நார்ச்சத்து என்பது பல்வேறு தாவர மூலங்களான பழங்கள், தானியங்கள், தானிய வகை உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் அடங்கிய செரிமானமடையாத கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். அவை செல்லுலோஸ் மற்றும் லிக்னைன்கள் போன்ற செரிக்காத பொருட்களால் ஆனவை. ஒரு பகுதி நார்ச்சத்து குடலில் உள்ள பாக்டீரியாவால் நொதித்திருக்கும் இவைகள் நேரடியாக சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு கடந்து செல்கின்றன.

எனவே, ஏன் நமக்கு இந்த நார்ச்சத்து தேவை?

நார்ச்சத்து உணவு என்பது சீறான குடல் இயக்கங்களுக்கு பெறுவாறியான நார்ச்சத்து என்பது அவசியம். செரிக்காமல் இருப்பது என்பது, உங்கள் குடலில் உணவானது நிலைத்து இருந்து, வெகு நேரம் வாயிறு முழுவதும் உணவு இருப்பது போன்ற உணர்வு ஆனதூ உங்களது இரு உணவு நேரங்கலுக்கும் இடையே இடைவெளியை அதிகரிக்கும்படியான பசியின்மையை உணர்விர்கள். இது உணவு உண்ணும் இடைவேளையை குறைத்து சாப்பிடுவதால் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.

மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவை உங்கள் வயிற்றை ஆரோக்கியமாகவும், பின்வரும் பிரச்சினைகளால் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவும் உடல் பருமன்மலச்சிக்கல்பெருங்குடல் புற்றுநோய், குவியல், மற்றும் இதய நோய்கள்.

நார்ச்சத்து மிக்க உணவுப் பொருள்கள் பல நலன்களை தருவதினால் அது "செயல்பாட்டு உணவு" என்ற பட்டத்தை அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் செரல் கெமிஸ்டுகளினால் பெற்றுள்ளது.

  1. நார்ச்சத்து உணவு வகைகள் - Types of dietary fiber in Tamil
  2. நார்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் அதன் ஆதாரங்கள் - Fiber rich foods and sources in Tamil
  3. நார்ச்சத்து உணவுகளின் உடல் நன்மைகள் - Fiber health benefits in Tamil
  4. நார்ச்சத்தின் பக்க விளைவுகள் - Fiber side effects in Tamil
  5. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

நார்ச்சத்து உணவு இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்:

1. கரையாத நார்சத்து உணவுகள்

கரையாத நார்சத்து உணவுகள் அதன் பெயர் குறிப்பிடுவது போல், இவைகள் நீரில் கரையாதவைகள். கரையாத நார்சத்து உணவுகள் நீருடன் கரையாது கட்டுண்டு மொத்த உணவுபோல் உள்ளது. கரையாத நார்சத்து நிறைந்த உணவுகள், உணவு போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கின்றன (உணவு குடலில் இருக்கும் நேரம்) மற்றும் நீண்ட காலத்திற்கு நீங்கள் முழு உணவை உண்டது போன்ற உணர்வு அழிக்கிறது. கரையாத நார்சத்து நிறைந்த உணவுகள் பின்வருமாறு உதவுகிறது:

  • குடல் சீரான இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது
  • மலச்சிக்கல் குறைகிறது
  • எடைகுறைப்புக்கு உதவுகிறது

பொதுவாக கரையாத நார்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக பழத்தின் தோழ்கள், கோதுமை தவிடு, தானியங்கள் முதலியவற்றில் காணப்படுகிறது.

2. கரையக்கூடிய நார்சத்து நிறைந்த உணவுகள் 

கரையக்கூடிய நார்சத்து நிறைந்த உணவுகள் தண்ணீரில் கரைந்து ஒரு பசை அல்லது குழம்பு போன்ற பொருளாக குடலில் மாறுகிறது. அவை முக்கியமாக பழங்களின் குமிழ்கள், பார்லி, விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.

