முல்தானி மிட்டி அல்லது இயற்கையாக பொடியக்கப்பட்ட களிமண் என்றால் என்ன?

முல்தானி மிட்டி அல்லது இயற்கையாக பொடியக்கப்பட்ட களிமண் (புல்லர்ஸ் எர்த் ) பாகிஸ்தானின் முல்தானில் இருந்து கிடைக்கிறது. அதிகமாக இதை இந்தியாவில் பயன்படுத்தினாலும், முல்தானி மிட்டி அல்லது புல்லர்ஸ் எர்த்  என்பது பல உயர்-ரக ஒப்பனை பொருட்களின் முக்கிய அங்கமாக விளங்கும் பேன்டோனைட் களிமண், கால்சியம் பேன்டோனைட் என்பது பலரும் தெரியாது என்பது சுவாரஸ்யமான விஷயம். சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா?

அறிவியல் பூர்வமாக சொன்னால், புல்லர்ஸ் எர்த் என்பது அலுமினியம் சிலிகேட்டால் ஆன ஒரு விதமான களிமண். அதில் கால்சியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதனுள் உட்பொதிந்து உள்ளன. ஆனால், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் படி, களிமண்னை விட புல்லர்ஸ் எர்த்  சிறியதாக இருக்கும் என்றும் களிமண்ணை போல  பிளாஸ்டிக்காக இருக்காது என்றும் கூறுகிறது. புல்லர்ஸ் எர்த் ஏனைய களிமன்களை விட அதிக தண்ணீரை தக்கவைத்து கொள்வதால் ஹைட்ரேட்டிங் மற்றும் ஈரப்பதமேற்றும் ஏஜென்ட்டாக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

புல்லர்ஸ் எர்த் மற்றும் க்லெவின் அதிசயமிக்க உறிஞ்சும் தன்மை  பழங்காலத்திலேயே மனித இனத்துக்கு தெரிந்துள்ளது. க்ரீஸ் மற்றும் சைப்ரசில் பயன்படுத்தப்பட்டதாக முந்தைய பதிவங்கள் கூறுகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன், அங்கே துணிகளுக்கு சலவை செய்யும் பொருளாக பயன்படுத்தப்பட்டது. “புல்லர்ஸ்” என்ற வார்த்தை லத்தின வார்த்தையான ‘புல்லோ’வில் இருந்து வருகிறது. அதன் அர்த்தம் “துணிகளில் இருந்து எண்ணையை நீக்க செய்வது" ஆகும். அது பழங்காலத்து பேபிலோனியாவில் பல்வேறு ஒப்பனை மற்றும் ஹீலிங் ரெமெடிகளை தயார் செய்ய பயன்படுத்தபட்டது.

இன்று, புல்லர்ஸ் எர்த் என்பது கிட்டத்தட்ட எல்லா தொழில்துறையிலும் இடம் பெறுகிறது. அது ஒப்பனை துறை, பேப்பர் தொழில், விவசாயம், ட்ரை கிளீனிங், டையிங், தண்ணீர் சுத்திகரிப்பு, பவுன்றிகள் அல்லது மருத்துவ தோழிலும் பயன்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

புல்லர்ஸ் எர்த் சலவை பொருளாக பயன்படாமல், பல்வேறு விதமான களிமண்கள் பாத்திரங்கள்(பீங்கான்) மற்றும் ஒப்பனையில் பயன்படுகிறது. அவற்றை சில பழங்குடியினர் மண் குளியலுக்கும் பயன்படுத்தினர். அவை நச்சு நீக்கியாக இருப்பதோடு உடலுக்கு தணிவையும் தருவதாக நம்பப்படுகிறது.

