வல்லாரை மிகவும் பழமை வாய்ந்த ஒரு இந்திய மூலிகை ஆகும். மூளை செயல்பாட்டிற்கும் நரம்பு மண்டலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்ய உதவும் மருத்துவ குணம் கொண்டது வல்லாரை. ஆயர்வேத மருத்துவம் வல்லாரையை மேதியரசாயன என்று அழைக்க காரணம், மனிதனின் நரம்பு மண்டலத்திற்கு டானிக்காகவும் புத்துணர்வூட்டும் ஏஜெண்டாகவும் செயல்படுவது தான். பழங்காலங்களில் வல்லாரையை புத்துணர்ச்சிக்காக உபயோகித்த சான்றுகள் சில இந்திய புத்தகங்களான  சரக் சம்ஹிதா மற்றும் சுஷ்ருதா சம்ஹிதா எனும் நூலில்  குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதய காலகட்டத்தில் வல்லாரை பிரபலம் அடைந்திருந்தாலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வல்லாரை இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்ருதா சம்ஹிதா நூலில் ஹ்ரிதா மற்றும் வல்லாரையை புத்துணர்வூட்டும் மருந்தாக குறிப்பிட்டுள்ளனர்.

வல்லாரை எனும் பெயர் பிரமன் எனும் பெயரிலிருந்து வந்ததாகவும் அல்லது இந்து கடவுளான பிரம்மாவின் பெயரை கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். பிரம்மா எனும் பெயர் உலகளாவிய மனம் எனும் பொருளை கொண்டுள்ளதால் வல்லாரையின் அம்சங்களும் அதுவே ஆகும். எனவே வல்லாரையை ப்ரஹ்மி என்றும் அழைக்கின்றனர்.

வல்லாரை சதைப்பற்றுள்ள ஒரு ஊடுருவி. நிலப்பரப்பில் படரும் தன்மை கொண்ட வல்லாரை அதிக அளவிலான தண்ணீரை தன்னுள் தக்க வைத்து கொள்ளும் தன்மை உடையது. வற்றாத மூலிகையான வல்லாரை சதுப்பு நிலங்களிலும் ஓரங்களிலும் வளரும். சதைப்பற்றுள்ள வல்லாரை இலைகள், தண்டுகளின் எதிர் எதிரே வளரும். வெள்ளை, நீலம் மற்றும் ஊதா நிறத்தில் உள்ள வல்லாரை பூக்கள் தண்டின் முடிவில் தனித்து பூக்கும்.

வல்லாரை  பற்றிய சில முக்கிய தகவல்கள்:

  • தாவரவியல் பெயர்: பகோபா மானியேரி
  • குடும்பம்: ஸ்க்ரோபூலேரியேசியை
  • பொதுவான பெயர்கள்: ப்ரஹ்மி, ஜல்புட்டி, நீர் ஹஸ்சாப், மனிஒர்ட், இந்தியன் பென்னிஒர்ட்
  • சமஸ்க்ருத பெயர்: ப்ரஹ்மி
  • பயன்படுத்தப்படும் பகுதிகள்: இலைகள் மற்றும் தண்டு பகுதி
  • பரவலாக காணப்படும் இடங்கள்: வல்லாரை உலகத்தின் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் அதிக அளவில் காணப்படும். இந்தியா, நேபால், பாக்கிஸ்தான், சீனா மற்றும் இலங்கையில் காணப்படும். இந்தியாவில், பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், டெல்லி, கோவா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களில் அதிக அளவில் காணப்படும். வல்லாரையின் மகத்துவத்தை அறிந்த அரேபிய நாடுகளான ஏமன், சவூதி அரேபியா மற்றும் குவைத்து நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
  • ஆற்றலியல் (ஏனெர்ஜெட்டிக்ஸ்): புத்துணர்வூட்டும் ஏஜெண்ட்
  1. வல்லாரையின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Brahmi health benefits in Tamil
  2. வல்லாரையை உபயோகிக்கும் முறைகள் - Ways to use brahmi in Tamil
  3. வல்லாரையை உட்கொள்ளும் அளவு - Brahmi dosage in Tamil
  4. வல்லாரையின் பக்க விளைவுகள் - Brahmi side effects in Tamil

வல்லாரையின் நன்மைகள் பல இருப்பினும் அது மிக முக்கியமாக நரம்பு மண்டலத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. வல்லாரையின் ஆரோக்கியம் சார்ந்த சில நன்மைகளை கீழே காணலாம்:

