குதிவாதம் என்றால் என்ன?
பிளான்டர் பாசியா என்பது காலின் கீழ்பகுதியில், அதாவது, உள்ளங்காலின் தசை நார்களில் உள்ள ஒரு தடித்த திசு ஆகும். இந்த திசு படலம் குதிகால் எலும்பிலிருந்து கால் விரல்கள் வரை இணைப்பதால் இது ஒரு வில் நாண் வடிவத்தை ஒத்திருக்கிறது. இது பிளான்டர் பாசியா பகுதியில் வீக்கத்தினை ஏற்படுத்துவதால் குதிவாதம் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் அடிக்கடி கூறப்படும் கால் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றாகும் மற்றும் கால்களை செயலிழக்க செய்யும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தசைநார் பகுதியில் வீக்கம் ஏற்படுவதன் காரணமாக இந்த குதிவாத பிரச்சனை ஏற்படுவதால், உள்ளங்கால் மற்றும் குதிகாலில் ஏற்படும் வலி, இந்த குதிகால் வாத நோயின் முதன்மையான அறிகுறியாகும். மேலும் இதனால் குதிகால் பகுதியில் வீக்கம் மற்றும் சிவத்தல் காணப்படலாம். இதனால் ஏற்படும் வலி சில சமயங்களில் எரிவது போன்ற உணர்வினை ஏற்படுத்தலாம். இந்த வலி கூர்மையான வலியாக அல்லது மந்தமானதாக வலியாகவும் கூட இருக்கலாம்.பொதுவாக,காலையில் எழுந்தவுடன் நிற்கும் போது இந்த வலியை அனுபவிக்க நேரிடுகிறது.
நடத்தல், ஓடுதல் மற்றும் படிகளில் ஏறுதல் போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு கால்களைப் பயன்படுத்தும் போது இந்த குதிவாத வலி மேலும் மோசமடையலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த குதிகால் வலி கீழ்காணும் காரணங்களால் ஏற்படலாம்.அவை பின்வருமாறு:
- விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது குதிகால் எலும்பில் ஏற்படும் திரிபு.
- அதிக பருமனாக இருத்தல்.
- நீண்ட நேரமாக நிற்பது.
- நீண்ட நேரத்திற்கு ஹீல் காலணிகளை அணிவது.
- காலின் வளைவிற்கு சிறிதளவு ஏற்றபடி உள்ள காலணிகளை அணிவது.
- அதிகமாக ஓடுதல்.
- குதிப்பதால் ஏற்படும் காயம்.
- ஹீல் ஸ்பர் (எலும்பின் அதிதீத வளர்ச்சி).
குறிப்பட்ட சில நோய்களான கீல்வாதம் போன்ற நோய்கள் கூட இந்த குதிவாத நோய் வருவதற்கான ஆபத்தினை அதிகரிக்கக்கூடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, வலியின் ஆரம்பம் மற்றும் தீவிரம் பற்றியும் சமீபத்தில் அவர் ஈடுபட்டுள்ள நடவடிக்கையால் பற்றியும் மருத்துவர் முதலில் விசாரிப்பார். அறிகுறிகளின் விளக்கம் மற்றும் உடல் பரிசோதனை போன்றவை இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் கண்டறிய உதவும். மருத்துவர் காயம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை சோதிப்பார். அவை பின்வருமாறு:
- சிவத்தல்.
- அழற்சி அல்லது வீக்கம்.
- விறைப்பு.
எக்ஸ்ரே போன்ற இமேஜிங் பரிசோதனை முறை, நோய் ஏற்படுவதற்கான காரணத்தை உறுதிப்படுத்தவும், இந்நோய் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தை கணடறியவும் செய்யப்படலாம்.
இந்த குதிவாத நோய்க்கு சிகிச்சை அளிக்க, வலிநிவாரிணிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம், அவை இதனால் ஏற்படும் வீக்கத்தினை குறைத்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. இதன் மற்ற சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- ஓய்வு.
- இரவில் தூக்கத்தில் அல்லது வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது அணைவரிக்கட்டை பயன்படுத்துதல்.
- காலுக்கு பொருத்தமான /வசதியான காலணிகளை அணிதல்.
காலப்போக்கில் குதிகாலில் ஏற்பட்டுள்ள திரிபிலிருந்து தசை நார் பகுதி மீண்டு வரும் போது, இதன் அறிகுறிகள் குணமாகின்றன.
சில நிகழ்வுகளில், இந்நோயினை குணப்படுத்த அறுவை சிகிச்சை முறை தேவைப்படலாம்.
சுடு நீர் நிரப்பிய ஒரு தொட்டியில் கால்களை 15-20 நிமிடங்கள் வரை ஊற வைப்பது போன்ற சுய பராமரிப்பு நடவடிக்கைகள் மூலம் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.