உலகெங்கும் பொதுவாக இறைச்சி வகையில் கோழி இறைச்சியை தான் சாப்பிட்டு வருகிறார்கள். உலகெங்கிலும் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும் அவர்களின் பிராந்திய முன்னுரிமைகள் படி பல்வேறு வகையான உணவு வகைகளில் கோழி இறைச்சி பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. மற்ற வகை இறைச்சியுடன் ஒப்பிடுகையில் கோழி இறைச்சி மிகவும் மலிவானதும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பல்வேறு துரித உணவு தயாரிப்புகளில் முக்கிய உணவுப் பொருளாக கோழியை மிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. டிஷ் அல்லது மீல்ஸ்க்கு கோழியை பல்வேறு வழிகளில் தயாரிக்கப்படலாம். இவையில் வேக வைப்பது, கிரில், பேக்கிங், வறுத்தெடுத்தல், மற்றும் மற்றவையுடன் பார்பெக்யூ ஆக தயாரிக்கப்படலாம்.

குறிப்பாக வளர்ந்த நாடுகளில் கோழி பண்ண வளர்ப்பு மேம்பட்ட முறைகள் பயன்படுத்தி பல பறவைகளில் ஒன்றில் கோழி வளர்க்கப்படுகின்றன. மறுபக்கம், குறைந்த வளர்ச்சியுற்ற நாடுகளில், கோழி பண்ண வளர்ப்பு மற்றும் கோழி இனப்பெருக்கத்துக்கு பாரம்பரிய முறைகளுக்கு வழிவகுக்குகிறது. சுமார் 600 கி.மு. முன்பு கூட கோழியை சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்தியாவிலும் கூட அனைத்து வயதினரும் மிகவும் விரும்பப்பட்டு சாப்பிட கூடும் இறைச்சி வந்து கோழி ஆகும். ஆயுர்வேத நூல்கள் கூட "வாதாம்" மற்றும் "பித்து டோஷாக்களுக்கு" கோழி சாப்பிடுவதின் நன்மைகளை பற்றி குறிப்பிடுகின்றன.

  1. கோழி பற்றிய வைட்டமின் உண்மைகள் - Nutritional facts about chicken in Tamil
  2. கோழி சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நன்மைகள் - Health benefits of chicken in Tamil
  3. ஆரோக்கியமான சிக்கன் சமையல் - Healthy Chicken Recipe in Tamil
  4. கோழி இறைச்சியால் உண்டாகும் பக்க விளைவுகள் - Side effects of chicken in Tamil

கோழியில் பல்வேறு வைட்டமின், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்ததுள்ளது. வேகவைக்கப்படாத 100 கிராம் கோழியில் உள்ள வைட்டமின் உண்மைகளை கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தயாரிப்பு முறையை பொறுத்து சமைத்த இறைச்சியில் உள்ள வைட்டமின் மதிப்புகள் வேறுபடலாம்.

வைட்டமின்க்கள் மதிப்பு (100 கிராமுக்கு)
சக்தி 143
காரபோஹைடரேட்டுகள் 0.04
புரதங்கள் 17.44
கொழுப்புகள் (மொத்த லிப்பிடுகள்) 8.1
நீர் அளவு 73.24
வைட்டமின்​கள்
வைட்டமின் பி1 0.109
வைட்டமின் பி2 0.241
வைட்டமின் பி3 5.575
வைட்டமின் பி6 0.512
வைட்டமின் பி9 1
வைட்டமின் பி12 0.56
வைட்டமின் ஈ 0.27
வைட்டமின் கே <0.8
மினரல்கள்
கால்சியம் 6
பாஸ்பரஸ் 178
பொட்டாசியம் 522
மெக்னீசியம் 21
இரும்பு சத்து 0.82
ஸிங்க் 1.47
சோடியம் 60
கொழுப்பு அமிலங்கள் (மொத்த லிப்பிடுகள்)
கொழுப்பு 86
நிறைவுற்ற கொழுப்பு 2.301
டிரான்ஸ் 0.065
மோனோ நிறைவுறா கொழுப்பு 3.611
பாலி நிறைவுறா கொழுப்பு 1.508
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

சரியான அளவில் கோழி இறைச்சியை உண்டால் அது நமக்கு பல நன்மைகள் பயக்கும். சரியான உடல் ஆரோக்கிய நன்மைகள் பெற கோழி தயாரிக்கப்படும் முறையும் கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் கோழி கறியால் உண்டாகும் உடல் ஆரோக்கிய நன்மைகள் வந்து கீழே விவாதிக்கப்பட்டுள்ளது.