  • மூளைக்காக: வல்லாரை  மிக முக்கியமாக மூளையின் செயல்பாட்டினை  மேம்படுத்த உதவுகிறது. புத்திக் கூர்மையை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என்பதால் மாணவர்களுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது வல்லாரை. டிமென்ஷியா மற்றும் மனச்சிதைவு எனும்  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அல்சைமர்  நோய் வருவதற்கான அறிகுறிகளை வெகுவாக குறைக்கும் வல்லமை கொண்டது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைய வல்லாரை உதவுகிறது. மூளைத் திறனை அதிகரிக்க சந்தையில் பல மருந்துகள் விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்கப்படும் மருந்துகளினால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்று நமக்கு தெரியாத நிலை உள்ளது. ஆனால் இயற்கையாக விளையக்கூடிய வல்லாரை, மூளைத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • வலிப்பு நோயிற்காக: வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்படக்கி ஏஜெண்டாக உதவுகிறது.
  • கூந்தல்க்காக: உச்சந்தலையில் தொற்றை நீக்கவும், முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை தூண்டவும் வல்லாரை பயன்படுகிறது.
  • நீரிழிவுக்காக: வல்லாரையின் மற்றும் ஒரு பயன் ஒருவரின் உயர் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகும்.
  • மற்ற நன்மைகள்: வல்லாரை ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால் நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். வல்லாரை ஒரூ வலி நிவாரணியாகவும் உள்ளது. நுண் கிருமிகளை கொள்ளும் கலவைகளில் சில, வல்லாரையை உபயோகிப்பதால் அது ஹச். ப்யலோரி எனும் நுண் கிருமியை கொன்று இரைப்பை புண்ணை குணப்படுத்த வல்லது.

வல்லரை - அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலிற்காக - Brahmi for cognition and memory in Tamil

வல்லாரையின் மிக முக்கிய நன்மை மனிதனின் மூளைத் திறனை அதிகரிப்பதே ஆகும். எனவே பல வருடங்களாக, ஊடகங்கள் வல்லாரையை பரிசோதித்து வருகின்றனர்.

அல்டெர்நேட்டிவ் அண்ட் காம்ப்ளிமென்டரி மெடிசின் எனும் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கட்டுரையில் ஆறு சீரற்ற மருத்துவ சோதனைகள் (ஆர்.சி.டி) நடத்தப்பட்டுள்ளது. 300 - 400 மி.கி அளவு வல்லாரையை தினமும் உட்கொண்டு வந்தால் மனிதனின் நினைவாற்றலும் அறிவாற்றலும் அதிகரிக்கிறது என்பது இவ்வாய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தகவல்களையும் நினைவுகளையும் மூளையில் அதிக நேரம் வைத்துக்கொள்ள வல்லாரை உதவுகிறது என்பதை, மற்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மோடாபினில் எனும் மருந்து ஒரு மனிதனை தூங்கவிடாமல் அதிக நேரம் விழித்திருக்க உதவும். இம்மருந்து விழித்திருக்கும் நேரத்தை அதிகரிப்பதைப் போல வல்லாரை மற்றும் குணசிங்கி எனும் ஆயுர்வேத மூலிகைகளும் அதே பயன்களை தருகின்றன.

வெசிகுலர் குளூட்டமேட் டைப் 1 (வி ஜி எல் யூ டி 1) எனும் நரம்பியத்தாண்டுவிப்பியான புரதம், மூளையில் தகவல் பரிமாற்றங்கள் சரிவர நிகழ உதவுகிறது. இந்த புரதத்தின் அளவானது குறையும் பட்சத்தில் டிமென்ஷியா மற்றும் மனச்சிதைவு நோய்களுக்கு வழிவகுக்கிறது.மேலும் உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், வல்லாரை, மேலே கூறப்பட்டுள்ள புரதத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டதாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் மனச்சிதைவிற்கு மருந்தாக வல்லாரை பயன்படலாம்.

பக்கோப்பின்  எ மற்றும் பி ஆகிய இரசாயனங்கள் மூளையின் சிதைந்த உயிரணுக்களை சரி செய்யவும்  மற்றும் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கவும் உதவும். இந்த இரசாயனங்கள் அதிக அளவில் வல்லாரையில் காணப்படுவதாக ஒரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில், வல்லாரையின் நற்குணங்களை அறிய இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆரோக்கியமான மாணவர்கள் மீது ஒரு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவருக்கும் தினமும் பிளஸ்ட்டோ அல்லது 150 மி.கி அளவு வல்லாரை சாறு வழங்கப்பட்டது. இந்த ஆய்வு ஆறு வாரங்கள் நடத்தப்பட்டன. வல்லாரை சாறு அருந்திய மாணவர்களின் அறிவாற்றல் அதிகரித்ததை ஆய்வு கண்டுபிடித்தது.

