சுருக்கம்
ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு, உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சினையாகும். வெளியிலிருந்து செயல்படும் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளில், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. பல்வேறு ஆன்டிஜென்களுக்கு (நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது அந்நிய பொருட்கள்) எதிரான, உடலின் அதிக உணர்திறன் மற்றும் ஹேப்டன்களும் (ஒரு வகை ஆன்டிஜென்) கூட எக்ஸிமாவுக்குக் காரணமாகக் கூடும். பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், தோலில் அரிப்பு, சிவந்து போதல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் செதிலாக உரிதல் ஆகியவை அடங்கும். எக்ஸிமாவுக்கான சிகிச்சை தேர்வுகளும், அதே போல் நோய் முன்கணிப்பும், எக்ஸிமாவின் வகை மற்றும் ஒரு நபரின் வயதைப் பொறுத்து வேறுபடுகின்றன.