  • உடல் எடையைப் பெறுவதற்கு உதவுகிறது: கோழி இறைச்சி வந்து புரதம் நிறைந்த மூலங்களில் ஒன்றாகும். அதை வேக வைத்து அல்லது கிரில் செய்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்கவும் தசை வெகுஜனை அதிகரிக்கவும் செய்கிறது. அது மட்டுமின்றி, உங்களது வயறு நிரம்பிய போல ஒரு உணர்வையும் தருகிறது.
  • எலும்புகள் மற்றும் பற்களை வலுவூட்டுகிறது: கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் நன்றாகவே அடங்கியுள்ளது. அது எலும்புகளின் மாஸ் உடன் கால்சியத்தையும் கொடுக்கிறது. ஆகையால் உணவில் கோழி இறைச்சி சேர்த்துக்கொள்வதால் எலும்பு இழப்பு மற்றும் எலும்புப்புரையை தடுக்கலாம்.
  • சலி மற்றும் நெஞ்சு அடைப்பிலிருந்து நிவாரணம்: சூடான கோழி இறைச்சி சூப் தான் சலிக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நெஞ்சு அடைப்பு மற்றும் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
  • இரத்த சோகை தடுக்கிறது: வைட்டமின் பி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் நல்ல அளவு கோழி இறைச்சியில் உள்ளது. இவை அனைத்தும் RBC உற்பத்தியை ஊக்குவிப்பதோடு இரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்கிறது. சிக்கன் கல்லீரல் போதுமான இரும்புச் சத்துள்ளதால் இரும்புச் சத்து குறைபாடான இரத்த சோகை தடுக்கிறது.
  • முடி மற்றும் நகங்களுக்கு: கோழி இறைச்சியில் வைட்டமின் ஈ மற்றும் கே உள்ளதினால் அது முடி இழப்பை தடுப்பதோடு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அது உங்கள் நகங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடையக்கூடிய நகங்களிலிருந்து இது தடுக்கிறது.
  • மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: சிக்கன் இறைச்சியில் மிகுந்த அளவு வைட்டமின் பி உள்ளது. இது கவலை மற்றும் மன அழுத்தத்தை தடுக்க உதவுகிறது. இது அல்சைமர் ஆபத்தை குறைப்பதன் மூலம் மூளை செயல்பாடு மற்றும் நினைவகத்தை அதிகரிக்கிறது.

உடல் எடை வளர்ச்சிக்கு கோழி இறைச்சி - Chicken for body mass gain in Tamil

உடல் எடை வளர்ச்சி பராமரிக்க கோழி இறைச்சி உதவும், குறிப்பாக உடல் பருமன் கொண்ட நபர்களுக்கு. கோழி இறைச்சி வந்து புரதத்தின் ஒரு பெரிய மூலப் பொருளாக இருக்கிறது. இது உடல் எடையை பராமரிக்க மிகுந்த ஊட்டச்சத்தாகும். கோழி போதிய அளவு புரத அளவு உள்ளதால் வயறு நிரம்பிய ஓர் உணர்வை தருவதோடு கட்டுப்பாடற்ற அல்லது ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களைத் தடுக்கிறது. எனினும் கோழியை கிரில் அல்லது வேக வைத்தல் போன்ற ஆரோக்கியமான வழியில் சமைத்தல் வேண்டும்.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு கோழி இறைச்சி - Chicken for bones and teeth in Tamil

உலகம் முழுவதும் உள்ள நடுத்தர வயதினரிடையே, குறிப்பாக பெண்களுக்கு எலும்பு திட இழப்பு என்பது பொதுவான ஒன்று. எலும்பு திட இழப்பு வந்து  ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற தீவிர நிலைமைகளுக்கு வழிவகுக்கும். கோழியில் பாஸ்பரஸ் கூட நன்றாகவே இருக்கிறது. அதை சரியான அளவில் உணவுடன் எடுத்துக்கொள்ளும் போது எலும்பு எடை மற்றும் திடத்தை அதிகரிக்க உதவுகிறது

