குழந்தைகளுகளில் ஏற்படும் காய்ச்சல் வலிப்புத்தாக்கம் என்றால் என்ன?
காய்ச்சல் வலிப்புத்தாக்கம் என்பது ஃபீப்ரைல் வலிப்புத்தாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளில் காணப்படும் அதிகப்படியான காய்ச்சலுடன் கூடிய வலிப்பு தாக்கமே ஆகும். 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த வலிப்புத்தாக்கங்களால் பொதுவாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தளர்நடைப் பருவமான 12 முதல் 18 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளிடத்தே இது அதிகமாகக் காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குழந்தைகளில் ஏற்படும் காய்ச்சல் வலிப்புத்தாக்கத்தின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சுயநினைவு இழப்பு.
- கட்டுப்படுத்த முடியாத அளவிலான கைகள்/ கால்கள் இழுப்பு.
குறைவாக காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சுவாசிப்பதில் சிரமம்.
- விறைப்பான மூட்டுகள்.
- வாயில் நுரை தள்ளுதல்.
- ஒரு கை/கால் அல்லது அதன் பகுதி மட்டும் வெட்டி இழுத்தல்.
- தோல் வெளிர் அல்லது நீல நிறமாக மாறுதல்.
- கண் மேலே சொருகுதல்.
- சுய நினைவின்றி முனகுதல்.
- வலிப்புக்கு பிறகு குழந்தை தன் சுயநினைவுக்கு வர 10 முதல் 15 நிமிடங்கள் ஆகலாம். இந்த நேரத்தில், அவர்கள் எரிச்சலுடன் மற்றும் தெரிந்த முகங்களையுமே அங்கீகரிக்க முடியாமல் இருப்பார்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மரபணு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டின் காரணமாக காய்ச்சல் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுகிறது.
பொதுவானக் காரணிகள் பின்வருமாறு:
- ஏதாவது காரணத்தால் ஏற்படும் காய்ச்சல்.
- குழந்தையின் வெப்பநிலை விரைவாக அதிகரிக்கக்கூடிய ஏதாவது உடல் நலக்குறைவு.
- மேல் சுவாசப் பாதையில் ஏற்படும் வைரஸ் நோய்த் தொற்று.
- காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்று.
- நுரையீரல் அழற்சி (நிமோனியா).
- பாக்டீரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு.
- இரத்தத்தில் ஏற்படும் தொற்று (குருதியில் நுண்ணுயிர் நச்சேற்றம்).
- மூளை மற்றும் முதுகெலும்பை மூடிம் சவ்வுகளில் (மூளையுறை) ஏற்படும் தொற்று, இது மூளையுறை அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது
காய்ச்சலுக்கான காரணத்தை அறிவதே நோயை கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முக்கியமான விஷயம் ஆகும்.
குடும்பத்தினரிடத்தில், கால்-கை வலிப்பு, சமீபத்திய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு, வலிப்புத்தாக்கம் நீடித்த காலம், வலிப்பிற்கு பிந்தைய நிலை, நோய்த்தடுப்பு நிலை மற்றும் அறிகுறிகள் ஆகியவை சார்ந்த வரலாற்றை ஆவணப்படுத்துதலை உள்ளடக்கியதே மருத்துவ வரலாறு ஆகும்.
உங்கள் குழந்தையின், சுயநினைவு எந்த அளவில் இருக்கிறது மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் எதாவது இருக்கிறதா என்பதனை மருத்துவர் பரிசோதிப்பார்.
ஆய்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- முதுகுத் தண்டுவட துளையிடுதல்.
- மூளைமின்னலை வரவு (ஈஈஜி).
- நரம்பு சார்ந்த இயல்நிலை வரைவு (சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்).
- முழு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குழந்தைகளில் ஏற்படும்
காய்ச்சல் வலிப்புத்தாக்கத்திற்கு கீழுள்ள சிகிச்சைகளும் கொடுக்கப்படுகிறது:
- வலிப்பு மற்றும் குழந்தையை அமைதிப்படுத்துவதற்கான மருந்துகள். இவைகள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காய்ச்சலுக்கு எதிரான மருந்துகளை விட்டுவிட்டு பயன்படுத்துதல், இருப்பினும் மருந்து சிகிச்சைகளை அதிகமாக நம்புவதை தவிர்ப்பது நல்லது.
நோயாளிகளை கவனிக்கும் முறை மற்றும் உபாயம் பின்வருமாறு:
- குழந்தையின் காய்ச்சலை மற்றும் உடலின் வெப்பம் விரைவாக அதிகரித்தலை கட்டுப்படுத்த குழந்தைக்கு போர்த்தி விடுதல். அதிகமான திரவங்களை உட்கொள்ள வைத்தல், குளிர் நீரில் குளிப்பதை தவிர்த்தல்.
- குழந்தை சுற்றியுள்ள இடம் பாதுகாப்பானதாக இருத்தல். வலிப்பு ஏற்படும்போது குழந்தைக்கு பக்கத்தில் ஏதாவது கூர்மையான பொருட்கள் இல்லா திருத்தல் மேலும் அதனால் குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல். குழந்தையை சுற்றி இருக்கும் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல்.
- வலிப்பு ஏற்படும்போது குழந்தையை ஒரு பக்கமாக சாய்த்துவிடுதல்.
- எப்போதும் குழந்தையுடன் ஒருவர் இருப்பது புத்திசாலித்தனம்.
- வலிப்புக்குப் பிறகு குழந்தையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு கொண்டுவருதல் மற்றும் அமைதியாக்குதல் உதவியாக இருக்கும்.
- குழந்தைக்கு வலிப்பு ஏற்படும்போது அதன் கை/கால்களை பிடித்துக்கொள்ளவோ அல்லது அதன் வாயில் ஏதாவது போடவோ முயற்ச்சிக்க வேண்டாம்.