கரையக்கூடிய நார்சத்து நிறைந்த உணவுகள் சில, குடலில் நொதிப்பதினால் (நுண்ணுயிரிகளின் மூலம் நொதிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் முறிவுகள்) குடல்களின் சீரான இயக்கத்திற்க்கு குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பொறுப்பு ஆக இருக்கிறது. நமது உணவின் பெரும்பகுதி உண்மையில் குடலில் சுரக்கும் நுண்ணுயிரிகளினால் செரிக்கப்படுவதால், குறிப்பிட்ட வகை நார்ச்சத்து உண்ணுவானது உங்கள் குடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. கரையக்கூடிய நார்சத்து நிறைந்த உணவுகள் மேலும் பின் வருமாறும் உதவுகின்றன:

  • உடலில் கொலுப்பின் அளவை குறைக்கிறது
  • இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

போதுவாக முழு தானிய உணவுகள் பின்வருவனவற்றில் கோதுமை, கோதுமை தவிடு, ஓட் தவிடு, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இயற்கையவே நார்சத்து நிறைந்து இருக்கிறது. ஆசிய மருந்தியல் மற்றும் கிளினிக்கல் செய்தி நிருவனத்தின் அறிவுருத்தலின் படி, தினசரி ஆக பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்து அளவு ஆனது ஒறு நாளுக்கு 25-30 கிராம், அதிக அளவு தானியங்கள், தானியத் தவிடுகள், மற்றும் தாவர அடிப்படையிலான பொருட்களை உட்கோள்வதின் மூலம் பெற முடியும்.  நீங்கள் ஒரு சைவ உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் அன்றாட நார்ச்சத்து தவையை நீங்கள் பெற்றுவிடலாம். இருப்பினும், அசைவ உணவில் நார்சத்து அளவு குறைவு, எனவே நீங்கள் அதை மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து ஒரு சமநிலை உணவுவை எடுத்து கொள்வது அவசியம்.

இங்கே நீங்கள் உங்கள் உணவில் எளிதாக சேர்க்க கூடிய நார்சத்து நிறைந்த உணவுப் பட்டியல் பின்வருமாரு:

நீங்கள் சரியான உணவையும் உணவில் உள்ளா நார்சத்து அளவை அறிந்து உண்பதற்கு உணவு பரிந்துரையாளார் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை எப்போதும் ஆலோசித்து உண்ண வேண்டும்.  

நார்ச்சத்து உணவுகள் எண்ணிக்கையில் அதிக உடல் நன்மைகளை கொண்டுள்ளது. இது உடல் எடையை குறைக்கவும் கொழுப்பை குறைக்கவும் மற்றும் உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்க உதவும். இருப்பினும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் முக்கிய பங்கு ஆனது, இது மலச்சிக்கலை குறைத்து குடல் இயக்கங்களை சீராக்குகிறது. மேலும் இது பைல்ஸ் மற்றும் இதய நோய்களை குறைப்பதற்காக பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தினால் கிடைக்கும் உடல் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

  • மலச்சிக்கல் நீக்கம்:நார்ச்சத்து மிக்க உணவு மொத்த உணவை வழங்கி மலத்தை மிருதுவாக்கி மலக்குடல் வழியாக எளிதாக வரும்படி உதவுகிறது. இது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாவை வளர்க்கிறது, இது உணவு முறையான மற்றும் எளிதான செரிமானத்தை எளிதாக்கும், இதனால் மலச்சிக்கல் தடுக்குப்படும்.
  •  பைல்ஸ் நோய் அறிகுறிகளை நீக்குகிறது: மலச்சிக்கலைக் குறைப்பதன் மூலம், நார்ச்சத்து மலக்குடல் சுவர்களில் அதிக அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, இதனால் பைல்ஸ் நோய் அறிகுறிகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.
  • உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது:உங்கள் உணவில் நார்ச்சத்து அளவு அதிகமாக உள்ள உணவை எடுத்துக் கொள்வது பசியுணர்வை குறைத்து வயிறு முலுக்க உள்ளது போன்ற உணர்வை வழங்கி உடல் எடை இழப்பிற்க்கு உதவுகிறது. இதன் மூலம் நார்ச்சத்து மிகுந்த உணவானது திறம்பட உடலில் இழப்பை ஊக்குவிப்பதற்கும் மற்ற உணவு பழக்க வளங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
  • .கொழுப்பை குறைக்க உதவுகிறது: நார்ச்சத்து மிக்க உணவுகள் ஆனது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை ஏதோ ஒருவகை குறைக்கிரது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன. இது குடலில் சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்கி மொத்த கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி கொழுப்பு படிவதை தடுக்கிறது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகமான கொழுப்பை நீக்குவதன் மூலம் ரத்தக்கொதிப்பை குறைத்து உடலை மேம்படுத்துகிறது. இது இதயத்தின் பெருந்தமனி தடிப்பு தடுப்பது உடன் மாரடைப்பு ஆபத்தையும் தவிர்க்கிறது.
  • இரத்த சக்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது: இந்த நார்ச்சத்தானது ஒருவகையான கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்தது இது அவ்வளவு எளிதில் குடல்களில் உள்ளிழுக்கப்படுவதோ அல்லது ஜீரணிக்க படுவதோ இல்லை. இது உணவுக்குப் பிறகு திடீரென இரத்த குளுக்கோஸின் அளவு உயர்வதை தடுக்கிறது.

