வால்வார் புற்றுநோய் - Vulvar Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

வால்வார் புற்றுநோய்
வால்வார் புற்றுநோய்

வால்வார் புற்றுநோய் என்றால் என்ன?

வால்வார் புற்றுநோயானது முக்கியமாக வயது முதிர்ந்த மாதவிடாய் நின்ற பெண்களில் காணப்படுகிறது. இது பெண்களுக்கு ஏற்படும் 6 சதவீத மகளிர் பரவும்பற்றுகள் மற்றும் 0.7 சதவீத புற்றுநோயாகும். மேலுதடு அல்லது யோனி மீதுள்ள தடிமனான உதடு போன்ற உறை வால்வார் புற்றுநோயால் மிகவும் பொதுவாகப் பாதிக்கப்படும் தளம் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வால்வார் புற்றுநோயானது செதிள் உயிரணு வகையினைச் சேர்ந்ததாகும். வடிவத்ததினைப் பொறுத்து இது, கெரட்டினேற்றம், பேஸலாய்ட், மற்றும் கரணை வடிவான வகைகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

வால்வார் புற்றுநோயின் ஆரம்ப கட்ட மருத்துவ தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதன் பொதுவான காரணிகள் பின்வருமாறு:  

  • 50 அல்லது அதற்கும் அதிகமான வயது.
  • மனித சடைப்புத்துத் தீ நுண்மம் (ஹெச்.பி.வி) நோய்த்தொற்று.
  • வால்வார் இன்ட்ராஎபிதீலியல் நியோப்லாசியா (வி.ஐ.என்) இருத்தல் - புற்றுமுன் காயம்.
  • லைக்கன் ஸ்களீரோஸஸ் எட் அட்ரோபிக்கஸ் (யோனியின் தோல் மீது தடிமனான அரிப்புத் தன்மை உடைய படலம் உருவாகுதல்) இருத்தல்.
  • பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள்.

பொதுப்படையற்ற காரணிகள் பின்வருமாறு:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நோயறிதலுக்கு, வால்வார் புற்றுநோயின் வகையினை அறிந்து உறுதிப்படுத்துவதற்கு திசுப் பரிசோதனை செய்யப்படுகிறது. திசுப் பரிசோதனை கட்டியின் அளவு, தாக்கத்தின் ஆழம் மற்றும் முனைகளின் ஈடுபாடு (நிணநீர்க்கணு) ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. மெடாஸ்டாசிஸ் (மாற்றிடம் புகல்) உள்ளதா என்று அறிய முழுமையான உயிரிரசாயனவியற் சோதனை, மார்பு எக்ஸ்-ரே மற்றும் அடிவயிற்று அல்லது இடுப்பு சி.டி ஸ்கேன், பி.இ.டி சி.டி ஸ்கேன் போன்ற பிற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இமிக்யுயிமாட்டை மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தி உயிரியல் சோதனை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி (வேதி சிகிச்சை) போன்றவற்றை பயன்படுத்தி வால்வார் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை முறைகளில் லேசர் அறுவைசிகிச்சை, ஸ்கின்னிங் அல்குல் அகற்றறுவை (புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களின் மேலோட்டமான அடுக்கு அகற்றப்படுதல்) மற்றும் முழுமையான அல்குல் அகற்றறுவை (பெண்குறிக் காம்பு, யோனி உதடுகள், யோனி திறப்பு மற்றும் அருகிலுள்ள நிணநீர்கணுக்கள் உட்பட முழு கருவாயும் அகற்றுவது) ஆகியவை அடங்கும்.

இந்த புற்றுநோயை தடுக்க உதவும் பல வழிமுறைகள் பின்வருமாறு:

  • புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும்.
  • முறைப்பட்ட கர்ப்பப்பை வாய் ஸ்மியர் பரிசோதனைகள்.
  • பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும்.
  • மனித சடைப்புத்துத் தீ நுண்மத்திற்கு எதிரான தடுப்பூசி.



மேற்கோள்கள்

  1. Ibrahim Alkatout et al. Vulvar cancer: epidemiology, clinical presentation, and management options. Int J Womens Health. 2015; 7: 305–313. PMID: 25848321
  2. Singh N, Negi N, Srivastava K, Agarwal G. A cohort study of vulvar cancer over a period of 10 years and review of literature. Indian J Cancer [serial online] 2016;53:412-5.
  3. International Journal of Gynaecology and Obstetrics [Internet]; Neville F. Hacker,Patricia J. Eifel,Jacobus van der Velden. Cancer of the vulva September 2015
  4. National Health Service [Internet]. UK; Oncological Management Of Vulvar Cancer.
  5. PDQ Adult Treatment Editorial Board. Vulvar Cancer Treatment. Health Professional Version. 2019 Feb 1. In: PDQ Cancer Information Summaries [Internet]. Bethesda (MD): National Cancer Institute (US); 2002-.
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vulvar Cancer.
  7. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Vulvar Cancer—Patient Version.