  1. முகம் மற்றும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for face and skin in Tamil
  2. முடிக்கு முல்தானி மிட்டியின் பயன்கள் - Multani mitti benefits for hair in Tamil
  3. முல்தானி மிட்டியை உட்கொள்ளுதல் - Multani mitti consumption in Tamil
  4. முல்தானி மிட்டியின் பேஸ் பேக் செயல்முறை - Multani mitti face pack recipe in Tamil
  5. முல்தானி மிட்டியின் பக்க விளைவுகள் - Multani mitti side effects in Tamil

முல்தானி மிட்டி தோலுக்கு நிறைய பலன்களை தருகிறது. அது உங்கள் தோலில் இருந்து அழுக்கு மற்றும் எண்ணையை நீக்கவது மட்டும் இல்லாமல், பிரகாசிக்கும் ஒளியையும் தருகிறது. உங்கள் தோலுக்கு முல்தானி மிட்டியின் இன்னும் சில தெரிந்த நன்மைகளை ஆராயலாம்.

  • சருமத்தில் இருந்து கூடுதல் ஆயிலை நீக்குகிறது: கூடுதல் எண்ணெய் பிரச்சனைகளை குறைக்க முல்தானி மிட்டி தொன்று தொட்டு பயன்பட்டு வருகிறது. அது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவிட்டாலும், அது பிணைந்து கூடுதல் எண்ணெயை நீக்கி, உங்களுக்கு வழுவழுப்பான சுத்தமான சருமத்தைத் தருகிறது.
  • முகப்பருவில் இருந்து நிவாரணம்: முல்தானி மிட்டி வலிமையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை நிரூபித்து உள்ளது.  அதனால் அது முகப்பருவினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கங்களில் இருந்து நிவாரணம் அளிப்பதில் திறம்பட செயல் புரிகிறது. சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெய்யை உறிந்து முகப்பரு வருவதை தடுக்க உதவுகிறது.
  • இயற்கையான எக்ஸ்பொலியேட்டர்: முல்தானி மிட்டியில் உள்ள சிறிய களிமண் பொருட்கள் அதை ஒரு சிறந்த எக்ஸ்பொலியேட்டிங்க் ஏஜெண்ட்டாக உருவாக்குகிறது. அது சரும துவரங்களுக்கு மிகவும் அருகே செயல்பட்டு டெட் ஸ்கின் செல்ஸூக்கு எதிராக ஒரு ஆழமான சுத்திகரிப்பு வேலையை செய்கிறது.
  • சுருக்கங்களை நீக்குகிறது: புல்லர்ஸ் எர்த்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பேக் மூலம் ப்ரீ ரெடிகல்ஸை நடுநிலைப்படுத்துவதாலும் உங்களது சரும செல்களுக்கு ஆக்ஸிடேடிவ் சேதத்தை குறைப்பதாலும் ஸ்கின் ஏஜிங்க்கை மாற்றி அமைக்க உதவுகிறது.அது கரும்ப்புள்ளிகளை குறைத்து உங்களது சருமத்துக்கு அடியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உங்களது சருமத்தை இளமையாவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வைக்கிறது.

பிரகாசிக்கும் தோலுக்கு முல்தானி மிட்டியின் பேக் - Multani mitti pack for glowing skin in Tamil

உங்களுக்கு பிரகாசிக்கும் தோல் வேண்டுமா? அப்போது, முல்தானி மிட்டியின் பேக்கை பயன்படுத்துங்கள். எப்படி எளிதாக வீட்டில் முல்தானி மிட்டியின் செய்ய முடியும்.

முல்தானி மிட்டி ஒரு நல்ல ஹைட்ரேட்டிங் ஏஜென்ட். அது உங்களது பேக்கில் இருந்து நீரை தக்கவைத்துக்கொண்டு உங்களது தோலுக்கு இயற்கையான பிரகாசத்தை தருகிறது அதோடு, அது கால்சியம் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்கள் நிறைந்து இருப்பதால், அது உங்களது தோலுக்கு ஊட்டமளிக்கிறது. 

