கிளாஸ்ட்ரீடியம் டிபிசைல் பெருங்குடல் அழற்சி என்றால் என்ன?
கிளாஸ்ட்ரீடியம் டிபிசைல் (சி. டிபிசைல்) என்பது மண், காற்று, நீர் மற்றும் மலம் ஆகியவற்றில் பொதுவாக காணப்படும் ஒரு பாக்டீரியமாகும். சி. டிபிசைல் நோய்த் தொற்றானது மற்ற பிரச்சனைகளைத் தவிர பெருங்குடலில் ஏற்படும் அழற்சிக்கும் காரணமாக இருக்கிறது. இது பொதுவான நோய்த்தொற்று அல்ல. இது வழக்கமாக மருத்துவமனை சேர்க்கையுடன் தொடர்புடையதாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- சி.டிபிசைல் பெருங்குடலைப் பாதிக்கும் போது, பெருங்குடல் புறணியில் அழற்சி ஏற்படுவதற்கு காரணமாகிறது, இது காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.
- வயிற்று வலி மற்றும் தசை பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும்
- பிற அறிகுறிகளில் வயிற்றுப்போக்கும் உட்பட்டதே, அதோடு ஒரே நாளில் பல முறை நீர்க்க மலம் கழிக்கக்கூடும். இந்நோயில் மலத்தோடு இரத்தம் போவது பொதுவான ஒன்றே.
- வயிற்று போக்கு உடலில் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் தாது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.
- கடுமையான சந்தர்ப்பங்களில், பெருங்குடல் சிதைவு ஏற்பட்டு தொற்று உடலின் மற்ற பகுதிகளில் பரவுகிறது என்றால், அது உயிருக்கு ஆபத்தாக்கக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- கிளாஸ்ட்ரீடியம் டிபிசைல் பெருங்குடல் அழற்சி ஏற்படுவதற்கு பொதுவான காரணம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கூடிய சமீபத்திய சிகிச்சையாகும். ஒருவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ளும்போது பெருங்குடலில் உள்ள பாக்டீரியாவின் சமநிலை பாதிக்கப்படுகிறது, இது சி. டிபிசைல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கின்றது.
- அமாக்சிசிலின், செபாலோஸ்போரின், பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் ஆகியவை பெருங்குடல் அழற்சிக்கு காரணமாக இருக்கும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும்.
- இந்த பாக்டீரியா இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பெருங்குடல் அழற்சி ஏற்படும் என்று எந்த அவசியமுமில்லை. குடற்பகுதியில் பாக்டீரியா இருக்கும்போதிலும், எத்தகைய அறிகுறியும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். மக்கள் பாக்டீரியாவை தாங்கி இருக்கும் நோய் கடத்திகளாகவே இருக்க நேரிடுகிறது.
- இது மருத்துவமனையில் இருந்து பரவிய நோய்த்தொற்றாகக் கூட இருக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயை கண்டறிவதற்காக, மருத்துவர் சமீபத்தில் உட்கொள்ளப்பட்ட மருந்துகளின் முழுமையான வரலாற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
- இது போன்ற தொற்றுகளால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோதனைகளில் பிரதிபலிக்கின்றது.
- சி. டிபிசைலினால் உருவாக்கப்படும் நச்சுத்தன்மையை கண்டறிய சிறப்பு மல பரிசோதனைகள் இருக்கின்றன மற்றும் இந்த சோதனைகள் இந்நோயை கண்டறிந்து உறுதிசெய்ய உதவுகிறது.
- பெருங்குடல் அகநோக்கல் மற்றும் மலக்குடல் உள்நோக்கியல் சோதனைகள் மூலம் மருத்துவர்கள் பெருங்குடலின் நிலையை கண்டறிந்து கொள்கின்றனர்.
தொற்றுக்களை உண்டாக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நிறுத்துவதே முதன்மையான சிகிச்சையாகும். மெட்ரோனிடசோல் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சி. டிபிசைல் தொற்றுக்கு எதிரான செயலூக்கம் உடையவை.
- நீர்சத்துக் குறைவு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரிசெய்ய, திரவங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
- பாக்டீரியா முழுமையாக நீக்கப்படாத காரணத்தினால் இந்த நிலை மறுபடியும் ஏற்படலாம், அத்தருணத்தில் அதிக அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் உயிரினத்தை முற்றிலுமாக அழிக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அடையாளம் காண்பது அவசியம்.