கால்சியம், உடலில் மிக அதிக அளவில் உள்ள தாது ஆகும். மேலும் அது, ஒரு வழக்கமான உணவுசார் உட்கூறு ஆகும். அது, உடலின் எடையில் 1 முதல் 2 சதவிகிதம் பங்கு வகிக்கிறது, மேலும், மொத்த கால்சியம் அளவில் சுமார் 90% இருக்கின்ற அளவுக்கு, எலும்புகள் மற்றும் பற்களில் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
எஞ்சியுள்ள 1% அளவு கால்சியம், இரத்தம், உடல் திரவங்கள், நரம்பு செல்கள், தசை செல்கள், மற்றும் பிற செல்கள் மற்றும் திசுக்கள் ஆகியவற்றில், அவற்றின் பொருத்தமான செயல்பாட்டுக்காகக் காணப்படுகிறது. கால்சியம், உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு தாது ஆகும். அது ஒரு நுண்ணூட்டச்சத்து எனக் கருதப்பட்டாலும், மற்றும் உணவில் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கூட, நீங்கள் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளாமல், உங்களால் செயல்பட இயலாது.
அது, உடலில் அதன் முதன்மையான செயல்பாடான, வலிமையான எலும்புகள் மற்றும் அதன் ஆரோக்கியமான கட்டுமான அமைப்புக்கு மிகவும் முக்கியமானது ஆகும். அது மேலும் பல்வேறு செயல்பாடுகளையும் மேற்கொள்கிறது, மற்றும் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த செயல்பாடுகள் பற்றியும், கூடவே, கால்சியம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அளவு மற்றும் பற்றாக்குறை பற்றியும் கீழே விவாதிக்கப்படும்.