யோனியுறை நலிவு (வஜினல் அட்ரோபி) என்றால் என்ன?
யோனியுறை நலிவு எனும் நிலை பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடியது, இந்நிலை வஜினல் திசு நலிவடைவதால் வறட்சி, மெலிவுறுதல் மற்றும் சில நேரங்களில் அழற்சி போன்ற அறிகுறிகளைக் காட்ட துவங்குகிறது. மாதவிடாய் ஏற்பட்ட பிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவதின் காரணத்தினாலேயே இவ்வாறு நிகழ்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
யோனியுறை நலிவில் ஏற்படும் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- அசாதாரணமான ஸ்பாட்டிங் அல்லது இரத்தப்போக்கு அல்லது வஜினாவிலிருந்து வெளியேறும் மற்ற அசாதாரணமான வெளியேற்றம்.
- வஜினாவில் ஏற்படும் எரிச்சல் மற்றும்/அல்லது அரிப்பு உணர்ச்சி.
- வஜினாவில் ஏற்படும் வறட்சி.
- வலி மிகுந்த பாலியல் செயல்பாடு.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலியுடன் சிறுநீர் கழித்தல் அல்லது அடிக்கடி ஏற்படும் சிறுநீர் குழாய் நோய்த்தொற்றுகள் (சிறுநீரக குழாயில் அழற்சி ஏற்பட்டிருந்தாலும்).
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
யோனியுறை நலிவு முக்கியமாக ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்திருக்கும் பெண்களிலேயே காணப்படுகிறது, இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- ஓவரிகள் அகற்றப்படுதல்.
- கர்ப்பகாலத்தில் ஏற்படலாம்.
- குழந்தையை பிரசவித்த பிறகு.
- தாய்ப்பால் புகட்டும் போது.
- மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் போது பயன்படுத்தக்கூடிய அரோமாடஸ் தடுப்பான்கள் போன்ற மருந்துகள்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
மருத்துவர் முழுமையான மருத்துவ வரலாற்றை எடுத்துக்கொள்வதோடு, அட்ரோபியை கண்டறிய வஜினாவில் முழுமையான உடல் பரிசோதனையும் மேற்கொள்வார். இந்நிலையை கண்டறிவதற்கு உடல் பரிசோதனையின் போது உதவக்கூடிய அறிகுறிகளுள் அடங்குபவை - சிவந்திருத்தல், வீக்கமடைந்திருத்தல், வறண்டிருத்தல், சுருக்கமடைந்தோ அல்லது வெள்ளை நிறமாற்றமடைந்த குறுகிய வஜினா மற்றும் வஜினாவின் மீள்திறன் இழப்பு ஆகிவையாகும்.
யோனி நலிவு பராமரிப்பிற்கான இலக்கு அதன் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறச்செய்தல் அல்லது ஈஸ்ட்ரோஜன் இழப்பை சரிசெய்தல் ஆகும், மேலும் அவற்றுள் அடங்குபவை:
- லோஷன்ஸ் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் வறட்சிக்கு சிகிச்சையளிக்கலாம்.
- வஜினல் லூப்ரிகண்டுகளை பயன்படுத்தலாம்.
- வஜினல் ஜெல்களின் பயன்பாடு.
- டைலேட்டர்கள் மற்றும் லோக்கல் ஹார்மோன் தெரபி இணைத்து பயன்படுத்துவதனால் வஜினல் அறிகுறிகளிலிருந்து முன்னேற்றம் பெறுவதோடு சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வஜினாவில் இருக்கும் சாதாரண அமிலத்தை சமப்படுத்துவதன் மூலம் மீளமைப்பு செய்வதனாலும், இயற்கையான ஈரப்பதத்தை பராமரிப்பதாலும், தோல் தடிமனாகுதல், மற்றும் பாக்டீரியா சமநிலை மேம்படுதலாலும் வஜினல் அட்டோரபியின் அறிகுறிகளிலிருந்து முன்னேற்றம் பெறலாம்.
ஹார்மோனல் சிகிச்சையினுள் அடங்குபவை:
- லோக்கல் வஜினல் ஈஸ்ட்ரோஜன் தெரபி என்பது வஜினல் வறட்சியின் அறிகுறிகளை குறைப்பதற்காக கிரீம் வடிவத்திலோ அல்லது மாத்திரைகள் வடிவத்திலோ அல்லது ரிங் வடிவத்திலோ பயன்படுத்தப்படுகிறது.
- சிஸ்டெமிக் ஹார்மன் மாற்று தெரபியும் பயனப்டுத்தப்படலாம்.