சிறுநீர் அமிலத்தன்மை என்றால் என்ன?
அமிலத்தன்மை கொண்ட சிறுநீர் என்பது சிறுநீரில் குறைந்த pH அளவு இருப்பதை குறிக்கின்றது. உணவு மற்றும் மருந்துகள் போன்ற பல காரணிகளினால் சிறுநீரில் அமிலத்தன்மை கொண்ட pH உருவாகின்றது. சோடியத்தின் அதிகரித்த அளவு மற்றும் அதிகமான அமிலத்தை உடல் எடுத்துக்கொள்கையில் சிறுநீரை உடல் அமிலமாக்குகிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தில் நிலையான pH ஐ பராமரிக்க சிறுநீரில் உள்ள அமில அளவுகளில் மாற்றங்களை செய்கின்றது. சிறுநீர் அமிலத்தன்மைக்குரிய சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டுவிட்டால், சிறுநீரில் இருக்கும் அதிக அளவு அமிலத்தன்மை சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம்.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சிறுநீர் அமிலத்தன்மையோடு தொடர்புடைய முக்கிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி.
- மூச்சு திணறல்.
- வாந்தி.
- குழப்பம்.
- தலைவலி.
- சிறுநீருடன் இரத்த வெளியேற்றம்.
- செயல்பாடுகளில் அதிகமான முயற்ச்சி இல்லையென்றாலும் சோர்வடைதல்
- களைப்பு.
- தூக்கக் கலக்கம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சிறுநீரக அமிலத்தன்மையின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- குருதிநெல்லியின் பழச்சாறு.
- கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய்.
- அமிலத்தேக்க நோயை ஏற்படுத்தக்கூடிய சுவாச நோய்கள்.
- நீரகற்றம்.
- அமிலத்தேக்க நோய் (உடலில் இருக்கக்கூடிய திரவங்களில் மிகுதியான அமிலம் இருத்தல்).
- சிறுநீரக குழாய் அமிலத்தேக்கம்.
- ஹைபர்க்ளோரமிக் அமிலத்தேக்கம்.
- லாக்டிக் அமிலத்தேக்கம்.
- நீரிழிவு அமிலத்தேக்கம்.
- நீர்மோர், தயிர் மற்றும் சோடா போன்ற உணவு பொருட்களை உட்கொள்வதனாலும் ஏற்படலாம்.
- பட்டினி கிடத்தல்.
- அதிகமான மதுப்பழக்கம்.
- மருந்துகள், உதாரணத்திற்கு, ஃபுரோசீமைட்.
- வயிற்றுப்போக்கு.
- அசைவ உணவுப்பழக்கம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
சிறுநீர் அமிலத்தன்மை என்பது பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி கண்டறியப்படுகிறது:
- ஆசிட் லோடிங் டெஸ்ட்: இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை ஆகியவை இந்த சோதனையினுள் அடங்கும். இது சிறுநீர் உற்பத்தியாகும் போது இரத்தத்தில் இருக்கும் அதிகமான அமிலத்தை விநியோகிக்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அளவிட உதவுகிறது.
- சிறுநீர் pH சோதனை: இது சிறுநீரில் உள்ள அமிலத்தன்மையை அளவிட உதவுக்கூடிய சோதனையாகும்.
- சிறுநீர் அமிலத்தன்மைக்கான அடிப்படை நோயினை கண்டறியும் காரணத்திற்காகவோ அல்லது மருந்துகளை பரிந்துரைக்கவோ மருத்துவ வரலாற்றை ஆராயக்கூடும்.
- சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளில் இருக்கும் குறைபாடுகளை சோதிக்க அல்ட்ராசவுண்ட் சோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்படலாம்.
சிறுநீர் அமிலத்தன்மைக்கு பின்வரும் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகிறது:
- சமச்சீரான சைவ உணவு பழக்கம்.
- சிறுநீர் அல்கலினைசிங் ஏஜென்ட்கள்.
- வலி நிவாரணிகள்.
- செடி-அடிப்படையிலான உணவுபழக்கத்துக்குரிய சப்ளிமெண்ட்ஸ்.
- நிறைய திரவங்கள் மற்றும் தண்ணீர் பருகுதல்.
- அஸ்கார்பிக் அமிலம் அதாவது, வைட்டமின் சி சப்ளிமெண்ட்டேஷன்.