தீங்கற்ற ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்கள் என்றால் என்ன?
தீங்கற்ற ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்கள் என்பது மார்பகங்களில் தீங்கற்ற கட்டிகள் அல்லது மார்பக திசுக்களில் நீட்சி போல் காணப்படும். இந்த புற்று நோயற்ற கட்டிகள் பெரும்பாலும் மார்பகங்களின் வெளிப்புறத்திலும் மேற்பகுதியிலும் தோன்றக்கூடியது. இது 20-50 வயதுள்ள பெண்களுக்கு மிகவும் சாதாரணமாக நிகழுக்கூடிய ஒன்று.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த தீங்கற்ற ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்களின் அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு அல்லது சுழற்சியின் போது தெரிய வரும் இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும். இதன் அறிகுறிகள்:
- மார்பகங்களில் வலி ஏற்படும் (மேலும் படிக்க: மார்பக வலிகளுக்கான காரணங்கள்).
- மார்பகங்களை தொடும் பொழுது மென்மையாக உணர்வீர்கள்.
- மார்பகங்கள் கனமாகவும் வீக்கத்துடனும் காணப்படும்.
- மார்பகங்களில் கட்டிகள் தோன்றும்.
- நிப்பிளில் இருந்து வடிதல் ஏற்படும்.
- மாதவிடாய் காலத்திற்கு முன்பு மார்பகங்களில் மிகவும் வலி ஏற்படும்.
மார்பகங்களில் ஏற்பட்ட கட்டிகள் திடீரென்று ரப்பர் போன்றும் மிருதுவாகவும் தோன்றும். தொடும் பொழுது அவை சற்று விலகும். இந்த கட்டிகள் மாதவிடாய் சுழற்சியின் முன்பு சற்று பெரிதாகும்.
இங்கு முக்கியமாக தெரியவேண்டியது என்னவென்றால் தீங்கற்ற ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்கள் ஒரு பெண்ணின் மார்பக புற்று நோய்யாக உருவாகும் மாற்றத்தை அதிகரிக்காது. இந்த ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்களால் ஏற்படும் மாற்றங்கள் தீங்கற்றவை மற்றும் இதனால் ஏற்படும் எந்த ஒரு வழியும் குணப்படுத்த முடிந்தவையே.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
மருத்துவர்கள் இந்த தீங்கற்ற ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்கள் ஏற்படும் முக்கிய காரணத்தை இது தான் காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் இது இனப்பெருக்க ஹார்மோன் ஆகிய ஈஸ்ட்ரோஜென் தான் இதன் முங்கிய காரணம் என்று கூருகின்றனர். இந்த நிலை பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சிக்கு மேல் நீடிப்பதில்லை என்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இது இனப்பெருக்க ஆண்டுகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுபவை என்று நினைக்கின்றனர்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
முதலில் உடல் பரிசோதனையின் மூலம் தான் ஒரு மருத்துவர் அந்த கட்டிகளை கண்டறிந்து அதில் ஏதாவது இயல்பிற்கு மாறாக கட்டிகளின் அமைப்பு உள்ளதா என்று ஆராய்வார். உடல் பரிசோதனையை அடுத்து மருத்துவர் இதை உறுதிப்படுத்த சில மருத்துவ புகைப்பட சோதனைகளான மாமோகிராம் மற்றும் மார்பக அல்ட்ராசவுண்டை பரிந்துரைப்பார்.
மேலும், இந்த கட்டிகள் தீங்கானவையா? இல்லையா? என்று முடிவு செய்வதற்கு திசு பயாப்ஸி போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு சிகிச்சை என்பது பாதிக்கப்பட்டவர் எதாவது அறிகுறிகளை அனுபவித்தால் மட்டுமே கொடுக்கப்படும். அது வலி நிவாரண மருந்தாக இருக்கலாம் மார்பகங்களில் ஏற்படும் மென்மைத்தன்மையை குறைப்பதற்கு. ஆனால் பெரும்பாலும் மருத்துவர்கள் சுய பாதுகாப்பு வழிகளையே பரிந்துரைப்பார். அவை:
- நன்கு உறுதியாக பொருந்துகின்ற பிராக்களை அணிதல்.
- மார்பகங்களில் உள்ள வலியை போக்க மிதமான சூட்டில் மசாஜ் செய்வது.
- இயல்பான அழற்சி இல்லாத உணவுகளை உட்கொள்வது.
இந்த அறிகுறிகள் மிகவும் மோசமாக இருந்தால் மருத்துவர் அவர்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது வலி மற்றும் மார்பகத்தின் மென்மைத்தன்மையை குறைக்க வேறு மருந்துகளை பரிந்துரைப்பார்.