சிறப்பான பயன்களுக்கு, முல்தானி மிட்டியுடன் ரோஸ்வாட்டர் மற்றும் எலுமிச்சையை கலந்து தோல் பதனிடும் முகமுடியை உருவாக்கலாம். இது சம்மர் டேனில் இருந்து விலக பயன்படும்.

Face Serum
₹349  ₹599  41% OFF
BUY NOW

முல்தானி மிட்டியுடன் எண்ணெய் பசை சருமதித்தில் இருந்து விடுதலை பெறுங்கள் - Get rid of oily skin with mulatni mitti in Tamil

தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் ஓவர் ஆக்ட்டிவிடியால் பொதுவான பிரச்சனை தன் எண்ணெய் பசை சருமம். எண்ணெய் பசை சருமம் பொதுவாக இயக்குநீர் மாற்றத்துடன் இணைந்து இருக்கும், ஆனால் ஒரு எண்ணெய் பசை சருமத்தின் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. நிறைய பிராண்டுகள் எண்ணெய் பசை சருமத்துக்கு தங்களது மாறுபட்ட ஒப்பனை சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், நீங்கள் நம்பத்தகுந்த பக்க விளைவுகள் இல்லாத ஒரு இயற்கை தயாரிப்பு இருக்கும் போது, எதற்கு கெமிக்கல்ஸ் கலந்த ஒப்பனைக்கு போகவேண்டும். எண்ணெய் பசை சருமத்துக்கு முல்தானி மிட்டி ஒரு பிரபல வீட்டு வைத்தியம் ஆகும். அது ஒரு பிணைப்பு ஏஜென்ட்டாக இருப்பதால், அது சரும துவாரத்தில் இருக்கும் கூடுதல் எண்ணையை நீக்குகிறது.

எண்ணெய் பசை சருமத்துக்கு முல்தானி மிட்டியை பயன்படுத்த, நீங்கள் வீட்டிலேயே முல்தானி மிட்டி மற்றும் பால் மற்றும் டோமாட்டோவை கலந்து ஒரு முகமுடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். எண்ணெய் பசை சரும பிரச்சனையில் இருந்து விடுபேர அதை சரிசமமாக தோலின் மீது தடவி, அது உலர்ந்த பிறகு அதை கழுவிவிடவும்.

முல்தானி மிட்டி முகப்பருவில் இருந்து விடுதலை தருகிறது - Multani mitti provides respite from acne in Tamil

முகப்பரு அல்லது பிம்பல்ஸ் என்பது 12 முதல் 30 வயதுள்ள நபர்களிடையே வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் அது யாருக்கும் வரலாம். இது பெரும்பாலும் வாலிப பருவம் அடையும் டீன் ஏஜர்ஸ் மற்றும் இயக்குநீர் சமமின்மையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும். முகப்பருவுக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இயக்குநீர் மாற்றங்கள், பாக்டீரியாயம் பி. ஆகுன்ஸ் மற்றும் மரபியல் இளைஞர்களிடம் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. வெயிட்-ஹெட்ஸ் மற்றும் பிளாக்-ஹெட்ஸ் பொதுவான முகப்பரு வகைகள் ஆகும். முகப்பருவால் அவத்திப்படுபவர்களுக்கு முல்தானி மிட்டி பல நன்மைகளை தருகிறது. முதலில், அது கமெற்சியல் முகப்பரு கிரீம் போலவே சருமத்தில் இருந்து துவார அடைப்பு மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் கூடுதல் எண்ணெய்யை நீக்குகிறது. அதோடு, அதனிடம் ஆன்டிபாக்டீரியாயல் தன்மைகள் இருக்கிறது, அதனால் பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து, முகப்பருவை தவிர்க்கிறது.

