பெஜல் என்றால் என்ன?
பெஜல் என்பது ட்ரிபோனெமா என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோய் ஆகும்.இது சிபிலிஸ் பக்டீரியத்துடன் மிக நெருக்கமான தொடர்புடையது மேலும் இது என்டெமிக் சிபிலிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பொதுவாக காணப்படும் ஆனால் அமெரிக்காவில் அரியதாக காணப்படும்.இதனால் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் பாதிப்பு அடைகிறார்கள்.
சிபிலிஸ் போல் இல்லாமல், இது நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பகிரப்பட்ட பொருட்களாலும் பரவுகிறது ஆனால் பாலியல் ரீதியான பரவல் இல்லை.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
- இந்த நோயானது வாயில் சிறு துணுக்குகள் மற்றும் கொப்பளங்களோடு காணப்படும்.
- இந்த கொப்புளங்கள் பின்னர் படிப்படியாக கைகள் மற்றும் கால்களுக்கும் பரவும்.
- மூட்டு எலும்புகளில் வலிகள் தோன்றும், மேலும் சில சந்தர்ப்பங்களில் கடுமையாக சிதையவும் கூடும்.
- எலும்பு மற்றும் வாயில் குறிப்பாக அண்ணத்தில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் கம்மாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
- நிணநீர் மண்டலங்களில் கூட வீக்கம் காணப்படலாம்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
- பெஜல் ட்ரிபோனெமா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நுண்ணிய உயிரினம் சிபிலிஸ், ட்ரிபோனெமா பாலிடமை ஏற்படுதும் அதே பாக்டீரியா குடும்பத்தை சார்ந்ததாகும்.
- இது பாலியல் ரீதியாக பரவாது மற்றும் இது பொதுவாக வறண்ட சூழலில் வாழும் ஆரோக்யமற்ற குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சை அளிக்க படுகிறது?
பெஜல் வரலாற்று மற்றும் நுண்ணோக்கி பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
- ஒரு நபரின் புவியியல் வரலாறு பெஜல் ஆய்வுக்கு மிக முக்கியம் ஆகும். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரை கடல் பகுதிகளில் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம்.
- இந்த பாக்டீரியா புண்கள் நுண்ணிய நுண்ணோக்கி மூலம் பரிசோதிக்கபடுகின்றன.
- குடும்ப வரலாறு மற்றும் குழந்தையின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து இருந்தால் கூட நோயறிதலை எளிதாக்க முடியும்.
- பெஜல் மற்றும் சிபிலிஸ் ஆகியவற்றை வேறுபடுத்த ஒரு முழுமையான வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது.ஏனென்றால் நுண்ணோக்கியின் கீழும் இரண்டு பாக்டீரியாக்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
நோய் தொற்றை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு மருந்துகளும் சிகிச்சைகளும்.
- இதற்கு நிலையான மருந்து பெனிசிலின் ஜி ஆகும், இது ஊடுருவலாக நிர்வகிக்கபடுகிறது.
- நோயாளிகளுக்கு ஒருவேளை பென்சிலினால் ஒவ்வாமை ஏற்பட்டால், டாக்சிசிலின் அல்லது அஜித்ரோமைசின் போன்ற மருந்துகளும் கொடுக்கபடுகின்றன. இருப்பினும் அனைத்து மருந்துகளும் பரிந்துரைகளின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு.
- தொற்று நோயை முழுமையாக அகற்ற குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும்.