அதீத உடற்பயிற்சி என்றால் என்ன?
உடற்பயிற்சி என்பது பொருத்தமான மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிப்பதற்கு தேவையென்றாலும், உடலின் அமைப்பு தாங்கக்கூடிய உடல் அழுத்தத்திற்கென சில வரம்புகள் இருக்கின்றது, அத்தகைய வரம்பை மீறி செய்யப்படும் உடற்பயிற்சியே அதீத உடற்பயிற்சி என அழைக்கப்படுகிறது. அதீத-உடற்பயிற்சி என்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதோடு ஒருவரின் வழக்கமான செயல்முறைகளிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடியது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அதீத உடற்பயிற்சிக்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- சோர்வு.
- எரிச்சலடைதல் மற்றும் மனம் அலைபாய்தல்.
- தூக்கம் கொள்வதற்கு சிரமப்படுதல்.
- அதீத எடை இழப்பு உடல் நிறை குறியீட்டிற்கான (பிஎம்ஐ) சாதாரண அளவைக் காட்டிலும் குறைவதற்கு வழிவகுக்கின்றது.
- பதற்றம்.
- மிக அடிக்கடி சளி பிடித்தல்.
- மூட்டுகள் கனத்து இருப்பது போலவும் தசைகளில் புண் இருப்பது போலவும் உணர்தல்.
- மன அழுத்தத்தை உணர்தல்.
- அதீத உடற்பயிற்சி காரணமாக ஏற்படும் காயங்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
அதீத உடற்பயிற்சிக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- கட்டாய உடற்பயிற்சி, ஒருவர் இத்தகைய உடற்பயிற்சியினை செய்ய தவறினால் மன அழுத்தம், பதற்றம், எரிச்சல்தன்மை மற்றும் பிற பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படும்.
- புலிமியா நரோமோசா, என்பது ஒரு உணவு கோளாறு, அதிக உணவருந்துதலை தொடர்ந்து அதீத உடற்பயிற்சியினை மேற்கொள்வது இந்நிலையை குறிக்கின்றது. புலிமியா நரோமோசாவை கொண்ட நபர்கள் மிக குறிப்பானவர்கள், அவர்களது உடல் எடை மற்றும் அமைப்பை குறித்து கிட்டத்தட்ட துன்பப்படுபவர்கள், மேலும் அவர்கள் அதிக எடையைக் கொண்டிருப்பதாக கருதி எடையை இழக்க பல்வேறு முறைகளில் ஈடுபடக்கூடியவர்கள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
அவர் / அவள் செய்யும் உடற்பயிற்சியின் அளவினை கட்டுப்படுத்த முடியாத பட்சத்திலும், அதீத உடற்பயிற்சிக்கான அறிகுறிகள் இருக்கும் பட்சத்திலும் மருத்துவரை கலந்தாலோசித்தல் அவசியம். மருத்துவர் ஒரு உடல் பரிசோதனை செய்வதோடு இந்நிலை தொடர்பான கேள்விகளை கேட்கக்கூடும். மருத்துவர், அதிக ஸ்ட்ரெய்னுக்கான காரணத்தை அடையாளம் கண்டுகொள்வதோடு புலிமியா நரோமோசா அல்லது கட்டாய உடற்பயிற்சி இருப்பதாக சந்தேகித்தால், உங்களை அதற்கான ஆலோசகருடன் கலந்துரையாட பரிந்துரைக்கலாம்.
இந்நிலைக்கு சிகிச்சையளிக்க பின்வரும் முறைகளை பயன்படுத்தலாம்:
- ஆன்டி-டிப்ரஸண்ட் மருந்துகள்.
- அறிவாற்றல் நடவடிக்கைக்கான சிகிச்சை.
- ஆதரவு குழுக்கள்.
அதீத உடற்பயிற்சியை கையாளவும் குறைக்கவும் சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:
- நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் நிலையை பொறுத்து உணவு உட்கொள்தலை சமப்படுத்துதல்.
- உடற்பயிற்சி செய்யும் போது அதிகளவிலான திரவங்களை அருந்துதல்.
- அதீத குளிர் மற்றும் வெப்பநிலைகளில் உடற்பயிற்சி செய்தலை தவிர்க்கவும்.
- இரவில் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குதல் அவசியம்.
- இரண்டு உடற்பயிற்சி நிகழ்வுகளுக்கு இடையே குறைந்தது ஆறு மணி நேரமாவது ஓய்வெடுத்தல்.
- ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்.