எனினும், வல்லாரையை நீண்ட காலத்திற்கு உட்கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு மேலும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வல்லாரையின் பயன்கள் - Brahmi for stress and anxiety in Tamil

மன அழுத்தம் ஒரு மனிதனிற்கு பதட்டம், நீரிழிவு நோய், இதயம் மற்றும் வயிறு  சம்பந்தப்பட்ட நோயகளுக்கு வழி வகுக்கிறது. இன்றைய கால கட்டத்தில் மனிதன் அதிகம் பாதிக்கப்படுவது மன அழுத்தத்தால் தன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மன அழுத்தத்திற்கு பல மாற்று மருந்துகள் இருப்பினும், அம்மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும்பொழுது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றுள் சில நச்சுத் தன்மை ஏற்படுத்தக்கூடியதாகவும் வேறு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

பாரம்பரிய மருத்துவம் மன அழுத்தத்திற்கு வல்லாரையை மாற்று மருந்தாக பயன்படுத்துகிறது. நினைவாற்றலுக்கும், மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு மட்டும் அல்லாது வல்லாரை மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. இதன் சான்றாக பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் வல்லாரை உட்கொள்வதால் கடுமையான மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் குணமடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தத்திற்கு மற்றும் மன சோர்விற்கு கொடுக்கப்படும் மருந்தான லோராசெபம் சந்தையில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. எனினும் இந்த மருந்தை காட்டிலும் வல்லாரை மிகவும் பயனுள்ளதாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. மன சோர்வை நீக்கும் வல்லமை கொண்ட கலவைகள் வல்லாரையில் அதிகம் காணப்படுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் சான்றோடு நிரூபித்து உள்ளன. மேலும் வல்லாரை உட்கொள்வதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், வல்லாரையை தினமும் 300 - 600 மி.கி. எனும் அளவில் உட்கொண்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வல்லாரையில் உள்ள ஆன்டிஸ்ட்ரெஸ் குணங்கள் மனித உடம்பில் உள்ள கார்டிசோல் எனும் ஹோர்மோனை சீர் செய்து மன அமைதியை தர வல்லது.

மனசோர்விற்கு மருந்தாகும் வல்லாரை - Brahmi for depression in Tamil

பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் மனசோர்விற்கு மருந்தாக வல்லாரையை பயன்படுத்தி வந்தனர். இதற்கு மருத்துவ சான்றுகள் குறைவாக இருப்பினும், வல்லாரையின் நன்மைகளை பல உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன. குறிப்பிடத்தக்க ஆய்வின் முடியில் வல்லாரையில் உள்ள பக்கோசைட்ஸ் எனும் இரசாயனம் மன சோர்வை நீக்க வல்லது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வலிப்பிற்கு மருந்தாகும் வல்லாரை - Brahmi for epilepsy in Tamil

காமா - அமினோபியூட்ரிக் அமிலம் அல்லது ஜி.ஏ.பி.ஏ என்னும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் மூளையின் உயிரணுக்கள் சமநிலையில் இருக்க உதவி புரிகிறது. காமா - அமினோபியூட்ரிக் அமிலத்தில் ஏற்படும் தடுமாற்றத்தால் வலிப்பு ஏற்படுகிறது. வல்லாரை உட்கொள்வதால் வல்லாரையில் உள்ள பாக்கோஸிடே ஏ என்னும் இரசாயனம் ஜி.ஏ.பி.ஏ அமிலத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை சீர் செய்து சமநிலைக்கு கொண்டு வருவதோடு வலிப்பை தடுக்கவும் வல்லது.

இந்திய ஜர்னல் ஆஃப் பார்மசி மற்றும் மருந்தியல் அறிவியல் நடத்திய ஆய்வின் முடிவில் வல்லாரையை சாப்பிடுவதால், மயக்க மருந்தான ஃபெனோபார்பிடோன் எனும் மருந்திற்கு மனித உடலில் ஏற்படும் எதிர்ப்பானது குறைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.      

இருப்பினும் போதிய மருத்துவ சான்று இல்லாத காரணங்களினால், வலிப்பிற்கு மருந்தாக வல்லாரையை உட்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நன்று.