ஒரு சாதாரண முகப்பரு பெஸ் மாஸ்கை ஆலோ வேரா ஜெல், மஞ்சள், மற்றும் தக்காளிகளை முல்தானி மிட்டியுடன் கலந்து வீட்டிலேயே தயாரிக்கலாம். அது உங்களுக்கு வீங்கிய வெடிப்பில் இருந்து விடுதலை தருவதோடு சுத்தமான பிரகசத்தையும் அளிக்கிறது.

(மேலும் படிக்க: வீக்கம் தரும் நோய் வகைகள்)

முல்தானி மிட்டி மூலம் உங்கள் இறந்த தோலை தேய்த்து எடுங்கள் - Scrub away your dead skin with Multani mitti in Tamil

உங்கள் சருமத்தின் மேற்பகுதி தொடர்ந்து யூவி கிரணங்கள் மற்றும் பொல்லுஷன் போன்ற தீங்கான சுற்றுப்புற காரணிகளுக்கு எக்ஸ்போஸ் ஆகிறது. பருவநிலை அல்லது ஈரப்பதத்தில் மாற்றத்திற்கு நமது சருமம் எளிதில் தாக்கப்படுகிறது. குளிர் காலத்தில் சருமம் வழக்கமாக வறண்டு இருக்கும். அதிஷ்டவசமாக, அவ்வப்போது நமது சருமம் தன் வெளிப்புற உயிரணுக்களை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அனைத்து உயிரணுக்களும் ஒரே சமயத்தில் விழுவதில்லை.

காலம் மற்றும் வயது கூட கூட , இயற்கையாக சருமம் விழுவது குறைந்து, டெட் ஸ்கின் சேருகிறது. டெட் ஸ்கின் உலர்ந்து செதிலாக தோற்றம் அளித்து தனது பிரகாசத்தை இழக்கிறது. வழக்கமாக, உங்கள் முகத்தில் உள்ள டெட் ஸ்கின்களை நீக்க கனிவாக உரித்து எடுக்கும் பெஸ் மாஸ்க் மற்றும் ஸ்கிரப் பயன்படுத்தி எடுக்கலாம். முல்தானி மிட்டியில் உள்ள மிகவும் சிறிய களிமண் பொருட்கள் அதை ஒரு சிறந்த எக்ஸ்போலியேட்டராக (கனிவாக உரித்து எடுக்கும் தன்மை ) மாற்றுகிறது. அதோடு, அது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து உலர்ந்த சருமத்தில் இருந்து விடுதலை பெற உதவுகிறது.

முல்தானி மிட்டி எலுமிச்சை தோல் மற்றும் தேனுடன் கலந்து, உங்கள சருமத்துக்கு ஒரு எக்ஸ்போலியேட்டிங் பெஸ் மாஸ்க்/ஸ்க்ரப்-ஆக மாறுகிறது.

சரும சுருக்கங்களை நீக்க முல்தானி மிட்டி - Multani mitti for removing wrinkles in Tamil

நமக்கு வயதாக ஆக, மீள் திறனுக்கு காரணமான கோலாஜென் மற்றும் அத்தியாவசிய புரதங்களை நமது தோல் இழக்க தொடங்கும். இதனால் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகும். வாழ்க்கை காரணிகளான  மன அழுத்தம் மற்றும் புகைபிடிப்பதால் அதன் தோற்றத்தை முன்கூட்டியே தரலாம். பெரும்பாலான ஆன்டி-ஏஜிங் கிரீம்கள் பக்க விளைவுகள் இல்லாமல் வராததால், முல்தானி மிட்டி அல்லது புல்லர்ஸ் எர்த் சிறந்த மாற்றாக விளங்குகிறது. அது உங்கள் சருமத்தை இறுக்குவதோடு சரும செல்களுக்கு அடியில் இரத்த ஓட்டத்தையும் பெருக்குகிறது. முறையாக இரத்த ஓட்டம் பெரும் திசுவானது ஊட்டச்சத்து மற்றும் பிராணவாயுவை பெற்று இளமையாக தோற்றமளிக்கிறது .