மலச்சிக்கலுக்கான நார்ச்சத்து - Fiber for constipation in Tamil

நார்ச்சத்து நிறைந்த உணவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை குறைக்கவும் நீண்ட வழி செய்கிறது. நார்ச்சத்து உணவின் மிகவும் பொதுவான நன்மை ஆனது உணவு மொத்தமாக கொடுக்கிறது மற்றும் மலத்தை மென்மையாக ஆக்குகிறது. ஆனால், பல்வேறு வகையான நார்ச்சத்து உணவுகள் இரைப்பைக் குழாயில் பல்வேறு விளைவுகளைக் கொண்டிருக்கலாம். உங்கள் உணவில் உள்ள நார்ச்சத்து ஆனது, குடல் வழியாக செல்லும் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். உங்கள் குடலின்கீழ் வளரும் உணவின் செரிமானத்தை ஒழுங்குபடுத்த உதவும் பாக்டீரியாவின் வகையை இது பாதிக்கலாம்.

அதிகமாக - கரையக்கூடிய நார்ச்சத்து உணவை உட்கொள்ளவது பின்வரும் குடல் பாக்டீரியாக்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன லேக்டோபேசில்லஸ் மற்றும் பேகலிபேக்டிரிஎம். இந்த இரு பாக்டீரியாவின் பயனானது ஆரோக்கியமான குடல் மற்றும் உணவு செரிமானத்தை சீராக்க உதவுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆர்சிடி (சிரற்ற மருத்துவ சோதணைகள்) எனப்ப்படும் ஒரு மெட்டா பகுப்பாய்வு, ஒரு குறிப்பிட்ட சிறந்த அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை குறைப்பதில் மிகவும் பயனுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எடை இழப்புக்கான நார்ச்சத்து - Fiber for weight loss in Tamil

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளல் உங்கள் எடையை இழக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? கரையாத நார்சத்து உங்களுக்கு முலு உணவை மொத்தமாக அழித்து மேலும் உணவின் பெருங்குடல் பயண நேரத்தை அதிகரிக்க உதவுகிறது, இவ்வாறு நீங்கள் நீண்ட நேரத்திற்க்கு முழுமையாக பசியற்ற உணர்வை உணர முடிகிறது. இது குறைந்து பசியின்மைக்கு வழிவகுப்பதினால், இறுதியில் எடை இழப்புக்கு உதவுகிறது.  வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி உள் மருத்துவ அறிகுறிகள் படி  தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் நார்ச்சத்தினை எடுத்துக் கொள்வது சிக்கலான உணவு திட்டங்களை ஒப்பிடும் போது உடல் பருமனை குறைப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது.