அல்சைமர் நோய்க்கு வல்லாரையின் பயன்கள் - Brahmi for Alzheimer's in Tamil

அல்சைமர் என்பது நரம்பியல் சிதைவினால் மூளையில் ஏற்படும் அறிவாற்றல் குறைவு மற்றும் ஞாபக மறதி ஆகும். சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூ.ஹச்.ஓ) நடத்திய ஆய்வில், அல்சைமர் நோய் உலகின் ஐம்பது சதவிகிதம் டிமென்ஷியா நோய்க்கு வழிவகுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்சைமர் நோயானது 65 - 85 வயதிற்கு உட்பட்ட மக்களையே பெரிதும் பாதிக்கிறது. எதிர்பாராத விதமாக அல்சைமர்க்கு இன்னும் முறையான சிகிச்சை இல்லை மற்றும் டிமென்ஷியாவின் சிகிச்சைக்கான தொகை மிகவும் அதிகமாக உள்ளது. நிதி பற்றாக்குறை உள்ள குடும்பத்தினர் டிமென்ஷியா நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்காரணங்களினால், மூலிகைகளை கொண்டு அல்சைமர் நோயை குணப்படுத்தும் முயற்சியை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் மீது ஆய்வு மேற்கொண்ட பொழுது வல்லாரையை சரிவர உட்கொண்டு வந்ததால் அவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் அதிகரித்ததோடு அவரக்ளுக்கு மன சோர்வும் எரிச்சலும் வெகுவாக  குறைந்ததை கண்டனர்.

மற்றும் ஒரு ஆய்வில் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து உட்கொள்வதால் தாமதமாக நினைவு கூர்ந்தல், நினைவாற்றல் குறைதல் போன்ற சில நிலைகள் மாறுவதை பதிவுசெய்தனர். இம்மருந்தில் வல்லாரை ஒரு முக்கிய மூலப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிலாய்டு பீட்டா புரதம் என்னும் புரதம் அதிக அளவில் பெருமூளையில் குவிவதே அல்சைமர் உருவாக காரணம் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். நரம்பியலை பாதுகாக்கும்  செயல்கள் வல்லாரையில் அதிக அளவில் இருப்பதால், ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாகோப்பாசைட்ஸ்-ஐ என்னும் வல்லாரையின் இரசாயன உட்பிரிவானது நோய் எதிர்ப்பு சக்தியின் செயலை வெளிப்படுத்தி அமிலாய்டு புரதத்தை நீக்க வல்லது.

மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டுமேயானாலும், தற்சமயம் உள்ள சான்றுகள் அல்சைமரை தடுப்பதில் வல்லாரையின் மகத்துவத்தை வெளிக்கொணர்கிறது.

வல்லாரை - ஆன்டிஆக்சிடன்ட் - Brahmi as an antioxidant in Tamil

உடலில் அதிக அளவில் ரேடிக்கல்கள் குவியலை தடுக்க ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பது ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். ரேடிக்கல்கள் என்றால் என்ன? நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளால் உருவாகக்கூடிய ஒரு வகை ஆக்ஸிஜனை ரேடிக்கல்கள் என்று அழைப்பர். மனித உடல் சீராக செயல்பட இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் அதிக அளவிலான ரேடிக்கல்கள் உடலிற்கு கேடு விளைவிப்பதாகும். இந்நிலையை விஷத் தன்மையினால் வரும் அழுத்தம் என்றும் கூறலாம். பல உடலியல் மாற்றங்கள் இதனால் ஏற்படலாம். அவற்றுள் சில - முன்கூட்டிய வயதான தோற்றம், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஆகும்.

உணவினால் பெறக்கூடிய ஆன்டிஆக்சிடன்டான வைட்டமின் சி மற்றும் பிஹச்ஏ (ப்யூட்டிலேட்டட் ஹைட்ரோ க்சியனிசோல்) உடலில் உள்ள அதிகப்படியான ரேடிக்கல்களை வெளியேற்ற உதவுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியில், வல்லாரை சாற்றில் ஆன்டிஆக்சிடன்டான வைட்டமின் சி மற்றும் பிஹச்ஏ உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வல்லாரையை கொண்டு முன்கூட்டிய வயதான தோற்றம், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சினையால் வராமல் தடுக்கலாம் என்று கூறுகின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்

மற்றும் ஒரு ஆய்வில், வல்லாரையின் இலையில், தண்டுகளை காட்டிலும் அதிக அளவிலான ஆன்டிஆக்சிடன்ட் தன்மை உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரேடிக்கல்களை வெளியேற்றும் பணிக்காக உருவாக்கப்படும் மருந்துகளில் வல்லாரையின் தண்டுகளை விட இலைகளை பயன்படுத்துவதே சிறந்த முறை ஆகும்.