ஆரோக்கியமான பற்களுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மிக முக்கியமான கூறுகள் தேவைப்படுகிறது. பல் ஆரோக்கியத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு சரியான அளவுகளில் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. கோழியில் உள்ள பாஸ்பரஸ் வந்து பல் சிதைவைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக உள்ளது என்பதை கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

நீரிழிவுக்கு கோழி இறைச்சி - Chicken for diabetes in Tamil

நீரிழிவு நோயால்  பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தங்கள் உணவுக்கு தேவையான ஒரு ஆரோக்கியமான புரதத்தின் உணவினை பூர்த்தி செய்ய வேண்டும். வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுடைய வழக்கமான உணவில் சிவப்பு இறைச்சிக்கு பதிலாக கோழியை மாற்றப்பட்டது. அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு மாற்று மூலோபாயம் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்களின் முடிவுகள் சுட்டிக்காட்டியது. நீரிழிவு நிர்வகிப்பதற்காக உணவில் கோழி இறைச்சியின் ஒரே மூலப் பொருள் பயன்பாட்டை தான் இந்த மூலோபாயம் உள்ளடக்கி உள்ளது.

சிறுநீரகத்துக்கு கோழி இறைச்சி - Chicken for kidney in Tamil

பொதுவாக வகை 2 நீரிழிவு நோயாளிகளில் சிறுநீரக பிரச்சினைகள் காண முடிகிறது. அத்தகைய நோயாளிகள் வழக்கமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அத்தகைய நோயாளிகளின் உணவு பழகத்தில் கோழி இறைச்சியிலுள்ள புரத மூலப் பொருளை சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை பயக்கியுள்ளதாக தெரிகிறது. கோழி சாப்பிட்ட நோயாளிகளில் சிறுநீர் கழிப்பதன் விகிதம் வந்து கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்தது. கூடுதலாக, மைக்ரோபுபூமினூரியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் (சிறிய அளவுகளில் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்ட ஒரு சீரம் புரதமான சிறுநீர் அல்புமின் ஓட அதிகரிப்பு), சிறுநீரில் உள்ள அல்புமின் ஓட அளவு குறைந்தே காணப்பட்டது.

புற்றுநோயை தடுக்க கோழி இறைச்சி - Chicken for cancer in Tamil

புற்றுநோய்க்கு எதிராக செயல்படவும் கோழி இறைச்சி பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தேவையான அளவுகளில் கோழி இறைச்சியை உண்ணாத நபர்களை விட அதை உண்ணும் நபர்களே புற்றுநோயை தடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் பி3 வந்து புற்றுநோய் எதிர்ப்புக்குறிய ஒரு அம்சமாக நம்பப்படுகிறது.  இருப்பினும், கோழி இறைச்சியில் புற்றுநோய் எதிர்ப்புக்குறிய அம்சம் இருக்கிறது என்பதை சொல்ல விவோ ஆய்வுகள் தேவை.

இரத்த சோகைக்கு கோழி இறைச்சி - Chicken for anaemia in Tamil

வைட்டமின் பிவைட்டமின் ஈ, மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களுக்கும் கோழி இறைச்சியில் அடங்கும். இந்த வைட்டமின்கள் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகின்றன.

இரும்பு சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் கோழி இறைச்சி சேர்ப்பது, குறிப்பாக கல்லீரல் சேர்த்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அது வழங்குகிறது. இரும்பு சத்துடன் இரத்தத்தை மறுபடியும் பூர்த்தி செய்யும் போது இரத்த சோகை மற்றும் பிற தொடர்புடைய நிலைமைகளை கையாள முடியும்.

