வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு. சர்க்கரையின் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று கருதப்படுகிறது ஏனெனில் அது தூய்மையாக்கப்படாத ஒன்றாக உள்ளது. சர்க்கரை மற்றும் வெல்லம் கிட்டத்தட்ட அதே அளவு கலோரிகளைக் கொண்டிருந்தாலும், உடலிற்கு தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் இருக்கிறது என்பதால், வெல்லம் உடலுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வெல்லம் பொதுவாக மூன்று வடிவங்களில் கிடைக்கும் - திட, திரவ மற்றும் சிறுமணி. மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளிலும் திரவ வெல்லம் மிகவும் பிரபலமாக உள்ளது, அதே நேரத்தில் கிராமப்புற மக்களிடையே சிறுமணி வெல்லம் பொதுவானது. வெல்லம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது, அந்த வண்ணங்கள் தங்க பழுப்பு நிறத்தில் இருந்து கரும் பழுப்பு வரை வேறுபடுகிறது. கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால் அந்த நன்றாக கருப்பாக உள்ள வெல்லத்தின் சுவை, அதிக இனிப்பு மற்றும் ஆழ்ந்த சுவை கொண்டதாக இருக்கும்.
தென்னக மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வெல்லம் உட்கொள்ளப்படுகிறது. நேபாளம், பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா பொன்ற நாடுகளில் உள்ளூர் உணவு வகைகளில் வெல்லம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சாம்பார் மற்றும் ரசத்தில் அதன் சுவையை அதிகரிக்க ஒரு சிட்டிகை வெல்லம் சேர்க்கபடுகிறது. பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான கடலை மிட்டாய் நிலக்கடலை மற்றும் வெல்லம் இரண்டும் கலந்து தயாரிக்கப்படுகிது. இனிப்பு பதார்தங்கள், மது பானங்கள், சாக்லேட், மிட்டாய்கள், டோனிக்ஸ், சிரப்-கள், சார்பெட்-கள், கேக்குகள், முதலியவற்றை தயாரிப்பதற்கு கூட வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா உலகில் மிக அதிக வெல்லம் தயாரிக்கும் இடமாக திகழ்கிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வெல்லம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கரும்பு வெல்லம், கருப்பட்டி, பனைமர வெல்லம், சாம்பல் பனை வெல்லம் ஆகியவை வெல்லத்தின் வகைகளில் அடங்கும்.
வெல்லத்திற்கு பல உடல்நல நன்மைகள் உள்ளன. இது ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது. இதில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. மிளகுகுடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடும் போது உங்கள் பசியை அதிகரிக்க முடியும். ஆயுர்வேத கூற்றுப்படி, வெல்லத்தை வழக்கமான சாப்பிடுவதால் உங்கள் பார்வையை மேம்படுத்த முடியும். வெல்லம் என்பது முகப்பருவிற்கு சிகிச்சையளிக்கவும், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவிவதாக அறியப்படுகிறது. கல் உப்புடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடுவதால், புளித்த ஏப்பம் வரும் தொல்லையை குணப்படுத்த முடியும்.
வெல்லத்தை பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: வெல்லம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது, சச்சாரும் அஃப்பிசினரும்
- குடும்பம்: பொயேசே (கரும்புற்கு)
- பொது பெயர்: குட்
- சமஸ்கிருத பெயர்: गुडः (குட்) / शर्करा (சர்க்கரை)
- சொந்தமான பகுதி மற்றும் புவியியல் பரப்பு: சிலர் வெல்லம் என்பது கிழக்கு இந்தியாவில் தோற்றம் பெற்றதாக சிலர் நம்புகின்றனர், மற்றவர்கள் போர்த்துகீசிஸ் மக்களே இந்தியாவிற்கு வெல்லத்தை அறிமுகப்படுத்தியதாக நம்புகின்றனர். இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை உலகின் மிகப்பெரிய வெல்ல உற்பத்தியாளர்களாக உள்ளன.
- சுவாரசியமான உண்மை: வெல்லம் பெரும்பாலும் "சூப்பர்ஃபுட் ஸ்வீட்னர்" என குறிப்பிடப்படுகிறது.