandha for mental health in Tamil

அமுக்கரா கிழங்கில் பல நன்மைகள் மற்றும் பயன்கள் உள்ளன, ஆனால் இது முதன்மையாக மன அழுத்த எதிர்ப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

அமுக்கரா கிழங்கின் பதட்ட நிவாரண பண்புகள் பெரும்பாலும் சீன மற்றும் சைபீரியன் ஜின்ஸெங்-உடன் ஒப்பிடப்படுகிறது. அமுக்கரா கிழங்கு முக்கியமாக பதற்றம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான மன சோர்வை குறைப்பதை நிரூபிக்கும் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இது குறிப்பாக அதன் அடாப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்துசார் பண்புகளின் காரணமாக மன சோர்வை குறைக்க உதவுகிறது. மேலும், பல மன அழுத்தம் தொடர்பான இளமையிலேயே வயதான தோற்றம், உயர் இரத்த அழுத்தம் (ஹைப்பர்டென்ஷன்) மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை தடுக்க அடாப்டோஜினிக் பண்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அமுக்கரா கிழங்கின் வேர் பகுதி தூக்கமின்மை, கட்டிகள், ஆஸ்துமா, வெண்தோல் (லிகோடெர்மா), மூச்சுக்குழாய் அழற்சி, அழுத்தத்தின் காரணமாக நாள்பட்ட வலி (ஃபைப்ரோமியால்ஜியா), அட்ரினல் சோர்வு போன்ற பல நிலைகளுக்கு மருந்தாக பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், பொதுவாக இந்த மூலிகை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஒரு பொதுவான டானிக்காக பயன்படுத்தப்படுகிறது, ஆயுர்வேதத்தில் அமுக்கரா கிழங்கு ரஸாயனா என அழைக்கப்படுகிறது. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உங்கள் தோட்டத்தில் இருந்தே பெற கூடிய இது பல உடல் நலன்களை வழங்க கூடியது. இது ஒரு நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து டானிக்-காக இருப்பதால் அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

பொதுவாக அமுக்கரா கிழங்கு ஒரு தூள் வடிவிலோ அல்லது ஒரு தேநீர் வடிவிலோ அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது. இதை பால், நெய் அல்லது தேன் உடன் சேர்த்து சாப்பிடலாம். அமுக்கரா கிழங்கு டிஞ்சர் (மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட ஆல்கஹாலிக் சாறு) மற்றும் அமுக்கரா கிழங்கு மாத்திரைகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாகிவிட்டன. ஏனெனில் டிஞ்சர் மற்றும் மாத்திரைகள் வடிவில் அமுக்கரா கிழங்கை உபயோகிப்பது அமுக்கரா கிழங்கை எளிதாக உட்கொள்வதற்கும் மற்றும் அது உடலில் வேகமாக வேலை செய்ய தொடங்குவதற்கும் எளிமாமையானதாக உள்ளது.

அமுக்கரா கிழங்கு சந்தையில் சிரப்-கள், மேற்பூச்சு கிரீம்கள் மற்றும் பேஸ்ட்-கள் ஆகிய வடிவத்திலும் கிடைக்கின்றது.

இங்கு அமுக்கரா கிழங்கின் பொதுவான மருந்து அளவை மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயினும், உங்கள் ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்ற நீங்கள் உறுதியாக பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

  • ஒரு குவளை டீ தயாரிக்க 1-2 தேக்கரண்டி அஷ்வகந்தா தூள், பால் அல்லது தேன் அல்லது 1-2 மாத்திரைகள், ஒரு நாளைக்கு இரண்டு முறை என்பது பொதுவான மருந்து அளவை.
  • அமுக்கரா கிழங்கின் வேர், பால், தேன், மற்றும் கொட்டைகள்ஆகியவற்றின் கலவையை தூக்க சத்துக் கரைசல் செய்ய பயன்படுத்தலாம். இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது.
  • காயங்கள் மற்றும் அழற்சி சிகிச்சையில் அமுக்கரா கிழங்கின் இலைகளின் பசை பயன்படுத்தப்படலாம்.
  • தேன் கலந்து எடுத்து கொள்ளப்படும் போது, பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.
  • ஆல்கஹால் மற்றும் அமுக்கரா கிழங்கின் சாறு இரண்டையும் கலந்து ஒரு கஷாயம் தயாரிக்கப்படலாம். இந்த மூலிகை மற்ற வடிவங்களில் எடுத்து கொள்ளப்படுவதை விட கஷாயமாக எடுத்து கொள்ளப்படும்போது இரத்தத்துடன் எளிதாக கலக்கிறது மற்றும் விரைவாக செயல்பட்டு நன்மை பயக்கிறது.
  • அமுக்கரா கிழங்கின் கஷாயத்தின் மருந்தளவு, கஷாயத்தின் வீரியம், தனி நபரின் வயது மற்றும் பாலியல் ஆகியவற்றை பொறுத்தது. எனவே இந்த மூலிகை கஷாயத்தை எடுத்து கொள்ள ஆரம்பிக்கும் முன் ஒரு மூலிகை மருத்துவவரிடம் பரிந்துரை பெற வேண்டும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

அமுக்கரா கிழங்கு அதன் நன்மை பயக்கும் தன்மையின் காரணமாக மிகப்பெருமளவில் அறியப்படுகிறது ஆனாலும் இதற்கு சில அறியப்பட்ட பக்க விளைவுகளும் இருக்கிறது. நீங்கள் இந்த மூலிகையை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க மிகவும் நீங்கள் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