பியர் ஆய்வு இதழில் வெளிவந்த தகவலின் படி, வல்லாரையின் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள், அவற்றின் நரம்பியல் பாதுகாப்பு பண்பையும், நினைவாற்றல் பண்பையும் சார்ந்தே உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

(மேலும் விவரங்களுக்கு: ஆன்டிஆக்சிடன்ட் உணவுகள்)

வல்லாரை - அழற்சி நீக்கி - Brahmi as an anti-inflammatory in Tamil

பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி, தொன்றுதொட்டு வல்லாரையை ஒரு வலி நிவாரணியாகவும், அழற்சி நீக்கியாகவும் உபயோகித்து வந்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன, வல்லாரை எவ்வாறு வலி நிவாரணியாக செயல்படுகிறது என்பதை அறிய. உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் வல்லாரை அழற்சி நீக்கியின் விளைவை வெளிக்காட்டுகிறது என்பது அறியப்பட்டுள்ளது. தற்சமயம், சந்தைகளில் அழற்சி நீக்கி மருந்துகள் பல விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள் இண்டோமெதாசின் என்னும் மருந்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. வல்லாரையை உள்ள கலவைகள் மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்த மருந்தின் விளைவை போலவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய  மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் ஜர்னலில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியதாவது - வல்லாரை இலையின் சாறை 200 - 300 மி.கி. என்னும் அளவில், தினமும், ஒழுங்காக, கூறப்பட்ட நாட்களுக்கு தவறாமல் உட்கொண்டால் வலியும் எரிச்சலும் வெகுவாக குறைகிறது.

வல்லாரையில் உள்ள சில பண்புகள் மனித உடலில் வீக்கம் உண்டாக காரணமாக இருக்கும் சில இரசாயனங்களை  தடுக்கும் வல்லமை கொண்டவை. முறைப்படி வல்லாரையை தினமும் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலில் ஏற்படும் வீக்கங்களும் அதனால் ஏற்படும் சிவப்பு தன்மையும் எரிச்சலும் குறையும்.

வல்லாரையின் நன்மைகளை அறிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஆய்வு கூடத்தில் உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் மூளையின் உயிரணுக்கள் வீக்கமடைந்துள்ளதையும் அதனை வல்லாரையின் சாறை கொண்டு வீக்கத்தை சரி செய்ததையும் பதிவு செய்துள்ளனர். வல்லாரை மூளையின் டானிக் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

வல்லாரை - வலி நிவாரணி - Brahmi relieves pain in Tamil

பல ஆராய்ச்சிகளின் முடிவுகளில் வல்லாரை ஒரு வலி நிவாரணி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைக்லோஃபெனாக்-என் ஏ மற்றும் ஆஸ்பிரின் என்னும் மருந்துகள் மனித உடலில் ஏற்படும் வலியை வெகுவாக குறைக்க உதவி புரிகின்றன. இருப்பினும், ஒரு சில நேரங்களில் இந்த மருந்துகள் உட்கொள்ளுவதால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உயிரினங்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவில் வல்லாரை மற்ற மருந்துகளான டைக்லோஃபெனாக்-என் ஏ மற்றும் ஆஸ்பிரினை காட்டிலும் வலியை குறைப்பதில் வல்லமை வாய்ந்தது என்று பதியப்பட்டுள்ளது.

வல்லாரையில் உள்ள பகோசின்-1 எனும் இரசாயனமே வலியை குறைக்க உதவுகிறது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. உயிரினங்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், மற்ற மருந்துகளோடு வல்லாரையை கொடுக்கும்பொழுது ஆலோடினியா என்று சொல்ல கூடிய அதீத வலியில் இருந்து விடுபடவும், வலியை அளவிற்கும் அதிகமாக உணர்தலிலிருந்து விடுபடவும் வல்லாரை உறுதுணையாக இருக்கிறது.

வலியிலிருந்து விடுபட வல்லாரையை எவ்வாறு உபயோகிக்கலாம் என்று மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

வயிறுக்கு வல்லாரையின் பயன்கள் - Brahmi benefits for stomach in Tamil

உயிரியல் ஆய்வுகளில், வல்லாரையை வயிறு நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்று உட்புற அகலத்தை வலுப்படுத்தவும், அதிக செரிமான அமிலத்தின் தாக்கத்தை தடுக்கவும் வல்லாரை உதவும். தினமும் 1000 மி.கி அளவில் அருந்தி வந்தால், வயிற்று புண்ணை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்னும் நுண்ணுயிரி முற்றிலுமாக அழிந்து விடும்.

