மார்பக இரத்தநாள வீக்கம் என்றால் என்ன?
பிரசவத்திற்குப் பிறகு ஆரம்ப நாட்களில், பெண்ணிகளிடத்தில் நிலவும் வலி தருகிற மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிற ஒரு நிலைமையே மார்பக இரத்தநாள வீக்கம் ஆகும். மார்பகங்களில் அதிகப்படியான பால், திரவம் மற்றும் இரத்தம் நிறைந்திருப்பதால், மார்பகங்களில் வீக்கம் ஏற்பட்டு, முலைக்காம்புகளில் ஒரு தட்டையான தோற்றம் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மார்பக இரத்தநாள வீக்கத்துடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வீங்கிய, உறுதியான, மற்றும் வலி நிறைந்த மார்பகங்கள்.
- முலைக்காம்புகள் தட்டையாகவும் இறுக்கமாகவும் தோற்றமளிக்கும்.
- முலைக்காம்புகளை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் கடினமாகக் கூடும், இது உங்கள் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
- லேசான காய்ச்சல்.
- கக்கத்தில் உள்ள நிணநீர்க்கணுவில் லேசான வீக்கம் மற்றும் மேன்மையுணர்வு.
கடுமையான நிலைமைகளில் ஏற்படும் அசாதாரண அறிகுறிகள் பின்வருமாறு:
- வீங்கிய, கடினமான, பளபளப்பான, மற்றும் வெதுவெதுப்பான மார்பகங்கள், மேலும் இது தொடுவதற்கு ஒரு சிறிய கட்டியான தன்மை உடையதாக இருக்கும் (மேலும் வாசிக்க: மார்பக கட்டிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்).
- துடிதுடிப்புடன் கூடிய வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
குழந்தை பிறந்த சில நாட்களில் மார்பக இரத்தநாள வீக்கம் பொதுவாக ஏற்படுகிறது. இது குழந்தையின் பால் தேவையை சரிக்கட்ட நிகழும் உடலின் இயங்குமுறை ஆகும்.
மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- ஒழுங்கற்ற மற்றும் தேவைக்கும் குறைவான தாய்ப்பாலூட்டல்.
- மார்பக அறுவை சிகிச்சை மேற்கொண்ட வரலாறு.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
மார்பக இரத்த நாளவீக்கத்தின் அறிகுறிகள் நோய் கண்டறிதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தாய்ப்பாலூட்டல் முறை சார்ந்த வரலாறு இந்த நிலைமையை சரிசெய்ய இன்றியமையாததாகும். இது பின்வருவனவற்றில் இருந்து வேறுபடுகிறது:
- மார்பக இரத்தநாள வீக்கத்திற்கு வழிவகுக்கும் ஹார்மோன் சீர்கேடுகள்.
- முலையழற்சி.
- மார்பகத்தின் இருபக்கமான, பெரிதான, தீங்கற்ற விரிவாக்கத்தை உள்ளடக்கிய ஜிஜாண்டோமாஸ்டியா.
உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான தாய்ப்பாலூட்டல் குறித்த வழிகாட்டுதல்கள் மார்பக இரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய அவசியமானதாகும். வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகள் தேவைப்படுகின்றன. விரிவாக்கத்தைத் தடுக்க குறிப்பிட்ட ஹார்மோன் கோளாறுகளுக்கு பொருத்தமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சுய-பாதுகாப்பு பின்வரும் நிலைகளை கொண்டுள்ளது:
- வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற குளிர்ந்த பொருட்கள் அல்லது ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
- சௌகரியமான மற்றும் தளர்வான மார்பக்கச்சை (பிரா) பயன்படுத்த வேண்டும்.
- குழந்தையை மார்புகாம்புகளுக்கு மேலே உள்ளவாறு ஏற்றமான வகையில் இருக்கும்படியாக பாலூட்டுதல் மார்பக இரத்தநாள வீக்கத்துடன் தொடர்புடைய துன்பத்தை குறைக்கிறது.
- பாலூட்டிய பிறகு கையால் பாலை பீச்சி எடுத்தல் வேண்டும். கடுமையான நிலைமையில், இதற்கு மார்பக பம்ப் பயன்படுத்தலாம்.