மன ஆரோக்கியத்திற்கு கோழி இறைச்சி - Chicken for mental health in Tamil

ஒரு நல்ல மனநல ஆரோகியத்தை பராமரிக்க வைட்டமின் பி தேவைப்படுகிறது. அது கோழி இறைச்சியில் தாராளமாக காணப்படுகிறது. கோழி இறைச்சியை உட்கொள்ளுதல் மூலம் கவலைமன அழுத்தம் மற்றும் பிற மனநல ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கோழி இறைச்சி சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கவனம் செலுத்தும் சக்தியை மேம்படுத்த உதவும் என்று ஒரு ஆய்வின் கண்டுபிடிப்புகள் பரிந்துரையின் மூலம் தெரியவருது. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூட கோழி இறைச்சியை சாப்பிடுவதற்கு பரிந்துரை செய்யப்படுது. ஏன்னென்றால் அல்சைமர் போன்ற நோய்களின் முன்னேற்றத்தை அது மெதுவாகக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு அமைப்புக்காக கோழி இறைச்சி - Chicken for the immune system in Tamil

பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் கோழியில் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு முறையின் சரியான செயல்பாட்டிற்கு போதுமான அளவில் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. எனவே, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிகரிக்க இது உதவுகிறது. ஃப்ரீ ராடிகல்ஸ் (உள் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துவது) போன்ற நச்சுகளை அகற்றுவதிலும் கோழி இறைச்சி உண்ணுவதன் மூலம் செய்யலாம்.

சலிக்கு சிக்கன் சூப் - Chicken soup for cold in Tamil

கோழி இறைச்சியில் உள்ள மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வந்து சலி போன்ற தொற்றுக்களை அகற்றுவதில் மிகவும் பயன்மிக்கதாக உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் திறமையாக செயல்பட உதவுகிறது. சலியுடன் பொதுவாக தொடர்புடைய மூக்குச்சலிக்கு மூக்கிலிருந்து நிவாரணம் பெற அல்லது தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற சிக்கன் சூப் குடிப்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உடல் திசுக்களுக்கு கோழி இறைச்சி - Chicken for body tissues in Tamil

வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் குறைபாடு வந்து உடல் செல்கள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தோல் மீது உலர் இணைப்புகளை வழிவகுக்கவும் தோல் விரிசல் ஏற்படுத்தவும் செய்யும். உடல் செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சி மற்றும் சேதம் பழுதுக்கு ரிபோஃப்ளவின் (வைட்டமின் பி2) அவசியமானது. குறிப்பாக வைட்டமின் பி2 ஆல் நிறந்தது தான் கோழியின் மார்பகமும் கல்லீரலும். இதனால் உடலிலுள்ள உயிரணுக்களின் சேதத்தைத் தடுக்கவும் வளர்ந்த திசுக்கள் திறம்பட ஊக்குவிக்கவும் கோழி இறைச்சி சாப்பிடுவதன் மூலம் உதவ கூடும்.

ஆரோக்கியமான முடிக்கு மற்றும் நகங்களுக்கு கோழி இறைச்சி - Chicken for healthy hair and nails in Tamil

வைட்டமின் ஈ மற்றும் கே வந்து ஆரோக்கியமான நகங்கள் மற்றும் முடிகளுக்கு அவசியமானது. அவ்வாறு இந்த வைட்டமின்களின் குறைபாடு உள்ளவர்கள் முடி இழப்பு மற்றும் உடையக்கூடிய நகங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த வைட்டமின்கள் நல்ல அளவில் கோழி இறைச்சியில் உள்ளது என்பதால் முடி அல்லது நகம் உடைத்தலை தடுக்கவும் தங்களது ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கோழி இறைச்சியை உணவில் சேர்க்கப்பட வேண்டும்.

எடை மேலாண்மைக்கு கோழி இறைச்சி - Chicken for weight management in Tamil

கோழி இறைச்சி வந்து வெள்ளை இறைச்சியாகும். ஆகையால் புரதத்தின் ஆரோக்கியமான மூலப் பொருளாகும். ஒரு சரியான எடை மேலாண்மை திட்டத்திற்கு தேவையான அளவு புரதங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பயனுள்ள எடை இழப்பு அல்லது எடை மேலாண்மை ஆற்றல் முயற்சி செய்ய விரும்புவோர் வந்து வழக்கமாக தங்கள் உணவில் கோழி இறைச்சிய சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தி இது சமைக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். உடற்பயிற்சிக்கு உடல் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உட்கொள்வதைத் தவிர்ப்பதற்கு தேவையான சரியான அளவு ஊட்டச்சத்துக்களை உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதை இது உறுதி செய்கிறது.

ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் போது கோழியை உண்ணூவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கிமான உடலுக்கு கோழி இறைச்சியை வந்து நீராவி, கொதித்தல், கிரில் அல்லது வறுத்தெடுப்பு ஆகிய முறைகளில் சமைத்தல் வேண்டும். கோழி இறைச்சியை எளிய மற்றும் சமைக்க எளிதானதுமான ஒரு ஆரோக்கியமான செய்முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறைக்கு தேவையான பொருட்கள்

  • ஒரு முழு கோழி (1 கிலோ) துண்டுகளாக வெட்டப்பட்டது
  • கேரட் (2) பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டது
  • முட்டைக்கோசு (1) பெரிய துண்டுகளாக கொத்தியது
  • ப்ரோக்கோலி (2) மலர்கள்
  • உருளைக்கிழங்கு (2) துண்டுகளாக வெட்டப்பட்டது
  • வெங்காயம் (1) நன்கு துண்டு துண்டாக வெட்டப்பட்டது
  • பூண்டு பற்கள் (5-7) நன்றாக பேஸ்ட் வடிவத்தில் அரைத்தது
  • இஞ்சி பேஸ்ட் (1 தேக்கரண்டி)
  • முழு மிளகுத்தூள் (1 தேக்கரண்டி)
  • எலுமிச்சை (1)
  • எண்ணெய் (1 தேக்கரண்டி)
  • உப்பு தேவைக்கேற்ப

ஒரு ஆரோக்கியமான சிக்கன் சமையல் குறிப்புக்கான செய்முறைகள்

  • கோழி துண்டுகளை சரியாக கழுவவும்.
  • 1 எலுமிச்சை எடுத்து சாறு பிழிந்து அதை கோழி இறைச்சி முழுவதிலும் தேய்க்கவும்.
  • சமையல் பாத்திரத்தை சூடாக்க வேண்டும்.
  • அதில் கோழி துண்டுகளை வைக்கவும். அதன் பின்பு எண்ணெயை சேருங்கள்.
  • காய்கறிகளைச் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும்.
  • பூண்டு, இஞ்சி, மற்றும் மிளகுத்தூளை சேர்க்கவும். தேவைப்பட்டால் மிளகுத்தூளை நசுக்கியும் பயன்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப உப்பை சேருங்கள்.
  • குறைந்த நீராவியில் 5-7 நிமிடங்கள் கலவையை சமைக்க விடுங்க.
  • கோழியும் காய்கறிகளும் மூழ்கும் விதத்தில் தண்ணீரை சேருங்கள்.
  • பாத்திரத்தை கொண்டு மூடி அதை 20-25 நிமிடங்களுக்கு சமைக்க விடுங்க.
  • இறைச்சி முழுமையாக சமைக்கப்பட்டிருக்கா என்பதை பார்த்துவிட்டு சூடாக பரிமாறவும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

பல ஆரோக்கிய நலன்கள் கோழி இறைச்சியில் உள்ளது. இருப்பினும், அதிக அளவில் அல்லது ஆரோக்கியமற்ற முறையில் சாப்பிடும் போது பெரும்பாலும் பக்க விளைவுகள் ஏற்படலாம். அதன் காரணமாக ஒரு சில பக்க விளைவுகள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • விசமுற்ற உணவு
    பண்ணையில் வளர்க்கப்படும் கோழி பெரும்பாலும் காம்பைலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாவுக்கு ஒரு ஹோஸ்ட் ஆக இருக்கலாம். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, கோழி இறைச்சியை வாங்குவதற்கு முக்கியமானது வந்து தரமான உணவு ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும் பாதுகாப்பும் ஆனதுமானது வாங்க வேண்டும். கூடுதலாக, சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சியில் இருந்தும் கூட அத்தகைய பாக்டீரியாவிலிருந்து விசமுற்ற உணவை விளைவிக்கலாம்.
     
  • தூய்மைக்கேடு
    அசுத்தமடைந்த குணாதிசயம் கொண்ட பாக்டீரிய எஷெரிச்சியா கோலியுடன் இனப்பெருக்கத்துக்கு (வளர்க்கப்பட்ட) ப்ரெய்லர் கோழிகளுடன் காலாண்டில் ஒரு முறை சேரவிடுவார்கள். இந்த பாக்டீரியம், வயிற்றுப்போக்கு போன்ற மனிதர்களிடையே குடல் தொடர்பான நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சுவாச நோய்கள் காரணத்துக்கும் இதுவும் பொறுப்பாகும். ஆகையால், கோழி ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் தடயம் இருந்தா அதை அகற்றி சமைக்க வேண்டும்.
     