எனினும் மனித உடலில் மருத்துவ ஆய்வுகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்றும் ஆகையால் மனித உடலில் வரும் வயிற்று புண் வல்லாரையால் சரி செய்ய முடியுமா என்னும் கேள்வி இன்றும் உள்ளது.

வல்லாரை - ஒரு நுண்ணுயிர் கொல்லி - Brahmi as an antimicrobial in Tamil

வல்லாரை சாற்றில் உள்ள எத்தனால் எனும் இரசாயனம் மிகச் சிறந்த நுண்ணுயிர் கொல்லியாக விளங்குகிறது. குறிப்பாக கிராம் பாசிட்டிவ் எனும் நுண்ணுயிரை கொல்ல வல்லாரை சாறு பயன்படுகிறது. மேலும், வல்லாரையின் சாறு எத்தனால், தண்ணீர், டைஎத்தில் ஈத்தர் மற்றும் ஈத்தைல் அசிடேட் கொண்டும் தயாரிக்கின்றனர்.  மேலும், வல்லாரையின் சாறை எத்தனால், தண்ணீர், டைஎத்தில் ஈத்தர் மற்றும் ஈத்தைல் அசிடேட் ஆகிவற்றோடு கலந்து நுண்ணுயிர் கொல்லியை தயாரிக்கின்றனர். வல்லாரை சாறோடு டைஎத்தில் ஈத்தர் மற்றும் ஈத்தைல் அசிடேட் உபயோகிப்பதால் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், வல்லாரை சாறோடு எத்தனால் உபயோகிப்பதால் கேண்டிடா அல்பிகான்ஸ் மற்றும் அஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்னும் பூஞ்சையும் அழிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் வல்லாரை சாறோடு தண்ணீர் சேர்த்தால் எந்த நுண்ணுயிரும் அழியவில்லை எனவும் அதற்கு காரணம் அக்கலவையில் போதிய இரசாயனங்கள் இல்லாததே எனவும் கூறுகின்றனர். எனவே வல்லாரை தனித்து நின்றால் நுண்ணுயிரை கொல்லும் தன்மை குறைவாகவே உள்ளது என்றும்,வல்லாரை சாறோடு வேறு சில கலவைகளை கலக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றத்தால் நுண்ணுயிரி கொல்லியாக செயல்படுகிறது என்றும் ஆய்வுகளின் முடிவுகள் விளக்குகின்றன.

மேலும் சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் தான் வல்லாரையை நுண்ணுயிர் கொல்லியாகவும் பூசண எதிர்ப்பியாகவும் உபயோகிக்கலாமா என்னும் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

(மேலும் விவரங்களுக்கு: பூஞ்சை நோய்த்தொற்றுக்கான சிகிச்சை)

தலைமுடிக்கு வல்லாரை - Brahmi benefits for hair in Tamil

வல்லாரை மற்றும் வல்லாரையினால் தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தல் பராமரிப்பிற்கு உதவுவதோடு முடி பராமரிப்பு பொருட்களான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிக்கும்பொழுது ஒரு மூலப்பொருளாகவும் உபயோகப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கவும், அறிவாற்றலை மேம்படுத்தவும் வல்லாரை பயன்படுகிறது என்பதற்கு சான்றுகள் இருப்பினும் முடியின்  வலிமையை அதிகரிக்க உதவுகிறது என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உள்ளது.

புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் வல்லாரையை முடிக்கு டானிக்காக பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முடியின் வேர்களை வலுப்படுத்தி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது வல்லாரை. கூடுதலாக, வீக்கத்தை குறைக்கும் தன்மையையும், நுண்ணுயிரை கொல்லும் தன்மையையும் வல்லாரை கொண்டுள்ளதால், உச்சியில் உள்ள அரிப்பு மற்றும் தொற்றை நீக்குகிறது. எனவே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

மேலும் சில மருத்துவ ஆய்வில் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை உபயோகிப்பதால் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளர்வதோடு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வெண்ணெய்யில் வல்லாரை ஒரு முக்கிய மூலப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே முடியின் ஆரோக்கியத்தை காப்பதில் வல்லாரை முடிக்கு நண்பன் என்பது சான்றோடு விளக்கப்பட்டுள்ளது.

