காஸ்ட்ரோசிசிஸ் என்றால் என்ன?
காஸ்ட்ரோசிசிஸ் என்பது குழந்தையின் வயிற்று தசைகளில் ஏற்படும் பிறவிக்கோளாறு ஆகும். இதனால் அக்குழந்தையின் குடல்கள் துளையின் வழியே வீங்கிக்காணப்படும் மற்றும் இது பொதுவாக தொப்புளுக்கு வலது பக்கம் அமைந்திருக்கும். பிரசவகாலத்தின் பொழுது, குழந்தையை சுற்றியிருக்கும் அம்னியோடிக் திரவம் (பனிக்குடநீர்) சுரக்கும் நோயெதிர்ப்பு எதிர்வினையால் குழந்தையின் வயிற்றுக்கு வெளிய அமைந்திருக்கும் குடல்கள் பாதிக்கப்படுகின்றன. வயிற்று தசைகளின் தவறான வளர்ச்சி, குடல் இறுகுதல் மற்றும் சுருளுதலுக்கு வழிவகுக்கிறது, இது குடல் அமைப்பை மேலும் பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காஸ்ட்ரோசிசிஸ்ஸின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தொப்புள்கொடியுடன் சேர்ந்து வயிற்றுதசைகள் ஒரு துளையின் வழியே வீங்கிக்கொண்டிருக்கும்.
- குடல் தசைகள் திருகியும் ஒன்றோடொன்று ஒட்டியும் இருக்கும்.
- சிலநேரம் மற்ற உறுப்புகளான பித்தப்பை, பெருங்குடல் மற்றும் கல்லீரலும் சிறுகுடலுடன் சேர்ந்து அமைந்திருக்கும்.
- திருகிய மற்றும் சிறியகுடல் வழியாக சத்துக்கள் சரியாக உறுஞ்சப்படாததால் குறைமாத குழந்தைகள் மற்றும் வளர்ச்சிக்குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது பொதுவான ஒன்றாகும்.
- பிறந்தபிறகு குழந்தைக்கு உணவு ஊட்டுதல் கடினமாகிறது.
காஸ்ட்ரோசிசிஸ்ஸின் முக்கிய காரணங்கள் யாவை?
காஸ்ட்ரோசிசிஸ் நோய்க்கு ஒரு தனிஇப்பட்ட காரணம் எதுவும் இல்லை. இதனுடன் தொடர்புடைய சில ஆபத்துக்கு காரணிகள் பின்வருமாறு:
- தாயின் வயது இருபதிற்கு கீழே இருப்பது.
- கர்ப்பகாலத்தில் புகைபிடித்தல்.
- கர்ப்பகாலத்தில் மது அருந்துதல்.
- கர்ப்பகாலத்தில் சத்துக்குறைபாடு ஏற்படுதல்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
குழந்தை பிறப்பதற்கு முன் காஸ்ட்ரோஸ்கைசிஸ்ஸை கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இரத்த பரிசோதனைகள்.
- தாயின் இரத்தத்தில் இருக்கும் அதிக அளவிலான பெடோப்ரோடீன்ஸ் (ஏ.எப்.பி) குழந்தையிடம் உள்ள குறைபாட்டை குறிக்கும்.
- இயல் நிலை வரைவு ஆய்வு
- அல்ட்ராசவுண்ட் மூலம் 10 முதல் 14 வார கர்ப்பகாலத்தில் காஸ்ட்ரோஸ்கைசிஸ்ஸை கண்டறியலாம் மற்றும் அனோமோலி ஸ்கேன் மூலம் 18 முதல் 21 வார கர்ப்பகாலத்தில் கண்டறியலாம்.
- அல்ட்ராசவுண்டில் காணப்படும் அம்னியோடிக் திரவ அதிகரிப்பு காஸ்ட்ரோஸ்கைசிஸ்சுடன் தொடர்புடையது.
ஓம்ஃபாலோசீல் என்னும் பிறவிக்கோளாறு காஸ்ட்ரோசிசிஸ் போன்றது. குடல் (மற்றும் வயிறு,கல்லீரல் அல்லது பித்தப்பை) வயிற்று நடுவில் இருக்கும் தொப்புள் கொடியின் துளை வழியே வீங்கிக்கொண்டிருக்கும். காஸ்ட்ரோசிசிஸ் போல் இல்லாமல் ஓம்ஃபாலோசீலில் தொப்புள் கொடியின் மேலிருக்கும் பாதுகாப்பு சவ்வானது குடல்களையும் மற்ற உறுப்புகளையும் மூடுகின்றது.
அறுவைசிகிச்சை மட்டுமே இதன் ஒரே சிகிச்சை வழி ஆகும். முதலில் வயிறுக்கு வெளியே இருக்கும் குடல் பகுதிகள் மேலும் பாதிப்படைவதை தவிர்க்க ஒரு பாதுகாப்புப் படலத்தில் அடைக்கப்படுகிறது. இதன் சிகிச்சையில் இரண்டு விதமான அறுவைசிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன-
- வீங்கிய குடல்கள் வயிற்றினுள் வைக்கப்பட்டு வயிற்றின் சுவர்களால் தைக்கப்படுகிறது.
- துருத்திக்கொண்டிருக்கும் குடல்கள் படிப்படியாக வயிற்றினுள் வைக்கப்படுகிறது.