  • அமுக்கரா கிழங்கு வெப்பமண்டல விளைவுகளை கொண்டுள்ளதால், ஏற்கனவே இயற்கையாக சூடான உடல் அமைப்பை கொண்டவர்களுக்கு (பிட்டா உடையவர்களுக்கு) நீண்ட காலப் பயன்பாட்டிற்கு பொருந்தாது. பிட்டா உடையவர்கள் இதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால் இரைப்பை புண்கள், வயிற்றுப்போக்கு, மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • நீங்கள் இந்த அமுக்கரா கிழங்கை உங்கள் உணவு முறையில்  சேர்த்துக் கொள்ளும் முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். இது ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் விளைவுகளில் தலையிடக்கூடும் அல்லது மேலும் கூடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மருந்துகளுடன் அமுக்கரா கிழங்கு எடுத்து கொள்ளப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை இன்னும் குறையலாம் (குறைசர்க்கரைத்தன்மை)
  • இது குறிப்பாக கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் ஆராய்ச்சியின்போது அதிக அளவுகளில் இந்த மூலிகை விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போது அது கருச்சிதைவு அல்லது பிரசவ காலத்திற்கு முன்பே பிரசவத்தை ஏற்படுத்தியது.
  • அமுக்கரா கிழங்கு ஒரு இரத்த மெலிவூட்டி மற்றும் இரத்த உறைவைத் தடுப்பான். எனவே நீங்கள் அறுவை சிகிச்சைக்கு செய்துகொள்ள திட்டமிட்டால் அல்லது உங்களுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டிருந்தால் இந்த மூலிகை பயன்படுத்தப்பட கூடாது. நீங்கள் இரத்தத்தை மெலிதாக மாற்றும் மருந்துகளோடு இந்த மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவ்வாறு பயன்பதுத்தும்போது உங்கள் இரத்தம் மேலும் மெலிவடைய கூடும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.
  • அமுக்கரா கிழங்கு ஒரு லேசான மயக்கமூட்டியாக இருப்பதால், இது மயக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதை எந்த ஒரு தூக்க மருந்துகளுடனும் எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அது அதிகபடியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
Dr.Ashok  Pipaliya

Dr.Ashok Pipaliya

Ayurveda
12 Years of Experience

Dr. Harshaprabha Katole

Dr. Harshaprabha Katole

Ayurveda
7 Years of Experience

Dr. Dhruviben C.Patel

Dr. Dhruviben C.Patel

Ayurveda
4 Years of Experience

Dr Prashant Kumar

Dr Prashant Kumar

Ayurveda
2 Years of Experience


Medicines / Products that contain Ashwagandha

மேற்கோள்கள்

  1. Wadhwa R, Singh R, Gao R, et al.Water Extract of Ashwagandha Leaves Has Anticancer Activity: Identification of an Active Component and Its Mechanism of Action
  2. Jessica M. Gannon, Paige E. Forrest, K. N. Roy Chengappa. Subtle changes in thyroid indices during a placebo-controlled study of an extract of Withania somnifera in persons with bipolar disorder. J Ayurveda Integr Med. 2014 Oct-Dec; 5(4): 241–245. PMID: 25624699
  3. Kumar G, Srivastava A, Sharma SK, Rao TD, Gupta YK. Efficacy & safety evaluation of Ayurvedic treatment (Ashwagandha powder & Sidh Makardhwaj) in rheumatoid arthritis patients: a pilot prospective study.. Indian J Med Res. 2015 Jan;141(1):100-6. PMID: 25857501
  4. Vaclav Vetvicka, Jana Vetvickova. Immune enhancing effects of WB365, a novel combination of Ashwagandha (Withania somnifera) and Maitake (Grifola frondosa) extracts. N Am J Med Sci. 2011 Jul; 3(7): 320–324. PMID: 22540105
  5. Taranjeet Kaur and Gurcharan Kaur. Withania somnifera as a potential candidate to ameliorate high fat diet-induced anxiety and neuroinflammation. J Neuroinflammation. 2017; 14: 201. PMID: 29025435
  6. Chandrasekhar K1, Kapoor J, Anishetty S. A prospective, randomized double-blind, placebo-controlled study of safety and efficacy of a high-concentration full-spectrum extract of ashwagandha root in reducing stress and anxiety in adults.. Indian J Psychol Med. 2012 Jul;34(3):255-62. PMID: 23439798
  7. Narendra Singh, Mohit Bhalla, Prashanti de Jager, Marilena Gilca. An Overview on Ashwagandha: A Rasayana (Rejuvenator) of Ayurveda . Afr J Tradit Complement Altern Med. 2011; 8(5 Suppl): 208–213. PMID: 22754076
  8. Vijay R. Ambiye et al. Clinical Evaluation of the Spermatogenic Activity of the Root Extract of Ashwagandha (Withania somnifera) in Oligospermic Males: A Pilot Study . Evidence-Based Complementary and Alternative Medicine Volume 2013, Article ID 571420, 6 pages
  9. Mahesh K. Kaushik et al. Triethylene glycol, an active component of Ashwagandha (Withania somnifera) leaves, is responsible for sleep induction . PLoS One. 2017; 12(2): e0172508. PMID: 28207892
Read on app