நீரிழிவுக்காக வல்லாரை - Brahmi for diabetes in Tamil

உயர் ரத்த சர்க்கரையை வல்லாரை குறைக்கும் என்பதற்கான போதிய மருத்துவ சான்றுகள் இல்லை. ஒரு மனிதன் உணவு உண்ட பிறகு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். இதுவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது மிகவும் அதிகமாகவே இருக்கும். வல்லாரை சாற்றில் சில கலவைகள் இந்த உயர் சர்க்கரை அளவை குறைக்கும் வல்லமை கொண்டுள்ளன. இதை அடிப்படியாக கொண்டு விலங்குகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரியல் ஆய்வுகளின் முடிவுகள் உயர் ரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை வல்லாரைக்கு இருக்கலாம் என கூறுகின்றனர். நீரிழிவு நோயானது உயர் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு பல பக்க விளைவுகளையும் உண்டாக்கும். சிறுநீரக கோளாறுகள் மற்றும் நினைவக இழப்பு போன்ற பக்க விளைவுகள் அவற்றுள் சில ஆகும். எனவேவல்லாரையை சரிவர  உட்கொண்டால் நீரிழிவு நோய் மட்டுமல்லாது இந்நோயால் ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறுகள் மற்றும் நினைவக இழப்பு போன்ற பக்க விளைவுகள் தடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

உயிரியல் ஆய்வுகளின் முடிவுகளில் வல்லாரையில் உள்ள பக்கோசின் எனும் இரசாயனம் சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று அறியப்படுகிறது.

மனித உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், உடலின் செல்கள் ரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ் ஐ உறிஞ்ச தகவல் அனுப்பவும் கணையச் சுரப்பு நீரானது போதிய அளவில் மனித உடலில் தேவைப்படுகிறது. ரத்தத்தில் உள்ள க்ளுகோஸ்  உறிஞ்சப்பட்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவானது குறைந்து விடும். கணையச் சுரப்பு நீர் மனித உடலில் செய்யும் வேலையை வல்லாரை செய்கிறது எனும் கூற்றும் பரவலாக உள்ளது.

(மேலும் தகவலுக்கு: நீரிழிவின் அறிகுறிகள்)

பொதுவாக, வல்லாரையில் உள்ள நீரானது ஆவியாக்கப்பட்டு பின்னர் அதன் இலக்கை அரைத்து பொடி செய்து உபயோகப்படுத்துவார்கள் எனவே, வல்லாரை, தூள் வடிவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது மற்றும் தலைமுடி எண்ணெய் தயாரிக்கும் பொழுது உபயோகிக்கும் ஒரு முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது. புத்திக் கூர்மையை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் வல்லாரை இலையில் இருந்து தயாரிக்கும் தேநீர் அருந்தப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிப்பதில் வல்லாரை  பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் மாணவர்களின் நண்பனாக திகழ்கிறது.

வணிக ரீதியாக வல்லாரையை  மாத்திரைகளாகவும், காப்ஸ்யூல்களாகவும் விநியோகிக்கின்றனர். கவலையை குறைக்கும் மாத்திரையான ப்ரஹ்மி வட்டி எனும் வல்லாரை மாத்திரை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.

வல்லாரை மருந்தாகவும் உட்கொள்ளப்படுகிறது.

வல்லாரையை பொடியாக உட்கொள்ளும்போது 5 - 10 கி அளவிற்கு எடுத்துகொள்வது பாதுகாப்பானது. மருந்தாக அருந்தும்போது 25 - 30 மி.லி. அளவும், உட்செலுத்தினால் 8 - 16 மி.லி. அளவும் பாதுகாப்பானது ஆகும்.

உடல் மற்றும் உடலியல் காரணிகளை கொண்டு வல்லாரையை உட்கொள்ளும் அளவு வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆயுர்வேத மருத்துவரை அணுகி போதிய அளவினை தீர்மானித்துக்கொள்வதே சிறந்த முறை ஆகும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW
  • வயிற்று புண்ணை குணப்படுத்தும் தன்மை வல்லாரைக்கு உள்ளது என்றாலும், அளவுக்கு அதிகமான வல்லாரையை உட்கொள்ளும்பொழுது குமட்டல், வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சில பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் வல்லாரையை மிதமான அளவில் உட்கொள்வது சிறந்தது.
  • ஒரு குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாய் தன் பிள்ளைக்கு கொடுக்கும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வல்லாரையை உண்ணலாம் என்பதற்கு எந்த ஒரு மருத்துவ சான்றும் இல்லாத காரணத்தால், இக்காலங்களில் மருத்துவரின் ஆலோசனை படி உண்ணுவது நல்லது.
  • வேறு மருந்துகள் எடுத்துக்கொள்ளும்பொழுது வல்லாரையை உண்ணலாமா வேண்டாமா என்பதற்கான சான்று இல்லாததால், அவ்வாறு எடுத்துக்கொள்ளும் முன் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும். ஏனென்றால் மற்ற மருந்துகளின் கலவைகளோடு வல்லாரையின் கலவைகள் சேரும்பொழுது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் தான்.