கொழுப்புக்கான நார்ச்சத்து - Fiber for cholesterol in Tamil

உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிக நார்ச்சத்து உணவுகளை மதிப்பீடு செய்ய எண்ணற்ற ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் அனைத்திலும், நார்ச்சத்து நிறைந்த உணவின் மேம்பட்ட உணவு பழக்கம் குறைந்த அடர் கொழுப்புத் திசுக்கள் (கெட்ட கொழுப்பு) மற்றும் ட்ரைகிளிசரைடு கொழுப்பின் அளவுகளை கணிசமாக குறைக்க வழிவகுக்கிறது. இருப்பினும், உயர் அடர் கொழுப்புப்புரதம் (நல்ல கொழுப்பு) இதுவரை எந்த மாறுதலும் வெளிப்படவில்லை.

ஆரோக்கியமான உடல் கொழுப்புகளை பராமரிப்பதற்கு எந்த வகை கரையக்கூடிய நார்ச்சத்தின் உதவி புரிகிறது என்ற வழிமுறை இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், இது ஹைபோகோளெஸ்டிரோலிமிக் ஆக செயல் படுவதினால் இது (உடல் கொழுப்பு அளவைக் குறைத்தல்) உடலில் உள்ள பித்த வளர்சிதை மாற்றத்துடன் குறுக்கீடு செய்வதாக ஒரு சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும், சில வகை நார்ச்சத்து குடலில் நொதித்தலினால் அவை அசெட்டேட் மற்றும் ப்யூட்ரேட் போன்ற குறுகிய-சங்கிலி கொழுப்பு அமிலங்களை (எஸ்சிஃப்ஏ) உருவாக்குகின்றன. இந்த எஸ்சிஃப்ஏ கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களினால் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை தடுப்பதினால் உடல் கொழுப்பு குறைக்கும் காரணியாக அறியப்படுகிறது.

(மேலும் வாசிக்க: உயர் கொழுப்பு அறிகுறிகள்)

நார்ச்சத்து இரத்த அழுத்ததைக் குறைக்கிறது - Fiber reduces blood pressure in Tamil

இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நார்ச்சத்து உட்கொள்ளுவதினால் ஏற்படும் பொது விளைவுகளின் சான்றுகள் தெளிவாக இல்லை. இருப்பினும் விலங்குகளின் அடிப்படையில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் கீழ் இரத்த தமணிகளில் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரும்பங்கு வகிக்கிறது, வேறுபட்ட நார்ச்சத்து உணவுகள் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் தெளிவாக இல்லை. ஒரு சோதனை ஆய்வு, ஓட்ஸ் உட்கொள்வது ரத்த அழுத்த நோய் உள்ளவர்களின் (உயர் மற்றும் தாழ்ந்த ரத்த அழுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்) உயர் மற்றும் தாழ்ந்த ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாக அறியப்படுகிறது.

ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றம் மற்றும் இதய நோய்கள் பற்றி வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வு படி, சராசரியாக 7 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 9 கிராம் நார்ச்சத்து வீதம் எடுத்துக்கொண்டஅதிக அளவு இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைத்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், அதிக நார்ச்சத்து உணவு சிறந்த ஆரோக்கியத்திற்காக உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.

(மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்த காரணிகள்)

இதய ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து - Fiber for heart health in Tamil

அதிகப்படியான இறப்பு என்பது உலகம் முழுவதுமாக அறியப்படுவது இதய நோய்களின் காரணமாக உள்ளது. உணவு நார்ச்சத்து செயல்படும் செயல்முறையின் சரியான செயல்முறை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இது இருதய நோய்களுக்கு வலுவான தொடர்புடைய மற்றும் ஆபத்தை குறைக்க உதவும்இதய நோய்.

நார்ச்சத்து நிறைந்த உணவின் மூலம் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் ஹைபர்கோளேஸ்ரோலெமியா போன்ற பின்வரும் நிலைமைகளை நேரடியாகக் குறைக்கலாம். அதிரோஸ்கிளிரோஸ்மாரடைப்பு மற்றும் பக்கவாதம்.

