- ஓமம், எகிப்தை சேர்ந்த ஒரு மசாலா பொருள், ஆனால் இன்று, இந்திய துணைக்கண்டத்தின் மிகவும் பொதுவான சுவையூட்டும் பொருட்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஓமத்தின் கசப்பு சுவை அவ்வப்போது கறிவேப்பிலையின் சுவையோடு ஒப்பிடப்படுகிறது. இது, அந்த இரண்டு மூலிகைகளும், தைமோல் என அறியப்படும் ஒரு வேதியியல் உட்பொருளை பொதுவாகக் கொண்டிருக்கும் தன்மையின் காரணமாக ஏற்படுகிறது. நீங்கள் இந்த இரண்டு மூலிகைகளையும் ஒப்பிட்டால், ஓமத்தின் சுவையானது, கறிவேப்பிலையின் சுவையை விட மிக அதிகமான காரத்தைக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இருந்த போதிலும், இந்த இரண்டு மூலிகைகளுமே, சமையலறை அலமாரிகளில் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன.
நீங்கள், உங்கள் சொந்த வீட்டு நிவாரணிகளைத் தயாரிப்பதை மிகவும் விரும்புபவராக இருந்தால், ஓமம் சுவையூட்டும் ஒரு பொருளாக மட்டும் அல்லாமல், கூடவே அது ஏராளமான மருத்துவ பண்புகளையும் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். பாரம்பரியமாக ஓமம், வாயு, அதிக அமில சுரப்பு, மற்றும் வயிற்று பிடிப்புகள் போன்ற மிகவும் வழக்கமான இரைப்பை பாதை பிரச்சினைகளுக்கான, உடனடித் தீர்வு அளிக்கும் ஒரு மூலிகையாக இருக்கிறது. ஓமத் தண்ணீர், நன்கு அறியப்பட்ட ஒரு பால் சுரப்பு ஊக்குவிப்பானாக (பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது) இருக்கிறது. மற்றும் அது, உடல் எடைக் குறைப்புக்கான மிகவும் பிரபலமான ஒரு நிவாரணியாக இருக்கிறது.
ஓம செடி, ஒரு ஓராண்டு மூலிகைத் தாவரம் ஆகும். அதாவது, அது ஒவ்வொரு வருடமும் மறுநடவு செய்யப்பட வேண்டும். இந்த செடியின் வழக்கமான சராசரி உயரம், சுமார் 60 மீட்டர்கள் முதல் 90 மீட்டர்கள் வரை இருக்கிறது. ஓம செடியின் தண்டுகள் மேற்பரப்பில் (இணை கோடுகள்) வரிப்பள்ளங்களை கொண்டிருக்கின்றன, மேலும் ஓம இலைகள், நாம் மறக்க இயலாத ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டு இருக்கின்றன. சிறிய ஓம மலர்கள், கிளைகளின் முனையில் கொத்து கொத்தாகப் பூக்கின்றன.
ஓம விதைகள், நிறத்தில் பச்சையில் இருந்து பழுப்பு நிறம் வரை இருக்கிறது, மேலும் அவை மேற்பரப்பில் தெளிவான வரிப்பள்ளங்களைக் கொண்டிருக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
சில பழமையான கலாச்சாரங்கள், ஓமத்தை உங்களுடன் வைத்திருப்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்புகின்றன.
ஓமத்தைப் பற்றிய சில அடிப்படைவிவரங்கள்:
- தாவரவியல் பெயர்: ட்ராஸிஸ்பெர்மம் அம்மி
- குடும்பம்: அபியசியயி
- பொதுவான பெயர்கள்: ஓமம், ஓம விதைகள்
- சமஸ்கிருதப் பெயர்கள்: அஜெமோடா, யாமினி
- பயன்படும் பாகங்கள்: விதைகள்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஓமம், எகிப்தை சேர்ந்த ஒன்று, ஆனால் அது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், முக்கியமாக மத்தியப் பிரதேசம், குஜராத், பீஹார், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது
- ஆற்றலியல்: வெப்பமூட்டுதல்.