அதோடு, புல்லர்ஸ் எர்த்தில் இருக்கும் செலேநியம் போன்ற சில கனிமங்கள் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட் அளவினை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உங்களுக்கு வயதினால் தொல்லைதரும் அறிகுறிகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இது ப்ரீமச்சூர் ஏஜிங்குடன் தொடர்புடைய டார்க் ஸ்பாட்ஸ், கறைகள் மற்றும் ஏனைய சரும பிரச்சனைகளை எதிர்த்து செயல்படுகிறது.

வீட்டிலேயே ஆன்டி-ஏஜிங் பேக்கை தேன், சந்தன பவுடர், மற்றும் பாலை முல்தானி மிட்டியுடன் கலந்து செய்யலாம்.

சிலர் புல்லர்ஸ் எர்த்தை அதன் ஆன்டிஆக்சிடெண்ட் பயன்களுக்கு உண்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

முல்தானி மிட்டியின் ஹைட்ரேட்டிங் மற்றும் சுத்திகரிக்கும் பயன்கள் உச்சந்தலை(ஸ்கால்ப்) மற்றும் தலைமுடிக்கும் பயன் அளிக்கிறது. தலைமுடிக்கு பளபளப்பு தருவதோடு, ஆரோக்கியமான ஸ்கால்ப் பெருவதையும் அது உறுதி அளிக்கிறது.

  • பொடுகு பிரச்சனையை குரைக்கிறது: ஒரு ஹைட்ரெட்டிங்க் எஜண்ட்டாக இருப்பதால், முல்தானி மிட்டி உங்களது ஸ்கால்பை ஈரப்பதமூட்ட உதவி செய்து வறண்ட மற்றும் சீரற்ற தன்மையை குறைக்கிறது.
  • பொடுகை தடுக்கிறது: புல்லர் எர்த்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஹைட்ரெட்டிங்க் குணத்தினால், வழக்கமாக முல்தானி மிட்டியை உபயோகித்து வருவது பொடுகை குறைக்கவும் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது உங்கள் ஸ்கால்பில் தோல் காளான்களின் வளர்ச்சியை குறைக்க அதிக ஆண்டிபாடி செல்களைக் கொண்டு வந்து இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
  • எண்ணெய் பசை ஸ்கால்பின் நன்மைகள்: வழக்கமாக முல்தானி மிட்டி ஸ்கால்பில் இருக்கும் கூடுதலாக இருக்கும் அனைத்து எண்ணெய்யையும் உறிந்து எடுத்து, அதற்கு தேவையான நீரேற்றம் மற்றும் ஊட்டசத்தை தருகிறது. உங்களது ஸ்கால்பில் பாக்டீரியாவின் சுமையை குறைத்து உங்களை லைட்டாக உணர வைக்கிறது.

உலர்ந்த ஸ்கால்ப்புக்கு முல்தானி மிட்டி - Multani mitti for dry scalp in Tamil

உலர்ந்த மற்றும் சீரற்ற ஸ்கால்ப் என்பது சிலரிடம் உள்ள இயற்கையான சரும பண்பு. இதை பொல்லுஷன் மற்றும் பருவநிலை போன்ற காரணிகள் தீவிரமடைய செய்யும். இந்த காரணிகள் ஸ்கால்ப் உலர்ந்த தன்மை பெறுவதிலும் பங்கு வகிக்கலாம். அதோடு, சில ஷாம்புக்களும் உலர்ந்த தன்மை தன்மை பெறுவதில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

காலங்காலமாக, ஹேர் கேர் பிரடாக்ட்ஸ் தயாரிப்பில் முல்தானி மிட்டி இருந்து வந்துள்ளது.

