ஜீரகம், கேரட் மற்றும் கொத்தமல்லி தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாசனையூட்டும் மசாலா பொருள் ஆகும். நீங்கள் சர்வதேச உணவு வகைகளை விரும்புபவராகவோ அல்லது ஒரு உணவுப் பிரியராகவோ இருந்தால், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பரிமாறப்படும் சிறந்த உணவுகளில் பெரும்பாலானவற்றில், ஜீரகம் ஒரு பொதுவான ஒரு சேர்மானப் பொருளாக இருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். ஜீரக சாதம், ஏறத்தாழ ஒவ்வொரு இந்திய சமயலறையிலும் வழக்கமாகத் தயாரிக்கப்படும், மிகவும் விரும்பப்படும் ஒரு சமையல் ஆகும். சொல்லப் போனால், ஜீரகத்தின் கொட்டை போன்ற சுவை, மொராக்கோவில் உள்ள உள்ளூர் உணவகங்ககளில் மிகவும் விருப்பத்துடன் உண்ணத்தக்கதாக இருக்கிறது.
ஈராக்கில் கண்டறியப்பட்ட சில பழமையான சமையல்கலை புத்தகங்களில், ஜீரகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடப்பட்டு உள்ளன என நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். இருந்தாலும், சமையல் உலகத்தின் மற்ற பகுதிகளும், ஜீரகத்தைப் பயன்பாட்டை அனுபவிக்க தடை ஏதும் இல்லை. ஜீரகம், அதன் குணமளிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மைகளுக்காக, நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அது, ஒரு பால் சுரப்பு மருந்தாக மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாக, பல்வேறு கலாச்சாரங்களில் மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி, பண்டைய எகிப்தில், ஜீரகம் ஒரு முக்கியமான மருத்துவப் பொருளாக கருதப்பட்டது.
தற்பொழுது ஜீரக விதைகளின் ஆயுர்வேத பயன்களை உறுதி செய்ய, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்க்கப் போனால், ஜீரக விதைகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைப்பதில் மிகவும் திறன்மிக்கதாக இருப்பதாக, மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் சுவைக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் மிகவும் பொருந்திப் போகிற மசாலாப் பொருளை விட சிறந்தது எது?
உங்களுக்குத் தெரியுமா?
ஜீரக செடி, 1 முதல் 1.5 அடிகள் உயரம் வரை வளரக் கூடிய ஒரு வருடாந்திர மூலிகை செடியாகும். ஜீரக செடியின் மென்மையான தண்டுகள் அதிக கிளைகளைக் கொண்டது. அது, ஜீரகத்தினுடைய சிறிய பூக்கள் ஜீரக செடியின் கிளைகளில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாக பூக்கின்ற வேளையில், இலைகளையும் கொண்ட ஒரு கலவையாக இருக்கிறது. ஜீரக விதைகள் நீளமானவையாக இருக்கின்றன ஆனால் முட்டை வடிவத்திலும் மற்றும் அவற்றின் பரப்பில் விளிம்புகளையும் கொண்டு இருக்கின்றன.
ஜீரகம் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: குமினம் சைமினம்
- குடும்பம்: அப்பியாசியயி
- பொதுவான பெயர்கள்: குமின், ஜீரகம், ஜீரா.
- சமஸ்கிருதப் பெயர்: ஜிராகா.
- பயன்படும் பாகங்கள்: பழம்.
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஜீரகம், எகிப்தை சார்ந்தது, ஆனால் அது, சீனா, மொராக்கோ மற்றும் இந்தியாவிலும் கூட வளர்க்கப்படுகிறது.
- ஆற்றலியல்: வெப்பமாக்குதல்.