மைலோடைஸ்ளாஸ்டிக் சிண்ட்ரோம் என்றால் என்ன?
எலும்பு மஜ்ஜை என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும்.இது குருத்தணுக்களைக் கொண்டுள்ளது.முதிராத இந்த குருத்தணுக்கள் சிவப்பு இரத்த அணுக்களாகவோ (ஆர்.பி.சி), வெள்ளை இரத்த அணுக்களாகவோ (டபுள்யூ.பி.சி), இரத்த தட்டுகளாகவோ வளர்ச்சி அடையும்.சிவப்பணுக்கள் உயிர் வாயு கடத்தியாக செயல்படுகிறது.வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுகின்றன.இரத்த தட்டுகள் இரத்தம் உறைதலில் முதன்மையான பங்காற்றுகின்றன.மைலோடைஸ்ளாஸ்டிக் சிண்ட்ரோம் அல்லது மைலோடைஸ்ளாஸியா இருப்பின், குருத்தணுக்கள் தேவையான இரத்த அணுக்களாக முதிர்ச்சி அடையாமல் எலும்பு மஜ்ஜைக்குள்ளேயே மடிகின்றன.ஆரோக்கியமான இரத்த அணுக்களின் பற்றாக்குறை பற்றாக்குறையாகும் உயிரணுக்களின் வகையைப் பொறுத்து இரத்தசோகை, நோய்த்தொற்று, இரத்த கசிவு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆரம்ப கால அறிகுறிகள் இல்லாவிட்டாலும், பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்
- சோர்வு.
- பலவீனம்.
- நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுதல்.
- காய்ச்சல்.
- வெளிறிய தோல்.
- சுவாசிப்பதில் சிரமம்.
- எளிதில் இரத்தம் கசிதல்.
- எலும்பு வலி.
- உடல் எடை குறைதல்.
- பசியின்மை.
- இரத்தப்போக்கு காரணமாக சருமத்தின் கீழ் காணப்படும் புள்ளிகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காரணிகளின் அடிப்படையில் எம்.டி.எஸ் இரண்டு வகைப்படும்.அவை பின்வருமாறு:
- முதல் நிலை எம்.டி.எஸ்: இதன் காரணிகள் தெரியாது.இது பொதுவான வகை ஆகும்.
- இரண்டாம் நிலை எம்.டி.எஸ்: கீமோதெரபி (வேதி சிகிச்சை) போன்ற சிகிச்சை முறைகள் இதன் காரணியாக உள்ளது.இது சிகிச்சை தொடர்பான எம்.டி.எஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
எம்.டி.எஸ் மரபணு சார்ந்த நோய் அல்ல.ஆனால் சில அரிதான நிகழ்வுகளில், பெற்றோர் மூலம் குழந்தைக்கு வரலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதன் நோய் கண்டறிதலுக்கு பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படும்:
- இரத்தப் பரிசோதனை: இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம், சாதாரண மற்றும் அசாதாரண இரத்த அணுக்கள் முதலியவை கண்டறியப்படும்.
- எலும்பு மஜ்ஜை பரிசோதனை: ஓரிடவுணர்ச்சிநீக்கி செலுத்தி எலும்பு மஜ்ஜை திசுக்களை ஊசியின் மூலம் எடுத்து, குருத்தணுக்களின் பற்றாக்குறை பரிசோதனை செய்யப்படும்.
- உயிரணு மரபியல் பரிசோதனை: இது நோய் வகையைக் கண்டறிய உதவும்.
இதைத் தவிர பொது சுகாதார நிலையை தீர்மானிக்க எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மூலமோ எலக்ட்ரோகார்டியோகிராம் போன்ற பிற சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எம்.டி.எஸ்-ன் வகை, வயது, உடல்நலம் போன்ற பல காரணிகளின் அடிப்படியில் தகுந்த சிகிச்சை அமைகின்றது.இதற்கான சிகிச்சைகள் பின்வருமாறு:
- கீமோதெரபி (வேதிசிகிச்சை): எலும்பு மஜ்ஜையில் உள்ள அசாதாரண உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேதியல் சிகிச்சை.
- குருத்தணுக்கள் மாற்றம்: நோயாளிக்கு சேரக்கூடிய குருத்தணு வேறொருவாரிடம் இருந்து நோயாளிக்கு மாற்றம் செய்யப்படும்.இது சிலருக்கு மட்டுமே தகுந்த சிகிச்சை ஆகும்.
- மருந்துகள்: நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்துகள், உயிரியல் மாற்றியமைப்பிகள், கீமோதெரபி (வேதிசிகிச்சை) மருந்துகள்.
- ஆதரவு சிகிச்சை (பாலியேட்டிவ் கேர்) : இதுவே வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையின் முக்கிய பங்கு வகிப்பதாகும்.