முதன்மை அண்டக குறைபாடு என்றால் என்ன?
பெண்களில் 40 வயதிற்கு முன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் சேர்ந்து இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) ஏற்படுவதால் முதன்மை அண்டக குறைபாடு ஏற்படும். இல்லையெனில், முன்கூட்டிய (பருவமுறா நிலை) மாதவிடாய் மிகவும் அரிதாக ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கருத்தரிக்க இயலாமை என்பது, பிற வெளிப்படையான அறிகுறிகளைத் தவிர, முதன்மை அண்டக குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முக்கியமான மற்றும் உறுதியான அடையாளம் ஆகும். சில அறிகுறிகள் பின்வருமாறு:
- ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமை.
- இரவில் வியர்வை.
- பாலியல் இயக்கம் குறைப்பாடு.
- உடல் முழுவதும் சூடாக உணர்தல், இது சூடான ஃப்ளஷ் என்று கூறப்படுகிறது.
- கணிக்க முடியாத எரிச்சல் மற்றும் கவனக் குறைவு.
- அண்டக சுவர்கள் மெலிதல் மற்றும் உடலுறவின் போது வலி ஏற்படுவதன் காரணமாக யோனி அட்ரோபி (யோனி திசுக்களின் சேதம் அல்லது அழிவு).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முதன்மை அண்டக குறைபாடுக்கான காரணங்கள், இயற்கையாக அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது ஒரு மரபணு கோளாறு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் ஏற்படும் சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- டர்னர்'ஸ் சிண்ட்ரோம் – X (எக்ஸ்) குரோமோசோமின் முழுமையான நீக்கம் அல்லது இல்லாமை இந்த நிலையில் காணப்படுகிறது.
- எக்ஸ்(x) குரோமோசோம் அசாதாரணங்கள் - கருப்பை செயல்பாட்டின் தோல்வியானது, எக்ஸ் குரோமோசோமின் ஒரு அசாதாரணத்தையோ நீக்கலையோ குறிக்கிறது.
- கேலக்டோசேமியா (காலக்டோஸ் வளர்சிதைமாற்றத்துக்குத் தேவையான ஒரு என்சைம் இல்லாததால் உடலில் காலக்டோஸ் குவிப்பு) மற்றும் கோனாடோட்ரோபின் ஏற்பி செயலிழப்பு (பாலியல் ஹார்மோன்களின் ஏற்பிகளில் செயலிழப்பு) ஆகிய தற்சார்பு கோளாறுகள் போன்ற மரபணு கோளாறுகள்.
- சுற்றுச்சூழல் நச்சுகள் அல்லது புகைபிடித்தல் ஆகியவற்றின் விளைவாக கருவுறுதல் மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு பொது மருத்துவர் அல்லது ஒரு மகப்பேறு மருத்துவர், தோல்வியுற்ற கருத்தரித்தலை அடிப்படையாகக் கொண்ட பல நோயெதிர்ப்பு சோதனைகளை பரிந்துரைக்கலாம். கருப்பை தோல்வி இருப்பதாக சந்தேகப்பட்டால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பல சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:
- ஃபாலிகில் தூண்டுதல் ஹார்மோன் சோதனை (எப்.எஸ்.ஹெச்) - முதிர்ச்சியற்ற அண்டக குறைபாடு நிலையில், எப்.எஸ்.ஹெச் அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
- எஸ்ட்ராடைல் டெஸ்ட் - இரத்த ஓட்டத்தில் காணப்படும், எஸ்ட்ராடைல் அளவுகள், முதிர்ச்சியற்ற அண்டக குறைபாடு நிலையில் மிகவும் குறைவாக உள்ளது.
- காரியோடைப் - குரோமோசோம்களைப் படிக்கும்.
- எப்.எம்.ஆர்1 மரபணு பரிசோதனை.
உடலில் ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தி அல்லது அறிமுகம் சிகிச்சையின் முக்கியத்துவம் ஆகும், இது இறுதியில் சூடான ஃப்ளாஷ் மற்றும் மாதவிடாய் இல்லாமை போன்ற அறிகுறிகளை நிவாரணம் செய்வதில் உதவுகிறது. புரோஜெஸ்ட்ரோனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஈஸ்ட்ரோஜன் இந்த மருத்துவ நிலையில் மெலிதாக மாறும் கருப்பை சுவர்களை பாதுகாக்க உதவுகிறது.