நீரிழிவு நோய்க்கான நார்ச்சத்து - Fiber for diabetes in Tamil

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, இதன் பதிவுகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இருப்பினும் நார்ச்சத்தானது ஒருவகையான கார்போஹைட்ரேட்களாகும் இவை எளிதில் செரிக்கப்படுவதோ அல்லது உடலில் உறிஞ்சப்படுவதோ இல்லை. ஆகையால், அதிக நார்ச்சத்து உணவு இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்துவதில்லை. உண்மையில், கரையக்கூடிய நார்ச்சத்து உணவானது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை ஒரு அறியாத கருவியாகக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் கரையாத நார்ச்சத்து உணவு கிளைசீமிக் இன்டெக்ஸ்யை (இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குளுக்கோஸ் ஆக மாற்றும் எண்ணிக்கை) குறைப்பதுடன் உணவு குழாய் வழியாகச் செல்லும் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கிறது.

(மேலும் வாசிக்க: நீரிழிவு நோய் பாதுகாப்பு)

நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது - Fiber prevents colorectal cancer in Tamil

பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க நார்ச்சத்து மிக்க உணவுப்பொருள்களின் திறனை சோதிக்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. முறையான மறு ஆய்வுகளின்படி, தானியங்கள் மற்றும் முழு தானியங்கள் வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாக்கின்றன. உண்மையில், உலக புற்றுநோய் ஆராய்ச்சி ஆணயம் குறைவான ஆபத்துடன் உணவு நார்ச்சத்துக்கு தொடர்புடையதாக பெருங்குடல் புற்றுநோய் இறுக்கிறது.

நார்ச்சத்தின் செயல்பாட்டின் செயல்படும் நுட்பம் அல்லது எந்த நிலை புற்றுநோய்யுடன் செயல்படும் என்ற தெளிவற்றதாக இருந்தாலும், நார்ச்சத்து நிறைந்த உணவின் நுகர்வு எதிர்மறையாக கோளரெக்டல் புற்றுநோயுடன் செயல்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பைல்ஸ் நொய்க்கான நார்ச்சத்து - Fiber for piles in Tamil

பைல்ஸ் அல்லது மலக்குடல்வளர்ச்சி நோய் மலம் வெளியேற்றும் பகுதியில் ஏற்படும் வீக்கம் அல்லது இரத்த அழுத்ததுடன் தொடர்புடையதாக உள்ளது. என் ஐ ஹ். படி, உடல் பருமன், நீண்டகால மலச்சிக்கல், மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவு போன்ற காரணங்கள் வீக்கமான மலக்குடல் நோய்களுக்கு பின் காரணங்களாக இருக்கலாம். ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வதால் பைல்ஸ் நோய்யின் சில அறிகுறி நிலைகளை நீக்க உதவியாக இருக்கும்.

நார்ச்சத்துகள் மலம்த்தை மென்மையாக்குவதுடன், குடலினூடாக எளிதாகக் கடந்து செல்ல உதவுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. இது மலச்சிக்கலை மட்டும் குறைப்பது இன்றி, இது மலக்குடல் சுவர்களில் உருவகும் அதிகமான அழுத்ததையும் குறைக்கிறது, இதனால் பைல்ஸ் நோய்யில் இருந்து நிவாரணமளிக்கும்.

(மேலும் வாசிக்க: மலச்சிக்கல் குவியல் நோய் சிகிச்சை)

  • நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதலுடன் குறைந்த தண்ணீரின் அருந்துவது உணவு குடலில் அடைப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, மலச்சிக்கலை நீக்க நீங்கள் அதிக நார்ச்சத்து கொண்ட உணவு உண்கிறீர்கள் என்றால், நீங்கள் கவனமாக உங்கள் தண்ணீரை உட்கொள்வது சிறந்தது.
  • சில வகையான நார்ச்சத்து வகைகள் உணவை குடலில் நொதிக்க வைக்கின்றன, இதனால் வயிற்றில் வாயுவினால் உப்புசம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
  • அதிக நார்ச்சத்து கொண்ட உணவானது ஹைப்போகிளிமிக் எனப்படும் ஒரு வகை நீரழிவை ஏற்படுத்தும் (இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது), ஆகையால் சர்க்கரை நோயாளர்கள் தங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து உணவானது திறம்பட இரத்த அழுத்த நோயை கையாளும் திறன் கொண்டது (இரத்த அழுத்தத்தை குறைக்கிறது). குறைந்த இரத்த அழுத்தம் அல்லது அதிக ரத்த அழுத்தம் கொண்ட நோய்க்கு மருந்து உட்கொள்ளூம் நோயாளர்கள் தங்களது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி சரியான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சில ஆய்வுகள் அதிக நார்ச்சத்து உணவு உட்கொள்ளுதலினால் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற கனிமச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை குறைக்கிறது.