Medicines / Products that contain Brahmi

மேற்கோள்கள்

  1. Pase MP et al. The cognitive-enhancing effects of Bacopa monnieri: a systematic review of randomized, controlled human clinical trials. J Altern Complement Med. 2012 Jul;18(7):647-52. PMID: 22747190
  2. Neale C et al. Cognitive effects of two nutraceuticals Ginseng and Bacopa benchmarked against modafinil: a review and comparison of effect sizes. Br J Clin Pharmacol. 2013 Mar;75(3):728-37. PMID: 23043278
  3. Navneet Kumar et al. Efficacy of Standardized Extract of Bacopa monnieri (Bacognize®) on Cognitive Functions of Medical Students: A Six-Week, Randomized Placebo-Controlled Trial. Evid Based Complement Alternat Med. 2016; 2016: 4103423. PMID: 27803728
  4. Edwards JG. Adverse effects of antianxiety drugs. Drugs. 1981 Dec;22(6):495-514. PMID: 6119192
  5. SLDV Ramana Murty Kadali, Das M.C., Srinivasa Rao A.S.R., Karuna Sri G. Antidepressant Activity of Brahmi in Albino Mice. J Clin Diagn Res. 2014 Mar; 8(3): 35–37. PMID: 24783074
  6. Abdul Mannan, Ariful Basher Abir, Rashidur Rahman. Antidepressant-like effects of methanolic extract of Bacopa monniera in mice. BMC Complement Altern Med. 2015; 15: 337. PMID: 26407565
  7. Treiman DM. GABAergic mechanisms in epilepsy. Epilepsia. 2001;42 Suppl 3:8-12. PMID: 11520315
  8. National Institute on Aging [internet]: US Department of Health and Human Services; Alzheimer's Disease Fact Sheet
  9. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Alzheimer Disease and other Dementias.
  10. Sadhu A et al. Management of cognitive determinants in senile dementia of Alzheimer's type: therapeutic potential of a novel polyherbal drug product. Clin Drug Investig. 2014 Dec;34(12):857-69. PMID: 25316430
  11. M. Paul Murphy, Harry LeVine. Alzheimer’s Disease and the β-Amyloid Peptide. J Alzheimers Dis. 2010 Jan; 19(1): 311. PMID: 20061647
  12. Li Y et al. Bacopaside I ameliorates cognitive impairment in APP/PS1 mice via immune-mediated clearance of β-amyloid. Aging (Albany NY). 2016 Mar;8(3):521-33. PMID: 26946062
  13. Jain P et al. Antiinflammatory effects of an Ayurvedic preparation, Brahmi Rasayan, in rodents. Indian J Exp Biol. 1994 Sep;32(9):633-6. PMID: 7814042
  14. Williams R, Münch G, Gyengesi E, Bennett L. Bacopa monnieri (L.) exerts anti-inflammatory effects on cells of the innate immune system in vitro. Food Funct. 2014 Mar;5(3):517-20. PMID: 24452710
  15. Taznin I, Mukti M, Rahmatullah M. Bacopa monnieri: An evaluation of antihyperglycemic and antinociceptive potential of methanolic extract of whole plants. Pak J Pharm Sci. 2015 Nov;28(6):2135-9. PMID: 26639482
  16. Manju Bhaskar, A. G. Jagtap. Exploring the possible mechanisms of action behind the antinociceptive activity of Bacopa monniera. Int J Ayurveda Res. 2011 Jan-Mar; 2(1): 2–7. PMID: 21897636
  17. Sairam K, Rao CV, Babu MD, Goel RK. Prophylactic and curative effects of Bacopa monniera in gastric ulcer models. Phytomedicine. 2001 Nov;8(6):423-30. PMID: 11824516
  18. Ali Esmail Al-Snafi. The pharmacology of Bacopa monniera. A review . International Journal of Pharma Sciences and Research (IJPSR)
Read on app