விந்துக் குழாய் சிரைச்சுருள் என்றால் என்ன?
விரை நாணுடன் காணப்படும் பம்பினிஃபார்ம் பிளக்சஸின் நரம்புகளில் ஏற்படும் வீக்கமே (ஒரு ஆண்மகனின் விந்தகத்தை கொண்டிருக்கும் வடம்) விந்துக் குழாய் சிரைச்சுருள் என்றழைக்கப்படுகிறது. விந்துக் குழாய் சிரைச்சுருள் எனும் நிலை 100 ஆண்களில், ஒவ்வொரு 10 முதல் 15 ஆண்களுக்கு வளரக்கூடியது, இது கால்களிருக்கும் சுருள் சிரையை ஒத்திருக்கக்கூடியது
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விந்துக் குழாய் சிரைச்சுருளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- அசௌகரியம்.
- மந்தமான வலி.
- விதைப்பையிலிருக்கும் நரம்புகள் விரிவடைந்தோ, அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருப்பது.
- வலியில்லாத விதை முடிச்சு.
- இடுப்புதொடை நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு.
- குழந்தையின்மை.
- குறைவான விந்துகளின் எண்ணிக்கை.
- அரிதாக - அறிகுறிகள் ஏற்படுவதில்லை.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
விந்துக் குழாய் சிரைச்சுருள் என்பது முக்கியமாக நரம்புகளின் உள்ளிருக்கும் வால்வுகளில் ஏற்படுத்தும் சேதத்தால் நரம்புகள் வீக்கம் மற்றும் விரிவடைவதோடு விரை நாணில் முறையான இரத்த ஓட்டமின்மையையும் ஏற்படுத்துகின்றது. சிறுநீரகக் கட்டி போன்ற நிலைகள் கூட நரம்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
மருத்துவர் அறிகுறிகளின் முழுமையான வரலாற்றை எடுத்துக்கொள்வதோடு, விதைப்பை மற்றும் விந்தகங்கள் இடம்பெற்றிருக்கும் வயிறு-தொடை இணைவிடத்துடன் விரை நாணில் ஏதேனும் நரம்புகள் முறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறதா என்பதை சரிப்பார்த்தால் போன்ற முழுமையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். படுத்திருக்கும் நிலையில் இது காணக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். மேலும், பரிசோதனையின் போது விந்தகத்தின் ஒவ்வொரு பகுதியின் வேறுபடுகின்ற அளவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
வால்ஸ்லவா சூழ்ச்சி என்பது மருத்துவரால் செய்யப்படுகிறது, இந்த செயல்முறையில் மருத்துவர் விதைப்பையை உணரும் வரை உங்களை ஆழ்ந்து சுவாசித்த நிலையில் இருக்கச் செய்யக்கூடும்.
மேலும், மருத்துவர் விதைப்பை, விந்தகம் மற்றும் சிறுநீரகங்களுக்கு அல்ட்ராசவுண்ட் சோதனையை பரிந்துரைக்கலாம்.
வலி, கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை மற்றும் விந்தகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடு (வலதுபுறத்தை விட இடது புறம் மெதுவாக வளருதல்) போன்ற குறைபாடுகளை எதிர்கொள்ளும் வரை விந்துக் குழாய் சிரைச்சுருள் நிலைக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
- அசௌகரியத்திலிருந்து நிவாரணம் பெற ஜாக் ஸ்ட்ராப் அல்லது ஸ்னக் உள்ளாடைகளை பயன்படுத்துதல்.
- வெரிகோசெலெக்டோமி என்பது விந்துக் குழாய் சிரைச்சுருளை சரிசெய்ய பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.
- வெரிகோசெலெ எம்போலிசேஷன் என்பது மாற்று அறுவை சிகிச்சை முறை ஆகும்.
- பெர்குட்டினஸ் எம்போலிசேஷன்.
- வலியைக் குறைப்பதற்காக வலி நிவாரணிகள் (அசெட்டமினோபன், இபுபுரோஃபென்) மட்டுமே கொடுக்கப்படலாம்.