முல்தானி மிட்டியின் ஹைட்ரேட்டிங் தன்மை உங்கள் ஸ்கால்ப் மற்றும் முடியை ஈரப்பதமுட்ட உதவும். உங்கள் ஸ்கால்ப் போதுமான இரத்த ஓட்டம் பெறுவதையும் அது உறுதி செய்கிறது. அதனால் அது கூடுதல் ஊட்டச்சத்து பெற்று இயற்கையான பளபளப்பை மீண்டும் பெறும்.

உங்களுக்கு ஸ்டரையிட் ஹேர் பிடிக்கும் என்றால், முல்தானி மிட்டி, யோகரட், வெள்ளை முட்டை மற்றும் சில துளி லெமன் ஜூஸ் மூலம் ஒரு ஹேர் பேக்கை உருவாக்கலாம். உங்களுக்கு முட்டை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதில் தேன் மற்றும் மாவை பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசை முடிக்கு முல்தானி மிட்டி - Multani mitti for oily hair in Tamil

உலர்ந்த ஸ்கால்ப்புக்கு சிகிச்சை அளிக்க உதவுவதோடு, எண்ணெய் பசை முடிகளுக்கு முல்தானி மிட்டி சிறப்பாகவும் இருக்கிறது. முறையாக பயன்படுத்தினால், முடி நுண்குமிழிகளில் இருந்து கூடுதல் எண்ணெய்யை வெளியே இழுத்து உங்கள் ஸ்கால்புக்கு தேவையான ஹைட்ரேஷனை தருகிறது. அது உங்கள் முடியில் எண்ணெய் தன்மையை குறைக்கிறது.

அதோடு, அது ஒரு எக்ஸ்போலியண்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியாயலாக இருப்பதால், அது அனைத்து அழுக்கு மற்றும் பாக்டீரியாவை உங்கள் முடியில் இருந்து நீக்குவதால், நீங்கள் லைட்டாக உணர்வீர்கள்.

எண்ணெய் பசை முடிக்கு முல்தானி மிட்டியின் பயன்களை பெற, நீங்கள் அதை யோகர்ட், வெள்ளை முட்டை, மற்றும் ஆலோ வேராவுடன் சேர்க்கலாம். அது உங்கள் முடியில் இருந்து கூடுதல் எண்ணெய்யை நிக்கி அதை இன்னும் பளபளக்க வைக்கிறது.

முல்தானி மிட்டி பொடுகை குறைக்கிறது - Multani mitti reduces dandruff in Tamil

பொடுகு என்பது ஒரு சாதாரண பிரச்சனை. இதனால் ஸ்கால்ப்பில்  ஸ்கெலிங் மற்றும் பிளேக்கினஸ்ஸை உருவாக்குகிறது. போடுகிற்கு சரியான காரணமாக எந்த ஒரு திடமான தடயமும் இது வரை கிடைக்கவில்லை, ஆனால் சில ஆய்வகள் பூஞ்சை தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. முல்தானி மிட்டியை தடவைக்கொள்வதன் மூலம் ஸ்கால்ப்பின் தோலில் இரத்த ஓட்டத்தை பெருக்கி ஸ்கால்பிற்கு நிறைய ஆன்டிபாடி செல்களை கொண்டு வரமுடிகிறது. அதனால், பூஞ்சை-சார்ந்த பொடுகை குறைக்க உதவும்.

முல்தானி மிட்டியின் பொடுகு நீக்கும் தன்மைக்கு பலம் சேர்க்க  ஆம்லாக்ரீன் டி போன்ற ஆன்டிமைகிறோபியல் பொருட்களை சேர்க்கலாம்.

