எலக்ட்ரோலைட் சமநிலையின்மை என்றால் என்ன?
கனிமங்கள் அல்லது எலக்ட்ரோலைட்கள் எனப்படுபவை உடலின் பல்வேறு இயக்கங்களின் ஏகநிலைமை அல்லது சமநிலைமையை பராமரிப்பதற்கு முக்கியமானவையாகும். உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின் சமநிலையின்மை நரம்புகள், ஹார்மோன்கள் மற்றும் உடல் திரவங்களின் வழக்கமான செயல்பாடுகளை பாதிக்கும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மை என்றால் சோடியம், குளோரின், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஒன்று அல்லது அதிகமான எலக்ட்ரோலைட்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது என்று அர்த்தம்.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
உடலில் எலக்ட்ரோலைட்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதன் விளைவாக ஏற்படும் சில அறிகுறிகள் இவையாகும்:
- உடல் வறட்சி.
- தசைகளில் பிடிப்புகள் மற்றும் பலவீனம்.
- தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் அயர்வு.
- குழப்பம்.
- வலிப்புகள்.
- மனஅழுத்தம்.
- ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள்.
- இதயத்துடிப்பில் தொந்தரவுகள்.
- உடல் முழுவதும் வீக்கம்.
- எலும்பு பிரச்சனைகள்.
- சிறுநீர் வெளியேற்றத்தில் மாற்றங்கள்.
எலக்ட்ரோலைட் சமநிலையின்மையின் முக்கிய காரணங்கள் என்ன?
எலக்ட்ரோலைட் சமநிலையின்மையின் முக்கிய காரணங்கள் இவற்றை உள்ளடக்கியதாகும்:
- வயிற்றுப்போக்கு, வாந்தி, மிக அதிகமாக வியர்ப்பது, தீவிரமான தொற்றுக்கள், சிறுநீர்த்தடுப்பி இயக்குநீரில் குறைபாடு போன்றவைகளின் காரணமாக உடல் நீரை இழப்பது.
- உடலிலுள்ள சோடியம் மற்றும் கால்சியத்துடன் தொடர்புடைய அட்ரினல் சுரப்பு இயக்குநீர் (அட்ரினல் சுரப்பியில் சுரப்பது) மற்றும் பாராதைராய்டு ஹார்மோனின் செயல்பாடுகளில் குறைபாடு.
- சிறுநீரகங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடு காரணமாக உடலிலுள்ள எலக்ட்ரோலைட்களின் அசாதாரண இழப்பு அல்லது அதிகரிப்பு.
- ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் (நீர்பெருக்கிகள்).
- இதயச் செயலிழப்பு,நுரையீரல் குறைபாடுகள் போன்ற மற்றும் பல.
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
வரலாறு,உடல் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை அடிப்படையாக கொண்டு மருத்துவர்கள் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை கண்டறிகின்றனர்.
- ரத்த சோதனைகள்
- ரத்தத்தில் எலக்ட்ரோலைட்களின் குறைவு அல்லது அதிகரிப்பு, ரத்தத்தில் பி.ஹெச் அளவு, சிறுநீரகங்களின் செயல்பாடுகள் போன்ற இன்னும் பலவற்றையும் அறிவதற்காக சீரம் சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம் மற்றும் பலவற்றை அளப்பதற்கு ஒரு அடிப்படை வளர்ச்சிதை மாற்றக்குழு பயன்படுத்தப்படுகிறது.
- சிறுநீர் சோதனை:
- இது சிறுநீரிலுள்ள எலக்ட்ரோலைட்களின் அளவுகளை அளப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
- மற்ற சோதனைகள் - இவை எலக்ட்ரோலைட் சமநிலையின்மையின் காரணங்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகிறது.
- சீரம் கிரியேட்டினின், ரத்த யூரியா நைட்ரஜன் சோதனைகள்.
- பாராதைராய்டு ஹார்மோன் அளவுகளின் சோதனைகள்.
- இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை அறிவதற்காக எலெக்ட்ரோகார்டியோகிராம், 2டி எக்கோ, மார்பக எக்ஸ்ரே மற்றும் பல சோதனைகள்.
சமநிலையின்மையை சீராக்குவதை குறிக்கோளாகக் கொண்ட சிகிச்சை முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- நரம்புவழி ஊசிகள் மூலமாகவோ அல்லது வாய்வழி மாத்திரைகள் மூலமாகவோ கூடுதல் எலக்ட்ரோலைட்கள் அளிக்கப்படுத்தல்.
- பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் அதிகமுள்ள புத்தம்புதிய பழங்களை உட்கொள்ளுதல்.
- நரம்பு பிடிப்பு, தலைவலி, குமட்டல் மற்றும் பல அறிகுறிகளை குணப்படுத்துவதற்கான சிகிச்சை.
- நீர்க்கட்டு அல்லது உடலில் வீக்கம் இருக்கும்பட்சத்தில் குறைவான நீர் உட்கொள்ளுதல்.
- நீர்க்கட்டை குணப்படுத்துவதாக நீர்பெருக்கிகள் போன்ற மருந்துகளை அளித்தல்.
- எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை விளைவிக்கும் அட்ரீனல் சுரப்பி தொடர்பான குறைபாடுகளுக்காக கார்டிகோஸ்டெராய்டு ஊசிகள்.