See Similar Category Medicines Here

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பெருங்குடல் மற்றும் குடல்களின் முறையான செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம். இது மலச்சிக்கலை விடுவிப்பது மட்டுமல்ல, எடையையும் குறைக்க உதவுகிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமான நார்ச்சத்து எடுத்துக்கொள்வது மலச்சிக்களையும் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கலாம்.

மேற்கோள்கள்

  1. UCSF Benioff Children's Hospital. Increasing Fiber Intake. University of California, San Francisco
  2. Prosky L. When is dietary fiber considered a functional food? Biofactors. 2000;12(1-4):289-97. PMID: 11216498
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Soluble vs. insoluble fiber
  4. Hannah D. Holscher. Dietary fiber and prebiotics and the gastrointestinal microbiota. Gut Microbes. 2017; 8(2): 172–184. PMID: 28165863
  5. Office of Disease Prevention and Health Promotion. Food Sources of Dietary Fiber. [Internet]
  6. Hollænder PL, Ross AB, Kristensen M. Whole-grain and blood lipid changes in apparently healthy adults: a systematic review and meta-analysis of randomized controlled studies. Am J Clin Nutr. 2015 Sep;102(3):556-72. PMID: 26269373
  7. Wang Y et al. Barley β-glucan reduces blood cholesterol levels via interrupting bile acid metabolism. Br J Nutr. 2017 Nov;118(10):822-829. PMID: 29115200
  8. Aleixandre A, Miguel M. Dietary fiber and blood pressure control. Food Funct. 2016 Apr;7(4):1864-71. PMID: 26923351
  9. Keenan JM, Pins JJ, Frazel C, Moran A, Turnquist L. Oat ingestion reduces systolic and diastolic blood pressure in patients with mild or borderline hypertension: a pilot trial. J Fam Pract. 2002 Apr;51(4):369. PMID: 11978262
  10. Hooda S et al. 454 pyrosequencing reveals a shift in fecal microbiota of healthy adult men consuming polydextrose or soluble corn fiber. J Nutr. 2012 Jul;142(7):1259-65. PMID: 22649263
  11. Jing Yang, Hai-Peng Wang, Li Zhou, Chun-Fang Xu. Effect of dietary fiber on constipation: A meta analysis. World J Gastroenterol. 2012 Dec 28; 18(48): 7378–7383. PMID: 23326148
  12. Erkkilä AT, Lichtenstein AH. Fiber and cardiovascular disease risk: how strong is the evidence? J Cardiovasc Nurs. 2006 Jan-Feb;21(1):3-8. PMID: 16407729
  13. Lipkin M, Reddy B, Newmark H, Lamprecht SA. Dietary factors in human colorectal cancer. Annu Rev Nutr. 1999;19:545-86. PMID: 10448536
  14. Nomura AM et al. Dietary fiber and colorectal cancer risk: the multiethnic cohort study. Cancer Causes Control. 2007 Sep;18(7):753-64. Epub 2007 Jun 8. PMID: 17557210
  15. Aune D et al. Dietary fibre, whole grains, and risk of colorectal cancer: systematic review and dose-response meta-analysis of prospective studies. BMJ. 2011 Nov 10;343:d6617. PMID: 22074852
  16. Andrew T Kunzmann et al. Dietary fiber intake and risk of colorectal cancer and incident and recurrent adenoma in the Prostate, Lung, Colorectal, and Ovarian Cancer Screening Trial1,2. Am J Clin Nutr. 2015 Oct; 102(4): 881–890. PMID: 26269366
  17. National Health Service [Internet]. UK; Haemorrhoids (piles).
  18. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Eating, Diet, & Nutrition for Hemorrhoids.
Read on app