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு குணமளிக்கும் பயன்களை தருவதால் இயற்கை களிமண்ணை உட்கொள்வது தெரிந்த விஷயம். அது ஒரு நல்ல நச்சுத்தன்மையை நீக்கும் ஏஜென்ட், ஒரு ஆன்டி-டையர்ரியல் ஏஜென்ட் மற்றும் சிறுநீரகத்துக்கு நலம் சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்சியம் பேன்டோனைட்டுக்கு வெவ்வேறு புவியில் ஆதாரம் இருப்பதாக பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அப்லாடாக்சின்ஸ் என்பது பாதிக்கப்பட்ட உணவுடன் நமது உடலை அடைந்து சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோயை உருவாக்கும் பங்கள் டாக்சின் ஆகும். அவற்றை உணவை-ஆதாரமாக கொண்ட பல பூஞ்சைகள் உருவாக்குகின்றன ஆனால் ஆஸ்பெர்கில்லஸ் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் அப்லாடாக்சின் நச்சுத்தன்மையை ஏற்படுத்த மிகவும் சாதாரண காரணமாகும்.

கால்சியம் பேன்டோனைட் அல்லது முல்தானி மிட்டி இந்த அப்லாடாக்சின்களை குடலில் இருந்து எடுத்துக்கொள்வதை தடுத்து அப்லாடாக்சின் நச்சுத்தன்மையின் ஆபத்தை குறைக்கிறது.

நாள் ஒன்றுக்கு 1.5 கிராம் வீதம், முறையாக 2 வாரகாலத்துக்கு கால்சியம் பேன்டோனைட் குழந்தைகளுக்கு கொடுத்து வருவது, பாதுகாப்பானது என்று சமீபத்திய ஹியூமன் ட்ரியல்ஸ் தெரிவிக்கிறது. பேன்டோனைட் களிமண்ணை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளில் அப்லாடாக்சின்ஸ்-சார்ந்த வளர்ச்சியை தடுக்க பயன்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கால்சியம் பேன்டோனைட்டை ஒரு ஓரல் சப்ளிமெண்ட்டாக பயன்படுத்த மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் ஆய்வு தேவைப்படுகிறது.

தோல் மற்றும் முடிக்கு முல்தானி மிட்டியின் பயனை கணக்கில் கொண்டு, இந்த களிமண்ணில் இருந்து அதிகபட்ச பலனை பெற நிறைய செயல்முறைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. “இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ரெசேர்ச் இந்த ஆயுர்வேதா அண்ட் பார்மசி”-யில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செயல்முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன தேவை:

  • முல்தானி மிட்டி 30g
  • ஆலோ வேரா 15g
  • மஞ்சப்பொடி 5g
  • ஜாதிக்காய் 5g
  • வேப்ப இலை 8g
  • ஆரஞ்சு தோல் 12g
  • சந்தனகட்டை 25g

வழிமுறைகள்

  • ஒரு கிண்ணத்தில் உலர்ந்த மூலப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்(ஜாதிக்காய், வேப்ப இலை, முல்தானி மிட்டி மற்றும் மஞ்சப்பொடி).
  • ஆரஞ்சு தோலை அரைத்து மூலப்பொருட்களுடன் சேர்த்து விடுங்கள்.
  • ஆலோ வேரா ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும்.
  • மென்மையான பசை ஆகும் வரை கலக்குங்கள்.
  • உங்களது தோளில் சமமான லேயராக தடவுங்கள், மற்றும் 20 நிமிடங்களுக்கு அதை அப்படியே வைத்திருங்கள்.
  • உங்களது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்

மூலப்பொருட்களின் கலவை ஆய்வின் படி குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், அவை தோல் மற்றும் ஒருவரின் இயல்பை பொறுத்து மாறும்.

Skin Infection Tablet
₹719  ₹799  10% OFF
BUY NOW

உங்களது தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முல்தானி மிட்டி ஒரு இயற்கையின் முழுமையான தீர்வு. அதுக்கு குறிப்பிடும் படி எந்த பக்க விளைவுகளும் இல்லை, ஆனால் இந்த அழகு அதிசயத்தை பயன்படுத்தும் முன் சிலவற்றை கணக்கில் கொள்ளவேண்டும்.

