தொடை வலி - Thigh Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 22, 2019

July 31, 2020

தொடை வலி
தொடை வலி

தொடை வலி என்றால் என்ன?

தொடை வலி என்பது காயம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்து படிப்படியாக மற்றும் இடைவிடாமல் ஏற்படும் வலியாகும். வழக்கமாக, மேற்பூச்சு அல்லது வாய் வலி நிவாரண மருந்துகள் மூலம் ஒரு சில வாரங்களுக்குள் வலி குறைகிறது. கால்பந்து, உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து, நீலம் தாண்டுதல், தடங்கல் தாண்டுதல் மற்றும் பிற உடற்பயிற்சிகளில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு தொடை வலி ஏற்படுகிறது.

தொடை வலியுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

தொடை வலியுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

தொடை வலியின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • தசை திரிபு.
  • புடைசிரைகள்.
  • இறுக்கமான ஆடைகள்.
  • தசை காயம்.
  • அதிகப்படியான காயங்கள்.
  • ஒரு நேரடி அடி அல்லது வீழ்வது.
  • அழுத்த எலும்பு முறிவுகள்.
  • கீல்வாதம்.
  • கர்ப்பம்.
  • பருமனானவர்கள் அல்லது அதிக எடை கொண்டவர்கள்.
  • ஐலோட்டிபயல் பேண்ட் உராய்வு நோய்க்குறி.
  • மீண்டும் மீண்டும் பயிற்சிகள் மேற்க்கொள்வது, எடுத்துக்காட்டாக, ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
  • ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  • நீரிழிவு நரம்பு சிகிச்சை (கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவுகள் உணர்வின்மை மற்றும் வலியை ஏற்படுத்தும்).
  • விளையாட்டு காயங்கள்.
  • முடக்கு வாதம்.
  • தொடை எலும்பு முறிவு.
  • எலும்புத்துளைநோய்.
  • தொடை தசையில் இரத்த உறைவு.
  • மெரெல்ஜியா பராஸ்தெடிக்கா (தொடையில் எரிச்சலுடன் வலியை ஏற்படுத்தும்).
  • சரீர உழைப்பில்லா வாழ்க்கை முறை.
  • பலவீனமான எலும்புகள்.
  • சோடியம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள்.
  • பக்கவாதம் (ஸ்ட்ரோக்).
  • மற்றொரு கால் காயத்தில் இருந்து வலி ஊடுருவுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

பின்வரும் முறைகள் மூலம் தொடை வலி கண்டறியப்படுகிறது:

மருத்துவர் அறிகுறிகளை கவனித்து, தொடை வலிக்கான காரணத்தை கண்டறிய மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்வார். பின்னர் தொடையில் ஏற்பட்ட காயங்கள், வீக்கங்கள் அல்லது மென்மைத் தன்மை ஆகியவற்றை மருத்துவர் ஆராய்வார். எலும்பில் காயம் இருந்தால், ஒரு எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படலாம். தொடையின் இயக்கம் மற்றும் வரம்புகள் சோதிக்கப்படுகின்றன.

சிகிச்சையானது அடிப்படை காரணத்தை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவான சிகிச்சை முறைகளில் சில பின்வருமாறு:

  • வலி மற்றும் வீக்கத்தை குறைக்க ஓய்வு, பனிக்கட்டி ஒத்தடம், அழுத்தம் கொடுப்பது மற்றும் காலை உயர வைத்தல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தல்.
  • வலி நிவாரணிகள் – வாய்வழி , மேற்பூச்சு அல்லது ஊசிகளை பயன்படுத்துதல்.
  • நீட்சி பயிற்சிகள்.
  • எடை மேலாண்மை.
  • தொடை பலப்படுத்தல் பயிற்சிகள்.
  • வெப்பம்.



மேற்கோள்கள்

  1. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Muscle Strains in the Thigh.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Leg pain.
  3. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Burning Thigh Pain (Meralgia Paresthetica).
  4. National Health Information Service [Internet]. Government of Scotland; Thigh problems.
  5. Healthdirect Australia. Leg pain. Australian government: Department of Health