சுருக்கம்
நமது உடல், மலம் சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியாக நச்சுக்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் ஒரு இயற்கையான இயக்க முறையைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்புகளில் ஒன்றான நமது உடலின் சிறுநீர் தொகுதி, பல உறுப்புகளின் தொகுதியான இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, கழிவுகளை சிறுநீர் வடிவில் சிறுநீர் குழாய் வழியாக வெளியேற்றுகிறது. சிறுநீர் கழிக்கும் போது உணரப்படும் எந்த ஒரு வலி அல்லது அசௌகரியம் வலி தருகிற சிறுநீர் கழித்தல் என அறியப்படுகிறது. மற்ற காரணங்களோடு சேர்ந்த பொதுவான காரணங்கள், சிறுநீர் பாதை அல்லது மற்ற இடுப்பு பகுதி உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், வீக்கம், நீர் வற்றிப் போதல், சிறுநீரக கற்கள், கட்டிகள், மருந்துகள் உட்கொள்ளுதல் அல்லது கதிர்வீச்சு சிகிச்சை, ஒவ்வாமைகள் ஆகியனவாகும். சிறுநீர் கழிக்க முற்படும் போது அல்லது கழிக்கும் போது வலி ஏற்படுவது மிகவும் பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், மோசமான வாடை, சிறுநீர் குழாயிலிருந்து வெளியேற்றம், சிவந்து போதல் அல்லது இடுப்பு பகுதியில் எரிச்சல், இன்னும் சில., போன்ற பிற அறிகுறிகளோடு இணைந்து இருக்கலாம்.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை, ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு நீர் அருந்துதல், சுய சுகாதாரத்தைப் பராமரித்தல், மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்தல் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் வராமல் தடுக்க இயலும். சிகிச்சை, நோய்த்தொற்று, வீக்கம் மற்றும் சிறிய சிறுநீரக கற்கள் ஆகியவற்றுக்கு மருந்து உட்கொள்ளுதலையும், கட்டிகள் மற்றும் பெரிய சிறுநீரக கற்களை நீக்குவதற்கு அறுவை சிகிச்சையையும் உள்ளடக்கியது. சரியான நேரத்தில் சிகிச்சை தேவைப்படும் பொழுது நோய் பற்றி முன்கூட்டியே அறிதல் வழக்கமாக நல்லது. சிக்கல்கள் மிகவும் அரிதானது மற்றும் திரும்ப திரும்ப வரும் தொற்று, இரத்த தொற்று அல்லது சீழ் பிடித்தல், சிறுநீரக பாதிப்பு, குறைப்பிரசவம் அல்லது எடை குறைவாகப் பிறத்தல், மேலும் பல., ஆகியவற்றை உள்ளடக்கியது.