கண்வறட்சி என்றால் என்ன?
உலர் கண் நோய்க்குறி என்று அறியப்படும் கண்வறட்சி (செரோப்தால்மியா), பொதுவாக வைட்டமின் ஏ வின் ஆரம்ப குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலை ஆகும். இருப்பினும், வைட்டமின் ஏ குறைபாடு உள்ள அனைத்து நபர்களும் கண்வறட்சியின் வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்டிருப்பதில்லை என்பதை புரிந்துகொள்வது அவசியம். சில நோய்கள், மருந்துகள் மற்றும் வேறு சில காரணங்கள் கூட கண்வறட்சிக்கு வழிவகுக்கலாம். கண்வறட்சியில், கண்ணின் வெளிப்புறத் தோற்றமுள்ள கருவிழி வறண்டு மற்றும் செதில் போல காணப்படும். பாதிக்கப்பட்ட கண்ணில் தொற்றுநோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இது அனைத்து வயதினரிடையும் நிகழலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
கீழே பட்டியலிடப்பட்டுள்ள அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் கண்வறட்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்:
- கண்களில் அரிப்பு.
- கண்களில் வரட்சி.
- வலி மற்றும் எரியும் உணர்வு.
- சில காலங்கள் மங்கலான மற்றும் குறைந்த பார்வை.
- மாலைக்கண்.
- கருவிழி புண்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கண்வறட்சியின் வைட்டமின் ஏ தொடர்பான இரண்டு காரணங்கள் பின்வருமாறு:
- பொதுவாக, வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ குறைவாக உட்கொள்வதன் காரணமாக கண்வறட்சி ஏற்படும்.
- வைட்டமின் ஏ உணவில் சேர்த்துக்கொண்டாலும் வைட்டமின் ஏ வின் தவறான முறிவு மற்றும் உடலில் சேராததன் காரணமாக இந்த நோய் ஏற்படுதல்.
கண்வறட்சியின் மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- காற்று.
- உலர் காற்று.
- ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில மருந்துகள்.
- நீரிழிவு நோய், ஜோரேன்'ஸ் நோய்க்குறி மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் பின்வருமாறு நோயறிதலை மேற்கொள்கிறார்:
- தனிப்பட்ட நபரின் விரிவான மருத்துவ விளக்கம்.
- கண் பரிசோதனை.
- வைட்டமின் ஏ குறைபாட்டை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கண்வறட்சியின் சிகிச்சை பின்வருமாறு:
- வைட்டமின் ஏ அளவை சீராக்க கூடுதல் வைட்டமின் ஏ செலுத்துவர்.
- பரிந்துரைக்கப்பட்ட தடுப்புச் சொட்டு மருந்து கண்களில் உள்ள கண்ணீரை வரண்டுபோகாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- மசகு எண்ணெய் போன்ற செயற்கை கண்ணீர்.
- சூடான அழுத்தங்கள்.
- கண்ணிமை மசாஜ்.
கண் வரட்சியை பின்வரும் முறைகளின் படி சரியாக கையாளலாம்:
- வைட்டமின் ஏ உணவு உட்கொள்வதை அதிகரித்தல்.
- வைட்டமின் ஏ கொண்ட ஊட்டமான உணவு.
- வைட்டமின் ஏ கொண்ட கூடுதல் உணவு.