சுருக்கம்
வாய்ப்புண் என்பது லேசான வீக்கம் மற்றும் வலியுடன் ஒரு மென்மையான புண் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். இது, முக்கியமாக வாயிலுள்ள மிகவும் நுண்ணிய மற்றும் உணர்ச்சிமிக்க மெல்லிய படலத்தில் ஏற்படும் ஒரு பாதிப்பினால் ஏற்படுவது ஆகும். வாய் அல்லது வாய் சம்பந்தமான புண்கள் அனைத்து வயதுப் பிரிவினரிடமும் பொதுவாக இருக்கிறது மற்றும் ஒரு காயம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மோசமான வாய் சுகாதாரம் உட்பட பல வித காரணங்களைக் கொண்டிருக்கக் கூடும். அவை, மருத்துவமனை பரிசோதனையில் எளிதாகக் காரணம் கண்டறியக்கூடியவை ஆகும் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும், திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புண்களின் காரணத்தைக் கண்டறிய, இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படக் கூடும். வழக்கமாக, ஒரு மருத்துவர் புண் குணமாவதை துரிதப்படுத்த மருந்துகளை பரிந்துரைப்பார். வாய்ப்புண்களை குணமாக்குவதற்கு உதவக் கூடிய ஏராளமான வீட்டு மருத்துவங்களும் இருக்கின்றன. வாய்ப்புண்களுக்கான சிகிச்சை பெரும்பாலும் பழைய முறையே இருக்கிறது, அது, நுண்ணுயிர்க்கொல்லி வாய் கொப்பளிப்பான்கள், வைட்டமின் பி மாத்திரைகள் மற்றும் தற்காலிக வலி மரப்பு மருந்துக்களைப் பயன்படுத்துவது ஆகியவை ஆகும். வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் தடுப்பு நடவடிக்கைகளில் அடங்கியவை ஆகும்.