  • முல்தானி மிட்டியிடம் ஒரு கூல் ஏனெர்ஜெடிக் தன்மை உள்ளது, அதனால் நீங்கள் ஜலதோஷம் அல்லது இருமலால் அவதிபட்டால், நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  • முல்தானி மிட்டியை சிலர் உட்கொண்டாலும், அதை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசித்து நல்லது.
  • ஒரு ஆய்வில், பேன்டோனைட் சப்ளிமெண்ட்டை உட்கொள்வதால் வயிற்றுப்போக்குகுமட்டல்மற்றும் வாந்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • எதையும் அதிகமாக உட்கொண்டால் தீய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அதை அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.
  • ஆய்வின் படி, புல்லர் ஈரத்துடன் நீடித்த மற்றும் அதிக எக்ஸ்போசர் இருப்பது இருமல் மற்றும் நுரையீரலில் வீக்கம் போன்ற அறிகுறிகளை கொண்ட டஸ்ட் இன்ஹலேஷனுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

Medicines / Products that contain Multani Mitti (Fuller's Earth)

மேற்கோள்கள்

  1. National Library of Medicine. Fuller's Earth - Medical Countermeasures Database. U.S. Department of Health & Human Services. [Internet]
  2. Dawnielle C. Endly, Richard A. Miller. Oily Skin: A review of Treatment Options. J Clin Aesthet Dermatol. 2017 Aug; 10(8): 49–55. PMID: 28979664
  3. National Health Service [Internet]. UK; Acne.
  4. Bhatia A, Maisonneuve JF, Persing DH. PROPIONIBACTERIUM ACNES AND CHRONIC DISEASES. In: Institute of Medicine (US) Forum on Microbial Threats; Knobler SL, O'Connor S, Lemon SM, et al., editors. The Infectious Etiology of Chronic Diseases: Defining the Relationship, Enhancing the Research, an
  5. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. How does skin work? 2009 Sep 28 [Updated 2019 Apr 11].
  6. National Institute on Aging [internet]: US Department of Health and Human Services; Wrinkles
  7. Paschal D'Souza, Sanjay K Rathi. Shampoo and Conditioners: What a Dermatologist Should Know? Indian J Dermatol. 2015 May-Jun; 60(3): 248–254. PMID: 26120149
  8. S Ranganathan, T Mukhopadhyay. DANDRUFF: THE MOST COMMERCIALLY EXPLOITED SKIN DISEASE. Indian J Dermatol. 2010 Apr-Jun; 55(2): 130–134. PMID: 20606879
  9. DAMRAU F. The value of bentonite for diarrhea. Med Ann Dist Columbia. 1961 Jun;30:326-8. PMID: 13719543
  10. Zhang YT et al. Montmorillonite adsorbs creatinine and accelerates creatinine excretion from the intestine. J Pharm Pharmacol. 2009 Apr;61(4):459-64. doi: 10.1211/jpp/61.04.0007. PMID: 19298692
  11. Pradeep Kumar et al. Aflatoxins: A Global Concern for Food Safety, Human Health and Their Management. Front Microbiol. 2016; 7: 2170. PMID: 28144235
  12. Wang JS et al. Short-term safety evaluation of processed calcium montmorillonite clay (NovaSil) in humans. Food Addit Contam. 2005 Mar;22(3):270-9. PMID: 16019795
  13. Mitchell NJ et al. Short-term safety and efficacy of calcium montmorillonite clay (UPSN) in children. Am J Trop Med Hyg. 2014 Oct;91(4):777-85. PMID: 25135766
  14. A R Gibbs, F D Pooley. Fuller's earth (montmorillonite) pneumoconiosis. Occup Environ Med. 1994 Sep; 51(9): 644–646. PMID: 7951799
  15. Sachin B. Somwanshi et al. FORMULATION AND EVALUATION OF COSMETIC HERBAL FACE PACK FOR GLOWING SKIN. Int. J. Res. Ayurveda Pharm. 8 (Suppl 3), 2017
Read on app