  • ஆண்டிபயாடிக் எதிர்ப்பு
    நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான பாக்டீரியா தடுப்பு மருந்து உலக மருத்துவத்திற்கு ஒரு தொந்தரவாக இருக்கிறது. பண்ணை வளர்ப்பு கோழிகளுக்கு பெரும்பாலும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படுகின்றன. காலப்போக்கில், பாக்டீரியா வந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டிபயாடிக்களுக்கு எதிர்க்கும் திறனை ஏற்காது. ஆண்டிபயாடிக்குகளின் தடங்கல்கள் உள்ள கோழி இறைச்சியை உண்டால் பாக்டீரியாவுடன் கூடிய எதிர்விளைவுகளை வயற்றில் ஏற்படுத்தும். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், ஆண்டிபயாடிக்குகளை எதிர்க்கின்ற சால்மோனெல்லாவின் சில விகாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். மனிதர்கள் கோழி இறைச்சியை உண்ணும் போது அவை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.
     
  • கொழுப்பு
    கோழி வந்து ஆரோக்கியமான இறைச்சியாகக் கருதப்பட்டாலும், அதன் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருந்தால் சீரம் கொழுப்பு மட்டத்தம் வந்து அதிகரிக்கும். உள்ளூர் இனத்துடன் ஒப்பிடுகையில் பண்ணை இனப்பெருக்க கோழிக்கு அதிக கொழுப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக அளவில் எண்ணெய் மற்றும் பிற கொழுப்புகள் கொண்டு கோழி இறைச்சியை தயாரிப்பது காரணமாக உடலில் நிறைந்த மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமில அளவை அதிகரிக்க செய்கிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் உயர் கொழுப்பு மற்றும் தொடர்புடைய இதய நோய்கள் ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது.
     
  • நச்சு உலோகங்களுக்கு வெளிப்பாடு
    கோழிக்கு நல்ல வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், நிறமினை மேம்படுத்தவும், கோழிகளில் வயிற்றுப்போக்குகளை தடுக்கவும் பண்ணைகளில் வழங்கப்படும் சிக்கன் தீவனத்தில் பெரும்பாலும் ஆர்சினிக் கொண்டவையாக இருக்கும். நீரிழிவு, இதய நோய்கள், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஆர்சனிக் வெளிப்பாடு வந்து மனிதர்களில் உருவாக்கும்.

மேற்கோள்கள்

  1. K.M. BEAVERS et al. EFFECT OF PROTEIN SOURCE DURING WEIGHT LOSS ON BODY COMPOSITION, CARDIOMETABOLIC RISK AND PHYSICAL PERFORMANCE IN ABDOMINALLY OBESE, OLDER ADULTS: A PILOT FEEDING STUDY. J Nutr Health Aging. 2015 Jan; 19(1): 87–95. PMID: 25560821
  2. Pijls LT, de Vries H, van Eijk JT, Donker AJ. Protein restriction, glomerular filtration rate and albuminuria in patients with type 2 diabetes mellitus: a randomized trial. Eur J Clin Nutr. 2002 Dec;56(12):1200-7. PMID: 12494305
  3. Gross JL et al. Effect of a chicken-based diet on renal function and lipid profile in patients with type 2 diabetes: a randomized crossover trial. Diabetes Care. 2002 Apr;25(4):645-51. PMID: 11919119
  4. de Mello VD et al. Long-term effect of a chicken-based diet versus enalapril on albuminuria in type 2 diabetic patients with microalbuminuria. J Ren Nutr. 2008 Sep;18(5):440-7. PMID: 18721739
  5. Pecis M, de Azevedo MJ, Gross JL. Chicken and fish diet reduces glomerular hyperfiltration in IDDM patients. Diabetes Care. 1994 Jul;17(7):665-72. PMID: 7924775
  6. Lauren T. Ptomey et al. Portion Controlled Meals Provide Increases in Diet Quality During Weight Loss and Maintenance. J Hum Nutr Diet. 2016 Apr; 29(2): 209–216. PMID: 25664818
Read on app