குருதிக் குழாய் வரைவி (ஆஞ்சியோகிராஃபி) என்றால் என்ன?
குருதிக் குழாய் வரைவி என்பது சாயத்தை பயன்படுத்துக் கூடிய ஒரு எக்ஸ்-ரே தொழில்நுட்பம், இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த குழாய்களுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த இரத்த நாளங்கள் சாதாரண எக்ஸ்ரேயில் காண இயலாது, இதயத்திற்கு செல்லும் மற்றும் இதயத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை பற்றி அறிந்து கொள்ளவும், தமனிகளில் உள்ள அடைப்புகள் பற்றி தெரிந்துகொள்ளவும்,ஒரு பிரத்யேக சாயம், இரத்த குழிகளுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த ஆஞ்சியோகிராஃபி முறையில் செலுத்தப்படும் சாயதின் நடவடிக்கைகள் ஆஞ்சியோகிராம் என அழைக்கப்படுகிறது, மேலும் இதை ஒரு தொலைக்காட்சி திரையில் கண்கூடாக காணமுடியும்.
எதற்காக குருதிக் குழாய் வரைவி செய்யப்படுகிறது?
குருதிக் குழாய் வரைவி என்பது ஒரு உடல் உறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கண்காணிக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் மற்றும் அவற்றின் வழியாக இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைத் தீர்மானிக்கவும் பயன்படுகிறது. இது இரத்த நாளங்களுக்கு தொடர்புடைய பல நிலைகளை கண்டறிய உதவும். மேலும் ஆத்தோஸ்லோக்ரோஸிஸ், புற தமனி நோய், மூளை இரத்தத்தமனி சுருங்குதல், ஆஞ்சினா, இரத்தக் கட்டிகள் மற்றும் நுரையீரல் வளித்தேக்கம் போன்ற இரத்த குழாய் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளவும் உதவுகிறது. மிகப் பொதுவாக, ஆஞ்சியோகிராஃபி என்பது இதயம் மற்றும் மூளையில் உள்ள இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புக்களை கண்டறிய பயன்படுத்தபடுகிறது.
யாருக்கு குருதிக் குழாய் வரைவி தேவைப்படுகிறது?
பல சூழ்நிலைகளில் ஆஞ்சியோகிராஃபி தேவைப்படுகிறது அவற்றுள் சில கீழேக் வரையறுக்கப்பட்டுள்ளன:
- ஆஞ்சினா உள்ள தனி நபர்கள் – ஒரு நபரின் மார்பில் விவரிக்க முடியாத வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்ந்து, அந்த வலி தோள்கள், கைகள், கழுத்து, தாடை அல்லது பின்புறம் வரை பரவினால் ஆஞ்சியோகிரஃபி பரிந்துரைக்கப்படுகிறது.
- மாரடைப்பு உள்ள நபர்கள் – ஒரு நபரின் இதயம் திடீரென துடிப்பதை நிறுத்திவிட்டால், ஆஞ்சியோகிராஃபி செயல்படுத்தப்படுகிறது.
- உடற்பயிற்சி சோதனை, எலக்ட்ரோகார்டியோகிராம் மற்றும் பிற சோதனைகளின் முடிவுகளில் ஒருவருக்கு இருதய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆஞ்சியோகிராஃபி ஆய்வுகள் நடத்தப்படும்.
- ஒரு நபருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவசர தேவையின் அடிப்படையில், கரோனரி ஆஞ்சியோகிராஃபி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
குருதிக் குழாய் வரைவி செயல்படுத்தப்படும் வழிமுறைகள் யாவை?
பொதுவாக, ஆஞ்சியோகிராஃபி ஒரு பாதுகாப்பான வழிமுறையாகும். இது வழக்கமாக மருத்துவமனையில் எக்ஸ்ரே அல்லது ரேடியாலஜி துறைகளிலேயே நிகழ்த்தப்படுகிறது. இது 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரம் வரை நீடிக்கும். நோயாளி அதே நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்லலாம். நோயாளி பொதுவாக சுய நினைவில்தான் இருப்பார், இருப்பினும் சிறிய அளவிலான மயக்க மருந்து அவர்கள் சற்று தளர்வடைய உதவுகிறது. சில நேரங்களில், பொது மயக்கமருந்து கூட தூக்கத்தை தூண்டுவதற்காக கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு மேஜையில் உங்களை தளர்த்திக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இடுப்பு அல்லது மணிக்கட்டுக்கு அருகே உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, ஓரிட உணர்ச்சிநீக்கி மூலம் குறிப்பிட்ட இடம் மட்டும் உணர்ச்சியற்று போகக்கூடும். உடலில் உணர்ச்சியற்று போன இடத்தில் ஆழமான வெட்டு போடப்பட்டு அங்கே கதீட்டர் எனப்படும் சிறிய வடிகுழாய் ஒன்று பொருத்தப்படுகிறது. நிபுணர்கள், பரிசோதிக்க வேண்டிய உறுப்புக்குள் இந்த குழாயை மிக கவனத்துடன் செலுத்துகின்றனர். கதீட்டரின் நிலையை சரிபார்க்க எக்ஸ்-ரே புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த கதீட்டர் மூலமாக, சாயம் உள்ளே செலுத்தப்பட்டு,அந்த சாயம் இரத்தத்துடன் சேர்ந்து தமனியில் பயணிக்கும்போது, பல எக்ஸ்-ரே புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இது இரத்த குழாய்களில் உள்ள எந்த ஒரு அடைப்பையும் வெளிக்கொணர்ந்துவிட உதவிகிறது.