சுருக்கம்
நீரிழிவு(சர்க்கரை நோய்) நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பொதுவான ஒரு கோளாறு ஆகும், இது எந்த வயதினரையும் எந்த பாலின மக்களையும் பாதிக்கக் கூடும். இது வெல்லமுள்ள நீரிழிவு என மருத்துவ முறைப்படி அழைக்கப்படுகிறது. இந்த நோய் இரத்த ஓட்டத்தில் உயர் இரத்த குளுக்கோஸ்(சர்க்கரை) அளவுகள் இருப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவை சர்க்கரை நோய் வகை 1 மற்றும் சர்க்கரை நோய் வகை 2 என வகைப்படுத்தலாம். குழந்தைகளுக்கான நீரிழிவு, கர்பகால நீரிழிவு, பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை போன்றவை நீரிழிவின் பிற பிரிவுகள் ஆகும். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர், ஏனெனில் நீரிழிவுக்கு ஒழுங்காக சிகிச்சை அளிக்கப்படாமல் அல்லது பெறப்படாமல் இருப்பது எப்போதும் முக்கிய உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக குருட்டுத்தன்மை, இதய நோய்கள், மற்றும் முடக்குவாதம்/ஊனம் ஆகியவற்றை உண்டாக்கலாம். இருப்பினும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தல் , உணவு, மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சில சிகிச்சைகள் (தெரபிஎஸ்)மூலம் ஆரம்பகட்ட நிலையிலேயே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சரியான முறையில் கையாளவும் உதவுகின்றன.