முகத்தசை வாதம் என்றால் என்ன?
முகத்தசை வாதம் (கடை வாய்க் கோணல்) என்பது முகத்தில் ஒரு பக்கத்திலுள்ள தசைகள் மட்டும் பலவீனமாகவோ அல்லது முடங்கிபோயிருக்கும் நிலையில் உள்ளதை குறிக்கும். முக நரம்பு சேதம் காரணமாக இந்த தசைகள் இவ்வாறு ஆகிறது. எனினும் இந்த தசைகள் தாற்காலிகமாகவே பாதிக்கப்படுகின்றன. மேலும், இது தகுந்த சிகிச்சை மூலம் சரிசெய்யபடுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- முகத்தசை வாதத்தால் பொதுவாக முகத்தில் ஒரு பக்க தசையில் மட்டுமே பாதிப்பு ஏற்படும். சுமார் 1% தரப்பினருக்கு மட்டும் இவ்விழைவு இரு புறத்திலும் காணப்படும்.
- முகத்தசைகளை கட்டுப்படுத்தும் நரம்பின் இயக்கம் இதனால் பாதிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் இமைக்கவும், பாதிக்கப்பட்ட இடத்தில் வாய் அசைக்கவும், சிரிக்கவும் மற்றும் மெல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
- முகத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் வலி உண்டாகலாம், குறிப்பாக தாடையிலும் தலையிலும் வலி உண்டாகலாம்.
- தசை பலவீனம் காரணமாக கண்ணிமைகள் தொங்குவது மற்றும் உமிழ்நீரும் வாயின் மூலையில் இருந்து ஒழுகலாம்.
- நாக்கின் முன் பகுதியில் உள்ள சுவை உணர்வு பகுதிகளும் பாதிக்கப்படலாம்.
முகத்தசை வாதத்திற்கான முக்கிய காரணங்கள் என்ன?
- முகத்தசை வாதத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை; இருப்பினும் பல வைரல் தொற்றுகளால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ், ஹெர்பெஸ் ஜோஸ்டர், ஹெச்ஐவி, சைட்டோமெகலோ வைரஸ் மற்றும் எப்ஸ்டீன் பார் வைரஸ் ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த நோய்க்கான ஆபத்தான காரணங்கள்:
பேரதிர்ச்சி, வீக்கம் அல்லது முக நரம்புக்கு சேதத்தை உண்டாக்கும் எந்த ஒரு காரணிகளும் முகத்தசை வாதத்திற்கு காரணமாகின்றன.
நோயை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் சிகிச்சையளிப்பது?
இமேஜிங் டெஸ்ட் மற்றும் இரத்த பரிசோதனையுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மூலம் இந்த நோயை கண்டறியலாம்.
- மருத்துவர் அறிகுறிகளின் அடிப்படையில் முகத்தை பரிசோதிப்பார் மற்றும் உமிழ் நீர் சுரப்பு, கண்ணிமைகள் தொங்குவதின் அறிகுறிகளையும் சோதிப்பார்.
- எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன் போன்ற இமேஜிங் தொழில்நுட்பங்கள் மூலமாகவும் முக நரம்பின் நிலையை காணலாம்.
- மருத்துவர் ஒரு வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கிறார் என்றால், அதை உறுதிப்படுத்துவதற்கு இரத்த பரிசோதனையும் செய்யப்படலாம்.
- இதனை கண்டறிதல் என்பது பக்கவாதம், லைம் நோய் மற்றும் மூளை கட்டி ஆகியவை இல்லை என உறுதி செய்து ஒதுக்குவதையும் சேர்த்தே அமைகிறது.
முகத்தசை வாதத்திற்கான சிகிச்சையானது அடையாளம் காணப்பட்ட காரணங்கள் அல்லது ஆபத்து காரணங்களை பொறுத்தே பெரிதும் அமைகிறது.
- கார்டிகோஸ்டெரொய்ட்ஸ் எனப்படும் மருந்து இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இதனால் 6 மாத காலத்திற்குள் நிவாரணம் பெறலாம். எனினும் இந்த நிலைமைக்கு ஆரம்பம் முதலே சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.
- நோய்க்கு ஒரு வைரஸ் தான் காரணமென்றால், வைரஸ் தோற்று ஏற்படாமலிருக்க (ஆன்டி-வைரல்) மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.
- மருந்துகளுடன், கூடவே பிசியோதெரபி மூலம் தசை பயிற்சியும் செய்ய அறிவுத்தப்படுகிறது.
- கடுமையான சந்தர்ப்பங்களில், நரம்பு சுருங்கியிருந்தால் அல்லது அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்திருந்தால் அறுவை சிகிச்சை மூலம் சுருக்கத்தை விடுவிக்கலாம்.
- இந்த நிலை ஒரு சில மாதங்களில் சரியாகிறது மற்றும் அரிதாகவே மறுபடியும் வருகிறது.